லேசியாவில் நடந்த "ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச  அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்ததில் அப்-செட்டாகியிருக்கிறார் விஜய். அதேசமயம், இந்த விழாவின் பொறுப் பாளரான சர்ச்சைக்குரிய தொழிலதிபர் டத்தோ அப்துல் மாலிக்கிற்கும் விஜய்க்குமான தொடர்பு மற்றும் பண நடமாட்டம் குறித்து இந்திய அமலாக்கத் துறைக்கும், வருவாய் புலனாய்வுத்துறைக்கும் புகார்கள் பறந் திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

Advertisment

பொங்கலுக்கு ரிலீஸாகும் நடிகர் விஜய்யின் கடைசிப்படம் "ஜனநாயகன்.' இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா வில் புகிட் ஜலீல் மைதானத்தில் கடந்த 27-ந் தேதி நடந்தது. இதற்காக தனி விமானத்தில் மலேசியா சென்றார் விஜய். தமிழக அரசியலில் நுழைந்துள்ள விஜய், இந்த இசை வெளியீட்டு விழாவில் அரசியல்ரீதியாக என்ன பேசப்போகி றார் என்கிற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது. அதற்கேற்ப தன்னையும் தனது உரையையும் தயார்படுத்தியிருந்தார் விஜய்.  ஆனால், மலேசியா மண்ணில் அரசியல் பேச விஜய்க்கு தடை விதித்தது மலேசிய அரசு. இதனால், குடையை வைத்து ஒரு குட்டிக்கதை சொல்லி, "நான் தனியாக வரவில்லை; அணியாக வருவேன்' என பஞ்ச் டயலாக்குடன் மறைமுகமாக சில அரசியலைப் பேசி முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் விஜய். திட்டமிட்டிருந்தபடி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் பேச முடியவில்லையே என்கிற ஆத்திரமும், ஆதங்கமும் அவருக்கு இருந்தது என்கிறார்கள் உளவுத்துறையினர். 

Advertisment

அரசியல் பேச விஜய்க்கு தடை விதிக்கப்பட் டது ஏன்? என்ற கேள்வியுடன் மலேசியா தொடர்பு களிடம் நாம் விசாரித்தபோது, "மலேசியா அரசாங் கத்தைப் பொறுத்தவரை, பொது அமைதியைப் பாதுகாப்பதில் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவிலுள்ள அமைப்புகளோ, வெளிநாட்டு அமைப்புகளோ, தனி நபராக இருக்கும் பிரபலங்களோ மலேசிய மண்ணில், விழா என்கிற பேரில் அரசியல் பேசவோ, அரசியல்ரீதியாக அணி திரட்டும் முயற் சியோ முன்னெடுக்கப்பட்டால் அதை மலேசியா அரசாங்கம் அனுமதிப்பதில்லை. கலை இரவு என்கிற பேரில் வெளிநாடுகளின் அரசியலை மலேசிய மண்ணை பயன்படுத்தவும், அதன் மூலமாக மலேசியாவில் அமைதி சீர்குலைவதையும் அந்த நாட்டு அரசு விரும்பவில்லை. அதனாலேயே சட்டங்களை கடுமையாக்கியிருக்கிறது.   

விஜய்யின் "ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனை நடத்தும் பொறுப்பை பிரபல தொழிலதிபர் அப்துல் மாலிக்கிடம் கொடுத்திருந்தது "ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம். தமிழ்நாடு உள்பட இந்திய சினிமா பிரபலங்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து கலை இரவு நடத்துவதில் மாலிக் கில்லாடி. தொடர்ச்சியாக இவர்தான் இத்தகைய பிரமாண்ட விழாக்களை நடத்திவருபவர். இவரை அறியாத, தொடர்பில்லாத சினிமா பிரபலங்கள் யாரும் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட மாலிக்தான் "ஜனநாயகன்' ஆடியோ லான்ச் பொறுப்பைப் பெற்றிருந்தார். இவர் மீது வெவ்வேறு காண்ட்ராவெர்சிகள் நிறைய இருக்கிறது. 

Advertisment

ஆடியோ ரிலீஸ் பொறுப்பை பெற்றதும், விழா நடத்துவதற்கான அனுமதியை மலேசிய அரசிடம் மாலிக் விண்ணப்பித்திருந்தார். அதனை பரிசீலித்த மலேசிய அரசு,  விழாவில் விஜய் கலந்து கொள்வதும், அவர் தமிழகத்தில் அரசியல் கட்சி நடத்தி வருவதையும் அறிந்திருந்ததால்,  விழாவில் விஜய் உட்பட யாரும் அரசியல் பேசக்கூடாது; கலை நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தவேண்டும் என்கிற நிபந்தனை விதித்தது. அதனை மாலிக் ஒப்புக்கொண்டதையடுத்தே விழாவுக்கு அனுமதி கிடைத்தது. ஆக, தமிழகத்தில் பேசவேண்டிய தனது அரசியலை மலேசியாவில் எதிரொலிக்கச் செய்ய விஜய் திட்டமிட்டிருந்ததை தெரிந்ததால்தான் அவரது அரசியலுக்கு தடை விதித்தது மலேசிய அரசு. இந்த தடையை விஜய்யிடம் மாலிக் தெரியப்படுத்த, அப்-செட் டாகியிருக்கிறார் விஜய். 

 மலேசியாவில் தரையிறங்கிய விஜய்யை வரவேற்று அழைத்துச் சென்ற மாலிக்கிடம், விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக விசாரித்திருக்கிறார். அதன்பிறகு, அரசியல் பேசக் கூடாது என்பது தான் எனக்கு வருத்தம். கான்செர்ட்டுகளுக்கு (கலை நிகழ்ச்சிகள்) தமிழ்நாட்டில் அனுமதி கிடைப்பதில்லை. அதுவும் நான் சம்பந்தப்பட்டி ருந்தால் அனுமதி கிடைக்க சான்ஸே இருக்காது. அதனால்தான், மலேசியாவில் நடத்த தீர்மானிக்கப் பட்டது. ஜனநாயகன் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வும், அதன்  மூலம் தமிழகத்தில் ஒரு ஹைப்பை உருவாக்கவும் நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் பேசக் கூடாது என்கிற கண்டிசனை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த கண்டிசன் என்னை அப்-செட்டாக்கியிருக்கிறது என மாலிக்கிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விஜய்''’என்கிறார்கள் மலேசியா தொடர்பாளர்கள். 

இந்நிலையில், தேர்தல் பணிகளை கொஞ்சம் தள்ளிவையுங்கள். "ஜனநாயகன்' படம் பொங்க லுக்கு முன்பாகவே ரிலீசாகிறது. அதனை பிரமாண்டப்படுத்தவும், படத்தை வெற்றியாக்கவும் உங்களுக்கு (மா.செ.க்கள்) பொறுப்பு இருக்கிறது. அதனால், அதில் உடனடி கவனம் செலுத்துங்கள் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். ஏற்கனவே எஸ்.ஐ.ஆர். பணிகளில் த.வெ.க.வினர் தீவிரம் காட்டாத சூழலில், தேர்தல் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, ஜனநாயகன் படத்தை வெற்றியாக்குவதில் சீரியஸ் காட்டுங்கள் என்கிற புஸ்ஸியின் உத்தரவு மா.செ.க் களிடம் அதிருப்தியை உருவாக்கியி ருக்கிறது” என்கிறார்கள் த.வெ.க.வினர். 

இதற்கிடையே, "ஜனநாயகன்' ஆடியோ ரிலீஸ் குறித்து இந்திய அமலாக்கத்துறைக்கும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். துறைக்கும் சில தக வல்கள் பறந்து ள்ளன. எஸ்.பி. ஆர்.எம். என்பது இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை போன்றது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் அமைப்பு இது.  

இதுகுறித்து நாம் விசாரித்த போது, ‘விழா நடந்த புகிட் ஜலீல் ஸ்டேடியத்தின் மொத்த கொள்ளளவு 85,500 பேர். படிநிலைகளுக்கேற்ப டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு டிக்கெட்டின் விலை 300 மலேசிய ரிங்கிட் என எடுத்துக் கொண்டால் 2 கோடியே 56 லட்சத்து 50,000 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டுள்ளது.  இன்றைக்கு ஒரு ரிங்கிட்டின் விலை இந்திய ரூபாயில் 22 ரூபாய் 17 காசுகள். அந்த வகையில் 56 கோடியே 86 லட்சத்து 60,500 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. 

இந்த ஆடியோ ஃபங்சனை முன்னிறுத்தி பல கோடிகள் மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருப்பதாக அமலாக்கத் துறைக்குக்கும் வருவாய் புலனாய்வுத்துறைக்கும் ஒரு ரகசிய தகவல் போயிருக்கிறது. அது குறித்து சீக்ரெட்டாக விசாரிக்கப்படுகிறது. இதே தகவல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மிற்கும் கசிந்துள்ளது. 

"ஜனநாயகன்' ஆடியோ பங்ஷனை பொறுப் பேற்றுக்கொண்ட தொழிலதிபர் அப்துல் மாலிக், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேசன், மாலிக் மாஜூ செண்ட்ரியான் பெர்ஹெட், மாலிக் ஸ்ட்ரீம் அந்தென்னா மூவிஸ், மாலிக் ஸ்ட்ரீம் புரடொக்ஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன், மாலிக் ஸ்ட்ரீம் ப்ராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருபவர். "ஜனநாயகன்' படத்தின் மலேசிய உரிமையை மாலிக்தான் பெற்றுள்ளார். 

கடந்த 2023-ல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், பயங்கரவாத நிதியளிப்பு, சட்டவிரோத நடவடிக்கை களின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் மலேசிய அரசின் அம்லா சட்டத்தின் கீழ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் டத்தோ மாலிக்கை அதிரடியாக கைதுசெய்தனர். அப்போது, 38 மில்லியன் ரிங்கிட், 60 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகள் 17 ஆடம்பர கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

சட்டவிரோத பிசினஸ் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாலிக்கிற்கும், விஜய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் இருவருக்கு மிடையே உள்ள தொடர்புகள் பிசினஸ் டீலிங்காக இருக்கிறதா? என்கிற கோணத்தில் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது இந்திய -மலேசிய விசாரணை அமைப்புகள். மேலும் அமித்ஷாவும் விஜய்யின் மலேசியா ட்ரிப் பற்றி விசாரணைக்கு உத்தரவிட் டுள்ளார்''‘என்கின்றன நமக்கு கிடைக்கும் தகவல்கள். 

______________
இறுதிச் சுற்று!

வெல்லும் பெண்கள் மாநாட்டில் முதல்வர்!

box

மிகப்பெரிய வாக்கு வலிமையை உள்ளடக்கிய இளைஞர்களை அரசியல் ரீதியாக அணுகும் நோக்கில் திருவண்ணாமலையில் இளைஞரணி மாநாட்டை நடத்திய தி.மு.க., இளைஞரணிக்கு சற்றும் குறைவில்லாத பெண் வாக்காளர்களை மையப்படுத்தி கனிமொழி எம்.பி. தலை மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம் பேட்டையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மேற்கு மண்டல  கழக  மகளிர் அணி மாநாட்டை துவக்கியுள்ளது திமுக. கட்சி ரீதியாக தி.மு.க.வின் மேற்கு மண்டலங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத் திலுள்ள 39 தொகுதிகளில் உள்ள மகளிரை குறிவைத்து நடத்தப்பெறும் இந்த மாநாட்டிற்கு 15 ஏக்கர் அளவில்  மாநாட்டுத் திடலும், 100 ஏக்கர்களுக்கு குறை வில்லாத இடத்தில் வாகன நிறுத்துமிடத்தையும் உருவாக்கி யுள்ளது கழக மகளிரணி.  39 தொகுதிகளில் உள்ள 12,380 பூத்களில் பூத்திற்கு 15 நபர்கள் என்ற அளவில் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

-நாகேந்திரன்