கரூர் பிரச்சார நிகழ்வில் செப்டம்பர் 27 அன்று 41 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களை நேரில்சென்று பார்த்து ஆறுதல் கூறினர். இந் நிலையில் விஜய் நேரில்சென்று பார்க்கவில்லையென சர்ச்சையெழுந்தது. கரூருக்கு நேரில் வந்தால் பிரச்சனையாகலாமென்பதால், வீடியோ காலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும் பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் த.வெ.க. சார்பாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தாமதமானா லும் பரவாயில்லையென, பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடிவெடுத்த விஜய், இதுவரை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத புதுமையான அணுகுமுறையைக் கையிலெடுத்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்குப் பதில், அவர் களையே தன் வீட்டுக்கு அருகி லுள்ள ஒரு இடத்துக்குக் கொண்டு வந்து தங்கவைத்து சந்திப்பதற் கான ஏற்பாடுகளைத் துரிதப் படுத்தினார். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் த.வெ.க. நிர்வாகி களுடன் இதுகுறித்து ஆலோ சித்து, அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது. விஜய் யின் வீட்டுக்கு அருகில் மகாபலிபுரம் தாண்டி, பெரிய அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் "4 பாய்ண்ட்' எனும் கான் ஃப்ரன்ஸ் ஹால் ஒன் றில், அக்டோபர் 27-ஆம் தேதி விஜய் பாதிக் கப்பட்டவர் களின் குடும்பத்தினரைச் சந்திக்க, 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
அனைவரையும் ஒரே இடத்தில் திரட்டி அழைத்துவர தாமதமாகும் என்பதால் கரூர், வெண்ணைமலை என இரண்டு இடங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒருங்கிணைத்து, அவர் களை சொகுசு பஸ்ஸில் ஏற்றிக் கொண்டுவந்தனர். இதில் 3 குடும்பத்தினர் சென்னை வர ஒப்புக்கொள்ள வில்லை. 35 குடும்பங்கள் சென்னை வர ஒப்புக் கொண்டன. இவர்களை 5 பேருந்துகளில் ஏற்றிவர திட்டமிடப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு இரண்டு அல் லது மூன்று பேர் வரச் சொல்லியிருந்தனர் த.வெ .க.வினர். ஆனால் விஜய்யை நேரில் பார்க்கும் ஆவலில் ஒரு குடும்பத்தில் 5 பேர், ஏழு பேர் என வந்த தால் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதே 5 பேருந்துகளாக அதிகரிக்க காரணமானது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/vijay-2025-10-27-16-06-06.jpg)
த.வெ.க. நிர்வாகிகள் இவர்களை திட்டமிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அழைத்து வந்திருக்கின்றனர். வழியில் தேவையில்லாமல் எங்கும் நிறுத்தக்கூடாது, பஸ் செல்லும் வழி பிற யாருக்கும் தெரியக்கூடாது, இயற்கை உபாதை வந்தால்கூட முன் கூட்டியே தெரிவித்து ஆள் நடமாட்ட மில்லாத இடங்களில் நிறுத்திக் கொண்டுவரவேண்டும் என முடிவு செய்து, இரண்டு பைலட் வண்டி வைத்து, அவர்களின் வழிகாட்டுதல் படியே மகாபலிபுரம் வந்திருக்கிறது. கூடவே இரண்டு ஆம்புலன்ஸும், அதில் மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் ஏற்பாடு செய் துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருந்த பேருந்துகள் ஒவ் வொன்றிலும் இரண்டு த.வெ.க. நிர்வாகி களும் கூடவே பயணித்துவந்துள்ளனர். அதேபோல பேருந்து கள் வரும்வழியில், ஒவ்வொரு முக்கிய ஊரிலும் இரு த.வெ.க. நிர்வாகிகளை அழைத்துநிறுத்தி, அப்பகுதியை பஸ் கடந்ததும் பிரச்சனையின்றி இந்தப் பகுதியை பேருந்துகள் கடந்துவிட்டன என அந்த நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வெளியாட்களுடன் பேசக்கூடாது, சொல் லாமல் வெளியே எங்கும் செல்லக்கூடாது, விஜய்யுடன் சந்திப்பு நடந்ததும் நாங்களே கொண்டுபோய் ஊரில் விட்டுவிடுவோம், இங்கே நடந்ததை வெளியே தெரிவிக்கக் கூடாது என பல அறிவுறுத்தல்கள் விஜய்யை சந்திக்க வந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்குத் தரப்பட்டுள்ளன.
ஞாயிறு இரவு 12.30 மணிக்கு மாமல்ல புரம் பூஞ்சேரி கூட்டு ரோட்டுக்கு பேருந்துகள் வந்தடைந்து 4 பாய்ண்டை அடைந்திருக்கின் றன. அந்த 4 பாய்ண்டில் ஹோட்டலைச் சேர்ந்த வர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்காமல் கடும் கெடுபிடிகளுடன் பார்த்துக்கொண்டிருக் கின்றனர். முக்கியமாக, பத்திரிகையாளர்கள் வந்துவிடக்கூடாது என சொல்லப்பட்டிருக் கிறது. கேட் எண் 2 வழியாக பேருந்து வரும் போது என்ட்ரன்ஸ் அருகே, சன் டி.வி.யின் ரிப்போர்ட்டர் ஜாபர் அதைப் படம் பிடித்திருக் கிறார். அங்கே தினகரன் புகைப்படக்காரர் பாலாஜி, பாலிமர் ரிப்போர்ட்டர் குருநாதன் உள்ளிட்ட பலர் இருந்திருக்கின்றனர். உடனே ஜாபரை த.வெ.க. நிர் வாகிகள் பிடித்துவிட, இரு தரப்புக்கும் வாக்குவாதமாகி யிருக்கிறது. மற்ற இருவரையும் வெளியே அனுப்பிவிட்டனர். இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் சன் டி.வி. ரிப்போர்ட் டரின் வீடியோவை வலுக்கட்டாயமாக டெலிட் செய் திருக்கின்றனர். இதனால் இரு தரப்புக்கும் சர்ச்சையானா லும், நிர்வாகிகள் சோதிக்கும்முன்பே அந்த வீடியோவை நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டார் செய்தியாளர்.
அதேசமயம் தாமதமாக பின்னர் 4 பாய்ண்ட் அரங் கின் வாசலில் பத்திரிகையாளர்கள் காத்திருக்க வசதிகள் செய்யப்பட்டன. 4 பாய்ண்ட் கான்பரன்ஸ் ஹாலில் வட்டமேஜை மாநாடுபோல அனைவரும் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசலில் இறந்த மோகன் என்பவரின் தந்தை கந்தசாமி பஸ் பிடித்து மாமல்லபுரம் வந்திருந்தார். ஆனால் மோகன் சார்பாக அவரது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்தார். மோகனின் தாயாரும், தந்தையும் நீண்ட நாட்களாகப் பிரிந்துவாழ்ந்த தால், த.வெ.க.வினர் மோகனின் தாயாரையே நிகழ்வுக்கு அழைத்துவந்திருந்தனர். என்றபோதும் தனியாக பஸ் பிடித்துவந்த அவரை இரவுமுதலே 4 பாய்ண்ட் அரங்குக் குள் அனுமதிக்கவில்லை. நிகழ்வு குறித்து விசாரித்தபோதும் விஜய் ஆறுதல்கூறும் நிகழ்வே நடக்க வில்லையெனக் கூறி அவரைத் திருப்பியனுப்ப முயன்றனர். இதை யடுத்து பத்திரிகையாளர்களிடம் அவர் முறையிட்டதாலும், தன் மகனின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைக் காட்டிய பிறகும் ஒருவாறாக அவரை உள்ளே அனுமதித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/vijay1-2025-10-27-16-06-23.jpg)
அதுமட்டுமின்றி த.வெ.க. பொருளாளரையும் அரங்குக்குள் அனுமதிக்க வில்லை எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. அடையாள அட்டை கொண்டுவராத பொருளாளர் வெங்கட்ராமனை அரங்குக்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்தனர். இதையடுத்து, அவர் கார் ஹாரனை ஒலிக்கவிட, உள்ளிருந்து வந்த கட்சியினர் சொன்னபிறகே அவர் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, விஜய் ஆறுதல் சொல்லும் நிகழ்ச்சி நடக்கும் அக்டோபர் 27ஆம் தேதியில், திருச்சி மாநகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டில் கலந்துகொள்ள திருச்சியிலிருந்து சென்று, விபத்தில் உயிரிழந்த வி.எல்.சீனிவாசன், உறையூர் கலை ஆகியோரின் சார்பாக, வீரதேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை அமைப்பினர் ஒட்டியுள்ள முதலாமாண்டு அஞ்சலி போஸ்டரில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உயிர்நீத்தோம். எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா! 15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம். எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா! கட்சி மாநாட்டிலும், பொதுக் கூட்டத்திலும்கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லையே விஜய் அண்ணா!
கரூர் துயர சம்பவத்திற்கு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்துப் பிள்ளையாக இருப்பேனென்று உறுதியளித்துள்ளீர்களே விஜய் அண்ணா, ஆனால் எங்கள் குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது விஜய் அண்ணா! நீங்கள் மறந்தாலும், மேலும் மேலும் நீங்கள் உயர எங்கள் ஆத்மா வழிநடத்தும் விஜய் அண்ணா!' என்று அந்த போஸ்டரில் உருக்கமாக எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/vijay2-2025-10-27-16-05-34.jpg)