"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 10ஆம் தேதி கூட்டியிருக்கார்.''”
"ஆமாம்பா, பட்ஜெட் தாக்கல் செய் தாகணுமே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு, தேர்தல் ஆண்டு என்பதால் அப்போது இடைக்கால பட்ஜெட்டை மட்டும்தான் தாக்கல் செய்யமுடியும். அதனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில், மக்கள் நலன் சார்ந்து என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்து, மக்களின் மனதைக் கவரலாம்னு முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க விருக்கிறார். இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்கான திட்டமும் விரிவாக்கம் செய்யப் படலாம்னு எதிர்பார்க்கப்படுது. மேலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், தொழில்நுட்பம், தொழில் துறை, உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படலாம்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. அதேபோல் இந்த பட்ஜெட்டை இந்த பிப்ரவரியிலேயே தாக்கல் செய்யலாமா? அல்லது வழக்கம்போல மார்ச்சில் தாக்கல் செய்யலாமாங்கிற யோசனையிலும் ஸ்டாலின் இருக்கிறாராம்.''”
"இதற்கிடையில் ஈரோடு கிழக்குக்கான இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செஞ்சிருக் காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, 5ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேதான் ஃபைட் இருந்தது. அதேபோல் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு இருந்தது. சொல்லிக்கொள்ளு
"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 10ஆம் தேதி கூட்டியிருக்கார்.''”
"ஆமாம்பா, பட்ஜெட் தாக்கல் செய் தாகணுமே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு, தேர்தல் ஆண்டு என்பதால் அப்போது இடைக்கால பட்ஜெட்டை மட்டும்தான் தாக்கல் செய்யமுடியும். அதனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில், மக்கள் நலன் சார்ந்து என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்து, மக்களின் மனதைக் கவரலாம்னு முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க விருக்கிறார். இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்கான திட்டமும் விரிவாக்கம் செய்யப் படலாம்னு எதிர்பார்க்கப்படுது. மேலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், தொழில்நுட்பம், தொழில் துறை, உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படலாம்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. அதேபோல் இந்த பட்ஜெட்டை இந்த பிப்ரவரியிலேயே தாக்கல் செய்யலாமா? அல்லது வழக்கம்போல மார்ச்சில் தாக்கல் செய்யலாமாங்கிற யோசனையிலும் ஸ்டாலின் இருக்கிறாராம்.''”
"இதற்கிடையில் ஈரோடு கிழக்குக்கான இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செஞ்சிருக் காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, 5ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேதான் ஃபைட் இருந்தது. அதேபோல் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு இருந்தது. சொல்லிக்கொள்ளும்படி வேறு எதிரிகள் களத்தில் இல்லாததால், எந்தவித கவலையும் இல்லாமல், மாவட்ட அமைச்சர் முத்துசாமியிடம் தேர்தல் பணிகளை ஒப்படைத்துவிட்டு ஹாயாக இருந்தார் ஸ்டாலின். அதேபோல் முத்துசாமி தலைமையி லான தி.மு.க. நிர்வாகிகள் பரபரப்பாக களமாடினார் கள். இந்தமுறை தொகுதி தங்கள் கைவசம் வந்த உற்சாகத்தை உடன்பிறப்பு களிடம் பார்க்க முடிந்தது. அதேசமயம், தேர்தலைப் புறக்கணித்துவிட்ட அ.தி. மு.க., பா.ஜ.க தரப்பினரின் வாக்குகளையும் கணிசமாக வாங்கிவிட வேண்டும் என்கிற துடிப்போடு, களத்தில் தீவிரமா கப் பிரச்சாரம் செய்தார் சீமான். இப்படிப்பட்ட சூழல்களால் களத்தில் அனல் பறந்தது.''”
"ஆமாம்பா''”
"இதனால், தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளின் வாக்குகளில் ஒரு பகுதி வாக்குகள் அவர்களுக்கு விழலாம் என்ற ரீதியில், உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்தது. இதை அலட்சியப்படுத்தாத ஸ்டாலின், இதுகுறித்து தேர்தல் பொறுப்பாளர்களிடம் உடனடியாக விசாரித்தார். அப்போது அவர்கள் ’"தலைவரே, கவலையே வேண்டாம். இந்தமுறை சீமான் கட்சி டெபாசிட்கூட வாங்காது. அந்த அளவுக்கு மக்களிடம் நமக்கு செல்வாக்கு அதிகரிச்சிருக்கு. சீமானின் பெரியாருக்கு எதிரான குரல், மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு. நாமும் சரியா பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருக்கோம்'’என்று சொன்னதோடு, கடைசி நேரத்தில் வாக்காளர்களையும் அவர்கள் முடிந்த வரை கவனித்துவிட்டார்கள். அதனால் வாக்காளர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு காணப்பட்டது. வாக்குப்பதிவு அன்று பெரும்பாலான பூத்துகளில் நாம் தமிழர் கட்சியின் ஏஜெண்டுகள்கூட இல்லாததைக் கண்டு, அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, பதறிப்போய்விட்டார். இதுகுறித்து அவர் சீமானைத் தொடர்புகொண்டு புலம்ப, அதைக் கேட்டு பலத்த அப்செட்டில் ஆழ்ந்துவிட்டாராம் சீமான். அங்கே தி.மு.க. தரப்பும் சீமான் தரப்பும் மாறி, மாறி கள்ளஓட்டு புகாரைத் தெரி வித்து பரபரப்பூட்டி வந்தன.''”
"நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுனுடன் பலமாகக் கைகோத்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தனது த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் பதவியை ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கிய விஜய், அவரது தேர்தல் வியூக நிறுவனமான "வாய்ஸ் ஆஃப் காமன்' அமைப்புடன் தேர் தல் பணிகளுக்காக ஒரு ஒப் பந்தமும் போட்டுக் கொண்டி ருக்கிறார். இதைத் தொ டர்ந்து, த.வெ.க.வின் தேர்தல் பணிகளுக்காக நந்தனத்தில் புதிய அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுன். அங்கே தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனைகள் சீரியசாக நடந்துவருகின்றன. ஏற்கனவே த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக் கியசாமியை நியமித்திருந்தார் விஜய். ஆதவ் அர்ஜுனும் இதே பணிக்காக நியமிக்கப் பட்டிருப்பதால் ஒரு உறையில் 2 கத்தி இருக்க முடியுமா? என்கிற குழப்பத்தில் த.வெ.க. நிர்வாகிகள் ஆழ்ந்திருக்கிறார் கள். இந்த நிலையில் "ஜான் ஆரோக்கியசாமியின் வழி காட்டுதலில் ஆதவ் அர்ஜுன் இயங்குவார்' என்று விஜய் பெயரில் ஒரு கடிதம் ரிலீசாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"ஆமாம்பா, ஆனால் இந்தக் கடிதத்தைப் பார்த்து நடிகர் விஜய்யே ஷாக் ஆயிட்டார்னு சொல்றாங்களே?''”
"ஆமாங்க தலைவரே... காரணம், அந்தக் கடிதத்தில் ஜான் ஆரோக்கியசாமி வழிகாட்டுத லில் என்ற வாசகம் இருப்பது விஜய்க்கே தெரியாதாம். விஜய்க்கு தெரியாமலே புஸ்ஸி ஆனந்தும் ஜானும். விஜய்யின் கடிதத்தைத் திருத்தி, அந்த வரிகளை அதில் சேர்த்துவிட் டார்களாம். இதனால் விஜய் கடுப்பாகிவிட்டா ராம். அதேபோல் விஜய் கட்சி நிர்வாகிகளிட மும் ஜான் மீது அளவு கடந்த அதிருப்தி ஏற் பட்டிருக்கிறதாம். அவரைக் கண்டு எரிச்சலடை யும் அவர்கள், "வியூக அமைப்பாளர் என்று சொல்லிக்கொள்ளும் ஜான், இப்போதுவரை என்ன வியூகத்தை வகுத்துத் தந்தார்?' என்று கேட்பதோடு, ’கடந்த 2 ஆம் தேதி, கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதற்கான பத்திரிகைச் செய்தியை மட்டும் வெளியிட்டார் விஜய். ஆனால், "கட்சியின் வியூக வகுப்பாளர் என்பவர், இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை மக்கள் மத்தியில் பரபரப்பாக ஆக்கியிருக்க வேண்டாமா? ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதில் விஜய்யை பேச வைத்து, ஒரு எழுச்சியை உருவாக்கியிருக்க வேண்டாமா? ஆனால் இப்படி எதையுமே செய்யாமல், அசால்ட்டாக இருக்கும் இவரெல்லாம் ஒரு வியூக அமைப்பாளரா?'’ என்றெல்லாம் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.''”
"அண்மையில் தென்காசியில் பேசிய நடிகர் சரத்குமார், தன்னை சிலர் சங்கி என்று அழைப்பதாகக் கூறி கொந்தளித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தென்காசி மாவட்ட பா.ஜ.க.வின் தலைவராகப் பொறுப்பிலிருந்த ராஜேஷ்ராஜா மாற்றப்பட்டு, புதிய தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினரும் கட்சியின் பவர் புள்ளிகளில் ஒருவருமான ஸ்ரீதர் வேம்புவின் பின்புலத்தில் வந்தவர். அண்மையில் மாவட்டத் தலைவர் அறிமுக நிகழ்ச்சி தென்காசியில் நடந்தபோது, அந்த மேடையில் நடிகர் சரத்குமாரை மேடையேற்றினார் ஆனந் தன். அந்த நிகழ்ச்சியில் பொன்னார், நயினார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சரத், ’"2026ஆம் ஆண்டு 234 தொகுதி களிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி யமைக்க வேண்டு மென்பதே நமது எண்ணம். 16 ஆண்டு கள் சமத்துவ மக்கள் கட்சியை நடத்திய நான், 1996ல் அ.தி. மு.க.வை எதிர்த்து தொடர்ந்து 40 நாட் கள் பிரச்சாரம் செய் தேன். என்னைவிட அதிக அரசியல் தெரிந்தவர்கள் கலையுலகில் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட நான் சங்கியாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்'’ என்றார் கொதிப்பாய். வரும் பொதுத்தேர்தலில் சரத்தை தென்காசி சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தினால், தொகுதியில் இருக்கும் நாடார் சமூக வாக்குகளின் அரவணைப்பில் அவர் அமோகமாக வெற்றிபெறுவார் என்று கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார் ஆனந்தன்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியின் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உருவாகி, பிப்ரவரி 7ஆம் தேதியோடு 14 ஆண்டுகள் முடிந்து, 15ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ரெங்கசாமியிடம் அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு ரெங்கசாமியும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். மேலும் அந்த நிர்வாகிகள், நம் கட்சியின் பெயரில், அகில இந்திய என்று இருப்பதால், புதுச்சேரி அரசியலோடு நம் கட்சி இருந்துவிடக் கூடாது. அதனால், அடுத்த ஆண்டு தமிழகத் துக்கு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் நம் கட்சியை தமிழகத்திலும் தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்களாம்.''