டிகர் விஜய் இந்தத் தேர்தலில் களம் காண்கிறார். அவர் சென்னைக்கு உள்ளே ஒரு தொகுதியிலும், சென்னைக்கு வெளியே ஒரு தொகுதியிலும் தேர்தலில் நிற்கப்போகிறார். சென்னையில் விஜய் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி பெரம்பூர். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் களம் காண்கிறார். ஜே.சி.டி.பிரபாகரன் அம்பத்தூர் தொகுதி. பிராமணர்கள் நிறைந்த தொகுதியான மயிலாப்பூரில் களம் காண்பது புஸ்ஸி ஆனந்த். 

Advertisment

இந்தத் தொகுதிகளிலெல்லாம் சிறப்பாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் வேளச்சேரியில் விஜய் களம் காண்பதாகத் திட்டமிடப்பட்டது. அங்கு த.வெ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை வெறும் 30000. ஆனால் பெரம்பூரில் 40000 பேர் த.வெ.க.வில் சேர்ந் திருக்கிறார்கள். அந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 25000 பேர். சாதாரண மாக 20000 வாக்குகளை வாங்கிவிடலாம் என கணக்குப் போட்டு பெரம்பூரில் களம் இறங்குகிறார் விஜய். அதற்காக புதிதாக அ.தி. மு.க.விலிருந்து சேர்ந்த வி.எஸ். பாபுவுடன் ஆதவ் அர்ஜுனா, செங் கோட்டையன் ஆகி யோர் இணைந்து ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். வி.எஸ்.பாபு தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளிலும் இருந்தவர். அவர் ஜெயித்து விடலாம் என்ற நம் பிக்கையை விஜய்க்கு கொடுத்திருக்கிறார். பெரம்பூர் தொகுதியில் நாலு வட்டங்கள் குடிசைப் பகுதிகள். அங்கு விஜய்க்கு ஓட்டு பெருகும் என வியூகம் அமைத்திருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் ஆர்.டி.சேகர் அ.தி. மு.க. சார்பில் லட்சுமி நாராயணன் ஆகியோர் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

விஜய், பெரம்பூர் தவிர கிறிஸ்தவர்கள் நிறைந்த திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டி யிடுகிறார். கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த விஜய், காங்கிரஸ், தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்கிற செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் இருக்கிறார். எப்படியும் விஜய் தி.மு.க. வாக்குகளைப் பிரிப்பார் என்கிற எதிர்பார்ப்பில் பா.ஜ.க. அவர் மீதான கரூர் வழக்கைப் பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யாமல் தாமதம் செய்துவருகிறது. இப்படி உள்ள அரசியல்சூழலில்... ஊழியர் கூட்டங்களில் பேசும் ஆதவ், “"விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார். த.வெ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து பணி செய்வார்கள். நாம் கிறிஸ்தவ வாக்குகளை மட்டும் நம்பியில்லை. அனைத்து மக்களின் வாக்குகளும் நமக்கு விழும்'’என்கிறார். "தி.மு.க., அ.தி.மு.க. யார் வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்கள் என்ன செய்வார்கள் என எனக்குத் தெரியும்'' என்கிறார் வி.எஸ்.பாபு. 

பெரம்பூர் முழுக்க கருத்துக்கணிப்பு கள் தூள் பறக்கிறது. பெரம்பூரில் விஜய் நிற்பதால் வி.ஐ.பி. வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத் தூருக்குப் பக்கத்து தொகுதியான பெரம் பூர்... வரவிருக்கும் சட்டமன்றத் தேர் தலில் மிக முக்கியத் துவம் பெற்று வருகிறது.   

Advertisment