விஜயகாந்த்தின் அப்பா பெயர் அழகர்சாமி. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள ராமானுஜபுரம் தான் அவரது அப்பாவின் பூர்வீகம். ஆனால் சின்ன வயதிலேயே வேலை பார்த்து சம்பாதிப்பதற்காக மதுரைக்கு வந்துவிட் டார். விஜயகாந்த்தின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அவரது அம்மா ஆண்டாள் மூத்த தாரம். அவருக்கு நான்கு பிள்ளைகள். அக்கா விஜயலட்சுமி, அண்ணன் நாகராஜ், அடுத்ததாக விஜயராஜ் என்ற விஜயகாந்த், கடைக்குட்டியாக தங்கை திருமலா தேவி. திருமலா தேவி பிறந்த ஒரு மாதத்திலேயே விஜயகாந்த்தின் அம்மா காலமானார். அப்போது விஜயகாந்த் குழந்தை. அம்மாவின் இறப்பைக்கூட புரிந்து கொள்ள முடியாத குழந்தைப்பருவம். அம்மாவின் மறைவுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ருக்குமணியம்மாள் என்பவரை இரண்டாம் தாரமாக விஜயகாந்த்தின் அப்பா திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். மொத்தம் 11 பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
விஜயகாந்த்தின் பள்ளிப்பருவத்தில், காந்திய வாதியான சார்லஸ் என்ற தமிழாசிரியர் தான் அவரிடம், ""தினமும் திருக்குறள் படி, மனப் பாடம் பண்ணு. ஒரு மனுஷன் சிறப்பாக வாழ்வதற்கு திருக்குறளில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. தமிழ் உணர்வை வளர்த்துக்கொள், ஆனால் தமிழ் வெறியை வளர்க் காதே'' என்றெல்லாம் அறி வுரைகள் கூறி, விஜயகாந்த் தின் தமிழார்வத்துக்கு காரணமாக இருந்திருக் கிறார்.
விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கை யில் தொடக்க காலத்தில் அவ ரது நிறத்தைக் காரணமாகக் காட்டியே ""கறுப்பா இருந்தா ரஜினின்னு நினைப்பா? அவர் ஒருத்தரே போதும்... போ, போ'' எனக் கூறியும், ""நாடகத்துல நடிச்சிருக்கியா நீ?''எனக்கேட்டும், ""உங்கப்பா வசதியானவர்தான, பணம் கொண்டு வா சான்ஸ் தர்றேன்'' என்றெல் லாம் கூறி புறக்கணித்திருக்கிறார்கள். பல சினிமா நிறுவனங்களில் தொடர்ந்து முயற்சி செய்தும் தோல்வியாக, ""பேசாம ஊருக்கு வந்து தொழிலைப் பாரு'' என்று அவரது அப்பா கண்டித்திருக்கிறார். ""ஒரு நடிகனாகாமல் மதுரைக்கு திரும்ப மாட் டேன்'' என்று அப்பாவிடம் சபதம் செய்திருக் கிறார். பின்னர், வினியோகஸ்தராக இருந்த முகம்மது மர்சூத் செய்த சிபாரிசு காரணமாக, டைரக்டர் எம்.ஏ.காஜா, "இனிக்கும் இளமை' படத்தில் விஜயகாந்த்துக்கு வாய்ப்பளித்தார். அப்படம் ரிலீசாகி, மதுரையில் அவரது வீட்டருகிலுள்ள சென்ட்ரல் தியேட்டரில் ஓடிய போது விஜயகாந்த்தின் அப்பா மிகுந்த சந்தோசத்தோடும் பெரு மையோடும் தினமும் அந்த படத்தைப் பார்த்துவந்தாராம்!
டைரக்டர் கே.விஜயன் இயக்கிய "தூரத்து இடிமுழக்கம்' படத்தில்தான் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார் விஜயகாந்த். அந்த படத்திலும்கூட டைட்டில் கார்டில் முதலில் விஜயகாந்த்தின் பெயரைப் போடுவதில் பிரச்சனை எழுந்தது. அதேபோல், "சிவப்பு மல்லி' படத்தில் ஹீரோவாக நடிக்கும்போதும் டைட்டில் கார்டில் பெயர் போடுவதில் பிரச்சனை எழுந்தது. டப்பிங் பேசுவதிலும்கூட இவரை புறக் கணிக்கப் பார்த்திருக்கிறார்கள். அடுத்து "சாதிக்கொரு நீதி' படத் தில் நடித்தபோதுதான் முதன் முதலில் விமானத்தில் பயணித் திருக்கிறார் விஜயகாந்த். இப்படி அவரது சினிமா அறிமுகம் மிகுந்த போராட்டமானதாகவே இருந்திருக்கிறது.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திர சேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை' படம்தான் விஜயகாந்த்தை கவனிக்கத்தக்க கதாநாயகனாக உயர்த்தியிருக்கிறது.
____________
சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டுமென்ற வெறி!
கேப்டன் காலமானது தெரிந்ததுமே, மதுரை, புது ஜெயில் ரோட்டிலுள்ள ராசி ஸ்டுடியோ, அங்கிருந்த கேப்டனின் பழைய புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி நட்சத்திர அந்தஸ்து பெற்றபின், ராசி ஸ்டூடியோ குறித்து கேப்டனே கூறியிருக் கிறார். “"சினிமாவுல நடிக்கணும்கிற ஆசைல மதுரைல பல ஸ்டூடியோக் கள்ல ஸ்டில் எடுத்தேன். ஒண்ணும் சரியா வரல. அப்புறம்தான் ராசி ஸ்டூடியோவுக்கு போனேன். அந்த ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி மொதல்ல ரெண்டு ஸ்டில் எடுத்துக் கொடுத்தார். நல்லா இருந்துச்சு. அப்புறம் அடிக்கடி அங்க ஸ்டில் எடுக்க ஆரம்பிச்சேன். நடுராத்திரி 12 மணிக்கு வரச்சொல்லி விடியக்காலை 4 மணி வரைக் கும் பொறுமையா ஸ்டில் எடுப்பார். உடனே அதைக் கழுவிப்பார்த்து போட்டோ நல்லா வந்திருக்கா, இல்லையான்னு சொல்லி, என்னை உற்சாகப்படுத்தி ரொம்பவே ஹெல்ப் பண்ணுனார். இந்தமாதிரி எத்தனையோ நாட்கள் நடந்துச்சு. எங்க அப்பாவுக்கு இது பிடிக்காது. எடுத்த போட்டோவுக்கு கொடுக்கிறதுக்கு என்கிட்ட பணம் இருக்காது. அப்புறம் கொடுங்கன்னு சொல்லுவார் ஆசைத்தம்பி. ஸ்டில் எடுத்ததுக்கு நான் கொடுக்க வேண்டிய பணம் எட்டாயிரத்துக்கு மேல ஆயிருக்கும். இங்க எடுத்த ஸ்டில் ஒண்ணு அப்ப பிலிமாலயா பத்திரிகைல வந்துச்சு. அந்த ஸ்டில்லை பார்த்துட்டுத்தான் டைரக்டர் எம்.ஏ.காஜா எனக்கு சினிமாவுல நடிக்கிறதுக்கு, "இனிக்கும் இளமை'ல வாய்ப்பு கொடுத்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"கேப்டனின் இந்தப் பேட்டி வெளியான பக்கத்தை போட்டோ எடுத்து, அதை தன்னுடைய ஸ்டூடியோ வரவேற்பறையில் வைத்திருக்கும் ஆசைத்தம்பி “போட்டோ எடுக்கும்போது அத்தனை ஆர்வம் காட்டுவார். சினிமாவுல பெரிய நடிகனாகனும்கிற வெறிய அவருடைய முகத்துல பார்க்க முடிஞ்சது. கேப்டனை மாதிரி ஒரு நல்ல மனுஷன பார்த்ததையும், அவரோட பழகியதையும் என்னால மறக்கவே முடியாது'’என்று கண் கலங்கினார்.
-ராம்கி