Advertisment

விஜய் விரும்பும் தொகுதி! ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

vijay

சென்னையில் தி.மு.க. வின் கோட்டை என சொல்லப் படுகிற பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடவிருப்பதாக பேசப் படும் சூழலில், அனைவரின் கவனமும் பெரம்பூரை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், பெரம்பூர் தொகுதி மீது ஒரு எக்ஸ்-ரே பார்வை செலுத்தினோம். 

Advertisment

நடுத்தர வர்க்கத்தினரும், கூலித்தொழிலாளர்களும் நிரம்பிய இத்தொகுதியில் வன்னி யர்கள், பட்டியலினத்தவர்கள் பெரும்பான்மையாக இருக் கிறார்கள். இதனையடுத்து, சிறுபான்மையினர், மீனவர், முதலியார், அகமுடையார், நாயுடு, நாடார் என 70-க்கும் மேற்பட்ட சமூகத்தினர் நிரந்தர மாக வசிக்கின்றனர். உழைக்கும் வர்க்கம் மிகுந்த தொகுத

சென்னையில் தி.மு.க. வின் கோட்டை என சொல்லப் படுகிற பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடவிருப்பதாக பேசப் படும் சூழலில், அனைவரின் கவனமும் பெரம்பூரை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், பெரம்பூர் தொகுதி மீது ஒரு எக்ஸ்-ரே பார்வை செலுத்தினோம். 

Advertisment

நடுத்தர வர்க்கத்தினரும், கூலித்தொழிலாளர்களும் நிரம்பிய இத்தொகுதியில் வன்னி யர்கள், பட்டியலினத்தவர்கள் பெரும்பான்மையாக இருக் கிறார்கள். இதனையடுத்து, சிறுபான்மையினர், மீனவர், முதலியார், அகமுடையார், நாயுடு, நாடார் என 70-க்கும் மேற்பட்ட சமூகத்தினர் நிரந்தர மாக வசிக்கின்றனர். உழைக்கும் வர்க்கம் மிகுந்த தொகுதி பெரம்பூர். 

Advertisment

தனியார் நிறுவனம் ஒன்று பெரம்பூர் தொகுதியில் ஆழமான சர்வே ஒன்றை எடுத்திருக்கிறது. அந்த நிறுவனத் தரப்பிடம் விசாரித்தபோது, "சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி பெரம்பூர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,22,792 வாக்காளர்கள் இருக்கும் இத்தொகுதியில் 25,000 சேம்பிள்கள் மூலம் சர்வே எடுக்கப்பட்டது. 

சாதி, மதம், மொழி, வயது, தொழில், தொகுதியின் அடிப்படைப் பிரச்சனைகள் என அனைத்து வகையிலும் பிரித்து, அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு 2 வழிகளில் இந்த சர்வேயை எடுத்துள்ளோம். அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு சர்வேயும், தொகுதியிலுள்ள ஒவ்வொரு வார்டுகளுக்குமான ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், ஆண்கள் 50 சதவீதமும், பெண்கள் 50 சதவீதமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

சர்வேயின் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கிறது. தி.மு.க. 47.61 சதவீதமும், நடிகர் விஜய் 33.48 சதவீதமும், அ.தி.மு.க. 15.98 சதவீதமும், மற்றவர்கள் சொற்ப அளவிலும் வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். தி.மு.க.வுக்கும் விஜய்க்குமான வாக்கு வித்தியாசம் 14.13 சதவீதம். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்போது இந்த வித்தியாசம் இன்னும் சுமார் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் அதாவது, தி.மு.க.வுக்கு 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதில், 19-25 வயதுள்ள இளைஞர்களிடம் மட்டும்தான் தி.மு.க.வைவிட விஜய்க்கு சற்று அதிக ஆதரவு இருக்கிறது. எந்த கோணத்தில் ஆராய்ந்தாலும் தி.மு.க.வை விஜய் வெல்வது கடினம்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

பெரம்பூரில் தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், இத்தொகுதி மேம்பாட்டுக்காக குடிநீர், மேம்பாலம், புதிய குடியிருப்புகள் என பல்வேறு பணிகளைச் செய்து தந்திருக்கிறார். மேலும், தொகுதி மக்களால் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பதால் இத்தொகுதியில் தி.மு.க.வின் ஆதரவு அலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதாக சொல்லப்படும் சூழல் குறித்து த.வெ.க.வின் முக்கிய தரப்பில் விசாரித்தபோது, "பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட ஆதவ் அர்ஜுனா விரும்புகிறார். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே இத்தொகுதி குறித்து ஒரு ஹைப் உருவாக வேண்டுமென திட்டமிட்ட அவர், பெரம்பூரில் விஜய் போட்டியிடுகிறார் என சொல்வதன் மூலம் மட்டுமே இத்தொகுதி குறித்து மிகப்பெரிய ஹைப் மக்களிடம் உருவாகும் என யோசித்தார். 

அதன் முதல்கட்டமாகத்தான், செயல்வீரகள் கூட்டத்தில் விஜய் போட்டியிட வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றி அதனை ரிலீஸ் செய்தார் ஆதவ் அர்ஜுனா. அவர் எதிர்பார்த்தது போலவே, பெரம்பூர் தொகுதி பரபரப்பாகியிருக்கிறது. மற்றபடி விஜய் போட்டியிடும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை'' என்கிறார்கள் அழுத்தமாக! 

-இளையர்

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe