தூத்துக்குடியில் கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான விதிமீறலால் 3 அப்பாவிக் கப்பல் தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலியானது அந்நகரை அதிர்ச்சி யில் உறைய வைத்திருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி துறைமுகத்தி லிருந்து மாலத்தீவிற்கு கருங்கற் கள், ஜல்லிக்கற்கள் மற்றும் குண்டுக் கற்கள் உள்ளிட்ட கட்டு மானப் பொருட்கள் தோணிகள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்த பார்ஜர்கள் தூத்துக்குடியிலுள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இங்குள்ள மோகன் முத்தா என்கிற ஷிப்பிங் நிறுவனம் மூலமாக கருங்கற்கள் ஏற்றுவதற்காக செப்டம்பர் 17 காலை ஒரு பார்ஜர் தயாராக இருந்தது. அதன் இரு சம கலன்களில் தேங்கிய தண்ணீரை அகற்றி சுத்தப்படுத்துவதற்காக சரோன் ஜார்ஜ் என்பவர் இறங்கியுள்ளார்.

நெடுநேரமாக அவர் வெளியே வராமல் போகவே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்குமார், அதன்பின் புன்னக்காயலைச் சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் ஆகியோர் இறங்கியிருக்கிறார் கள். வெகுநேரமாகியும் இந்த மூன்று தொழிலாளி களும் வெளியே வராததால் சக தொழிலாளர்கள் தீயணைப்புத் துறை, காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். 

மூன்று தொழிலாளர்களும் விஷவாயு தாக் கப்பட்டதால் பரிதாபமாக மரணமடைந்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் துறைமுகத்தி லுள்ள அனுபவம்வாய்ந்த சிலர் இந்த சம்பவத்தில் பார்ஜர் மிதவைக் கப்பல் நிர்வாகம் விதியை மீறியதும் அலட்சியமுமே கார ணம் என்கிறார்கள். இதுகுறித்து துறைமுகத்திலுள்ள முக்கியமான அதிகாரி ஒருவர், “"இந்த மிதவைக் கப்பலின் மிஷின்கள் என்ஜின்கள் இயங்குவதற்கு அன்றாடம் ஆயில்கள் பயன்படுத்தப்படுகின் றன. அதன் கழிவுகள், பார்ஜரின் தண்ணீர் உள்ளிட்ட பிற கழிவுகள் கப்பலின் கீழ்ப்பகுதியான சமகலன்களில் வந்துசேரும். நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் அவை விஷத்தன்மை கொண்டதாக உருமாறிவிடும். விஷவாயுவாகவும் உருவெடுத்து மொத்த டேங்கிலும் பரவியிருக்கும். 

Advertisment

இதுபோன்ற கழிவுகளைக் கொண்ட பார்ஜர் களை ஏதாவது ஒரு துறைமுகத்தில் நிறுத்தி, துறை முகத்தின் ஒப்புதலோடு நிர்வாகப் பணியாளர் களைக் கொண்டுதான் முறைப்படி சுத்தப்படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்துவதற்கு முன்பாக துப்புரவுப் பணியாளர்கள் டேங்கின் மூடியை ஒருநாள் முழுக்கத் திறந்துவைத்து விஷவாயுக்களை வெளியேற்றவேண்டும். மறுநாள்தான் பணியாளர் கள் உள்ளே இறங்கி டேங்கினை சுத்தம்செய் வார்கள்.. 

ஆனால் அந்த நிறுவனம் சுத்தம்செய்யப்படு வதை தூத்துக்குடி துறைமுக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவில்லை. ஒப்புதலும் பெறவில்லை. சமகலன்களின் மூடியைத் திறந்த ஒருமணி நேரத்திற் குள்ளாகவே தொழிலாளர்கள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது அப் பட்டமான விதிமீறல்''’என அதிர்ச்சியை வெளிப் படுத்தினார் அந்த அதிகாரி.

-பி.சிவன்