"ஹலோ தலைவரே, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இது சங்கட வாரமா அமைஞ்சிடிச்சி’.''’
"என்னப்பா இப்படி சொல்றே? எடப்பாடியின் பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் பரவலாகக் கொண்டாடி இருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, அடுத்து அ.தி.மு.க. ஆட்சிதான் வரப்போகுதுங்கிற நம்பிக்கையில் எடப்பாடி பிறந்த நாளை அ.தி.மு.க.வினர், மே 12ஆம் தேதி பரவலாகக் கொண்டாடித் தீர்த்திருக்காங்க. அங்கங்கே நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கு. அதேபோல் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்களான நயினார், தமிழிசை உட்பட பலரும் நேரில் சென்று எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிச்சி ருக்காங்க. அவர்களிடம் உற்சாகமாகப் பேசிய எடப்பாடி, நாம் இணைந்து தேர்தல் பணிகளை அதிரடியாக முன்னெடுக்க வேண்டும். அது தொடர்பாக நாம் விரைவில் கூடி விவாதிச் சாகணும்னு சொல்லியிருக் கார். இது தொடர்பான கூட்டம் பா.ஜ.க. அலுவலக மான கமலாலயத்தில் நடந் தால் அங்கே எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கூச்சமில்லாமல் வருவார் களா? என்கிற விவாதம் இப்போதே அங்கு ஆரம்பித்து சங்கடத்தை ஏற் படுத்தியிருக்கிறது. பல்வேறு குழப்பங் களில் இருந்த எடப்பாடி, பிறந்த நாள் சாக்கில் குடும்பத்துடன் திருப்பதிக்கும் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பியிருக் கிறார்.''”
"பிறந்த நாளில் எடப்பாடிக்கு ஒரு ஏமாற்றப் பரிசும் கிடைத்தது என்கிறார்களே?''”
"வருகிற சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை உருவாக்கி, அதன்மூலம் ஆட்சியில் அமரவேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி. தங்களோடு அடம்பிடித்து ஒட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வால், சிறுபான்மையரின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்றும் அவர் கவலைப்படுகிறாராம். எனவே, த.வெ.க.வைத் தங்கள் பக்கம் எப்படியாவது கொண்டு வந்துவிடவேண்டும் என்று நடிகர் விஜய்யுடன், ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி மூலம் பேச்சு வார்த்தையை எடப்பாடி ரகசியமாக நடத்தி வருகிறார். சில நாட்களாகத் தொடர்ந்து நடந்துவரும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடையில், தன் பிறந்த நாளுக்கு விஜய், நேரில் வந்து வாழ்த்தவேண்டும் என்றும் அவர் விரும்பினாராம். இது தொடர்பாகச் சென்ற அழைப்பிற்கும் விஜய் தரப்பிட மிருந்து க்ரீன் சிக் னல் கிடைத்ததாம். அதனால் அவர் விஜய்யை ரொம் பவே எதிர்பார்த் தாராம். ஆனால் என்ன காரணத் தாலோ, நடிகர் விஜய், எடப்பாடியை வாழ்த்தச் செல்லவில்லை. இதில் எடப்பாடிக்கு பலத்த ஏமாற்றம் என்கிறது அ.தி.மு.க. சீனியர்கள் தரப்பு.''”
"பொள்ளாச்சித் தீர்ப்பாலும் சங்கடத்தில் இருக்கும் எடப்பாடி, அதே விவகாரம் தொடர்பான வீடியோ ஒன்றை பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறார் என்கிறார்களே?''”
"பொள்ளாச்சி விவகாரம் நடந்த நேரத்தில் அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர், அது குறித்து தெனாவெட்டாகவும் குற்றவாளிகளுக்கு உடந்தையாகவும் பேசிய ஒரு வீடியோ ஒன்று, விரைவில் சமூக ஊடகங்களில் வெளியாகப் போகிறது என்கிற ஒரு தகவல் அ.தி.மு.க. தரப்பில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களால் காறித் துப்பப்படும் அந்த விவகாரத்தில், இப்படியொரு வீடியோ வெளியானால், கட்சியின் மானம் முழுதாய்ப் பறப்பதோடு, தேர்தலிலும் அது அ.தி.மு.க.வைப் பெரிதும் மண்கவ்வ வைத்துவிடும் என்று பதறிய எடப்பாடி, அந்த வீடியோவைக் கண்டுபிடித்துத் தடுக்கும் முயற்சியில் ஜரூராக இறங்கி இருக்கிறாராம். இந்த விவகாரத்தில் எடப்பாடி காட்டிவரும் ஆர்வத்தைக் கண்டு டென்சனான மாஜி மந்திரி வேலுமணி, எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது மீண் டும் அவர்களுக்குள் உரசலை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள்.''”
"இந்த நேரத்தில் மணல் சாம்ராஜ்ய அதிபர்கள் எடப்பாடியிடம் சசிகலாவுக்காகப் பேசி வருகிறார்களே?''”
"சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியில் மீண்டும் ’மணல்’ ராமச்சந்திரன் குதித்திருக்கிறாராம். முதலில் சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்து விட்டால், அதன்பிறகு மற்றவர்களை எளிதாக அக்கட்சியில் இணைத்து விடலாம் என்கிற திட்டத்தில், அவர் காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள். அ.தி.மு.க.வின் தேர்தல் செலவுகளுக்குக் கணிசமாக நாங்கள் தருகிறோம் என்று மணல் சாம்ராஜ்யத்தை நடத்திவரும் ராமச்சந்திரன், கரிகாலன் உள்ளிட்டோர் உத்தரவாதம் தந்திருப்பதால், இவர்களை எடப்பாடி முழுமையாக நம்புகிறாராம். எனவே அவரிடம் ராமச்சந்திரன், சசிகலாவை அ.தி.மு.க.வில் நீங்கள் இணைத்துக் கொண்டால், முக்குலத்தோர் சமூகத்தின் மொத்த ஆதரவும் பழையபடி அ.தி.மு.க.வுக்கே கிடைத்து விடும். அதற்கு நான் கேரண்டி என்றும் ஆசை காட்டி வருகிறாராம். அவரைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வில் எடப்பாடி சமூகத்தினரின் ஆதிக்கத்தை குறைத்து, கட்சியை முக்குலத் தோர் வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் திட்டமாம். இதை அறிந்த அ.தி.மு.க. சீனியர்கள், ராமச்சந்திரன் விசயத்தில் எடப்பாடி உஷாராக இருக்கவேண்டும் என்கிறார்களாம்''.”
"மணல் கரிகாலனும் அ.தி.மு.க. பக்கம் அதிகம் சைடு அடிக்கிறாரேப்பா?''”
"மணல் மாஃபியா மும்மூர்த்திகளில் ஒருவரான கரிகாலன், தனது தம்பி கருப்பையாவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, திருச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் களமிறங்கச் செய்தார். இதையறிந்து எரிச்சலான அறிவாலயம், அமைச்சர் துரைமுருகன் மூலம் அவரை எச்சரிக்க, வேறுவழியின்றி தன் தம்பியின் வெற்றிக்காக கரிகாலன் எந்த வேலையும் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். அதனால் அவர் தோற்றுப் போனார். தம்பியை வெற்றிபெற வைக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் இருக்கும் கரிகாலன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியில் தன் தம்பியை நிறுத்தவேண்டும் என்று திட்டமிட்டாராம். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மகேஷை அங்கே வெல்வது லேசுப்பட்ட காரியமல்ல என்பது தெரிந்ததும், தன் தம்பியை புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் களமிறக்கத் தீர்மானித்திருக்கிறாராம். இது அமைச்சர் ரகுபதியின் சிட்டிங் தொகுதி. தி.மு.க. ஆட்சியில் சம்பாதித்த மணல் பணத்தை எல்லாம் அதே தி.மு.க.வை வீழ்த்த, வரும் சட்டமன்றத் தேர்தலில் செலவிடப் போகிறோம் என அந்த மணல் மாஃபியாக்கள் சூளுரைத்து வருகிறதாம்.''”
"ரஜினியின் திரையுலகப் பொன்விழா நிறைவைக் கொண்டாட அவரது ரசிகர் மன்றத்தினர் தயாராகி வருகிறார்களே?''”
"இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975 ஆகஸ்ட் 15-ல் வெளியான அபூர்வராகம் திரைப்படத்தில், கதைநாயகன் கமலுக்கு நண்பராக அறிமுகம் செய்யப்பட்டவர்தான் ரஜினி. இந்தக் கணக்கின் படி பார்த்தால் ரஜினியின் திரைப்பயணம் இந்த ஆகஸ்ட்டில் பொன்விழா நிறைவு ஆண்டாக அமைகிறது. தனது 75 வயதிலும், தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், வசூல் சக்கரவர்த்தி யாகவும் திகழ்ந்துவருகிறார் ரஜினி. இந்த ஆகஸ்ட் 15-ல் அவரது கூலி திரைப்படம் ரிலீசாகிறது. அவரது திரையுலகப் பொன்விழா நாளில் இது வெளியாவதால், இந்தப் படம் அவரது ரசிகர்களால் உற்சாகமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரஜினியின் இந்த திரையுலகப் பொன்விழாப் பயணத்தை கோலாகலமாகக் கொண்டாடப் போவதாக அண்மையில் ராணிப்பேட்டையில் கூடிய ரஜினி ரசிகர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து ரஜினி மன்ற மா.செ. ரவியிடம் நாம் கேட்டபோது, ’"எங்கள் தலைவர் இளைஞர் களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளோம். அவரது திரைப்பொன்விழாவைக் கொண்டாட எங்களுக்கு அனுமதி கிடைத்தால், அதை கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடக் காத்திருக்கிறோம்'’என்றார் உற்சாகமாக.''”
"நானும், என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கிய கொடூரக் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரணம் வரை ஆயுள்தண்டனை தரப்பட்டிருக்கும் நிலையில், அந்த விவகாரத் தில் தொடர்புடைய பொள்ளாச்சி ஜெய ராமன் மகன் உள்ளிட்ட இன்னும் சிலரையும் சேர்த்து தண்டனை தரவேண்டும் என்று, தி.மு.க. தரப்பு உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டத் தயாராகிவருகிறது. மேலும் பாதிக் கப்பட்ட பெண்களுக்கு கோர்ட் உத்தரவிட்ட 10 லட்சம் தொகை யுடன் கூடுதலாக தமிழக அரசு சார்பாக 25 லட்சம் வழங்கப் படும் என புதன் இரவு முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.''”