மிழக அரசியல் களத்தில் நான்காவது சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைவுகள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன. இரண்டாவது மாநாட்டை மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அந்த மாநாடு பற்றிய விமர்சனங்களில் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு உள்நோக்கத்துடன் வரும் விமர்சனங்களை நாம் கண்டுகொள்ள வேண்டாம் என நேரடியாகவே கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய். ஆனால் இந்த முறை மாநாடு குறித்த விமர்சனங்கள் பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. என மூன்று பக்கங்களில் இருந்து வந்திருப்பது விஜய்யை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அ.தி.மு.க.வும் இந்த முறை விஜய்யை விமர்சித்திருப்பது அரசியலில்     இது முதல்முறை என தனக்கு நெருக்க மானவர்களிடம் குறிப்பிட்டார் விஜய். அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களிடம் தினமும் நேரடியாகத் தொலைபேசியில் பேசும் வழக்கம் கொண்ட நடிகர் விஜய், அ.தி.மு.க. பக்கத்திலிருந்து வந்த விமர்சனங்களை அ.தி.மு.க. தலைவர்களிடமே சொல்லி நியாயம் கேட்டார். 

Advertisment

மாநாட்டைப் பற்றி அனைவரும் சொன்ன விமர்சனம், தொண்டர்களைக்  கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான். கட்டுப்படுத்த முடியாத தொண்டர்களால் ஏகப்பட்ட அசம்பாவிதங்கள் நடந்திருக்கிறது என அனைவரும் விமர்சித்ததை விஜய் ஏற்றுக்கொண்டார். தொண்டர்கள் அசம்பாவிதம் செய்ததோடு, அவர்களை கண்ட்ரோல் செய்வதற்காக நியமிக்கப் பட்ட பவுன்சர்கள் எனப்படும் தனியார் குண்டர்கள் விஜய்யை பாதுகாக்கிறேன் என தொண்டர்களை அச்சுறுத்தினார்கள். விஜய்யின் ரேம்ப் வாக்கில் மொத்தம் மூன்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அதில் பெரம்பலூர் மூங்கில்பாடு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் புகார் கொடுத்தார். அதன்மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள். எதிர்த்து இன்னொரு தொண்டர் பேட்டி கொடுத்தார். உண்மையில் இரண்டு பேருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். இருவருமே ரேம்பிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்களே. யாரும் பொய் சொல்லவில்லை என விஜய் நடத்திய விசாரணை நிரூபித்தது. 

vijay1

மேலும், கூட்டணிக் கட்சிகள் யார்? எப்படி? என்பதைப்பற்றி சில விவரங்கள் விஜய் வட்டாரத்தில் பேசப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை புதிய தமிழகம், தினகரனின் அ.ம.மு.க., ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தலைமையில் இயங்கக்கூடிய அ.தி.மு.க. அணி ஆகியவை  இருக்கின்றன. அத்துடன் விஜயகாந் தின் தே.மு.தி.கவும் விஜய்யுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் லிஸ்டில் இடம்பெறுகின்றது. இது தவிர முன்னாள் பா.ஜ.க. மா.த. அமைத்த பழைய கூட்டணியில் இடம்பெற்ற சிறிய கட்சிகள், எடப்பாடியின் கூட்டணியில் இடம் பெற்ற சிறிய கட்சிகள் என முன்பு தமிழக அரசியலில் முளைத்த மக்கள்நலக் கூட்டணி போல சில கட்சிகளின் அணிவகுப்பு விஜய் தலைமையில் நடக்க இருக்கின்றது. 

Advertisment

ஓ.பி.எஸ்சின் இன்னொரு மகனான ஜெயபிரதீப் அ.தி.மு.கவுடன் சேர்வதற்கு பேசிக் கொண்டிருக்கிறார். டி.டி.வி.தினகரன் தனது வாழ்க்கையில் என்றுமே பா.ஜ.க.வை விட்டு வெளியே வர முடியாது. அந்த அளவிற்கு லண்டன் ஸ்டார் ஓட்டல் வாங்கிய வழக்கில் சிக்கித் தவிக்கிறார். புதிய தமிழகம் அ.தி.மு.க.வுடன் பேசிக் கொண்டிருக்கிறது. மற்றபடி உதிரிக் கட்சிகள் அனைத்தும் இங்கும் அங்கும் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். அத்தோடு விஜய் அ.தி.மு.க. தலைமையுடன் தினமும் பேசிக் கொண்டிருப் பவர். ஆகவே இந்தக் கூட்டணி விசயமெல்லாம் பார்ப்பதற்கு மர்மமாக இருந்தாலும் இறுதியில் ஒன்றுமே இல்லை என்பது போல்தான் முடியும் என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 

விரைவில் தமிழக மக்களை சந்திக்க இ.பி.எஸ். பாணியில் ஒரு அலங்கரிக்கப்பட்ட பேருந்தில் புறப்படும் விஜய், அந்தப் பேருந்தில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பதை இறுதி செய்து வருகிறாராம். மக்கள் கூப்பிட்ட வுடன் அவர்களை சந்திக்கும் அடிப்படையில் அமைந்துள்ள அந்தப் பேருந்தில் சி.சி.டி.வி.க்கள், தொலைக்காட்சி கேமராக்கள் என... பல நுட்பங்கள் அமையவிருக்கின்றன. மதுரை மாநாட்டில் தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதல் போல ஒரு மோதலை விஜய் விரும்பவில்லை          யாம். அதற்காக இந்த செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பெரிய அளவுக்கு கவர்பண்ணும் வகையில் தயார் செய்துள்ளாராம் விஜய். தற்பொழுது இந்தப் பிரச்சார வாகனம் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் தொடங்குகிறாராம். ஒரு ஸ்பாட்டுக்கு விஜய் வருவதற்கு முன்பே மக்களிடம் விளம்பரப் படுத்தி பிரச்சாரம் செய்து தொண்டர்களை அணி திரட்டி விஜய்க்கு ‘மாஸ்’ காட்டுவதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. கட்சித் தொண்டர்கள்தாம் செய்துவருகிறார்களாம்.