கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 13ஆம் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இவ்விவகாரத்தை பொறுத்தவரை, இதுவரை த.வெ.க.வினர் தான் சி.பி.ஐ. தரப்பாலும் குற்றம்சாட்டப் பட்டுள்ளனர். அப்படியானால், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலியானோரின் குடும்பத்தினரை த.வெ.க. தரப்பினர் சந்தித்தாலோ, அவர்களுக்கு நிதியுதவி செய்தாலோ, அது சாட்சிகளைக் கலைப்பதாகத்தான் வரும். ஆனால் இங்கோ, அனைத்தையும் த.வெ.க.வினர் தொடர்ச்சியாகச் செய்ய, சி.பி.ஐ. தரப்பில் அனைத்தையும் மவுனமாக வேடிக்கை பார்ப்பது, விஜய் எதிர்பார்த்தது போலவே சி.பி.ஐ. அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட நாள் முதலாக த.வெ.க.வினர் செய்துவரும் அத்துமீறல்களை வரிசைப்படுத்தினாலே அதை புரிந்துகொள்ள முடியும்! சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவு வந்ததுமே 'நீதி வெல்லும்' என்று விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதே நாளில், டெல்லியில் ஆதவ் அர்ஜுனா செய்தி யாளர்களை சந்தித்தபோது, கரூரில் பலியான 41 பேரின் குடும்பத்தையும் விஜய் தத்தெடுத்து, வாழ்நாள் முழுவதும் அவர்களின் குடும்பத்தில் அனை வரின் கல்விச்செலவு, மருத் துவச்செலவு, பிரசவச்செலவு என அனைத்தையும் ஏற்றுக் கொள்வார் என்று கூறினார். இதையெல்லாம் கணக் கிட்டால் பல கோடிகள் வரக்கூடும். இது சாட்சிகளைக் கலைப்பது தானே?
அடுத்ததாக, த.வெ.க.வில் உறுப்பினராக உள்ள ஜேப்பியார் கல்விக் குழுமத்தை சேர்ந்த மரிய வில்சன், தடாலடியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு ஆயுள் காப்பீடு செய்து தருவதோடு, மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக்கணக்கிற்கும் ரூ.5000 சேரும்படி 20 ஆண்டுகளுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்தார். மாதம் 5000 என்றால் ஆண்டுக்கு 60,000 ரூபாய். 20 ஆண்டுகளுக்கு என்றால் 12 லட்ச ரூபாய். இதனை 37 குடும்பங்களுக்கு எனக் கணக்கிட்டால் 4 கோடியே 44 லட்ச ரூபாய் வருகிறது. இப்படி பணத்தால் அடிக்க நினைப்பது சாட்சிகளைக் கலைப்பது ஆகாதா?
இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட கரூர் மக்களை அக்டோபர் 17ஆம் தேதி நேரில் சந்திக்கவிருந்த நிலையில், அது ரத்தாக, அடுத்த நாளே, ஏற்கெனவே அறிவித்தபடி தலா 20 லட்ச ரூபாயை பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் அவரவர் அக்கவுண்டுக்கு அனுப்பினார். 37 குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் என்றால் மொத்தம் 7 கோடியே 40 லட்சம் ரூபாய் வருகிறது!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/vijay-2025-10-30-15-44-29.jpg)
இதற்கடுத்ததாக, அக்டோபர் 27ஆம் தேதி, திங்களன்று, சென்னை, மகாபலிபுரத்தில் ஃபோர் பாய்ன்ட்ஸ் ரிசார்ட்டில், கரூரில் பலியான 41 பேரின் குடும்பத்தினரையும் அழைத்துவந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக இரண்டு நாள் கணக்கில் அறை புக் செய்தனர். அந்த ரிசார்ட்டில், ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் ப்ளஸ் வரியுடன் 55 அறைகள் தவிர, ரூ.19,000 ப்ளஸ் வரிகளுடன் சேர்ந்த மிகப்பெரிய 1 சூட் அறையையும் புக் செய்தனர். இரண்டு நாட்களுக்கு இதற்கான செலவே தோராயமாக 17 லட்சம் ஆகிறது. மேலும் கரூரிலிருந்து குடும்பங்களை அழைத்துவர ஒரு சொகுசு பேருந்துக்கு 1 லட்ச ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6 பேருந்துகளுக்கு 6 லட்ச ரூபாய் ஆனது. மொத்தம் இதற்கான செலவே தோராயமாக 23 லட்ச ரூபாய் ஆகிறது. அடுத்ததாக, பலியானோரின் 37 குடும்பத் தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகைக்கான சான்றிதழை விஜய் வழங்கியிருக்கிறார். இந்த வகையில் மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சம் ரூபாய் காப்பீடு எடுத்துள்ளார். இதோடு 23 லட்சமும் சேர்க்க, ரூ.2 கோடியே 8 லட்சம் ரூபாய் ஆகிறது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, தோராயமாக 14 கோடி ரூபாய் வருகிறது. அடேங்கப்பா என மலைப்பாக இருக்கிறதா?
இவ்விவகாரத்தில் நம்முடைய கேள்வியெல்லாம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில், அவரை வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் எனக்கூறி தடுத்தார்களே, தற்போது கரூர் வழக்கில், முக்கிய சாட்சிகளான பலியான 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்ததும், த.வெ.க. தரப்பில் இவ்வளவு கோடிகளை செலவழித்திருப்பதும், இன்னும் பல உறுதியளித்திருப்பதும் சாட்சிகளைக் கலைப்பதாகாதா? இதை மட்டும் எப்படி சி.பி.ஐ. கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது? த.வெ.க. என்றால் மட்டும் சட்டம் வளைந்துகொடுக்கிறதா? இதற்காகத்தான் விஜய் தரப்பினர் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று போராடினார்களா? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?
-ஆதவன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us