"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் அரங்கில் வினோத காட்சிகள் எல்லாம் அரங்கேறுது.''”

"ஆமாம்பா, த.வெ.க. விஜய் கூட பரிகார பூஜை பண்ணியிருக்காரே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, த.வெ.க. தலைவரான நடிகர் விஜய், கடந்த சில நாட்களாக சந்தன மாலை அணிந்தபடி வலம்வருகிறார். அவர் நெற்றியை சந்தன, குங்குமப் பொட்டுகள் அலங்கரிக்கின்றன. அவரது இந்த திடீர் பக்தியைப் பார்த்து, த.வெ.க. நிர்வாகிகளே, தலைவருக்கு என்ன ஆச்சு? என குழம்பிப்போயிருக்கிறார்கள். இது குறித்து விஜய் தரப்பிலேயே விசாரித்தபோது, ‘"இதுவரை நான்குகட்ட சர்வேக்கள் எடுக்கப்பட்டது என்றும், எல்லா சர்வேக்களிலும் 25 சதவீத வாக்குகள் மட்டுமே த.வெ.க.வுக்கு கிடைக்கிறது என்றும், இந்த ஆதரவு, தேர்தல் நெருங்க நெருங்க 35 சதவீதமாக மாறும் என்றும், தலைவர் விஜய் அருகிலேயே இருப்பவர் கள் அவரை உசுப்பேத்தி வந்தனர். ஆனால், எங்கள் கட்சிக்காக களமிறக்கியிருக்கும் ஆய்வு நிறுவனமோ தலைவர் விஜய்யிடமே, "உங்களிடம் சொல்லப்பட்ட சர்வே விபரங்கள் அனைத்தும் பொய். உண்மை நிலவரம் சரியாக இல்லை' என்று தெரிவித்திருக்கிறது. இதனால், அதிர்ந்துபோன விஜய், தனது ஆஸ்தான ஜோதிடரை வரவழைத்து தீர்வு கேட்டிருக்கிறார். ஜோதிடரோ, சில பரிகார பூஜையை நடத்தச் சொல்லியிருக் கிறார். இதன்படி, அடுத்த மூன்றாம் நாளே, 48 மணி நேர பரிகார பூஜை ரக சியமாகச் செய்யப்பட்டது. அந்த பூஜை யில் வைத்த சந்தன மாலையைத்தான் விஜய் அணிந்திருக்கிறார். இந்த பூஜை யால் அவருக்குத் தேர்தலில் செல்வாக்கு கூடும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது' ’என்கிறார்கள் புன்னகையோடு.''”

"பா.ம.க.வில் நடக்கும் பவர் யுத்தம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறதே?''”

ss

Advertisment

"ஆமாங்க தலைவரே, ராமதாஸுக் கும், அன்புமணிக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் எடுபடவில்லையாம். அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து, சமாதானத் தூதுவராக மாறிய ஆடிட்டர் குருமூர்த்தி ராமதா ஸிடம் விவாதித்துள் ளார். அப்போது ராமதாஸ், ’"அவனோடு சமாதானமாகிறேன். ஆனால், தலைவர் பதவியைக் கேட்டு அன்புமணி நச்சரிக்கக் கூடாது. தேர்தல் பணிகளில் அவன் கவனம் செலுத்தட்டும். பா.ம.க.விற்கு 100 சதவீத வெற்றியைப் பெற்றுத் தரட்டும்... அப்போது, தலைவர் பதவியைத் தருகிறேன்'’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். ஆனால் அன்புமணியோ, ராமதாஸின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வில்லை. தலைவர் பதவியை எந்தச்சூழலிலும் விட்டுத்தர மாட்டேன் என்பதே அவரது முடிவாம். இதில் இருபுறமும் சமாதானம் பேசிய குருமூர்த்தியே களைத்துவிட்டாராம். இதற் கிடையே பா.ம.க. விவகாரம் குறித்து குருமூர்த்தியிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்து அறிந் திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ’ராம தாஸிடம் நானே பேசுகிறேன்’ என்றிருக்கிறாராம் அவர். இந்த நிலையில் 19ஆம் தேதி சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துகிறார் அன்புமணி. கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்க்க, அருள் எம்.எல்.ஏ நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். அதேபோல் கோ.க.மணியும் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.''”

"கவர்னர் திருந்தவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக வெடித்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தஞ்சையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை, தி.மு.க. அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்திருந்தது. ஆறேழு வாரங்கள் கடந்தும்கூட, அதைக் கிடப்பிலேயே நந்தித்தனமாக’ போட்டு வைத்திருக்கிறார் கவர்னர். இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அவரைச் சந்திக்க நேரம் கேட்டும், பல்கலைக்கழக மசோதா குறித்துக் கேட்கத்தான் அவர் சந்திக்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கும் நேரம் கொடுக்காமல் கவர்னர் ரவி இழுத்தடித்து வருகிறார். இந்த நிலையில்தான், தஞ்சை சுற்றுப் பயணத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் கவர்னர் திருந்தவில்லை. அவர் போக்கில் மாற்றம் இல்லை’ என்று தன் மனக்கொதிப்பை அங்கே வெடித்திருக்கிறார். முதல்வரின் இந்த திடீர் கோபத் துக்குக் காரணம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த வழக்கில், தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர், கவர்னரை நட்போடு போய்ச் சந்தித்திருக்கிறார். இதை அறிந்ததால்தான், முதல்வர் தன் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.''”

Advertisment

"தி.மு.க. கூட்டணியில் ஓட்டை என்று அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?''”

ss

"வி.சி.க. தலைவர் திருமாவளவனை திருச்சியில் ஓட்டல் ஒன்றில் 30 நிமிடங்களுக்கும் மேலாக சந்தித்துப் பேசினார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். அப்போது, தான் எழுதிய புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதன் பிறகு, தேர்தல் அரசியல் குறித்து திருமாவிடம் பேசிய வைகைச்செல்வன், தி.மு.க. கூட்டணியில் நீங்கள் முரண்பட்டால், கொஞ்சம்கூட யோசிக்கா மல் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும் என அழைத்திருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கேட்கப்பட்டபோது... திருமா, "ஒரே ஓட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது இலக்கியம் சம்மந்தமாகப் பேசிக்கொண்டோமே தவிர, அரசியல் குறித்தெல்லாம் பேசிக்கொள்ள வில்லை'’என்றார். இந்த நிலையில் திருமாவுடனான சந்திப்பு பற்றி வைகைச் செல்வனிடம் செய்தியாளர் கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "தி.மு.க. கூட்டணிக்குள் ஓட்டை விழுந்துவிட்டது. எங்கள் கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்'’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். இது தி.மு.க. தரப்பை அதிரவைத்தி ருக்கிறது. உடனே தி.மு.க. தரப்பில் இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "தி.மு.க. கூட்டணி, கொள்கையின் அடிப்படையில் உருவானது. அதில் எந்த ஓட்டையும் விழவில்லை'’என்று பதிலடி தந்திருக்கிறார்.''”

"கலெக்டர் ஒருத்தர் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளை அலட்சியப் படுத்தி ஓரம்கட்டி வருவதாகச் சொல்கிறார்களே?''”

"ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் "லாபி' டெல்லிவரை செல்வாக்கு பெற்றிருப்பதால் இங்குள்ள ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகளைக் கூட அவர்கள் மதிப்பதில்லை. மேலும் அரசு விழாக்களிலும் அவர்களை ஓரம் கட்டி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஈரோடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ராஜகோபால் சுங்கரா. அவர் மீது பல்வேறு புகார்கள் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க. தரப்பினர்,’எங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு பிரகாஷ் எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார் ஆகியோரை எல்லாம் கலெக்டர் மதிப்பதே இல்லை. அரசு நலத்திட்ட விழாக்களுக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அனுப்பப்படும் பத்திரிகை செய்திகளில்கூட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வதைக் குறிப்பிடமாட்டார்கள். அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்த கலெக்டரே நடத்துவதுபோல்தான் அறிவிப்பு வெளியிடுவார் கள். அண்மையில் மினிபஸ் சேவைக்கான தொடக்க விழா, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே நடந்தது.இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அந்தியூர் வெங்கடாசலமும், ஈரோடு சந்திரகுமாரும் கலந்துகொண்டனர்.விழாவில் பங்கேற்ற இவர்களை அலட்சியப்படுத்தி, ஒரு ஓரத்தில் நிற்கும்படி செய்த கலெக்டர் ராஜகோபால், மினி பஸ் சேவையைத் தானே தொடங்கிவைத்தார். இவரது அலட்சியம், ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளையே மனம் நோகவைத்து வருகிறது’என்கிறார்கள் எரிச்சலாய்.''”

"தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கட்சியினர் கோபத்தில் இருக்கிறார்களே?''””

"பாளையங்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ.வான அப்துல் வகாப், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான நயினாரோடு அட்ஜெஸ்மெண்டில் இருப்பதாக, அங்கிருக்கும் உடன்பிறப்பு கள் மத்தியிலேயே ஆவேச டாக் அடிபடுகிறது. அதாவது, வரும் தேர்தலில் நயினார் நெல்லையில் நிற்கத் திட்டமிட்டிருக் கிறாராம். அதேபோல் அப்துல்வகாப். மீண்டும் பாளையங் கோட்டையில் நிற்கவிருக்கிறாராம். இதன் அடிப்படையில் நயினாரும், வகாப்பும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க வைக்க உதவுவதாக தங்களுக்குள் சீக்ரெட் டீலிங் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்தத் தகவல்தான் இப்போது, நெல்லை பகுதி அரசியலைச் சூடாக்கி வருகிறது.''

"வேலூர் மாவட்டத்திலும் ஒரு அறிவாலயம் உருவாகி வருகிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் தலைமை அலுவல கத்துக்காக 88-ல் சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட மான முறையில் அண்ணா அறிவாலயத்தை உருவாக்கினார் கலைஞர். இதைத் தொடர்ந்து திருச்சி, விழுப்புரம் ஆகிய ஊர்களிலும் மாவட்ட தி.மு.க.வுக்காக ’கலைஞர் அறிவாலயம்’ என்ற பெயரில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் வேலூரிலும் இப்படியொரு மாவட்டக் கழக அலுவலகத்தைத் திறக்கவேண்டும் என்று தி.மு.க. தொண் டர்கள் கனவு கண்டுவந்தனர். தி.மு.க.வின் பொதுச்செய லாளரான அமைச்சர் துரைமுருகனே அங்கு இருந்தும், தொண்டர்களின் கனவு நிறைவேறவில்லை. இந்த நிலையில் வேலூர் தி.மு.க. மா.செ.வும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், தனது அணைக்கட்டு தொகுதியிலேயே கட்சிப் பெயரில் இடம் வாங்கி, 1.25 கோடி செலவில் 1500 சதுர அடியில் கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கிவருகிறார். இதை ஜூன் 25ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க விருக்கிறார்.இந்த அறிவாலயத்தின் முன் 9 அடி உயரத்தில் கலைஞரின் வெண்கலைச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ. நந்தகுமார், "இது கட்சி அலுவலகமாக மட்டும் செயல்படாமல், கோரிக்கையோடு வரும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் இடமாகவும், மாணவ -மாணவிகளுக்கு வழிகாட்டும் மையமாகவும் இயங்கும்' என்கிறார் பூரிப்பாக''”

"ரெட்கிராஸ் அமைப்பின் மீது இந்துத்துவா அமைப்பினர் கண் வைத்திருப்பதாகச் சொல் கிறார்களே?''”

"தமிழக ரெட்கிராஸ் அமைப்பில் கோடிக் கணக்கான நிதி இருக்கிறது. இதன் தலைவராக இருப்பவர் கவர்னர் ரவிதான். இந்த நிலையில் ரெட்கிராஸ் அமைப்பில் குவிந்து கிடக்கும் நிதி கண்ணை உறுத்தியதால், இந்துத்துவா சக்திகள் அதற்குள் நுழையும் முயற்சியில் இருக்கின்றன. இதன் அடையாளமாக பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவரான திருப்பதி நாராயணன் போன்றோர், ’"ரெட்கிராஸ் அமைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். முக்கியமானவர்களைச் சேர்க்கவேண்டும்' என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ’"சேவைக்கான அமைப்பிற்குள், தங்கள் தேவைக்காக இவர்கள் நுழைய நினைக்கிறார்கள்'’என்று கமலாலயத் தரப்பில் இருந்தே கமெண்ட்டுகள் வருகின்றன.''”

ff

"தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி கேரள காவல்துறையில் உயர்பதவியில் அமர்ந்திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நிஷாந்தி. இவர் 2008ஆம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. திருவனந்தபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், கடந்த வருடம் சொந்த காரணங்களுக்காக 10 மாத விடுப்பில் சென்றிருந்தார். விடுமுறை முடிந்த பின், கடந்த இரு தினங்களுக்கு முன் பணியில் சேர்ந்த அவரை, கேரள நுண்ணறிவுத்துறை டி.ஐ.ஜி.யாக நியமித்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. இது திருச்சி பகுதி பெண்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.''”

"நானும் எனக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. சேர்ந்ததில் ஏகத்திற்கும் மன வருத்தத்தில் இருக்கும் மாஜி மந்திரி ஜெயக்குமார், இப்போது தி.மு.க.வில் சேர்வதற்காகத் தூது விட்டிருக்கிறாராம். இவரைக் கட்சியில் சேர்த்தால் என்ன மாதிரியான சாதக பாதகங்கள் ஏற்படும் என்று, தயக்கத்தோடு அறிவாலயத் தரப்பு இப்போது விவாதம் நடத்திவருகிறதாம்.''”