"ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் திடீர் திடீர்னு திருப்பங்கள் நடைபெறுகிறதே...''”

Advertisment

"ஆமாம்ப்பா... செங்கோட்டையன் -டி.டி.வி. தினகரன் சந்திப்பு பற்றி சொல்றியா?''

Advertisment

"உண்மைதாங்க தலைவரே... செங்கோட்டையன் டி.டி.வி. தினகரன் வீட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக உரையாடியதோடு, அங்கேயே மதிய உணவை அருந்தியிருக்கிறார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியே வந்து நான் தினகரனை சந்திக்கவில்லை என்றார். அதேபோல் செங்கோட்டையன், ஓ.பி.எஸ்.ஸையும் ரகசியமாகவே சந்திக்கவிருக்கிறார்.  எடப்பாடியை ஏமாற்றவே இப்படி அவருக்குப் போட்டியாக உள்ளவர்களையெல்லாம்  அவர் ரகசியமாக சந்திக்கிறார். எடப்பாடியோ, இதற்கெல்லாம் பா.ஜ.க. கொடுக்கும் சாவிதான் காரணம் என்று நினைக்கிறா ராம். டெல்லியின் வஞ்சகப் போக்கு அவரது தூக்கத்தைத் தொலைத்திருக்கிறதாம்.''”

"ராம ஜென்மபூமி வழக்கின் தீர்ப்பு குறித்த முன்னாள் நீதிபதியின் கருத்து சர்ச்சையாகி இருக்கிறதே?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, ராம ஜென்மபூமி விவகாரத்தில் தீர்ப்பளித்தவர்களில் ஒருவரான நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அத் தீர்ப்பு குறித்து ஊடகவியலாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் கேட்ட கேள்விக்கு கொடுத்த பதில், அனைவரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியிருக்கிறது. 1949-ல் பாபர் மசூதிக்குள் ராம்லாலா சிலை வைத்தது புனிதத்தைக் கெடுத்த செயல் இல்லையா? ஏன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லையென்று முன்னாள் நீதிபதி சந்திரசூட்டிடம் கேட்டதற்கு, மசூதி கட்டப் பட்டதுதான் புனிதத்தை கெடுத்த செயல் என்று கூறியுள்ளார். மேலும், மசூதி கட்டப்படும் முன் அங்கு கோவில் இருந்த தற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அகழ் வாராய்ச்சி அறிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவர்தான், அத்தீர்ப்பை வழங்கும்போது கடவுளிடம் வேண்டி னேன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது இவரே இந்துத்வா அரசியல் நிலைப்பாட்டிலிருந்தது வெளிப்பட்டுள்ளது. இவரது தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டும் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் தான். அப்போது, எமர்ஜென்ஸியை ஆதரித்து அவர் தீர்ப்பு வழங்கியிருந்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி யிருந்தது.''

"பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துவிட்டு படுஅப்செட் டாகத் திரும்பிவந்திருக்கிறாரே நயினார் நாகேந்திரன்?''”

"ஆமாங்க தலைவரே,  நயினாருக்கு அது ஒரு நெருடலான சந்திப்பாக இருந்தது என்கிறார்கள், அவர் தரப்பினர். அந்த சந்திப்பின்போது நயினா ரிடம் பேசிய நட்டா,’"எடப்பாடியிடம் இப்படியா ஒட்டிக்கொண்டிருப்பது? இதற்குப் பதில் நீங்கள் அ.தி.மு.க.வுக்கே போய்விடலாமே? உங்கள் இருவரின் எல்லை மீறிய நெருக்கத்தால், நம் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் விலகிவிட்டன. உங்களைப் பற்றி 10 பக்கத்துக்கு புகார் வாசித்து கடிதம் எழுதியிருக்கிறார் தினகரன். அவரை சமா தானப்படுத்துங்கள்'’என கடிந்துகொண்டாராம். நட்டாவின் கோபத்தால் மிரண்ட நயினார், அதைத் தணிக்கும் வகையில் சில விளக்கங்களைச் சொல்லி யும் அது எடுபடவில்லையாம். அதனால் நொந்து போய் சென்னை திரும்பியிருக்கிறார் என்கிறார்கள். இதைத் தெரிந்துகொண்ட அ..மலை, தினகரனை அவசர அவசரமாக சந்தித்துப் பேசியிருக்கிறாராம். அப்போது தினகரன், ‘"பா.ஜ.க. கூட்டணிக்கு வருவதில் எனக்குத் தயக்கமில்லை. அதுபற்றி டிசம்பரில் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்கக்கூடாது. இதை மட்டும் டெல்லி உறுதிப்படுத்தினால் இப்பவே கூட்டணிக்கு வந்துவிடுகிறேன்'’என்று அதிரடியாக கண்டிசன் போட்டிருக்கிறாராம்.''”

"இதற்கிடையே, பா.ஜ.க.வின் அ...மலை தமிழகம் திரும்பவே பயப்படுகிறாராமே?''”

"பா.ஜ.க. அ...மலை அண்மையில் கொழும்பு சென்றார். அங்கிருந்து தமிழகம் திரும்ப இருந்த அவர், தமிழக அரசியலில் டெல்லி ஆடிவரும் ஆடுபுலி ஆட்டத்தைப் பார்த்து, இந்த நேரத்தில் தமிழகம் திரும்ப வேண்டாமென்று அப்படியே மலேசியாவுக்குப் போய்விட்டாராம். தினகரனை அவர் டெல்லியின் அனுமதி இன்றி முந்திரிக்கொட் டைத் தனமாக சந்தித்தது, பா.ஜ.க.வுக்குள் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவே அவர் வெளி நாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.”

"முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்தற மாதிரி பேசியிருக்காரே?''”

rang1

"முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தென்காசி மாவட்ட  புளியங்குடி கல்லூரி ஒன்றில், ஸ்ரீதர் வேம்பு ஏற்பட்டில் நடந்த ’"ஒரே தேசம், ஒரே கனவு'’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அவர்தான் ஒரே தேசம் ஒரே கனவு பற்றிய ஆய்வுக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத், ‘"பிரபல நடிகர் மோகன்லால் இன்று தாதா சாகேப் பால்கே விருதைப் பெற் றுள்ளார். அவர் மலையான சினிமாவில் மட்டுமல்ல தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடிப்பவர். அவர் விருதைப் பெற்றதால் "ஒரே தேசம், ஒரே கனவு' என்ற எங்கள் கருப்பொருள் உண்மையான அர்த்தம் பெறுகிறது. இந்த சொற் றொடர் வெறும் கோஷமல்ல. நாம் தனித்தனியாகச் சிதறிய குரல்களாக இருக்கக்கூடாது. "ஒரு தேசம், ஒரு உறுதி, ஒரு இலக்கு' என்பதே  நமது பாதை. இது நம்மை ஒருங்கிணைக்கிறது. அதை நோக்கி நகர்வோம்'’என்று சீரியசாகச் சொல்லியிருக்கிறார். அவரது வாதம் மாணவர்கள் மத்தியில் சிரிப்பலைகளையே ஏற்படுத்தியதாம்.''”

"விஜய் புதுசா ஒரு கணக்குப் போட்டுருக் காரே... அது ஒர்க்அவுட் ஆகுமா?''

"ஆமாங்க தலைவரே... கொள்கைரீதியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும், அ.தி. மு.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். ஆனால், கூட்டணித் தலைமை அ.தி.மு.கதான் என்பதில்  தொடர்ந்து  நெருடல் இருந்து வந்தது. தற்போது, என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து விலகிய டி.டி.வி. தினகரனும், ஓ.பி. எஸ்.ஸும் ஒரே நேரத் தில் த.வெ.க.வுடன் டூயட் பாட தயாராகி வருவதால் குஷியாகி இருக்கிறதாம் த.வெ.க. தலைமை. அதனால், டிசம்பர்வரை போட் டுள்ள தன்னுடைய பிரச் சார பயணத் திட்டத்தை பிப்ரவரி வரை நீட்டித்து, கூட்டத்தைக் காட்டினால் தே.மு.தி.க. உள்ளிட்ட வேறு சில கட்சிகளும்  இணைய லாம் எனவும், அப்படி இணைந்தால் தனது தலைமையில் தனி கூட்டணி உருவாக்கி களம் காண லாம் எனவும் புது கணக்கு போட்டுள்ளாராம் விஜய்.''

rang3

"பள்ளிப்பாளையம்   நகராட்சி சேர்மனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, நாமக்கல் மாவட்ட பள்ளிப் பாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டு களில் 13 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி யது. இதைத் தொடர்ந்து சேர்மன் வேட்பாளராக 13ஆவது வார்டு அமுதாவை தி.மு.க. தலைமை அறிவித்தது. இந்த நிலையில், அமுதாவுக்குப் போட்டியாக சிலரை விலைக்கு வாங்கி, சேர்மனாக 21ஆவது வார்டு செல்வராஜ் ஆனார். அப்போது துணை சேர்மனாக வந்தவர் பாலமுருகன். இந்த நிலையில் துணை சேர்மன் பாலமுருகன் தலை மையில் 17 கவுன்சிலர்கள் சேர்மனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.’கட்சிக்கு விரோதமாகப் போட்டியிட்டு சேர்மன் ஆன செல்வராஜ், கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சி களைப் புறக்கணித்தார். நகரமெங்கும் வட்டிக்கு விடுவதிலும், கள்ளச்சரக்கு விற்பனை செய்வதி லுமே கவனம் செலுத்துகிறார். நகராட்சி மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும், அவர் செய்ததில்லை. தொடர்ந்து மக்களுக்கு விரோத மாகவே செயல்படும் அவர் தேவையில்லை. எனவே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்’ என்று நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அங்கே சேர்மன் நாற்காலி ஆடிக் கொண்டு இருக்கிறது.''”

"பழைய ஓய்வூதியத் திட்டம் வருமா? வராதா? என்கிற பதட்டத்தில் அரசு ஊழியர்கள் தவிக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடிவருகின்றனர். இதற்கிடையே, ஒருங் கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒன்றை சமீபத்தில் அறிவித்து, அதில் இணைவது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் டெல்லி ஓலை அனுப்பியது. இதில் சேர்வது குறித்து மாநில அரசுகள், இம்மாதம் 30ஆம் தேதிவரை  எஸ் ஆர் நோ என, முடிவைத்  தெரிவிக்கலாமாம். அதேபோல,  பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஆராய, ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு விடம்  அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்லவும் இந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையே அவகாசம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் கேள்விக்கு மாநில அரசு என்ன பதிலைத் தரப்போகிறது என்பதை அறிய, எல்லோரும் ஆர்வம் காட்டும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோ, மத்திய அரசின் திட்டத்துக்கு. ஓ.கே.சொல்லலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்களாம். ஆனால் அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே ஆர்வமாக இருப்பதால், ககன்தீப்சிங் பேடி கமிட்டி எதை பரிந்துரைத்து அரசுக்கு அறிக்கை தரும் என்கிற கேள்வி, அரசு ஊழியர்களிடம் இருக்கிறது. அடுத்த மாதம் சட்டமன்றம் கூடவருப்பதால், இது தொடர்பான ஆர்வம் மிகுந்திருக்கிறது.''”

"விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் காவிரி விவசாயிகள்  நூதனப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே?''”

rang2

"காவிரி விவசாயிகள் கொந்தளிப்பில் இருக் கிறார்கள். அவர்களிடம் கேட்டால், ‘லட்சக்கணக் கான கனஅடி  நீர் காவிரியாற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கிறது. அதில் சுமார் 2000 கனஅடி தண்ணீரை, காவிரி -அய்யாறு இணைப்பு கால்வாய்  வழியாக,  திருச்சி அய்யாற்றில் இணைத்தால்... பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள சுமார் ஐந்து லட்சம் ஏக்கர்  நிலங்கள் பயனடையும். இதன்மூலம் 1000 ஏரி, குளங்களை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை ஆயிரம் அடியிலிருந்து 50 அடிக்கு கொண்டுவந்து, பொதுமக்களையும் விவசாயிகளையும் காப்பாற்றலாம். இதை அரசு கவனிக்கவேண்டும். அதோடு,  நஷ்டப்பட்ட எங்களை நிமிர வைக்க... எங்கள் பிள்ளைகளின்  கல்விக்கடனை முழுமை யாக தள்ளுபடி செய்யவேண்டும். கூட்டுறவு வங்கி யில் எங்கள் பெயரில் 2014இல் இருந்து நிலுவை யிலுள்ள  அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். 60 வயதடைந்த அனைத்து விவசாயிகளுக்கும்  ரூபாய் 5000 அளவுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்றெல் லாம் கோரிக்கை வைத்து வருகிறோம். அதனால் தான். அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்  அய்யாக்கண்ணு தலைமையில் "நாங்கள், திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து, நூதன போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்'’என்கிறார்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு. இந்த வயதான நிலையிலும் மணலில் புதைந்து தங்களை வருத்திக்கொண்டு பெரியவர் அய்யாக்கண்ணு மற்றும் அவரது தோழர்களின் போராட்டத்தைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது.'' 

"தமிழகத்துக்கான புதிய டி.ஜி.பி. விரைவில் முறைப்படி நியமிக்கப்படவிருக்கிறார் என்கிறார் களே?''”

"புதிய தமிழக டி.ஜி.பி. குறித்த டெல்லியின் பரிந்துரைப் பட்டியலை வாங்கிவர, தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரும், தற்போதைய பொறுப்பு டி.ஜி.பி.யான வெங்கட்ராமனும் டெல்லி செல்கிறார்கள். யூ.பி.எஸ்.சி. விதிகளின்படி, தமிழக அரசு அனுப்பிவைத்த பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஐந்துபேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் அங்கே காத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போதைய பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் பெயரும் இருக்கிறதாம். எனவே அதன் அடிப்படையில் பொறுப்பு டி.ஜி.பி.யை முறைப்படி டி.ஜி.பி.யாக தமிழக அரசு நியமிக்கும் என்கிறது தமிழக அரசு வட்டாரம்.''

"தீபாவளிக்கே மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக் காது என்கிற குரல் எழ ஆரம்பித்திருக்கிறதே?''”

"வரும் பண்டி கைக் காலங்களில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட் களை தடையில் லாமல் வழங்க வேண்டும் என்பதற்காக மத்தியிலுள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திடம் ரூ.10 ஆயிரம் கோடியை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் கடனாகக் கேட்டது. ஆனால் தேசிய மேம்பாட்டுக் கழகமோ, கேட் கும் கடன் தொகையை விட 1.2 மடங்கு அதிக மதிப்புள்ள சொத்துக்களைப் பிணையமாக வைத்தால் மட்டுமே கடன் என்னும் நிபந்தனை யோடு, கூடுதலாக சில நிபந்தனைகளையும் விதித்தது. வெறும் 37.84 கோடி சொத்து வைத்திருக்கும் அரசாங்க மார்க்கெட்டிங் நிறுவனமான டான்ஃபெட் மூலம் ரூ 10,000 கோடி ரூபாயைக் கடன் வாங்க முயற்சிக்கிறது தி.மு.க. அரசு. இதில் சிக்கல் ஏற்பட்டால் இனிவரும் காலங்களில் ரேஷன் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்காது என்கிறார்கள் அதி காரிகள். இதை தெரிந்துகொண்ட அ.தி.மு.க., ’"தீபாவாளிக்கே ரேசன் பொருட்கள் மக்களுக் குக் கிடைக்காது'’ என்கிற பிரச்சாரத்தைக் கையில் எடுக்கிறதாம்.””

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஜெயலலிதா ஆட்சியில் கனிம நிறுவனமான டாமின் சேர்மனாகவும், ஜெ.வுக்கு  மிக நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் இருந்தவர் தியானேஸ்வரன். இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதை சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரித்து வந்தது. இந்த நிலையில், சில ஆண்டு களுக்கு முன்பு தியானேஸ்வரன் காலமானார். இதனையடுத்து வழக்கும் முடங்கியது. இப்போது திடீரென்று தியானேஸ்வரன் தொடர்புடைய அசையும், அசையா சொத்துக்களை முடக்கி வைத் திருக்கிறது அமலாக்கத்துறை. காரணம், அமலாக் கத்துறையின் கவனம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சொத்துக்கள் மீது  திரும்பியுள்ள தாம்.’


___________________________
உற்சாகத்தில் ஈரோடு இளைஞரணி!

தி.மு.க.வில் இருக்கும் பல மாவட்ட கழகங்களுக்கே தனி அலுவலகம் அமைக்கப்படாத நிலையில் ஈரோடு மாவட்ட தி.மு.க. இளைஞரணி தனி அலுவலக முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது குறித்து  நம்மிடம் பேசிய ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ.பிரகாஷ், "மொடக்குறிச்சி பிரதான சாலையில் 5 சென்ட் நிலத்தை வாங்கி, அதை தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளையின் பேரில் பதிவு செய்திருக்கிறேன். அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கொண்ட கட்டடம் கட்ட விருக்கிறோம். முதல் தளத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமையும். இது மாணவ -மாணவிகளின் கல்விக்கு துணை செய்வதாக அமையும். இரண்டாவது மாடி முகப்பில் கலைஞரின் வெண்கலச்சிலை அமையவிருக்கிறது.  அதையொட்டி பெரிய அளவிலான அரங்கம் அமைக்கப்படுகிறது. அங்கு இளைஞரணி கூட்டங்களும், தி.மு.க. பாசறைக் கூட்டங்களும் நடக்கும்''’என்றார் பூரிப்பாக. 

-ஜீவா


______________
இறுதிச் சுற்று!

பீலா வெங்கடேசனுக்கு முதல்வர் அஞ்சலி! 

rangbox

தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவால் காலமானார். பீஹார் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலாவின் தந்தை வெங்கடேசன் தமிழக காவல்துறையில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி., பீலாவின் தாய் ராணி, காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ! ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ்தாஸை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். பிறகு, தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இடமாறினார் பீலா. கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து சிறப்பாக அவராற்றிய பணி, அனைவராலும் பாராட்டப்பட்டது.  மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் கடந்த சில வருடங்களாக அவஸ் தைப்பட்டு வந்த அவர், மருத்துவ விடுப்பில் இருந்துகொண்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார் பீலா. கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதி யப்பட்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவரிட மிருந்து பிரிந்து வாழ்ந்துவந் தார் பீலா. தனது பெயரோடு இணைந்திருந்த கணவரின் பெயரையும் நீக்கிக்கொண்டார். பீலாவின் உடலுக்கு  முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கவர்னர் ரவி ஆகி யோர் இரங்கல் தெரிவித்தனர். பீலாவின் மறைவையறிந்து தனது வீட்டிலிருந்தபடியே அழுதுகொண் டிருந்தார் ராஜேஷ்தாஸ். 

-இளையர்