Advertisment

ராங்கால் மைத்ரேயன் விரத்திட்டியடித்த விஜய்! அரவணைத்த தி.மு.க.  இதுதான் தமிழ்நாடு கவர்னரை புறக்கணித்த மாணவி

புதுப்பிக்கப்பட்டது
rang

 

"ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக் கின்றன.''”

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தையும் ஸ்டாலின் விறுவிறுப்பா நடத்தியிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் 13 ஆம் தேதி நடந்தது. அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள் வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தில்லுமுல்லுகளை நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும், அதற்குத் துணைபோகும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி னார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் ‘"நமக்கான ஆதரவு மனநிலை மக்களிடம் இருக்கிறது. அதனை பறிக்கத் தேர்தல் ஆணையம் மூலம் ஒன்றிய பா.ஜ.க. திட்ட மிட்டுள்ளது. பீஹாரில் என்னென்ன அட்டூழியங்கள் நடத்துகிறார்கள் என நாம் பார்த்து வருகிறோம். அதனால், தமிழகத் தேர்தலில் அதுபோன்ற விவகாரங்களை தடுக்க, விழிப்புடன் செயலாற்றுங்கள். நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க விடப்போவதில்லை. நீங்கள் ஆற்றும் களப்பணி தான் நமது இலக்கினை வெற்றியடைய வைக்கும். 2026-ல் மீண்டும் நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம். முழு வீச்சுடன் களப்பணியாற் றுங்கள்'’என்று மா.செ.க்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, தான் செல்லவிருப்பதையும் மா.செ.க்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டாலின்.''”  

"தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொடர்ந்து தி.மு.க.வுக்குத் தாவி வருகிறார்களே?''”

Advertisment

"அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்குப் படையெடுக்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அண்மையில் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் தொண்டைமான் தி.மு.க.வில் இணைந்தார். அடுத்த சில நாட்களிலேயே அக்கட்சியின் மாஜி மந்திரியான அன்வர்ராஜாவும் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். இவரைத் தொடர்ந்து, இப்போது அக்கட்சியின் மாஜி எம்.பி. மைத்ரேயனும்  ஸ்டாலின் தலைமையி லேயே தி.மு.க.வில் ஐக்கியமாகி விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  இதேபோல் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விலிருந்து முக்கிய பிரமுகர்கள் 22 பேர் அறிவாலயம் வர ஆயத்தமாக இருக்கிறார்களாம். இவர்களில் பெரும்பான்மை யானவர்கள் அ.தி.மு.க.வினர் என்கிறார்கள்: இப்படி பலரும் தி.மு.க.வில் சேர வெவ்வேறு சோர்ஸ்கள் மூலம் தூதுவிட்டபடியிருக் கிறார்களாம். இதைத்தொடர்ந்து தி.மு.க.வுக்கு வரத் துடிக்கும் இவர்களின் பின்னணிகள், முறைப்படி ஆராயப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாஜி மந்திரியான தங்கமணியும் தி.மு.க.வுக்குத் தாவுகிறார் என்கிற செய்தி குபீரெனப் பரவ, பதறிப்போன தங்கமணி, இதை மறுத்திருக்கிறார்.  தேர்தல் நெருங்குவதற் குள்ளேயே இப்படியா? என்று எடப்பாடி ஏகத்துக்கும் அதிர்ந்துபோயிருக்கிறாராம். இதற்கிடையே, கட்சிக்கு வருகிற அத்தனை பேருக்கும் கதவைத் திறக்கவேண்

 

"ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக் கின்றன.''”

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தையும் ஸ்டாலின் விறுவிறுப்பா நடத்தியிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் 13 ஆம் தேதி நடந்தது. அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள் வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தில்லுமுல்லுகளை நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும், அதற்குத் துணைபோகும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி னார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் ‘"நமக்கான ஆதரவு மனநிலை மக்களிடம் இருக்கிறது. அதனை பறிக்கத் தேர்தல் ஆணையம் மூலம் ஒன்றிய பா.ஜ.க. திட்ட மிட்டுள்ளது. பீஹாரில் என்னென்ன அட்டூழியங்கள் நடத்துகிறார்கள் என நாம் பார்த்து வருகிறோம். அதனால், தமிழகத் தேர்தலில் அதுபோன்ற விவகாரங்களை தடுக்க, விழிப்புடன் செயலாற்றுங்கள். நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க விடப்போவதில்லை. நீங்கள் ஆற்றும் களப்பணி தான் நமது இலக்கினை வெற்றியடைய வைக்கும். 2026-ல் மீண்டும் நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம். முழு வீச்சுடன் களப்பணியாற் றுங்கள்'’என்று மா.செ.க்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, தான் செல்லவிருப்பதையும் மா.செ.க்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டாலின்.''”  

"தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொடர்ந்து தி.மு.க.வுக்குத் தாவி வருகிறார்களே?''”

Advertisment

"அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்குப் படையெடுக்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அண்மையில் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் தொண்டைமான் தி.மு.க.வில் இணைந்தார். அடுத்த சில நாட்களிலேயே அக்கட்சியின் மாஜி மந்திரியான அன்வர்ராஜாவும் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். இவரைத் தொடர்ந்து, இப்போது அக்கட்சியின் மாஜி எம்.பி. மைத்ரேயனும்  ஸ்டாலின் தலைமையி லேயே தி.மு.க.வில் ஐக்கியமாகி விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  இதேபோல் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விலிருந்து முக்கிய பிரமுகர்கள் 22 பேர் அறிவாலயம் வர ஆயத்தமாக இருக்கிறார்களாம். இவர்களில் பெரும்பான்மை யானவர்கள் அ.தி.மு.க.வினர் என்கிறார்கள்: இப்படி பலரும் தி.மு.க.வில் சேர வெவ்வேறு சோர்ஸ்கள் மூலம் தூதுவிட்டபடியிருக் கிறார்களாம். இதைத்தொடர்ந்து தி.மு.க.வுக்கு வரத் துடிக்கும் இவர்களின் பின்னணிகள், முறைப்படி ஆராயப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாஜி மந்திரியான தங்கமணியும் தி.மு.க.வுக்குத் தாவுகிறார் என்கிற செய்தி குபீரெனப் பரவ, பதறிப்போன தங்கமணி, இதை மறுத்திருக்கிறார்.  தேர்தல் நெருங்குவதற் குள்ளேயே இப்படியா? என்று எடப்பாடி ஏகத்துக்கும் அதிர்ந்துபோயிருக்கிறாராம். இதற்கிடையே, கட்சிக்கு வருகிற அத்தனை பேருக்கும் கதவைத் திறக்கவேண்டாம் என்று தி.மு.க. புள்ளிகளிட மிருந்தே  வேண்டு கோள் கட்சித் தலை மையிடம் வைக்கப்படு கிறதாம்.''”

"மைத்ரேயனின் வருகை, தி.மு.க. தொண்டர்களுக்கு உற் சாகத்தைத் தரவில்லை என்கிறார்களே?''” 

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன், 13ஆம் தேதி தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். இவர், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறியவ ராம். அதுதான் தி.மு.க. வினர் மத்தியிலேயே நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் கட்சி தாவுவது பற்றிக் கவலைப்படாதவர் என்கிறவர்கள், முதலில் 90-களில் பா.ஜ.க.வில் இருந்த மைத்ரேயன் அதன் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். 2000-ல் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினார் ஜெயலலிதா. மூன்று முறை இந்த வாய்ப்பு அவருக்குத் தரப்பட்டது. ஒருகட்டத்தில் இவருக்கான முக்கியத்துவம் குறைந்துபோன நிலையில்... ஜெ.’ மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார். பின்னர், அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் பெரிய பதவியை அவர் எதிர்பார்க்க, அது கொடுக்கப்படாததால்   எடப்பாடியைச்  சந்தித்து, மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணையும்முன் அவர் நடிகர் விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைய முயன்றாராம். ஆனால், அவரை விஜய்யின் த.வெ.க. தரப்பு துரத்தி யடித்துவிட்டதாம்.''”

rang1

"சரிப்பா, ஒரே நேரத்தில் மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களின் பெயர்கள் சர்ச்சையில் அடிபடுகிறதே?''”

"மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான மூர்த்திக்கும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக் கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த செய்தி. இப்போது இந்த இரு அமைச்சர்களின் பெயர்களும் ஒரே நேரத்தில் சர்ச்சையில் அடிபட்டுவருகிறது. குறிப்பாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின்  ஆதரவாளரான மதுரை மேயர் இந்திராணி, இப்போது கடும் சிக்கலில் இருக்கிறார். அங்கு மாநகராட்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் 150 கோடி ரூபாய் அளவிலான மோசடியை விசாரித்துவரும் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை, மாநகராட்சி சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர், உதவி ஆணையர் உட்பட 12 பேரை கைது செய்தது. இதைத் தொடர்ந்து இந்த மோசடியின் சூத்ரதாரியாக இருந்தவர் என்று மேயரின் கணவர் பொன்.வசந்த் தையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள். இது மேயருக்கு பெரிய பின்னடைவாக மாறியிருக்கிறது. எனவே, அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என்றும் செய்திகள் உலவுகின்றன. மதுரை மாநகராட்சி விவகாரம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரொம்பவே சங்கடப்படுத்திவருகிறதாம்.''”

"ம்...''”

"அதேபோல்  அமைச்சர் மூர்த்தியின் பத்திரப் பதிவுத் துறையும் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. துறைக்கான சாஃப்ட்வேர் வேலைகளை ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திடம்  ஒப்படைத்திருந்தார்களாம். அந்த விவகாரத்தில் 50 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்று புகார்கள் எழுந்திருக்கிறது. இப்போது சுதாரித்துக்கொண்ட துறை அதிகாரிகள், அதை 10 கோடி ரூபாய் என்று காட்டுவதற்கான பேரத்தில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.  இந்த நிலையில், இதே பத்திரப் பதிவுத் துறையின் கண்காணிப்பில் உள்ள, கலைமகள் சபா என்னும் மோசடி நிறுவனத்தின் சொத்துக்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருவதாக, ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதுவும் துறை அமைச்சருக்கு கூடுதல் தலைவலியாக மாறியிருக்கிறதாம்.''” 

"நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர், கவர்னருக்கு எதிராகக் ’கெத்து’ காட்டியிருக்கிறாரே?''”

 rang2

"ஆமாங்க தலைவரே... மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் 32ஆவது  பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா கோலா கலமாகத் தொடங்கியது. ஏராளமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர். கவர்னரும் மேடையில் மாணவர் களுக்குப் பட்டத்தை தன் கையால் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது பட்டம் வாங்குவதற்காக மேடையேறிய நாகர் கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப், கவர் னர் கையால் பட்டம்  வாங்க மறுத்து, அவர் பக் கத்திலிருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடமிருந்து பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இதனால் கவர்னரும் அரங்கில் இருந்த மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். கீழே இறங்கிவந்த மாணவியை பலரும் பாராட்டினர். இதுகுறித்துப் பேசிய மாணவி ஜீன் ஜோசப், "தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் கவர்னர் எதையும் செய்யாததோடு, எல்லா விசயத்திலும் அவர் எதிராகவே செயல்படுகிறார்.  அதனால் அவர் கையால பட்டம் பெற நான் விரும்பவில்லை. நான் திராவிட மாடலை பின்பற்றுகிறேன். இது நான் சுயமாக எடுத்த முடிவு. நான் துணைவேந்தரிடம் பட்டம் பெற்று எனது இருக்கைக்கு வந்தவுடன், சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் என்னைப் பாராட்டினர். இந்த கவர்னருக்கு எதிரன உணர்வு எல்லோரிடமும் இருப்பதை இப்போது உணர்ந்தேன்'’என்றார் உற்சாகமாக.'' 

"ராமதாஸ் ஒரு அதிரடி உயிலை எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே?''”

rang3

"பா.ம.க. பொதுக்குழுவை, கடந்த 9ஆம் தேதி கூட்டுவதாக அறிவித்த அன்புமணி, அந்தக் கூட்டத்தின் மேடையில் ஒரு காலி நாற்காலியில் ஒரு துண்டைப் போட்டு, அது ராமதாஸுக்கான நாற்காலி, அவர் வந்தால் அமரலாம் என்று அறிவித்திருந்தார்.  அதோடு அந்தக் கூட்டத்திலேயே ராமதாஸை சுற்றி தீயசக்திகளும், குள்ளநரிக் கூட்டமும் இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதையறிந்து ஏகத்துக் கும் டென்ஷனான ராமதாஸ், "ஏன் எனக்குக் காலி நாற்காலி போட்டதோடு விட்டாங்க. அப்படியே ஒரு மாலை யையும் போட்ற வேண்டி யதுதானே?' என்று கொந்தளித்ததோடு, "இனி  நான் செத்தாகூட அன்பு மணி என் முகத்தில் முழிக் கக்கூடாது, எனக்குக் கொள்ளியும் போடக் கூடாது' என்று, ஒரு அதிரடி உயிலையே எழுதி வைத்து விட்டாராம். இதைத் தன்னைச் சந்திக்கவரும் கட்சியின் சீனியர்களிடம் ஆதங்கத்தோடு அவர் பகிரவும் செய்கிறாராம். மேலும், தான் 17ஆம் தேதி கூட்டவிருக்கும் பொதுக்குழுவில் அன்புமணியைக் கட்சியைவிட்டே நீக்கும் தீர்மானத்தையும் ராமதாஸ் நிறை வேற்றவிருக்கிறாராம். இதையெல்லாம் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அன்புமணி என்கிறார்கள்.''”

"திருச்சி டி.ஐ.ஜி. வருணின் பணியிட மாற்றம் பற்றி பரபர செய்திகள் வருகிறதே?''”

"கடந்தவாரம் சிவில் டிஃபன்ஸ் டி.ஜி.பி. பிரமோத்குமார், ஏ.டி.ஜி.பி. ஆயுஷ்மணி திவாரி, ஐ.ஜி. ஜெயஸ்ரீ மற்றும் திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் ஆகிய 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும், வருண் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரமே ஊடகங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் தீவிரமாக புலனாய்வு செய்த டி.ஐ.ஜி. வருண், திருச்சி சாமிரவியை நோக்கி நகர்ந்த நிலையில்தான், இந்த டிரான்ஸ்பர் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் மேலும் அதிரடி புலனாய்வு செய்வதற்கு வசதியாக, அவரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவேண்டும் என்று முதல்வரிடம் சொல்லப்பட்டதால், இதற்கு அவர் இசைவளித்தாராம்.  இந்தநிலையில் அவரது பணியிட மாற்றத்தின் பின்னணியில் தி.மு.க. மாஜி அமைச்சர் ஒருவர் இருப்பதாக காவல்துறையிலேயே கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது கொங்கு மண்டல ஆளுங்கட்சிப் புள்ளிக்கு வேண்டிய சிலரின் மணல் லாரிகளை வருண்குமார் "லாக்' செய்தாராம். இதனால் இவருக்கும் அந்த கொங்கு மண்டலப் புள்ளிக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறது அதனால்தான் இவர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருப்ப தாகவும் சொல்கிறார்கள்.''’

"என்னப்பா ராமஜெயம் கொலைவழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டிருக்காமே?''…”

"ஆமாங்க தலைவரே... ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பா சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வருண்குமார் புழல் சிறையி லுள்ள மண்ணச்சநல்லூர் குணசீலன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங் கோட்டையில் சிறைவாசியாக உள்ள சுடலையிடம் விசாரணை முடித்த கையோடு சென்னை புழல் சிறைக்கு டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். புழல் சிறையிலுள்ள மண்ணச்ச நல்லூர் குணசீலனிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தியிருக்கிறார் வருண்குமார். 2006-ஆம் ஆண்டு முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்பட்டபோதே, ராமஜெயத்தை கொலைசெய்யத் திட்டம் தீட்டியவர் மண்ணச்சநல்லூர் குணா. ராமஜெயத்தின் சமூகம் பெரிய அளவில் வளர்ந்துவிடக்கூடாது எனும் ரீதியில் திட்டமிட்டு இந்தப் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலையறிந்த உளவுத்துறை, அப்போதிருந்த முதல்வர் கலைஞருக்கு தகவலை 'பாஸ்' செய்துள்ளது. இதையடுத்து, முதல்வர் கலைஞர் அப்போதைய சம்பவத்தை தடுத்துநிறுத்தியுள்ளார். அதன்பிறகுதான், வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, பொறுமை யாகக் காத்திருந்து இந்த கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். நீண்ட நாளாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கை முடிப்பதற்கான இறுதிக்கட்டத்தை வருண் குமார் நெருங்கியுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.''”

rang4

"திருப்புவனம் கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. நிறைய துருவிக்கொண்டிருக்கிறதே?''”

"சிவகங்கை மாவட்டத்தில் பழைய நகைகளை வாங்குவதற்கு பிரசித்தி பெற்ற ஊராம். அங்கே உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, திருட்டுநகை வாங்கும் நபர்களிடமிருந்து போலீசார் நகையைப் பெற்று, நெருக்கடி தரும் வழக்குகளை முடிப்பார்களாம். இதற்காக அப்பகுதியில் உள்ள குறவர் சமூகத்தினர் மீது பொய் வழக்கு போடுவதும் அவர்களின் வழக்கமாம். இந்த விவகாரத்திலிருந்தே அஜித்குமார் வழக்கை தொடங்கியிருக்கிறதாம் சி.பி.ஐ. அந்த வகையில் காரைக்குடி போலீஸ் குடியிருப்பு பகுதியில் நகை கொள்ளை போனதாகவும் எஸ்.ஐ. சிங்கராயர் புகார் கொடுத்துள்ளார்.  இதற்கான  தனி டீம் போட்டுத் தேடி வந்தனர். அப்போது ஒரு தகவல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது எஸ்.ஐ. இருடியம் பிசினஸில் பணத்தை இழந்ததால், அதை ஈடுகட்டும் வகையில் போலீஸ் குடியிருப்பிலே திருடுபோனதாக அவர் பொய்ப் புகார் கொடுத்தாராம். இதை வெளியில் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும் என்று வேறு வழியில்லாமல், திருட்டு நகை வாங்கும் நபர்களிடமிருந்து நகைகளைப் பெற்று குறவர் ஒருவர் நகையை திருடியதுபோல், செட்டப் செய்து வழக்கை முடித்துள்ளனர்.''”

"அடக்கொடுமையே!''” 

"அதேபோல, முக்கூரணி பகுதியில், மாமியாரையும் மருமகளையும் மிட்நைட்டில் கழுத்தை அறுத்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்திலும், இந்த பாணியிலேயே குறவர் ஒருவர் மீது பொய்வழக்கைப் போட்டு வழக்கை முடித்துள்ளனர். அதன் பிறகு தேவகோட்டையில் நகை கொள்ளை வழக்கில், வழக்கம்போல் சி.சி.டி.வி. புட்டேஜ்களை சோதனை செய்த போலீசாருக்கு,  முடிதிருத்தும் ஒருவர் அந்த சி.சி.டி.வி.யை உடைக்கும் காட்சி கிடைத்திருக்கிறது. அவரை விசாரித்து, அவரது வீட்டையும் சோதனை செய்தபோது... அவரது வீட்டில் முக்கூரணி மாமியார், மருமகள் கொலை விவகாரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கிடைத்துள்ளன. அதைக்கண்டு மிரண்டுபோன போலீசார், அந்த நபரை விசாரித்ததில், "அதையும் நான்தான் செய்தேன்... இதையும் நான்தான் செய்தேன்' என உண்மையை ஒப்புக்கொண்டானாம். ஆனால் அதையும் மூடிமறைத்து போலீசார் வழக்கை முடித்துள்ளனர். இதுபோன்ற பாணியில் திருப்புவனம் விவகாரத்தில் நகைகளை மீட்க முயற்சி நடந்ததா?என்கிற கோணத்திலும் சி.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கி யுள்ளதாம். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் உட்பட போலீசார் பலரும் சிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் ஆவின் நிறுவன, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங் களுக்கான பதிவேடுகளைக் கொள்முதல் செய்ததில், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  கிறிஸ்துதாஸோ, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த  தனி நீதிபதி புகழேந்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரி வள்ளலார் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி காமராஜ் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பிருப்பதாகத் தீர்ப்பளிக்க, இதை எதிர்த்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இதை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வு விசாரித்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ’"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் மீதும் தனி நீதிபதி சொன்ன தீர்ப்பினை ரத்து செய்கிறோம். குற்றச்சாட்டில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை'’என்று அறிவித்தனர்.’''’ 

 

 

nkn160825
இதையும் படியுங்கள்
Subscribe