ட்சி மாற்றம் ஏற்பட்ட நிலை யிலும், தடைசெய்யப்பட்ட ஆன் லைன் சூதாட்டம், நம் தமிழகத் தின் சில பகுதிகளில் திரை மறைவில் இருந்துகொண்டு, உயிர்வேட்டையை நடத்திக் கொண்டிருப்பது, அதிரவைக்கும் தகவலாகும்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஜியாவுல் ஹக், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கள்ளக்குறிச்சி நகரில் ஆன்லைன் சூதாட்டக் கும்பல் செயல்படுவது குறித்து அவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி. ராஜலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென புகுந்து அதிரடி சோதனையை நடத்தினர்.

oo

அங்கு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் "ஒன் எக்ஸ் பெட் ஆப்' என்ற ரம்மி சூதாட்டம் நடத்திவந்தது தெரியவர... இதில் சம்பந்தப்பட்ட செல்லம்பட்டு மணிகண் டன், மண் மலை கிருஷ்ணமூர்த்தி, சின்ன சேலம் கோகுல் நாத், அருண்குமார், ஆர்.மணிகண்டன், சங்கராபுரம் மணிவேல், ஈஷாந்தை அரவிந்த், கரடிசித்தூர் பாலாஜி, நாமக்கல் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டி சந்திரசேகர் ஆகிய ஒன்பதுபேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களில் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டத்தின் தலைவன் போன்று செயல்பட்டு வந்துள்ளார். இவர்களிடமிருந்து 30 செல்போன்கள் 400 சிம்கார்டுகள், ஒரு என்ஃபீல்டு ராயல் பைக், 20 லட்சம் மதிப்புள்ள கார், 9 கம்ப்யூட்டர்கள் மற்றும் அவைகளுக்குத் தேவையான, யு.பி.எஸ்., சி.பி.யூ. ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இந்த மணிகண்டன் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளார். இப்படிப்பட்டவர்களிடம் சூதாடி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். பிடிபட்ட ஒன்பது பேர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். மேலும் "ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஒரு கும்பல் மட்டும் இப்போது பிடிபட்டுள்ளது. இதுபோன்று தமி ழகம் முழுக்க ஆன்லைன் சூதாட்ட கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துவருகிறவர்கள், பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் ஏராளம். இதில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருச்சி காவலர் ஒருவர், சேலம் மாவட்டம் தலைவாசல் காவல்நிலையத்தில் காவலராக வேலைசெய்த வெங்கடேஷ், இப்படி... பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இது குறித்து நாம் ரகசிய புலன்விசாரணை செய்தோம். ஆன்லைன் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடமும், இது தவறு என்ற மனநிலையில் உள்ளவர்களிடமும் நாம் விசாரித்தோம். அப்போது நிறைய அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னதிலிருந்து....

dd

Advertisment

"இந்த சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பெரும்பாலான செல்போன்களுக்கு ரம்மி விளையாடுங்கள் என்று விளம்பர எஸ்.எம்.எஸ். வரும். மேலும் "உங்களுக்கு 2000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் போனஸ் தருகிறோம். இந்தப் பணத்தைக் கொண்டு கணக்கை ஆரம்பித்து ஆட்டத்தை தொடங்குங்கள்' என்று அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் கூட அனுப்புவார்கள். அந்த பணத்தை வைத்து நம்மை சூதாட்டத்தில் இணைத்துவிடுவார்கள். பிறகு நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பறித்துக்கொள்கிறார்கள்.

இதில் மிகப்பெரிய மோசடி, ஒவ்வொருவரும் இந்த ஆட்டத்தில் தனித்தனியாக உட்கார்ந்து செல்போனில் சூதாடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனி நெட்வொர்க்கில் இணைந்து இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சூதாட்ட ரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு டேபிளில் 6 பேர் சூதாடுகிறார்கள் என்றால், அவர்களில் நான்கு பேர் அவர்களின் நெட்வொர்க் ஆட்களாக இருப்பார்கள். அவர்கள் பணம் இழப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். ஆனால் மற்ற இரண்டு அப்பாவிகளின் பணத்தை நால்வரும் சேர்ந்து பறித்துவிடுவார்கள். இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் சூதாட்டத்தில் தோற்றுவிடுவார்கள். அப்படி சேரும் பணத்தை அந்த நெட்வொர்க் கும்பல் தங்களுக்குள் பங்கு பிரித்துக்கொள்ளும். அப்படிப்பட்ட கும்பல்தான் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில், சந்தைகளின் முன்பு இப்படித்தான் "மூணு சீட்டு' போட்டு, ஆசைகளைத் தூண்டி ஏமாற்றுவார்கள்.

ooமேலும் இதில் ஆர்வமுள்ள நபர்கள் தங்களுக்கு தெரிந்த அப்பாவிகளின் வங்கி கணக்கு விபரம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு எண் இவைகளை வாங்கிக்கொள்வார் கள். அவர்கள் பெயரில் இவர்கள் ரம்மி ஆடுவார்கள். அதில் வரும் லாபப் பணம், அப்பாவிகளின் வங்கிக் கணக்கில் சென்று சேரும். பிறகு அவர்களிடம் கமிஷன் போன்ற ஒரு பெரும் தொகையை வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து மீதிப் பணத்தை இவர்கள் வாங்கிக் கொள்வார்கள். எந்த உழைப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தங்களுக்கு பணம் கிடைப்பதைக் கண்டு ஆரம்பத்தில் சந்தோஷத்தில் மிதக்கும் அப்பாவிகள், அவரவர் உறவினர்கள், நண்பர்களிடம் எந்த உழைப்பும் இல்லாமல் நமக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, அவர் களையும் இந்தக் குழியில் பிடித்துத் தள்ளிவிடுகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக லட்சம் லட்சமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையின் காரணமாக, தங்களது பிள்ளைகளைத் தவறான வழிக்கு பெற்றோர்களே கொண்டு செல்லும் செயல்கள் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகின்றன.

இப்படிச் சூதாட்டத் தில் பைத்தியமான ஒரு இளைஞனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மாம னார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற மருமகன், மாமனா ரின் செல்போனை அவ ருக்கு தெரியாமல் எடுத்து, அதில் ரம்மி விளையாடி யுள்ளார். அதில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை பணம் பறி போயுள்ளது. மாமனாரின் வங்கிக் கணக்கிலிருந்து சூதாட்டக் கும்பலுக்கு அவ்வப்போது பணம் செல்வது குறித்த எஸ்.எம்.எஸ். மாமனாரின் செல் போனுக்கு வரும்போதெல்லாம், மருமகன் அதை டெலிட் செய்துவிடுவார். பிறகுதான் தெரிந்தது மருமகன் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை பறிகொடுத்துள்ள கொடுமை. இப்படிப்பட்ட சூதாட்ட நபரிடமிருந்து என் மகள் எப்படி வாழ்வாள் என்று மாமனார் போர்க்கொடி தூக்க... அந்த குடும்பத்தில் பிரச்சினை வெடித்து, குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள்'' என்கிறார், தனது பெயரைக் கூற மறுத்த இளைஞர் ஒருவர்.

oo

சின்னசேலத்தில் உள்ள தேசிய வங்கிகளில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான கோடிகள் வரவு செலவு ஆகியுள்ளது. அதில் ஒரு கிராமத்தில் மட்டும் 20 கோடி ரூபாய், பல நபர்களுக்கு வந்ததாக அந்த வங்கியில் பணி செய்யும் ஊழியர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்தார்களாம். இதுபோன்று சாதாரண ஏழை-எளிய மனிதர்களின் வங்கிக் கணக்கிற்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் எப்படி வருகிறது என்பது குறித்து, சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களுக்கு விவரம் தெரிந்தும், அவர்கள் அதை உயர்அதிகாரிகளுக் குக் கூட தெரிவிக்க மறுக்கிறார்கள். காரணம், அப்படி வரும் பணத்தின் மூலம் வங்கிகளுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் தொகை கிடைக்கிறது என்பதால் ரகசியம் காக்கிறார்கள் வங்கி மேலாளர்கள்.

அதேபோன்று ஆன்லைன் சூதாட்ட கும்பல் குறித்து விபரம் அறிந்த காவல்துறையினரும் சூதாட்ட நபர்களை மிரட்டி அவ்வப் போது பணம் பறிக்கிறார்கள். "காவல்துறை இப்படிச் செய்ய லாமா?' என நேர்மையான எண்ணம்கொண்ட சில இளை ஞர்கள் காவல்துறையினரிடம் கேட்டால், "அவர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் வரு மானம் இல்லாமல் இருக்கிறார் கள். எப்படியாவது அவர்கள் சம்பாதிக்கட்டுமே அதில் உங்களுக்கு என்ன பொறாமை?' என்று சூதாட்ட கும்பலுக்கு ஆதரவாக பேசுகிறார்களாம்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சுப்பிரமணியன் நம்மிடம், "பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆன் லைன் சூதாட்டம் பல குடும்பங் களைச் சீரழித்து வருகிறது. பல மனித உயிர்களைப் பறித்து வருகிறது. உடல் உழைப்பை நம்ப வேண்டும், நேர்மையான வழியில் உழைத்துப் பிழைக்க வேண்டும் -இதுபோன்ற தவ றான வழியில் பணம் சம்பாதிக் கக் கூடாது. அப்படியே சம்பா தித்தாலும் அது உங்களை சிக்க லில் மாட்டிவிடும் என்று விழிப் புணர்வு செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் நடக் கிறது. எனவே மத்தியில் உள்ள மோடி அரசு இந்த சூதாட் டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்'' என்கிறார்.

பெரம்பலூர்அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத் துரை, ’"சமீபத்தில் ஒரு ஊரில் இளைஞர்கள் "ஆன்லைன் சூதாட்டம் தவறானது, அது தவறான வழியில் கொண்டு செல்லும். அதன்மூலம் வரும் வருமானம் நிலைக்காது. இந்த பழக்கத்தை நிறுத்து என்று' சூதாட்டத்தில் ஆர்வமாக செயல்பட்டு வந்த தங்கள் நண்பர்களிடம் அறிவுரை கூறியுள்ளனர் சிலர். இதனால் கோபமுற்ற சிலர், தனது உறவினர்களை திரட்டிக் கொண்டுவந்து அறிவுரை கூறிய இளைஞர்களை தாக்கு வதற்குச் சென்ற சம்பவம்கூட நடந்துள்ளது. இந்த சூதாட் டம் நீடித்தால் கிராமங்களில் கோஷ்டி மோதல் உருவாகி சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுப் போகும் எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதே நிரந்தரத் தீர்வாகும்''’என்கிறார்.

மு.ஊ.ம. தலைவர் தேவேந்திரனோ, "பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்ற இளைஞருக்கு அஞ்சல்துறையில் போஸ்ட்மேன் வேலை கிடைத்தது. கம்ப்யூட்டர் இயக்குவதில் திறமைசாலியாக இருந்த அந்த இளைஞரை அதிகாரிகள் பெரம்பலூரில் உள்ள அஞ்சலகத்தில் வேலைக்கு அழைத்துக் கொண்டனர். அவர் அஞ்சலகத்தில் பெண்கள் சேமிப்பு பணம் மற்றும் தங்கமகள் திட்டம் போன்றவற்றில் செலுத்திய பணத்தில் சுமார் 50 லட்சம் வரை மோசடி செய்து அந்தப் பணத்தை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதைக் கண்டுபிடித்த அஞ்சலக அதிகாரிகள் ரகசியமாக அந்த இளைஞரை காவல்துறையில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்பி அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பணத்தை இழந்தவர்களுக்கு அஞ்சல்துறை அதி காரிகள் பத்திரம் வழங்கி உள்ளனர். அதை வைத்துக் கொண்டு என்ன நாக்கு வழிப்பதா?''’என்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் 9 பேரை கைது செய்யக் காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நம்மிடம், "பொதுமக்கள், படித்த இளைஞர்கள், இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆசை காட்டி அவர்களை அதில் சிக்க வைத்து பணம் பறிப்பார்கள். சூதாட்டத்தில் கொஞ் சம் பணத்தை இழப்பவர்கள், இழந்த பணத்தை மீண்டும் பிடிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் விளையாடி பணத்தை இழப்பார்கள். கேம்ப்ளிங், மோசடி, லஞ்சம், வழிப்பறிக் கொள்ளை மூலம் அப்பாவி மக்களின் பணத்தைப் பறிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இப்படிப் பட்ட கிரிமினல் பேர்வழிகள் காவல்துறையிடம் நிச்சயம் சிக்கிக்கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் ஆடம்பரமான செல்போன்களைப் பிள்ளைகளுக்கு வாங்கித் தரக்கூடாது. முக்கியமான தேவைகளுக்காக அதை வாங்கிக் கொடுத்தாலும் கூட, அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார் கள் என்பதையும், அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் இதுபோன்று மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்''’என்கிறார் அழுத்தமாய்.

மோடி அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ஒரு லட்ச ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வரவு செலவு வைத்திருக்கலாம். அதற்கும் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 5 லட்சத்திற்கும் மேல் பணம் வைத்திருப்பவர்கள் கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்று கூறியது. அதன்படி ஆய்வு செய்தார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி ஆய்வு செய்து வருமானமே இல்லாதவர்கள் வங்கிக் கணக்குகளுக்கு லட்சக்கணக்கில் பணம் எப்படி வந்தது என்பதை கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்திருந்தால், தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கும். ஏன்? செய்யவில்லை'' என்று கேட்கிறார்கள் பலரும்.

இளைஞர்களுக்கு ஆசைத் தூண்டில் வீசி, அவர்களை தீரா துயரத்தில் சிக்கவைக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு, தமிழக காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா?