Advertisment

விஜய் ஆட்களின் டெல்லி தகிடுதத்தம்!

vijay

விஜய்யின் அரசியல் முழுக்க முழுக்க டெல்லியை எதிர்நோக்கியே இருக்கிறது. டெல்லியில் உள்ள சுப்ரீம்கோர்ட், மோடியின் வீடு இரண்டிலும்தான் விஜய் அரசியல் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். ஆதவ் அர்ஜுனின் தவறான திட்டமிடல்கள்தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என அவரிடம் பேசாமலேயே இருந்த விஜய், ஆதவ் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆகியோர் இணைந்து "கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை ரத்து செய்யவேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தொடர்பாகத்தான் மறுபடியும் ஆதவ்விடம் பேச ஆரம்பித்தார் விஜய் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா, அபிஷேக் சிங்வி என்கிற காங்கிரஸ் வழக்கறிஞரை சந்தித்துப் பேசினார். அவரோ "இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக கபில் சிபில் ஆஜராகப் போகிறார். அவர் முதுப

விஜய்யின் அரசியல் முழுக்க முழுக்க டெல்லியை எதிர்நோக்கியே இருக்கிறது. டெல்லியில் உள்ள சுப்ரீம்கோர்ட், மோடியின் வீடு இரண்டிலும்தான் விஜய் அரசியல் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். ஆதவ் அர்ஜுனின் தவறான திட்டமிடல்கள்தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என அவரிடம் பேசாமலேயே இருந்த விஜய், ஆதவ் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆகியோர் இணைந்து "கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை ரத்து செய்யவேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தொடர்பாகத்தான் மறுபடியும் ஆதவ்விடம் பேச ஆரம்பித்தார் விஜய் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா, அபிஷேக் சிங்வி என்கிற காங்கிரஸ் வழக்கறிஞரை சந்தித்துப் பேசினார். அவரோ "இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக கபில் சிபில் ஆஜராகப் போகிறார். அவர் முதுபெரும் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர். அவருக்கு எதிராக நான் ஆஜராவது அரசியல் ரீதியாக தவறான முடிவாகிவிடும். இதிலுள்ள நெருக்கடியைப்பற்றி நானே நடிகர் விஜய்யிடம் பேசி விடுகிறேன் என்று சொன்னதோடு ஆதவ்விடம் நம்பர் வாங்கி விஜய்யின் பெர்சனல் லைனுக்கு பேசினார். 

Advertisment

லாக்கப் படுகொலை செய்யப்பட்ட அஜித் விசயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. அது சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் நடைபெற்ற நிகழ்வு. ஒரு சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் மாநில அரசு என்ன செய்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது. கரூர் சம்பவம் நடந்தவுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் அங்கு சென்று பார்த்தார்கள். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை                                  யில் ஒரு நபர் விசாரணை கமிஷனையும் மாநில அரசு நியமித்துள்ளது. சென்னை உயர்நீதி         மன்றமும் அஸ்ரா கார்க் என்கிற நேர்மையான போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. மாநில அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவையும் மாநில அரசு செய்த பிறகு மாநில அரசின் விசாரணையை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணை கோர முடியாது. ஹரியானாவில் இதுபோல சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில் ஒரு சம்பவம் நடந்த பதினைந்து நாட்களுக்குள் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணை கோரலாம். ஆனால் மாநில அரசு உரிய 
நடவடிக்கைகள் எடுத்த பிறகு சி.பி.ஐ. விசாரணையை கோர முடியாது என தெளிவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என அபிஷேக் சிங்வி விஜய்க்கு விளக்கம் கொடுத்தார். 

Advertisment

ஆனால் பா.ஜ.க. தரப்பு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொன்னதால் பா.ஜ.க. கவுன்சிலருடன் சேர்ந்து வழக்கு தொடர விஜய் சம்மதித்தார். இதற்கிடையே டெல்லி சென்றிருக்கும் அ.மலை பி.எல்.சந்தோஷ் மூலம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார். ஒருவேளை பிரதமர் அவரை சந்திக்க அனுமதித்தால் அ..மலை தனியாகக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக பிரதமரிடம் ஆசீர்வாதம் பெற இருக்கிறார்.  தனியாகக் கட்சி ஆரம்பித்து தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோருடன் சேர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பது என காய் நகர்த்தி வருகிறார் அ..மலை. அவரிடம் விஜய் பா.ஜ.க. கூட்டணிக்கு வருகிறார். அப்படி அவர் வரவில்லையெனில் பிறகு உங்கள் வியூகத்தை பரிசீலனை செய்யலாம் என பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் விஜய், கரூரில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தோடு வீடியோ காலில் பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு இரண்டு கார்களில் சென்ற த.வெ.க.வினர்,   அவர்களது வீடுகளைப் பூட்டச் சொல்லி வீடியோ காலில் பேசிய விஜய்யின் போனைக் கொடுக்கக் கதறித் தீர்த்துள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இறந்துபோன குழந்தையின் பெற்றோரிடம் “"உங்களை யார் குழந்தையை அழைத்துவரச் சொன்னது?'”என்ற விஜய்யிடம் எதிர்கேள்வி கேட்டிருக்கிறார்கள் பெற்றோர். இவர் களையெல்லாம் சென் னைக்கு வரவழைத்து 20 லட்சம் ரூபாய் கொடுக் கத் திட்டமிட்டுள்ளார் விஜய். அவர் மீண்டும் கரூர் சென்றால் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என கரூர் போலீசார் தகவல் கொடுக்க, விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டுக் கொடுத்த மனுவை நிராகரிக்கும் முடிவில் இருக்கிறது தமிழக போலீஸ் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். 

“எடப்பாடியின் பிரச்சாரக் கூட்டங்களில் த.வெ.க. கொடி காட்டப்படுவது வழக்கமான நடைமுறையாகி விட்டது. அதை தனது பிரச்சாரத்திற்குப் பலம் என சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்து விட்டார் எடப்பாடி. வருகிற வெள்ளிக்கிழமை புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனு, சி.பி.ஐ. விசாரணை கோரும் மனு, அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்க்கும் மனு ஆகியவை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரவிருக்கிறது. அ.. மலையின் புதுக்கட்சி விசயம்,  பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் அ..மலை  கூட்டணி என அனைத்தையும் சுப்ரீம்கோர்ட் நடவடிக் கைகள்தான் தீர்மானிக்க இருக்கிறது என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

nkn111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe