கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையமருகே கடந்த 20 ஆண்டுகளாக சண்முகா நர்சிங் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியுடன் கூடிய கல்லூரியின் உரிமையாளர் செந்தில்குமார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறையிலுள்ள வழக்குகளை நடத்துவதற்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு சண்முகா நர்சிங் கல்லூரியில் பயின்றுவந்த 17 வயது மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் கல்லூரித் தாளாளர் செந்தில்குமா
கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையமருகே கடந்த 20 ஆண்டுகளாக சண்முகா நர்சிங் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியுடன் கூடிய கல்லூரியின் உரிமையாளர் செந்தில்குமார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறையிலுள்ள வழக்குகளை நடத்துவதற்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு சண்முகா நர்சிங் கல்லூரியில் பயின்றுவந்த 17 வயது மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் கல்லூரித் தாளாளர் செந்தில்குமார் மீது கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் செந்தில்குமார் தொடர்ந்து மாணவியை பாலியல் சீண்டல்கள் செய்ததும், அதற்கு உடந்தையாக அந்தக் கல்லூரி விடுதியின் காப்பாளர் அமுதவள்ளி, சமையலர் மகாலட்சுமி ஆகியோர் செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk1_47.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk_98.jpg)
கடந்த மே மாதத்தில் கொடுக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் காவல்துறை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் தலைமறைவானார்கள். இதில் மகாலட்சுமியை கடந்த மாதம் தனிப்படையினர் கைது செய்தனர். மகாலட்சுமி, அந்தக் கல்லூரியில் படித்தபடியே சமையலராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்... அந்தக் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்த நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அச்சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததாகவும், விடுதிக்காப்பாளரான அமுதவள்ளி, "தாளாளரின் ஆசைக்கு இணங்க மறுத்தால் உனக்கு படிப்புச் சான்றிதழ் வழங்கமாட்டோம் என்றும் காவல் நிலையத்தில் உன்மீது திருட்டுப் புகார் கொடுத்து வாழ்க்கையை காலி செய்துவிடுவோம்' எனவும் மிரட்டியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார், அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். செந்தில்குமார், அமுதவள்ளி இருவரும் சென்னை மேல்மருவத்தூர் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி அங்குசென்று அவர்களைக் கைது செய்தார். அவர்கள் 2 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நர்சிங் மாணவியும் பள்ளித்தாளாளரை காதலித்ததாகவும், இது அந்த மாணவியின் வீட்டிற்குத் தெரியவந்ததால், அவர்கள் பள்ளித்தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்படாததால்தான் விஷயம் புகார்வரை சென்றுள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us