கண்டமத்தான் என்ற ஊரை எத்தனை பேர் கண்டிருப்பார்கள்? கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது "கண்டமத்தான்' என்ற ஒரு சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலி விவசாயி வேலுலிலட்சுமி தம்பதியின் 20 வயது மகள் மீனாட்சி. இவர் தமிழக அளவில் கபடி போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடி, பல வெற்றி களைக் குவித்து பரிசுகளைப் பெற்றுள்ளார்.
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடு வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தேர்வு செய்யப் பட்டனர். அதில
கண்டமத்தான் என்ற ஊரை எத்தனை பேர் கண்டிருப்பார்கள்? கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது "கண்டமத்தான்' என்ற ஒரு சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலி விவசாயி வேலுலிலட்சுமி தம்பதியின் 20 வயது மகள் மீனாட்சி. இவர் தமிழக அளவில் கபடி போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடி, பல வெற்றி களைக் குவித்து பரிசுகளைப் பெற்றுள்ளார்.
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடு வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தேர்வு செய்யப் பட்டனர். அதில் மீனாட்சியும் ஒருவர். அதோடு இவர் இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்று, கடந்த அக்டோபரில் 5 நாட்கள் நடைபெற்ற அந்தக் கபடி விளையாட்டுப் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வெற்றியுடன் ஊருக்குத் திரும்பிய வீராங்கனை லட்சுமிக்கு, ஊர் மக்கள் மேளதாளத் துடன் அமோக வாழ்த்துக்களையும் வரவேற்பை யும் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து வீராங்கனை லட்சுமியிடம் நாம் கேட்ட போது, "சிறுவயது முதலே நமது தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி மீது எனக்கு மிகுந்த விருப்பம். அதனால், கிராமத்தில் கபடி விளையாட்டில் ஈடுபட்டேன். பள்ளியில் படிக்கும் போதும் கபடி விளையாட்டை தொடர்ந்தேன். தற்போது பெரம்பலூரில் உள்ள ரோவர் என்ற தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறேன். கல்லூரியில் படித்துக்கொண்டே திருச்சியில் உள்ள விளையாட்டு கிளப்பில் சேர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன் அதன்மூலம் சர்வதேச அளவில் அளவில் நடைபெற்ற கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதோடு அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு விளையாடி வெற்றி பெற்று, வெள்ளிப் பதக்கம் பெற்று திரும்பியது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கபடி விளையாட்டில் பல சாதனை கள் புரியவேண்டும் என்று பெரிய குறிக்கோள் உள்ளது. வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெற உள்ள சர்வதேச கபடிப் போட்டியில் கலந்துகொள்ள விருக்கிறோம். அதில் விளையாடி தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. எனது தாய், தந்தையர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்து வருவதோடு கூடுதலாக கபடி விளையாட்டு பயிற்சிக்கும் போட்டிக்கும் விளையாடச் செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்கு இடையே உதவிகளை செய்துவருகிறார் கள். வருங்காலத்தில் காவல்துறை பணியில் சேர்ந்து ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற லட்சியம் உள்ளது.
என்னை போன்றவர்கள் மேலும், மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற்கு தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் கள். எனவே ஏழை விவசாயக் கூலியின் மகளான எனக்கும், தமிழக முதல்வர் தேவையான உதவிகளை செய்து கபடியில் பல்வேறு சாதனைகளை புரிவதற்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கி றேன்'' என்கிறார்.
"தமிழக அரசு, இது போன்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திறமைசாலி பிள்ளைகளை ஊக்கப்படுத்த தேவையான உதவிகளை செய்ய வேண்டும்' என்கிறார்கள் கண்டமத்தான் கிராமத்து மக்கள் ஒருமித்த குரலில்.
தமிழக முதல்வரின் பார்வை, இந்த கிராமத்து மாணவி பக்கம் திரும்பவேண்டும் என்பதே அனைவ ரின் எதிர்பார்ப்பும்.