திண்டிவனம் பாராளுமன்றத் தொகுதியின், தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு விழுப்புரம் தனித்தொகுதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபெறும் நான்காவது தேர்தல் இது. இந்தத் தொகுதியில் திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம், திருக் கோவிலூர், உளுந்தூர்பேட்டை (திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளன) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில் ஆளும் கட்சியான தி.மு.க.வில் இரண்டு மாவட்டச் செயலாளர்கள். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் செஞ்சி மஸ்தான், தெற்கு மாவட்டச் செயலாளர் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி, இவர்கள் இருவரின் பரிந்துரைப்படி தலைமை வேட்பாளரை தேர்வு செய்யுமா? அல்லது பொன்முடி பரிந்துரையை ஏற்குமா? என்ற கேள்விக்குறி ஒரு பக்கம்.
இதில் தி.மு.க.வில் கட்சியின் ஆதிதிராவிடர் நலத்துறை பிரிவில் மாநிலச் செயலாளராக உள்ளவர் புஷ்பராஜ். இவர் ஏற்கனவே கண்ட மங்கலம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணிசெய்து கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் பெயரெடுத் தவர். இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்கிறார்கள் உடன்பிறப்புகள். கடந்த முறையும் சீட்டுக்கு மோதியவர் மாவட்டத் துணைச் செயலாளர் பட்டதாரி இளைஞர் தயா இளந்திரையன். இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதமசிகாமணி உட்பட அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். அவரும் முயற்சியில் உள்ளார்.
அதேபோல் கட்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக உள்ளவர் மகளிர் அணி மைதிலி ராஜேந்திரன். இவர் ஏற்கனவே மாவட்ட பஞ்சாயத்துக் குழு வின் துணைத் தலைவர் பதவியில் இருந்தவர். பொன் முடியின் ஆசி இவருக்கும் உண்டு. அந்த வகையில் மைதிலிக்கும் வாய்ப்பு உண்டு. வானூர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்து வேலின் அண்ணன் மகன் முருகேசன். இவர் கட்சியில் விவசாய அணியில் உள்ளார். முன்னாள் மாவட்ட கவுன்சில ராகவும் பதவி வகித்துள்ளார். இவரும் சீட்டுக்கு மோதுகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச் சரும், கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் கை காட்டுபவருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி தலையாட்டுவார். அந்த அளவுக்கு கட்சியில் வலிமையோடு உள்ளார் சண்முகம். 2014-ல் விழுப்புரத்தில் கோட்டி மருத்துவமனை நடத்தும் பிரபல எலும்பு முறிவு டாக்டர் முத்தை யன் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராகப் போட்டி யிட்டு தோல்வியைத் தழுவினார்.
அந்த முத்தையனுக்கும் பொன்முடிக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு அ.தி.மு.க.வில் சி.வி. சண்முகம் முன்னிலையில் இணைந்துவிட்டார். அதுமுதல் சண்முகத்துடன் மிகவும் நெருக்க மாக இருந்துவருகிறார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆகவேண்டும் என்ற வைராக் கியத்துடன் டாக்டர் முத்தையன் உள்ளதாகக் கூறுகின்றனர். கட்சி யின் உதவியை எதிர்பார்க்காமல் தாராளமாகச் செலவு செய் யக்கூடிய வலிமை உள்ளவர் முத்தையன்.
அ.தி.மு.க.வில் நாங்களும் இருக்கிறோம் என்று மேலும் பலர் முட்டி மோதுகிறார்கள். அதில் ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணிச் செய லாளர் காந்தலவாடி பாக்யராஜ். இவரும் தேர்தல் செலவுகளைத் தாராளமாக செய்யக்கூடிய வலிமை உள்ளவர். கட்சியின் களப்பணியில் தீவிரமாக செயலாற்றிவரும் வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச்செயலாளர். திருவெண்ணைநல்லூர் பிரேம்குமாரும் கடும் முயற்சியில் உள்ளார். இவர்களோடு எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் உளுந்தூர்பேட்டை அட்வகேட் கிருஷ்ணனும் முயற்சியில் உள்ளார். ஜெ., பேரவையைச் சேர்ந்த நெற்குணம் முருகனும் சீட்டு வாங்கும் முயற்சியில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
சி.வி.சண்முகத்தின் தீவிர விசுவாசியாக உள்ள விழுப்புரம் ஜெ. பேரவை திருப்பதி பாலாஜி, தகவல் தொழில்நுட்பத் துறை துணைச்செயலாளர் திருக்கோவிலூர் உமாசங்கர் போன்றவர்கள் கட்சி அனுமதித்தால் போட்டியிடலாம் என்ற ஆவலில் உள்ளனர். விழுப்புரம் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய எம்.பி. உருவாக்கப்படுவாரா? என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. காரணம், மாவட்டச் செயலாளராக உள்ள சி.வி.சண்முகத்தை, எடப்பாடியார் ராஜ்யசபா எம்.பி.யாக உருவாக்கியுள்ளார்,
இந்த நிலையில் தனக்கு சமமாக, கட்சியில் வேறு ஒருவருக்கு சீட்டு கொடுத்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்க வைப்பாரா? எனவே கூட்டணிக் கட்சிக்கு தொகுதியைத் தள்ளிவிடுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்ற பலமான பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்றாற்போல் புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி தனது கட்சியின் மாநில மாநாட்டை சமீபத்தில் விழுப்புரத்தில் நடத்தியுள்ளார். மாநாட்டுக்கு எடப்பாடியாரை அழைத்துவந்து பேச வைத் தார். அ.தி.மு.க. கூட்டணியில் செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியைப் பெற வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று கூறுகின்றனர்.
அப்படி புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் அந்தக் கட்சியின் சார்பாக ஜெகன் மூர்த்தியின் உறவினர், கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் லூதர் குமார், கட்சியின் மாநிலச் செயலாளர் ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகிய இருவரில் ஒருவர் நிற்பதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் வி.சி.க. ரவிக்குமார் வெற்றிபெற்றார். மீண்டும் கூட்டணியில் விழுப்புரம் தொகுதி வி.சி. கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று பலமான பேச்சு உள்ளது. அப்படி ஒதுக்கப்பட்டால் மீண்டும் ரவிக்குமாரே வேட்பாளர் என்ற நிலை உள்ளதாக கட்சி முன்னோடிகள் கூறுகின்றனர். கட்சித் தரப்பில் ரவிக்குமார் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாகவும் தற்போது தொகுதியில் சிட்டிங் எம்.பி. ஆகவும் உள்ளார்.
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யுற்ற கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற குரலும் கட்சியினர் மத்தியில் ஒலிக்கிறது. கட்சி விரும்பினால் மண்ணின் மைந்தர் முன்னாள் மாவட் டச் செயலாளர் வீராணம் ஆற்றல் அரசுக்கும் வாய்ப்பு கொடுத்து புதியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்கலாம் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் தொகுதியைக் கேட்டு வலுவான குரல் எழ வில்லை. என்றாலும் நாங்களும் இருக்கிறோம் என்று முட்டிமோது கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை மீண்டும் வி.சி.க. கட்சிக்கு ஒதுக்கும் நிலை உள்ளது. அப்படி ஒதுக்கினால் அதில் அந்த கட்சியின் தலைவர் தற்போது எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன் மீண்டும் போட்டி யிடுவார். எனவே அந்த தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் இங்கு போட்டியிட சீட்டு கிடைக்கும் என்ற ஆவலில் உள்ளார். அடுத்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காணை கிராமத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் சீனிவாசன். இவர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கட்சியின் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் துணைத் தலைவராகவும் உள்ளார். அதேபோல் பாலி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேஷ், வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைத்தலைவராக உள்ளார். இவர்களும் சீட்டுக்கு மோதுகின்றனர்.
பா.ம.க. சார்பில் கடந்த முறை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் வடிவேல் ராவணன். அவர் மீண்டும் போட்டி யிட வாய்ப்பு இருந்தாலும்... கல்லூரி நிர்வாகி சாம்பால்-ஐ விழுப்புரத்தில் களமிறக்க பா.ம.க. தலைமை ஆலோசிப்பதாகக் கூறுகின்றனர் அன்புமணியின் மன ஓட்டம் எப்படி இருக்குமோ?