ழைய பன்னீர்செல்வமாக திரும்பிவரும் வேட்கையோடு அமெரிக்காவில் சிகிச்சை பெற கிளம்புகிறார் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அதற்கு முன்னதாக, கட்சியின் மா.செ.க்கள், செயற்குழு உறுப்பினர்களின் கூட்டத்தை, கடந்த 04-ஆம் தேதி சென்னை -கோயம்பேட்டில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டினார்.

dmdk

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசுக்கு கண்டனம், எட்டு வழி பசுமை வழிச்சாலைக்காக அடக்குமுறையைக் கையாளும் எடப்பாடி மற்றும் மோடி அரசுகளுக்கு கண்டனம் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய பின் பேச ஆரம்பித்தார் விஜயகாந்த்.

Advertisment

""தமிழ்நாட்ல மோடியை நாம்தான் தூக்கிச் சுமந்தோம். பொன்னாரும் அன்புமணியும் ஜெயிச்சு எம்.பி. ஆகிட்டாங்க. நாமதான் தோத்துப் போய்ட்டோம். தி.மு.க.வும் அவுட்டாயிருச்சு. இப்ப மக்களிடம் மோடிக்கு நல்லபேரு கிடையாது, அவரு வேஷமெல்லாம் கர்நாடக தேர்தலோடும் வடமாநில இடைத்தேர்தலோடும் கலைஞ்சுப் போச்சு. அதுக்காக நான் தி.மு.க. பக்கம் திரும்பிப் பார்ப்பேன்னு நினைக்காதீங்க. ஏன்னா 98 எம்.எல்.ஏ.க்களை வச்சிக்கிட்டு, ஸ்டாலினால் எடப்பாடிகிட்டேயே அரசியல் நடத்தத் தெரியலயே.

ttv

இப்ப நான் சொல்ல வர்றது என்னன்னா... கட்சி தொடங்கி 14-ஆம் ஆண்டு விழாவையும் மாநில மாநாட்டையும் செப்டம்பர் 16-ல் திருப்பூர்ல நடத்த முடிவு பண்ணிருக்கேன். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறதுக்கு முன்னால உங்களையெல்லாம் சந்திச்சு பேசணும்னு தோணுச்சு, அதுக்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டினேன். இப்ப அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு போற நான், நேரா திருப்பூர் மாநாட்டுக்குத்தான் வருவேன். அப்ப நீங்க பார்க்கப் போவது சிங்கநடை போட்டு வரும் புது விஜயகாந்த்தை''’என கட்சியினருக்கு ரொம்பவே பூஸ்ட் கொடுத்து பேசினார் கேப்டன் விஜயகாந்த்.

Advertisment

""மோடி மீதான காட்டம், தி.மு.க. மீதான தீராத கடுப்பு இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் தேர்தல் வரும் நேரத்தில், தினகரனின் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. இணைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. கேப்டனின் மன ஓட்டமும் அப்படித்தான் இருக்கு.’’ தினகரன் ஊர் ஊரா விசிட் அடிக்கிறதையும் அவரோட கட்சி செயல்பாடுகளையும் எங்க கேப்டன் உன்னிப்பா கவனிச்சிட்டிருக்காரு. அதனாலதான் புது ஃபார்முலாவில் கணக்குப் போடுறாரு'' என்கிறார்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள்.

-அறிவு