தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் அதிகளவில் ஊழலும், மோசடியும் நடந்துள் ளது. தடுக்கவேண்டிய அதிகாரிகள், பங்கு வாங்கிக்கொண்டு எதையும் கண்டுகொள்வ தில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வேலூர் த.மு.மு.க. -ம.ம.க. மாநில செயலாளர் ஏஜாஸ் அகமது நம்மிடம், "கிராம பஞ்சாயத்துகளில் அதிகளவு முறைகேடுகள் நடைபெறும் ஊராட்சிகள் குறித்து புகார்கள் வந்தால், ஆர்.டி.ஐ. போட்டு ஆய்வு நடத்தி, தவறுகளை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லிவருகிறோம். அதன்படி வேலூர் மாநகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள பெருமுகை பஞ்சாயத்தில் அதிகளவில் ஊழ லும், மோசடியும் நடப்பதறிந்து ஆய்வு நடத்தினோம். அதில், புதிய வீட்டுமனை வாங்குபவர்கள் வீடு கட்ட வாங்கிய பஞ்சாயத்து அனுமதிகளில் பல்லாயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கப்பட்டுள்ளது. அந்த ஊராட்சி மன்றத் தலைவர் கட்டியுள்ள இரண்டு வீட்டுக்கே பஞ்சாயத்து அனுமதி வாங்கவில்லை. தூய்மை பாரதம் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை சார்பில் கழிவுநீர் உறிஞ்சுகுழி, பிள்ளையார் குப்பம், அண்ணாநகரில் கட்டப்பட்டது. அதனை புதிய வீட்டுமனைப் பிரிவு போட்டவர் கள், இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதன்மீது நடவடிக்கை எடுக்காதிருக்க லட்சத்தில் பணம் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல் அந்த ஊராட்சியில் ஏ.எஸ்.அப்துல்நஜீர் என்கிற ஒப்பந்ததாரருக்கு மட்டும் அதிக ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளதை ஆய்வில் கண்டறிந்தோம். முறையான ஆவணப் பராமரிப்பு இல்லாம லேயே இவ்வளவு கண்டறிந்துள்ளோம். அவர் கள் முறையான ஆவணங்கள் பராமரித்திருந் தால் இன்னும் பல தவறுகளை கண்டறிந் திருப்போம்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vellore1-2025-10-23-17-46-46.jpg)
வழக்கறிஞர் பயாஸ் அகமதுவிடம் பேசிய போது, "பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பராஜ், 2021-ல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்போது, தனக்கும், தனது மனைவிக்குமான சொத்து மதிப்பு 14.25 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் இவர். ஊராட்சி மன்றத் தலைவராக பதவிக்கு வந்து நான்காண்டு காலத்துக்குள் 5 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அதனால் தகவல் ஆணையத்தின் மூலமாக ஆய்வு செய்ய மனு செய்தோம். வேலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தந்த பதிலில், தலைவர் இன்னும் அனுமதி தரவில்லை எனச்சொன்னார்கள். இதுகுறித்து மேல்முறை யீடு செய்தபின் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கச்சொன்னார்கள், அப்போதும் அதிகாரிகள் அசைந்துகொடுக்கவில்லை. விடாமல் போராடி உத்தரவு வாங்கி ஆய்வில் ஈடுபட்டோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vellore2-2025-10-23-17-47-00.jpg)
நாங்கள் ஆய்வு செய்ததில், வீட்டுவரி, தொழில்வரி கட்டுபவர்களுக்கு போலி வரி ரசீதுகளை தந்துள்ளார்கள். இதிலேயே பல லட்சம் மோசடி. அதேபோல் சென்னையில் சொந்த வீட்டில் வசிக்கும் தனது மகள் அர்ச்சனா பெயரில் பெருமுகையில் இலவச வீட்டுமனைப் பட்டா 2023, செப்டம்பர் மாதம் வாங்கிய ஊ.ம.த., அந்த இடத்தினை 2024 பிப்ரவரியில் தானமாகத் தன் பெயருக்கு வாங்கியுள்ளார். 1076 சதுரஅடியுள்ள அந்த இடத்தின் மதிப்பு 35 லட்சம். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 5 வீடுகள் அவருக்கு சொந்தமாக உள்ளதை கண்டறிந்துள்ளோம். அவருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் படி தான் அரசு சார்பில் தரப்படுகிறது. அப்படிப்பார்த்தால் 4 ஆண்டுகளுக்கு 1 லட்சம் ரூபாய் அளவுக்குதான் வாங்கியிருப்பார். அப்படியிருக்க அவருக்கு 5 கோடிக்கு சொத்துக்கள் எப்படி வந்தது? எல்லாமே ஊழல் தான். அதனால் இதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு, விஜிலென்சுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.
கடந்த அக்டோ பர் 6ஆம் தேதி ஆய்வில் ஈடுபட்ட பெருமுகை சுரேஷ் நம்மிடம், "நானும் வழக்கறிஞர் மணிபாரதியும் ஆய்வு செய்தபோது, 2010-2024 வரையில் இந்த ஊராட்சியில் வீடுகள் கட்ட அனுமதி தந்த கோப்புகளைக் கேட்ட போது, கோப்புகள் இல்லையென்று அதிர்ச்சி தந்தார்கள். 2 லட்ச ரூபாய் மதிப் புள்ள குப்பை அள் ளும் வண்டிக்கு 95 ஆயிரம் ரூபாய்க்கு பழுது பார்த்ததுன்னு செலவு எழுதியிருக்காங்க. வீடே இல்லாத இடத்துக்கு வீடு இருக்கறதா வரி போட்டிருக் காங்க. பல ஆவணங்கள் இல்லை, அதைக் கேட்டதற்கு ஒரு வாரத்தில் தருகிறோமெனச் சொன்னார்கள். ஜூலை மாதம் ஆய்வு செய்த மற்றொருவருக்கும் இரண்டு நாளில் ஆவணங்கள் தருகிறேன் எனச்சொன்னவர்கள் இதுநாள் வரை தரவில்லையாம். 15 நாட் களுக்கு ஒருமுறை டெபுடி பி.டி.ஓ.வும், 30 நாட் களுக்கு ஒருமுறை பி.டி.ஓ.வும் ஆய்வு செய் திருக்கணும். அதை அவங்க முறையா செய்யல, இதுகுறித்தெல்லாம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்'' என்றார்.
வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் திருமாலிடம் இதுகுறித்து கேட்ட போது, "அவர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்குமிடையே ஏதோ பிரச்சனைகள் நடந்துக்கிட்டு இருக்கு. எனக்கும் புகார்கள் வந் துள்ளது, ரெக்கார்டுகளை ஆய்வு செய்துக் கிட்டிருக்கோம்'' என முடித்துக் கொண்டார்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி. உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தந்தார் ராஜீவ்காந்தி. அந்த முதுகெலும்பை, ஊழல், மோசடி போன்றவை அரித்துக்கொண்டு இருக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/23/vellore-2025-10-23-17-46-35.jpg)