"ஹலோ தலைவரே, உலக முதலீட்டாளர்களைக் கவரும்வகையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், வெற்றிகரமாகத் தமிழகம் திரும்பியிருக்கிறார்.''”

Advertisment

"ஆமாம்பா, முதல்வரோடு போன அவர் டீமின் உற்சாகத்திலேயே, பயணத்தின் வெற்றி தெரியுதே?''”

rang1

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், 8ஆம் தேதி சென்னைக்குத் திரும்பியிருக்கிறார். அவரை, லண்டன்வாழ் தமிழர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்த ஒருவாரப் பயணத்தில் தமிழ்க்கனவு நிகழ்வுகள், தமிழ்ச் சங்கங்களுடன் கலந்துரையாடல், தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஏகத்துக்கும் பிஸியாகவே இருந்தார் ஸ்டாலின். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதுடன், அங்கே தந்தை பெரியாரின் உருவப்படத்தையும்  திறந்து வைத்து, பெருமித உரையையும் அவர் வழங்கினார். இந்தப் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 15,516 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 18,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள். இந்தப் பயணத்தின்போது காரல் மார்க்ஸ், ஜி.யூ.போப் ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று மரியாதை செலுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.''”

"நடிகர் விஜய்யும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க ரெடியாயிட்டாரே?''”

Advertisment

"த.வெ.க. தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி, திருச்சியில் தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்ப தாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தாகவும், ஓரிருநாளில் அவரது நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி யாகும் என்கிறது அவர்கள் தரப்பு. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!'’ என்ற பெயரில் எடப்பாடியும்,’ "மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்'’என்ற பெயரில் அன்புமணியும், "உள்ளம் தேடி இல்லம் நாடி'’என்ற பெயரில் தே.மு.தி.க. பிரேமலதாவும் பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில்... இப்போது விஜய்யும் பெட்டி கட்டிக்கொண்டு கிளம்புகிறார். ஏற்கனவே நடிகர் விஜய், விக்கிரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளையும், கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்தினார். அடுத்து, திமுக, அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் இடம் என சென்டிமெண்ட்டாக கருதப்படும் திருச்சியில் அவர் பிரச்சாரத்தைத் தொடங்குகிறாராம்.தான் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் பகுதிகளில் உள்ள பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் விஜய் சந்திப்பார் என்றும் கூறுகிறார்கள்.''”

"நடிகர் விஜய் இந்த முறை தனது பயணத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் போலிருக்கிறதே?''”

"நடிகர் விஜய், 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார். தன் பிரச்சாரப் பயணத்தில் எந்தவித உயிர்ப் பலி களோ, நெரிசல் சம்பவங்களோ, அசம்பாவிதங்களோ நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக் கிறார். இதற்காகத் தன் பிரச்சாரத்திற்கான வாகனத் தின் மீது, எவரும் எளிதில் ஏற முடியாத படி, முள் கம்பிகளைப் பொருத்தி, ஆந்திர நிறுவனம் ஒன்று கூறிய யோசணையின்படி மாற்றி அமைத்திருக் கிறார். அதேபோல் அவர் பிரச்சாரம் செய்யும் சில இடங்களில் இறங்கிச் சென்று பேச காவல்துறை யிடம் அனுமதி கேட்டார். அவர்கள் மறுத்துவிட் டார்கள். நடிகர் விஜய்யின் செலவுகளுக்கான நிதியை, சில கிறித்துவ நிறுவனங்கள் செய்கின்றன என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.''”

Advertisment

"அ.தி.மு.க.வில்'' ஏற்பட்டிருக்கும் கலகத்தை நடிகர் விஜய் தரப்பு, தங்களுக்கு சாதகமாக மாற்றப் பார்க்கிறதாமே?''”

"மத்திய மண்டலத்தில் டி.டி.வி. தினகரன், கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன், தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓரளவு ஆதரவாளர்களை வைத்திருப்பதாகச் சொல்லப்படு கிறது. எடப்பாடிக்கு எதிராக இவர்கள் எல்லோ ரும் கைகோர்க்க முனையும் இந்த நேரத்தில், இவர்களையெல்லாம் தங்கள் த.வெ.க. கூட் டணிக்கு அழைத்து வந்தால், தங்கள் பலம் அதி கரிக்கும் என்று  நடிகர் விஜய் நினைக்கிறாராம். அவரது இந்தக் கண்ணசைவைப் புரிந்துகொண்ட த.வெ.க.வின்  கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான அருண் ராஜ், இவர்களுக்கு நெருக்கமானவர்களை அணுகி, "நீங்கள் எங்கள் கட்சியில் இணைய வேண்டாம். மாறாக அ.தி.மு.க.விற்குப் போட்டியாக ஒரு கட்சியை ஆரம்பியுங்கள். பிறகு எங்கள் கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள். அது நம் எல்லோருக்குமே சாதகமான பலனைக் கொடுக்கும். உங்களுக்கும் கணிசமான சீட்டுகள் கிடைக்க, நான் உறுதியளிக்கிறேன்'’என்றெல்லாம் ஆசை காட்டினாராம். இது குறித்து அவர்கள் மூவரும் ஆலோசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.''”

"மத்திய மந்திரிசபையை பிரதமர் மோடி மாற்றியமைக்கப்போவதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வருதே?''”

rang2

"மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க, பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்த மாற்றத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலரின் இலாகாக்கள் மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.   தமிழக அரசியலில், குறிப்பாக அ.தி.மு.க. -பா.ஜ.க. உறவில் ஏற்பட்டுள்ள பல குழப்பங்களுக்கு நிர்மலாவும் ஒரு காரணம் என்று அமித்ஷா நம்புகிறாராம். மேலும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக மோடியிடம் அமித்ஷா ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறாராம். இதனால்தான் நிர்மலாவின் இலாகா மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று டெல்லி தகவல்கள் கூறுகின்றன. மேலும், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் பட்சத்தில், மத்திய அமைச்சராகும் முயற்சியில் அ.தி.மு.க. எம்.பி.யான சி.வி.சண்முகம் இருப்பதாக, அ.தி.மு.க. தரப்பிலேயே தகவல் பரவிவருகிறது.''”

"செங்கோட்டையன் டெல்லிக்கு பறந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் சசிகலாவோடு பா.ஜ.க. பிரமுகர் ரகசிய சந்திப்பு நடக்குதாமே?''

"ஆமா தலைவரே, தமிழ்நாடு பா.ஜ.க. பொறுப்பாளாரான அரவிந்த் மேனனும், சசிகலாவும் சந்தித்து பேச வுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அ.தி. மு.க. மூத்த நிர்வாகிகள் குறித்தும், அவர் களில் எடப்பாடி பக்கம் யாரெல்லாம் நிற்கிறார்கள் என்பதையும் சசிகலாவிடம் ஆலோசிக்கவுள்ளாராம். இந்த விவகா ரத்தில் அடுத்தகட்ட நகர்வை எப்படி கொண்டுசெல்வது என்பது குறித்தும் சசிகலாவிடம் கேட்டறிந்தாராம். கூடிய விரைவில், அ.தி.மு.க. தலைமையிலிருந்து எடப்பாடி ஓரங்கட்டப்பட்டு, அவர் தவிர்த்த மற்ற அ.தி.மு.க.வினர் அனை வரையும் ஒருங்கிணைத்து, சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதலமைச்சர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்துவதற்குமான திட்ட மிடலை வகுத்துள்ளார்களாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகுமாம்.''

"எடப்பாடிக்காக, ரேட் பேசி திரட்டப்பட்ட கூட்டத்திற்கு பணம் போய்ச் சேரவில்லையாமே?''”

"வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது ஒரு பக்கம் இருப்பினும், தன்னிடம் இருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை யும், இரட்டை இலைச் சின்னத்தையும் தக்க வைப் பதே எடப்பாடிக்குப் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள்.இந்த நிலையில், தனக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்று காட்டினால், பா.ஜ.க. தன் கனவுகளைக் கலைக்காது என்ற நம்பிக்கையில்தான், அவர் பிரச்சாரப் பயணத்தை  நடத்திவருகிறாராம். அந்த வகையில் அவர் தேனி பகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது, கூட்டத் திற்கு ஆள் சேர்க்க இயலவில்லை. அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் தலைக்கு ரூ.200 என்று பேசி, கடந்த 5ஆம் தேதி நடந்த போடிநாயக்கனூர் கூட் டத்திற்கு ஆள் பிடிக்கச் செய்தார்.  பண விநியோ கத்திற்காக தனியாக ஆட்களுக்கு டோக்கனையும் கொடுத்திருந்தனர். கூட்டம் முடிந்த நிலையில் டோக்கன் கொடுத்த கட்சி நிர்வாகிகள் எஸ்கேப் பாகிவிட்டனர். இதனால், டோக்கன் வாங்கியவர் கள் கடும் கோபம் அடைந்து, கண்ணில் பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளையெல்லாம் முற்றுகையிட, இதன்பிறகு ’இரண்டொரு நாளில் கொடுத்துவிடு கிறோம்’என்றபடி அவர்களும் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்களாம்.''”

"மான்வேட்டை விவகாரத்தில் தொடர் புடையதாகச் சொல்லப்படும், தி.மு.க. இளைஞரணி பிரமுகர் ஒருவரைத் தேடுகிறார்களே?''”

"நம்ம இந்த இதழ் நக்கீரன்ல 18-ஆம் பக்கத்துல மான் கறி செய்திய விரிவாக வெளி யிட்டிருக்கோம்.  மேலும்,  மானை வேட்டையாடி கறி சமைத்துச் சாப்பிட்ட  தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணிப் பிரமுகர் முகேஷை வலை வீசித் தேடி வருகின்றது வைல்ட் லைப் க்ரைம் கன்ட்ரோல் டீம். இந்த  நேரத்தில் தென்காசி மாவட்ட வன அதிகாரி அகில் தம்பி, ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார். இது இப்படியிருக்க, " இந்த மான்கறி வேட்டை எல்லாம் இங்கு வழக்கமான ஒன்றுதான். இது காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த மான்கறி வேட்டையை வனத்துறைக்குப் போட்டுக் கொடுத்தது உள்ளூரில் உள்ள "திருட்டுக் களவாணி' என்றொரு பட்டப் பெயர் கொண்ட அந்த எம்.எல்.ஏ.வாம். தனக்கு எதிராகக் கட்சியில் வளர்ந்துவருவதோடு மட்டுமில்லாமல், கட்சியின் மேல்மட்டத்திலும் செல்லப்பிள்ளையாக இளைஞரணிப் பிரமுகர் வலம் வந்தது, அந்த எம்.எல்.ஏ.விற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். அதனால்தான் இளைஞரணி அமைப்பாளர் முகேஷின் மான்கறி விவகாரம் பகிரங்கமாகியிருக் கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.''”

"ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி. அலுவலகம் அருகில் தாக்கப்பட்டிருக்கிறாரே?''”

"புரட்சித் தமிழகம் என்ற கட்சியை நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து  வருகிறார். இதனால் எரிச்சலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் எதிரில் அவரைப் பார்த்தபோது, ஆவேசப்பட்டு ‘எங்கள் தலைவரைக் கேவலப்படுத்து கிறாயா? என்று கேட்டபடியே திடீ ரெனத் தாக்குதல் தொடுத்தனர்.  இது தொடர்பாக மூர்த்தி, புகார் ஒன்றை டி.ஜி.பி.க்கு அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில், அவரும் தங்களைத் தாக்கியதாக வும், கத்தியால் காயப்படுத்தியதாகவும் சிறுத்தைகள் தரப்பினர் புகார் கொடுத்தனர். இந்த சம்பவத் துக்கு அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்து கண்டனங் கள் எழுந்த நிலையில், ஏர் போர்ட் மூர்த்தியை இர வோடு இரவாகக் கைது செய்து, அவர்மீது 3 பிரிவு களில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள்.''”

’"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந் துக்கறேன். மாஜி பா.ஜ.க.  மாநிலத் தலைவர் தனிக்கட்சி தொடங்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதற்கான செலவுகளுக்காக, துபாயில் அவர் பெரிய அளவிற்கு நிதியையும் திரட்டி வைத்திருக்கிறா ராம். விரைவில் அவரது கட்சியின் உதயம் இருக் கும் என்கிறார்கள். மேலும் அவர் வரும் தேர்தலில் நடிகர் விஜய்யின் த.வெ.க. வுடன் கூட்டணி வைப் பார் என்று இப்போ தே அவரது வார் ரூம் வட்டாரத்தினர் அலப்பறை செய்ய ஆரம்பித்துவிட் டார்கள்.''’

________________________________________
இறுதிச் சுற்று!
கண்டனக் குரல்!

rang3

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் செப்டம்பர் 8-ஆம் தேதி திங்களன்று, பத்திரிகையாளர்களை ஒடுக் கும் பா.ஜ.க.வைக் கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி பத்திரிகையாளர்களின் போராட்டம் நடைபெற்றது. "தி வயர்' பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், கரண்தாப்பர் சிந்தூர் ஆபரேஷன் குறித்து வெளியிட்ட செய்திக்காக இருவர் மீதும் அஸ்ஸாம் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்தது. இதையடுத்து நாடுமுழுவதும் இதைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதையொட்டி தமிழகத்திலும் தமிழ்நாடு டிஜிட் டல் ஜர்னலிசம் யூனியன் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் களைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!' என்ற தலைப்பில் "பத்திரிகையாளர்களின் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திரகுமார் தேரடி இந்நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாள ராகச் செயலாற்றினார். "தி இந்து' குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் "இந்து' என்.ராம், நக்கீரன் ஆசிரியர், "தமிழ் கேள்வி' செந்தில்வேல், "ஜீவா டுடே' ஜீவசகாப்தன், சென்னை பிரஸ் கிளப் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் ஆசிப். "மைனர்' சத்யா உள்ளிட்ட பல்வேறு  பத்திரிகையாளர்கள், காட்சி ஊடகத்தினர் கலந்துகொண்டு தங்கள் கண்டனக் குரலைப் பதிவுசெய்தனர்.

-கீரன்