"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினுக்கு அப்பாயிண்ட்மெண்ட் தராமல் பிரதமர் மோடி இழுத்தடிக் கிறாராமே?''
"ஆமாம்பா... அதை விவரமா சொல்லுப்பா...''
"உண்மைதான் தலைவரே.. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக விரிவான விளக்கம் தர உங்களை எனது குழுவினருடன் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி முதல்வர் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக் கிறார். இந்த கடிதத்திற்கு முன்பாக, கடந்த ஜூலை மாசம், ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதலளிக்க கோரிக்கை வச்சிருந்தாரு. திட்டத்தின் முழு அறிக்கையும் விவரங்களும் கோரிக்கையில் குறிப்பிட்டி ருந்தபோதும், அந்த திட்ட அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிரா கரித்ததுடன், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது.. உடனே, இந்த சந் தேகங்களுக்கு விரிவான விளக்க மளிக்க தமிழக சிறப்பு முயற்சிகள் துறைக்கு அழுத்தமான உத்தரவு களைக் கொடுத்திருந்தார் முதல்வர். இதற்கான விளக்கங்கள் முழு மையாக தயாரிக்கப்பட்டதும், மோடியைச் சந்திச்சு, இந்த திட்டம் எந்தளவுக்கு அவசியமானது என் பதையும், மெட்ரோ திட்டங்களில் தமிழகத் தை மத்திய அரசு புறக் கணிக்கிறது, மத்திய அமைச்சகம் தெரி விக்கும் கருத்துக்கள் தவறானவை என்பதை நேரில் விவரிக்க நேரம் கேட்டு மோடிக்கு முதல்வர் கடிதம் அனுப்பி யிருந்தார். மோடி தரப்பில் பலத்த மௌனமே பதிலாக வர, கோட்டை அதிகாரிகள் மூலம் விடாமல் முயற்சித்தபடி இருக்கிறார் முதல்வர். எப்படியும் அடுத்த மாசம் அப்பாயின்ட் மெண்ட் கிடைச்சிரும்னு அதிகாரிங்க சொல்றாங்க''
"ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் விஜய் புளுகுமூட்டையை அவிழ்த்திருக்காராமே?''
"ஆமாங்க தலைவரே... கூட்டத்தை 10 மணிக்கு தொடங்கணும்னு ப்ளான் பண்ணியிருக் காங்க. ஆனால் 10.30 மணிவரைக்கும் அரங்கம் நிறையவேயில்லை. அதனால அப்செட்டான விஜய் வழக்கம்போல் லேட்டாத்தான் வந்திருக் காரு. அதேபோல அந்த கூட்டத்தில் மக்களோடு விஜய் கலந்துரை யாடல்னு அறிவிச்சிருந்த நிலையில், விஜய் அப்செட்டானதால் விஜய் மட்டுமே பேசற மாதிரி மாத்தியிருக் காங்க. அவர் பேசும்போது, பாலாற்றில் மணல் திருட்டில் 4,730 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறினார். உண்மை என்னவென்றால், கடந்த 2013ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே பாலாற்றில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் பரந்தூர் விமான நிலைய நில எடுப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கிட்டதை விஜய் குறிப்பிட்டு, அந்த மக்களுக்கு துணையாக இருப்பதாகப் பேசினார். ஆனால் இவரைப் போன்றவர்கள், தங்களை அரசியல் ஆதயத்துக்காகப் பயன்படுத்துவதால், விஜய் கூட்டத்தில் கலந்துக்கக்கூடாதுன்னு ஊர் கட்டுப்பாடே விதிச்சிருக்காங்க. அதனால பரந்தூர் மக்கள் யாருமே கலந்துக்கலையாம். தன்னோட தொண்டர்களை தற்குறின்னு சொல் றாங்கன்னு குற்றம்சாட்டி விஜய் பேசியிருந்தார். ஆனால் இந்த மீட்டிங்குல கூட தொண்டர் களை தடுக்குறதுக்காக தகரத்துல தடுப்பு அடிச் சிருந்தார். ஏற்கெனவே கிரீஸ் தடவினாங்க... விஜய் கண்முன்னாலயே பவுன்சர்களை வைத்து தொண்டர்களை தூக்கி வீசுனாங்க. இவ்வள வையும் பண்ணிட்டு தொண்டர்களை தற்குறின்னா சொல்றீங்கன்னு கேள்வி கேட் கிறார்! மொத்தத்தில், பொய் புளுகு மூட்டை களாக அவர் அவிழ்த்துவிட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் விஜய்யை குற்றம்சாட்டியிருக்காங்க.''
"விஜய் இங்கிட்டு, அங்கிட்டுன்னு மாரத் தான் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டிருக்காரே...''
"ஆமாங்க தலைவரே... நவம்பரில் மோடி விசிட் அமைந்ததுபோல டிசம்பரில் அமித்ஷா வின் விசிட் தமிழகத்தை நோக்கி அமைகிறது. டிசம்பர் மாதம் 14, 15, 16 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகிறார். நடிகர் விஜய்யை அமித்ஷா எப்படியும் கூட்டணிக்கு கொண்டுவருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் எடப்பாடி. எடப்பாடி நேரடியாக அமித்ஷா, விஜய் இரண்டு பேரிடமும் பேசு கிறார். ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய் தரப்பிடம் பேசிவந்த எடப்பாடி, இப்பொழுது விஜய்யின் நண்பர் ஒருவர் மூலமாக விஜய்யுடன் பேசுகிறார். நான் பா.ஜ.க. கூட்டணிக்கு வரமாட்டேன் எனச் சொல் லும் விஜய்க்கு, தி.மு.க. வுக்குப் போகும் மைனா ரிட்டி வாக்கு களைப் பிரிப் பதுதான் பா.ஜ.க.வால் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அந்த அசைன்மெண்டை அமித்ஷா மாற்றுவார். அந்தளவுக்கு ஏடாகூடமான விஜய் பற்றிய ரகசிய விஷயங்களை வைத்திருக்கிறது பா.ஜ.க. என எடப்பாடி கூறிவருகிறார். இதனால் தன் கட்சியினரிடம் கூறுவதுபோல் தன் தலைமை யில்தான் கூட்டணியா, இல்லை பா.ஜ.க. நெருக்குவதுபோல் பா.ஜ.க கூட்டணியிலா… இங்கிட்டா- அங்கிட்டா என எந்த முடிவும் எடுக்கமுடியாமல் மாரத்தான் போல தொடர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம்..''
"சமீபத்திய நிகழ்வுகளில் எடப்பாடி பழனிச்சாமி மூக்குடைபட்டிருக்கிறார் தெரியுமா?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/rang2-2025-11-24-15-26-46.jpg)
"கோவைக்கு மோடி வந்தபோது அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முயற்சி பண்ணினார் எடப்பாடி. ஆனா, தனிப்பட்ட முறையில் எடப்பாடியைச் சந்திக்க மோடி விரும்பலை. தன்னை வரவேற்க வரிசையில் நின்ற ஏ.சி.சண்முகம், பச்சமுத்து உள்ளிட்ட வங்க நின்ற வரிசையிலேயே எடப்பாடியையும் நிற்க வச்சிட்டாரு மோடி. அதாவது, வரிசை யில் நின்ன பிரபலங்களிடம் சில நொடிகள் பேசியது போலவே எடப்பாடியிடமும் பேசி னார். ஆக, ஏ.சி.எஸ்., பச்சமுத்து ஆகியோருக்கு என்ன மரியாதையோ அதுதான் உங்களுக்கும் என எடப்பாடிக்கு உணர்த்தியிருக்கிறார் மோடி. அதனை லேட்டாகப் புரிந்துகொண்ட எடப்பாடி மிகவும் அப்செட்டாகிட்டாராம். அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுங்கள் என மோடி வலியுறுத்தியதை எடப்பாடி இப்போதுவரை அலட்சியப்படுத்தி வருவதற் கான எதிர்வினைதானாம் இது.''”
"உடன்பிறப்பே வா நிகழ்வு தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறதா சொல்றாங்களே...''”
“"ஆமாங்க தலைவரே, தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதிவாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுதான் "உடன்பிறப்பே வா!' கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த நிகழ்வு நவம்பர் 22-ஆம் தேதியோடு 100-வது சட்டமன்றத் தொகுதியை எட்டியிருக்கிறது. 1000-த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளைச் சந்தித்துள் ளார் முதல்வர். இந்த சந் திப்பு தி.மு.க.வில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டாலினைச் சந்திக்க வரும் நிர்வாகிகள் மிகவும் உற்சாகத்தோடு வரு கின்றனர். தங்களின் குறை களை, விருப்பங்களை நேரடி யாக தங்கள் தலைவரிடம் சொல்ல இது ஒரு வாய்ப்பு என அவர்கள் கருதுகின்றனர். பல்வேறு உட்கட்சி பிரச்சனை கள் இந்த சந்திப்பின்மூலம் சரிசெய்யப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமாக நிர்வாகிகள் தவறுகளைத் தெரிவிக்கும் போது, உடனே தவறு செய்த வர்கள் கட்டம் கட்டப்பட் டுள்ளனர். ‘உடன்பிறப்பே வா நிகழ்வை சாதாரணமா பார்த்தா கட்சி நிகழ்ச்சி மாதிரி தெரியும், ஆனா, அது 2026 தேர்தலுக்கான அடித்தளம். 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள் தலைவரை நேரில் சந்தித்துள்ளனர். இந்த நூறும் நூறு வெற்றி வியூகங்களுக்கானது. மிச்சமிருக்கும் 134 தொகுதிகளில் கட்சியினரோடான சந்திப்பை டிசம்பர் அல்லது பொங்கலுக்கு முன்பாக சந்தித்துவிடுவார். இந்த சந்திப்பின் மூலம் உறுதியாக 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்’ என்கிறார்கள் தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள்.’''’
"எடப்பாடி ஒரு சர்வே எடுத்திருக்கிறதா தகவல் வருகிறதே''…
“"ஆமாம் தலைவரே... தற்போது இருக்கும் பா.ஜ.க. கூட் டணியுடன் அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டால் தமிழகத்தில் என்ன ரிசல்ட் வரும் என ஆழம் பார்த்திருக்கிறார். அதில் 35 இடங்களில் வெற்றி நிச்சயம். மற்ற இடங்களில் கடும் போட்டி என ரிசல்ட் வந்திருக்கிறது. ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த முடிவு எடப்பாடிக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்திருக்காம். இதனால தன்னோட உறவினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணியிடம், இந்த 35 சீட்டுகள் வந்தால் போதும். மற்றதைப் பற்றி கவலையில்லை. தற்போதைக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலே போதும் என சொல்லியிருக்கிறார்.''”
"அதுசரி, விஜய்யின் காஞ்சிபுர விழாவில் ஆதவ் அர்ஜுனா வுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டதா பேச்சு அடிபடுதே?''
"அதுவா தலைவரே, "ஜனநாயகன்' படத்தில் த.வெ.க.வுக்கு ஆதரவான பிரச்சார காட்சிகள் இடம்பெறுதாம். அதனால அந்தப் படத்தை பார்க்கவேண்டுமென இயக்குநர் ஹெச்.வினோத் திடம் ஆதவ் சண்டை போட்டிருக்கிறார். அந்தப் படத்தின் முதல் ரஷ்ஷைப் பார்த்த விஜய்க்கு இந்த விஷயம் சொல்லப்பட... ஆதவ்விடம், "எதற்காக இந்தப் படத்தை பார்க்கவேண்டும் எனச் சொல்கிறீர்கள்?' என விஜய் கேட்டிருக்கிறார். "படத்தில் இடம் பெறக்கூடிய த.வெ.க. சீன்கள் சரியாக வந்திருக்கிறதா என நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக ஐந்து பத்திரிகையாளர்கள் அடங்கிய டீமை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்' எனச் சொல்ல, இதில் டென்ஷனான விஜய், "நான் 35 வருடங்களா சினிமாவில் இருக்கிறேன். எனக்குத் தெரியாதா… காட்சி எப்படி வரணும் என்ன செய்யணும்னு. என் அப்பாவையே இப்படி படம் பார்த்து கருத்துச்சொல்ல விடமாட்டேன். இதில் நீ என்ன பார்த்துக் கிழிக்கப்போகிறாய்.… அதிகப்பிரசங்கித்தனமா நடந்துகொண்டி ருக்கிறாய்'…என எகிறியிருக்கிறார். அதோட எதிரொலியாத்தான் ஆதவ்வின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்களுக்கு காஞ்சிபுரம் விழாவிலும் வாய்ப்பூட்டு போட்டுவிட்டாராம்.''’
"பதினைந்தே நாளில் அ.தி.மு.க.வில் இருப்போம்னு சசிகலா தரப்பு சவால்விட்டிருக்காமே?''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/rang1-2025-11-24-15-27-03.jpg)
"ஆமாங்க தலைவரே... இன்னும் 15 நாட்களுக்குள் அ.தி.மு.க.வில் நாங்கள் இணைந்துவிடுவோம் என ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை பா.ஜ.க. கொடுத் திருக்கிறது. அப்படி சேர்க்காவிட்டால் எடப்பாடி பொதுச்செயலாளராகவே இருக்கமாட்டார் என சவால் விடு கிறார்கள் சசிகலா வட்டா ரத்தைச் சேர்ந்தவர்கள்.''”
"தமிழகத் தலை மைத் தேர்தல் அதிகாரி குறித்து செய்தி அடி படுதே..…என்ன விவகாரம்?''”
"எஸ்.ஐ.ஆர். படிவத்தில் வாக்காளர்கள் 13 வித ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 13-வது ஆவண மாக பீகார் தேர்தலில் சிறப்பு தீவிர திருத்தத் துக்குப் பின்பான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதன் நகல் கேட்கப்பட்டுள்ளது. அந்த 13-வது ஆவணத்தை வாக் காளர்கள் யாரிடமும் தரவேண்டு மென வலியுறுத்தாதீர்கள் என மத்திய தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளதாம். அதையே அர்ச்சனாவும் இங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் சொல்லியுள்ளா ராம். இதனால் பீகார் தேர்தலில் வாக்களித்தவர்கள் தமிழகத்திலும் வாக்களிப்பார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது. . நரேஷ் குப்தா, ராஜேஷ் லக்கானி போன்றவர்கள் பத்திரிகையாளர்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால் அர்ச்சனா பட்நாயக்கோ, அந்த 13-வது ஆவணம் பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே எந்த விஷயம் குறித் தும் யாரிடமும், எதுகுறித்தும் வாய் திறப்ப தில்லை என்று முறைப்பாடு எழுந்துள்ளது.''”
"வெண்ணெய்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் விவகாரத்தில் என்ன நடக்குது?''
"அதுவா தலைவரே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் (இனாம் நிலம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் மக்களுக்கு ஆதரவா காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அற நிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையின ரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டு வரும் பொது மக்களில் ஒரு பகுதியினர், மதுரை - சேலம் தேசிய நெடுஞ் சாலை நாவல் நகர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட, அவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண் டபத்தில் அடைத்துள்ளனர்.''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/rang3-2025-11-24-15-27-17.jpg)
"நானும் வருத்தமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிறேன். ஈரோட்டு பகலவன் பெரியாரின் வழியில் முற்போக்கு சிந்தனை யுடனும், திராவிட இயக்கப் பற்றுடனும் கவிதைகளை எழுதி வந்த ஈரோடு தமிழன்பன், நவம்பர் 22-ஆம் தேதி இயற்கையெய்தினார். "பாரதிதாசன் விருது', "கலைஞர் விருது', "கலைமாமணி விருது', "சாகித்ய அகாடமி விருது' உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ்க் கவிதையுல கில், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சென்ரியூ வடிவக் கவிதைகளையும் எழுதியதோடு, ஹைக்கூவையும், லிமரிக் வகை கவிதையையும் இணைத்து, "லிமரைக்கூ' என்ற புதுவடிவக் கவிதையையும் தமிழுக்கு தந்தவர். தனது வாழ்நாள் முழுக்க தமிழ் மொழியின் இலக்கியச் செழுமைக்காகப் பாடுபட்ட ஈரோடு தமிழன்பனின் உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழார்வலர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான ஈரோடு தமிழன் பனின் தமிழ் தொண்டினை கவுரவிக்கும்விதமாக, தமிழகக் காவல்துறை மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/rang-2025-11-24-15-26-31.jpg)