சேலத்தில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் வடமாநில இளைஞர் பலியான நிலையில், விஜய் நடத்தும் கூட்டங்கள் உயிர்ப்பலிகள் வாங்கும் பலிபீடமாக மாறிவருவதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
த.வெ.க. கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சேலத்தில் பிப். 13-ஆம் தேதி நடந்தது. கரூர் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை அடுத்து, சேலம் கூட்டத்திற்கு மாநகர காவல்துறையினர் அனுமதி வழங்குவதில் ரொம்பவே கறார் காட்டினர். 5000 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட 51 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தது.
கூட்டம் நடந்த திடலில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வாகனம், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப் பட்டது. அதில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாசகம், 'உயிருக்கும்' என்று பிழையாக அச்சிடப்பட்டிருந்தது.
சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்துசேர்ந்தார் விஜய். அங்கிருந்து கார் மூலம் மதியம் 12:30 மணிக்கு திடலுக்கு வந்த விஜய், வழக்கம்போல் அவருக்கென வடிவமைக்கப்பட்ட சொகுசுப் பேருந்தின் மீது ஏறி நின்று, 12:42 மணிக்குப் பேசத் தொடங்கினார். இரவு, பகல் பாராமல் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த 'புஸ்ஸி' ஆனந்த், செங்கோட்டையன், மா.செ. பார்த்திபன் உள்பட எந்த ஒரு நிர்வாகிகளுக்கும் நன்றிகூட சொல்லாமல் பேசத் தொடங்கினார்.
''துணிச்சல்தான் எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்படை. ஏய் விஜய்... வீட்டை விட்டு வெளியே வா. பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்கிறவர்களுக்கு என் வீடு எது என்ற
சேலத்தில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் வடமாநில இளைஞர் பலியான நிலையில், விஜய் நடத்தும் கூட்டங்கள் உயிர்ப்பலிகள் வாங்கும் பலிபீடமாக மாறிவருவதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
த.வெ.க. கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சேலத்தில் பிப். 13-ஆம் தேதி நடந்தது. கரூர் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை அடுத்து, சேலம் கூட்டத்திற்கு மாநகர காவல்துறையினர் அனுமதி வழங்குவதில் ரொம்பவே கறார் காட்டினர். 5000 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட 51 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தது.
கூட்டம் நடந்த திடலில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வாகனம், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப் பட்டது. அதில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாசகம், 'உயிருக்கும்' என்று பிழையாக அச்சிடப்பட்டிருந்தது.
சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்துசேர்ந்தார் விஜய். அங்கிருந்து கார் மூலம் மதியம் 12:30 மணிக்கு திடலுக்கு வந்த விஜய், வழக்கம்போல் அவருக்கென வடிவமைக்கப்பட்ட சொகுசுப் பேருந்தின் மீது ஏறி நின்று, 12:42 மணிக்குப் பேசத் தொடங்கினார். இரவு, பகல் பாராமல் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த 'புஸ்ஸி' ஆனந்த், செங்கோட்டையன், மா.செ. பார்த்திபன் உள்பட எந்த ஒரு நிர்வாகிகளுக்கும் நன்றிகூட சொல்லாமல் பேசத் தொடங்கினார்.
''துணிச்சல்தான் எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்படை. ஏய் விஜய்... வீட்டை விட்டு வெளியே வா. பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்கிறவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? இந்த தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் சொந்தம். அவர்களுக்காக இனி கூட நிற்கப்போறது இந்த விஜய் மட்டும்தான்.
நமக்கு எதிராக சதி, சூழ்ச்சி செய்வது யார் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம்னு கனவு காண்பதெல்லாம் இந்த விஜய் வந்த பிறகு இனி நடக்காது. பணம் கொடுத்தால் வாங்கிக்குங்க. எல்லாம் உங்க பணம்தான். வாங்கிக்கிட்டு அவங்க காதிலயே விசிலை ஊதி அனுப்புங்க.
மத்தவங்க மாதிரி வெறுப்பு அரசியல் பண்றதுக்காக நான் அரசியலுக்கு வரல. அரசியல் எதிரி யார்னு டிக்ளேர் பண்ணிட்டு தேர்தலில் நின்னு ஜெயிச்சு மக்களுக்கு நன்றிக்கடனை செலுத்தத்தான் வந்திருக்கேன். அனுபவம் இல்லாதவங்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை செய்யமுடியும் என்று ஒரே விஷயத்தைச் சொல்லி அழுகிறார்கள். அதிகாரத்தை வெச்சு மக்கள் பணத்தை கொள்ளையடிச்சதைத் தாண்டி வேறு ஏதாவது அனுபவம் இவர்களுக்கு இருக்குதா?
மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் போதும். சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம். காமராஜர், எம்.ஜி.ஆர். மாதிரி மக்கள் சக்தியின் துணையால், நல்ல அதிகாரிகளின் துணையால் சூப்பர் ஆட்சியை என்னால் கொடுக்கமுடியும்.
ஸ்டாலின் சார், மக்கள் சார்பாக ஒரு கேள்வி... மக்கள் கனவு என்னனு உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் என்ன நினக்கிறார்கள் என் பதே தெரியாது. அப்புறம் எங்கே அவர்களின் கனவு தெரியப்போகிறது? இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் த.வெ.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்தணும் என்பதுதான் மக்களின் ஒரே கனவு.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை என்றைக்கும் கொடுக்கவே மாட்டேன். தேர்தலில், தூய சக்தி டி.வி.கே., தீய சக்தி டி.எம்.கே. கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஆட்சியிலும் பங்கு அதிகாரத் திலும் பங்கு என்று சொன்னேன். இப்போது அந்த அரசியல் வெடிகுண்டு எல்லா கூட் டணியிலும் தாறுமாறாக வெடித்துக்கொண்டிருக் கிறது'' என்றார் விஜய்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/vijay1-2026-02-16-16-54-24.jpg)
தி.மு.க.வை மட்டும் வழக்கம்போல் டார்கெட் செய்து பேசிய விஜய், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை விமர்சிப்பதைத் தவிர்த்தார். இந்தக் கூட்டத்தில் 5,000 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டி ருந்தாலும், தொண்டர்களும் கணிசமாக அனுமதிக்கப்பட்டனர். அதனால் பெரிய அளவில் தள்ளுமுள்ளு அசம்பாவிதம் நடைபெறவில்லை.
அதேநேரம், விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் மனிதப் பலிகள் நடப்பது சேலத்திலும் தொடர்ந்தது. சேலம் சீலநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சூரஜ் என்ற வெள்ளிப்பட்டறை தொழிலாளி கூட்டத்திற்கு வந்திருந்தார். விஜய்யைப் பார்ப்பதற்காக சூரஜ் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்தார். கூட்டம் முடிந்தபோது அவர் திடீரென்று மயங்கிவிழுந்தார். த.வெ.க. நிர்வாகிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அன்னதானப்பட்டி போலீசார் சடலத்தை சேலம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றனர். உடற்கூராய்வில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சூரஜின் உறவினர்கள் கூறுகையில், ''மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் கடந்த 20 ஆண்டாக சேலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். விஜய்யை பார்க்கும் ஆவலில் கூட்டத்திற்குச் சென்றவர், பிணமாகத்தான் வந்துசேர்ந்தார்'' என கண்ணீருடன் கூறினர்.
கரூரில் நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். இவர்களில் இருவர் நிறைமாத கர்ப்பிணிகள். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. ஏற்கனவே, த.வெ.க. நடத்திய விக்கிர வாண்டி மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்கள் 7 பேர் விபத்தில் சிக்கி இறந்தனர். பின்னர் மதுரை கூட்டத்தில் 3 பேர் பலியான நிலையில் தற்போது சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார்.
இதுவரை விஜய் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் 52 பேர் பலியாகியுள்ளது அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக ஓமலூர் மாவட்ட வி.சி.க. செயலாளர் சாமுராய் குரு கூறுகையில், "உயிர்ப்பலி வாங்குவதில் விஜய் அரை சதம் கடந்து விட்டார். தி.மு.க., வி.சி.க. போன்ற கட்சிகள் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்துவ தில்லை. ஆனால் த.வெ.க. தொண்டர்களை மணிக் கணக்கில் வெயிலில் நிற்கவைப்பது தொடர்கிறது. அதனால்தான் இதுபோன்ற உயிர்ப்பலிகள் நடக்கின்றன.
இத்தனை பேர் இறந்த பிறகும்கூட விஜய்யிடமிருந்து இரங்கல் அறிக்கைகூட வரவில்லை. விஜய், ஒரு மரண வியாபாரி. இறந்தவரின் சடலத்தைக்கூட பனையூருக்குக் கொண்டு வரச்சொல்லும் ஒரு அரசியல்வாதியை இதுவரை பார்த்ததில்லை. அவரை மக்கள் இந்த தேர்தலில் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/vijay2-2026-02-16-16-54-43.jpg)
இந்நிலையில் த.வெ.க. நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் 'எக்ஸ்' தளத்தில், "சேலத்தில் நடந்த கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர், திடீர் உடல்நலக் குறைவால் மயங்கியுள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, கட்சி நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரண மடைந்தது வேதனையளிக்கிறது'' என்று பதி விட்டுள்ளார். இதற்கிடையே, சூரஜ் குறித்த செய்தி சேகரிப்பதற்காக சென்னையிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். ஆனால் இதுகுறித்து செய்தி வெளியிடக்கூடாது என்று த.வெ.க நிர்வாகிகள் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இனி திறந்தவெளியில், கொளுத்தும் வெயிலில் விஜய் கூட்டம் நடத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்று த.வெ.க. தொண்டர்கள் அதிருப்தியுடன் கூறுகின்றனர். அதேநேரம், உயிர்ப்பலிகள் மூலம் விஜய் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்ற விமர்சனங்களும் அரசியல் களத்தில் கூர்மையடைந்துள்ளன.
கரூரில், தி.மு.க. அரசின் கெடுபிடியால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கவில்லை என விஜய்யும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளும் காரணம் கூறியிருந்தனர். சேலத்தில் அப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில் விஜய்யோ, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளோ சூரஜ் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறாதது தவறான அணுகுமுறை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சூரஜின் மரணத்தால் ஆதர வற்றவர்களாக மாறியுள்ள தங்கள் குடும்பத்துக்கு விஜய் உதவவேண்டும் என சூரஜ் குடும்பத்தினர் த.வெ.க.விடம் உதவி கோரியுள்ளனர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us