Advertisment

விஜய் அப்பாவின் திடீர் குரல்! பின்னணி என்ன?

vijay


மிழக அரசியலில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் பலவிதமான திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் எழும் ஒரு முக்கியமான கேள்வி காங்கிரஸ் -த.வெ.க. கூட்டணி அமையுமா என்பதுதான். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அவர்கள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்  உள்ள மற்ற கட்சிகள் விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும். தமிழக அரசியலில் தி.மு.க.வின் இடத்தை த.வெ.க. பிடிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஜய்யின் நீண்டநாள் கனவு. அதனால்தான் அவர் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என்று சொல்லிவருகிறார் என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள். விஜய்யின் இந்தக் கனவு பலிக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக தமிழக அரசியலில் எழுந்துள்ளது. தன்னை ஒரு எம்.ஜி.ஆராக கற்பனை செய்துகொண்டிருக்கும் விஜய் நீண்ட ஆண்டுகால பாரம்பரியமிக்க தி.மு.க.வை எம்.ஜி.ஆர். போல தோற்கடிக்க முடியும் என நம்புகிறார். அதற்கு காங்கிரஸ் தயவு தேவை என நினைக்கிறார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகினால் இடது சாரிகள்


மிழக அரசியலில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் பலவிதமான திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் எழும் ஒரு முக்கியமான கேள்வி காங்கிரஸ் -த.வெ.க. கூட்டணி அமையுமா என்பதுதான். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அவர்கள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்  உள்ள மற்ற கட்சிகள் விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும். தமிழக அரசியலில் தி.மு.க.வின் இடத்தை த.வெ.க. பிடிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஜய்யின் நீண்டநாள் கனவு. அதனால்தான் அவர் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என்று சொல்லிவருகிறார் என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள். விஜய்யின் இந்தக் கனவு பலிக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக தமிழக அரசியலில் எழுந்துள்ளது. தன்னை ஒரு எம்.ஜி.ஆராக கற்பனை செய்துகொண்டிருக்கும் விஜய் நீண்ட ஆண்டுகால பாரம்பரியமிக்க தி.மு.க.வை எம்.ஜி.ஆர். போல தோற்கடிக்க முடியும் என நம்புகிறார். அதற்கு காங்கிரஸ் தயவு தேவை என நினைக்கிறார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகினால் இடது சாரிகள் உட்பட மற்ற கட்சிகள் தானாகவே விலகி, தன் பக்கம் வந்துவிடும் என கணக்குப் போடுகிறார். அதற்காகத் தான் காங்கிரசுடன் அவர் நெருக்கம் காட்டுகிறார். 

Advertisment

காங்கிரசின் தலைவர் ராகுல்காந்தி யும் விஜய்க்கு தனது ஆதரவை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் பேசினார். "விஜய்யின் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட விபத்து கரூர் சம்பவம்'’என அவர் விஜய்க்கு ஆறுதல் சொன்னார். "ஜனநாயகன்' படம் முடக்கப்பட்டபோது ராகுல் ஆதரவுக்குரல் கொடுத்தார். ராகுலின் இந்த அசைவுகள் மற்றும் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு என்கிற விஜய்யின் ஆசை வார்த்தை கள் காங்கிரஸ் -த.வெ.க. கூட் டணி அமையும் என்கிற தோற் றத்தை உருவாக்கியுள்ளது. காங்கிரசிலும் த.வெ.க.வுடன் கூட்டணிக்குச் செல்லவேண் டும் என்ற குரல்கள் எதி ரொலிக்கின்றன. இவற்றையெல் லாம் தி.மு.க. எதிர்க்கிறது. இந்த அசைவுகளை முறியடிக்க தி.மு.க., ராகுலிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. அதற்கு ராகுலிடமிருந்து சாதகமான பதில்கள் வெறும் உதட்டளவில் மட்டும் வெளிப் படுகிறது. ராகுலை சந்தித்து காங்கிரசில் சேர வேண்டும் என விஜய் பேசியிருந்தார். அப்பொ ழுது அவருடன் இருந்தவர், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் இப்போது "காங்கிர சுக்கு அதிகாரத்தில் பங்கு தருவேன் என்கிறார் விஜய், அதை ஏற்பதில் காங்கிரசுக்கு என்ன தயக்கம்?'” என கேள்வியெழுப்பியிருக்கிறார். 

Advertisment

"விஜய் அப்பாவின் இந்த கேள்வி எதற்காக எழுப்பப்பட்டது?' என த.வெ.க. வட்டாரங்களை கேட்டோம்.  

"எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய்க்கும் குடும்பப் பிரச்னைகள் ஏராளம். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை மிகக் கடுமையாக விமர்சிப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனால் அப்பாவும் மகனும் பேசமாட்டார்கள். விஜய்யின் வீட்டுக்குள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அனுமதி இல்லை. விஜய்யின் அம்மா மட்டும்தான் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவார். இவ்வளவுதான் விஜய்க்கும் அவருக்குமான உறவு. கலைஞரின் அபிமானியான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பா.ஜ.க.வைப் பிடிக்காது. அதி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் 40 சீட்டுகள்.. துணை முதலமைச்சர் என்கிற ஆபர் விஜய்க்கு இருக்கிறது. அதற்காகத்தான் சி.பி.ஐ. விசாரணை, "ஜனநாயகன்' படம் நிறுத்தம் என விஜய்க்கு அழுத்தம் தரப்படுகிறது. அந்த அழுத்தத்திற்கு விஜய் பணிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் வாய் திறந்திருக்கிறார்'' என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள். 

"கூட்டணிக்குத் தயார்... ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என விஜய் வெளிப்படையாக அறிவித்த பிறகும், எந்தக் கட்சியும் அவருடன் கூட்டணி பேச முன்வரவில்லை. டாக்டர் ராம தாஸ், கிருஷ்ணசாமி ஆகியோர் கூட விஜய்யிடம் பேசத் தயங்குகிறார்கள். அ.தி.மு.க. அவரை ஓர் அடிமையாக உபயோகித்துவிட்டு தூக்கியெறிய நினைக்கிறது. காங்கிரஸ், விஜய் பக்கம் வராமல் தி.மு.க. தடுத்து வைத்திருக்கிறது. த.வெ.க. 40 சதவிகிதம் ஓட்டுக்களை வைத்திருக்கிறது என த.வெ.க.வினர் கூவிவருகின்றனர். ஆனால், அதை மதிப்பதற்கு ஆட்கள் இல்லை. கடைசியில் தன்னந்தனியாக நிற்கவேண்டிய நிலை த.வெ.க.விற்கு ஏற்படும் என த.வெ.க.வினர் அஞ்சுகின்றார்கள். இந்த நிலையை எப்படிப் போக்குவது என்பதுதான் த.வெ.க.வினரின் கவலையாக உயருக்கிறது. அதனால் ஒரு கவுரவமான தோல்வியை சந்திக்க காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என நினைக்கிறார் விஜய். இந்த விரக்தியின் வெளிப்பாடுதான் விஜய் அப்பாவின் பேச்சுக்களில் எதிரொலிக்கிறது. விஜய்யை சுற்றியிருப்பவர்கள் அவரை செல்லாக் காசாக்கி விடுகிறார்கள் என்ற பயத்தில்தான் களத்தில் குதித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

_____________
இறுதிச் சுற்று!

பல்கலை புதிய விதிகள் -முதல்வர் வேண்டுகோள்!

பல்கலைக்கழக மானியக் குழுவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆதரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்து 29-ஆம் தேதி வியாழக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், "பல்கலைக்கழக மானியக் குழுவின்  புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அதன் சட்டகத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. யு.ஜி.சி. விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. புதிய விதிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அதிலுள்ள அமைப்பு ரீதியான குறைகளையும் திருத்தியமைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.                                

-இளையர்

nkn310126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe