Advertisment

விக்கிரவாண்டி விபரீதம்! கழிவறைத் தொட்டியில் உயிரிழந்த சிறுமி!

ss

விக்கிரவாண்டி நகரில் அமைந்துள்ளது மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி புதுவைப் பேராயர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளியில் பழனிவேல்லி சிவசங்கரி தம்பதியின் குழந்தை லியாலட்சுமி எல்.கே.ஜி. படித்துவந்தி ருக்கிறார். மூன்றரை வயதான லியாலட்சுமி, பள்ளி கழிவறைத் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது விக்கிரவாண்டி நகரையே அதிரவைத்துள்ளது.

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் பழனிவேலு. இத்தம்பதி, வீட்டில் மளிகைக் கடை வைத்தும் நடத்துகின்றனர். வழக்கமாக பழனிவேலின் தந்தை கார்மேகம்தான் லியாலட்சுமியை பள்ளியில் விட்டு, திரும்ப அழைத்துவருவார்.

Advertisment

ss

ஜனவரி 3-ஆம் தேதி குழந்தையை திரும்ப அழைத்துவரச் சென்றிருக்கிறார் கார்மேகம். குழந்தை இல்லை...…கொஞ்சம் உடல்நலம் சரியில்லை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல பள்ளி நிர்வாகம், குழந்தையின் தந்தையான பழனிவேலுவுக்கும் செல

விக்கிரவாண்டி நகரில் அமைந்துள்ளது மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி புதுவைப் பேராயர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளியில் பழனிவேல்லி சிவசங்கரி தம்பதியின் குழந்தை லியாலட்சுமி எல்.கே.ஜி. படித்துவந்தி ருக்கிறார். மூன்றரை வயதான லியாலட்சுமி, பள்ளி கழிவறைத் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது விக்கிரவாண்டி நகரையே அதிரவைத்துள்ளது.

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் பழனிவேலு. இத்தம்பதி, வீட்டில் மளிகைக் கடை வைத்தும் நடத்துகின்றனர். வழக்கமாக பழனிவேலின் தந்தை கார்மேகம்தான் லியாலட்சுமியை பள்ளியில் விட்டு, திரும்ப அழைத்துவருவார்.

Advertisment

ss

ஜனவரி 3-ஆம் தேதி குழந்தையை திரும்ப அழைத்துவரச் சென்றிருக்கிறார் கார்மேகம். குழந்தை இல்லை...…கொஞ்சம் உடல்நலம் சரியில்லை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல பள்ளி நிர்வாகம், குழந்தையின் தந்தையான பழனிவேலுவுக்கும் செல்போனில் "குழந்தைக்கு கொஞ்சம் அடிபட்டிருக்கு… மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்' என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

இறுதியில் கார்மேகமும், பழனிவேலுவும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் லியோலட்சுமியை உயிரிழந்த சடலமாகத்தான் பார்த்திருக்கின்றனர்.

மதியம் 12 மணியளவில் எல்.கே.ஜி. குழந்தைகளை விளையாட அனுமதித்திருக்கிறார்கள். பள்ளி பூங்காவின் அருகில் செப்டிங் டேங்க் ஒன்று உண்டு. செப்டிக் டேங்குக்கும் பூங்காவுக்கும் இடையில் ஒரு கம்பிவேலி உண்டு. வேலி துருப்பிடித்து பராமரிப்பில்லாமல் ஆட்கள் கடந்துசெல்லும்படியாக சரிந்து கிடந்திருக்கிறது. இரண்டொரு தினங்களுக்கு முன் செப்டிக் டேங்கை பள்ளி நிர்வாகம் சரிபார்த்திருக்கிறது. அந்த வேலையைச் செய்தவர்கள், வேலைக்குப் பின் டேங்கை சரிவர மூடாமல் விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

பூங்காவில் விளையாடிய லியாலட்சுமி, ஏதோ காரணத்தால் செப்டிக் டேங்க் அருகே சென்றிருக்கிறாள். அப்போது அதில் தவறி விழுந்திருக்கிறாள். அதை யாருமே கவனிக் காமல் இருந்திருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துச்செல்ல வந்த ஆசிரியை ஏஞ்சல்தான், லியாலட்சுமியைக் காணவில்லை என்பதைக் கவனித்திருக்கிறார். அவர் தேடிப்பார்க்கும் போது, லியாலட்சுமி செப்டிக் டேங்கில் விழுந்துகிடப்பது தெரிந்து, பள்ளி நிர்வாகத் துக்குத் தெரிவித்திருக்கிறார்.

பள்ளி நிர்வாகம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் குக் போனபோது, குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்துவிட் டார்கள். குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் வீடியோ காட்சி கசிந்ததால் விக்கிரவாண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தையின் தந்தை பழனிவேலோ, “"முதலில் குழந்தைக்கு அடிபட்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் வந்ததும் குழந்தையைத் தேடுவதுபோல நடித்தார்கள். பின் அடிபட்ட குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்ப தாகச் சொல்லி மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள். அங்கேதான், குழந்தை செப்டிங் டேங்கில் விழுந்த விஷயமே தெரியவந்தது''’என கொந்தளிக்கிறார்.

பள்ளி நிர்வாகத்தின் முரண்பாடான பதிலால் கொந்தளித்த பழனிவேல் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் இறங்கினர். அதேசமயம், லியாலட்சுமி இறந்ததும், பள்ளி நிர்வாகம் காரணம் எதுவும் தெரிவிக்காமல் அனைத்துப் பெற்றோருக்கும் குழந்தையை உடனே வந்து அழைத்துச்செல்லவும் என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கின்றது. இதனால் பலரும் பதற்றமடைந்தனர்.

ssc

பழனிவேலு தன் குழந்தையின் மரணத்துக் காக சாலை மறியலில் இறங்கியபோது, பள்ளி யில் படித்த குழந்தைகளின் பெற்றோர் சிலரும் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இதையடுத்து காவல்துறை, பழனிவேல் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றது. டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் பழனிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வரட்டும், அந்த அறிக்கைக்கு ஏற்ப பள்ளியின் மேல் நடவடிக்கை எடுக்கிறோம் என உத்தரவாதம் தந்திருக்கிறார்கள். மேலும் பழனிவேலுவின் கோரிக்கைப்படி லியாலட்சுமியின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்திருக்கின்றனர். பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரோ, ஆசிரியை ஏஞ்சல் ஆகி யோர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் முத்துசாமி, குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி நிர்வாகத் துக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த குழந்தை யின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நான்கு மாதத்துக்கு முன்தான் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு தரச்சான்று வாங்கியிருக்கிறார்கள். பள்ளி வேலி, கழிவறை போன்றவற்றைப் பார்க்காமல், அதிகாரிகள் எப்படி தரச்சான்று வழங்கினார்கள் என உள்ளூர் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

"ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார், அரசுப் பள்ளிகளையும், பள்ளியின் நிர்வாகம், விடுதிகள், பள்ளியில் வழங்கும் சாப்பாட்டின் தரம் ஆகியவற்றையும் கண்காணிக்க தமிழக அரசு சார்பில் ஒரு கண்காணிப்புக் குழு இருக்கிறது. அந்தக் குழுக்கள் அரசு, தனியார் பள்ளிகளை முறையாகக் கண்காணித்து அறிக்கை அளித்துவந்தால், பள்ளிகளில் உள்ள இத்தகைய குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப் பட்டிருக்கும். அவை சரிவர இயங்காததே இத்தகைய விபத்துகளுக்கு காரணம்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

nkn080125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe