கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 18 நாட்களாக தொடர்ந்து பல்வேறு தரப்பினர்கள் விவரித்து வருகின்றனர்.
தற்போது நடிகர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், 41 குடும்பங்களை கரூரில் நேரில் சென்று சந்திக்க வேண்டு மென்று டி.ஜி.பி.யிடம் மனு அளித்ததோடு, நீதிமன்றத்தில் அனுமதியும் கேட்டிருந் தனர். ஆனால் இதுவரை விஜய் பாதிக்கப் பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், கரூர் மக்களை நேரில் சந்திக்க பயப்படும் விஜய், தனக்கு தி.மு.க. அரசு அனுமதி வழங்கவில்லையென்று தி.மு.க. மீது பழி போட்டு, தனது பரப் புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பலியான 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த வர்களையும் திருமண மண்டபத்துக்கு வரவழைத்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி, தமிழக அரசு தங்களை சந்திக்க அனுமதி மறுப்பதாக ஒரு பரி தாபமான சூழலை உருவாக்கத் திட்டமிட் டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்கிழமையன்று த.வெ.க.வின் தொழில்நுட்பப் பிரிவு அணியை சேர்ந்த மரிய வில்சன், தங்களுடைய ஜேப்பியார் குழுமத்தின் சார்பாக, பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும், கல்வி, இன்சூரன்ஸ் வழங்க மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், உயிரிழந்தோ ரின் குடும்பத்திலுள்ள ஒருவரை அழைத்து அந்த உதவி யையும் செய்தனர். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் தர எண்ணுவதாக த.வெ.க. தரப்பிலிருந்து அறிவிப்பு வந்திருந்த நிலையில், தற்போது ஜேப்பியார் குழுமத்தின் சார்பாக இப்படியான அறிவிப்பு வந்தது, பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளானது. த.வெ.க. அறிவிப்பும், இதுவும் ஒன்று தானா? அப்படியானால் இனி 20 லட்சம் தரமாட்டார் களா? என்றெல்லாம் விவாதம் கிளம்பியது. இதேபோல, த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் இந்த அறி விப்பு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவு வந்த நிலையில், வெளியே தலைகாட்டி, பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வந்து கூட்டம் போட்டபோது, மரிய வில்சனின் அறிவிப்பு குறித்து விவாதித்தனர். அதில், எந்த உதவி செய்வதாக இருந்தாலும், அதை தனிப்பட்ட ஒரு நபர் செய்வதாக இல்லாமல், கட்சியின் சார்பில் செய்திட வேண்டுமென்று அறிவுறுத்தி பேசியுள்ளனர். ஆனால் மரிய வில்சனின் கணக்கோ வேறு என்கிறார்கள்.
அதேபோல் விமான நிலையங்களில் ரசிகர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஒரு வருட காலத்திற்கு விஜய் தனி ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடங் களுக்கு அருகில் சென்று இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக துபாய் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத் திடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ஹெலிகாப் டரை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், கட்சியினை பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் மூத்த நிர்வாகிகளாக இருந்து இன்றுவரை வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல், தொடர்ந்து ரசிகர்களாகவே நீடிப்பவர்களையும், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிர்வாகிகளையும் ஒன்று சேர்த்து அழைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்களை கட்சியுடன் இணைந்து செயல்பட்டு கட்சியை வழிநடத்திச் செல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் விஜய்.
கொள்கைரீதியாக பி.ஜே.பி. தங்களுக்கு எதிரியென்று கடுமையாக மக்கள் மத்தியில் பேசிவந்த விஜய், கரூர் உயிர்ப் பலி சம்பவத்துக்கு பிறகான சூழலில், பி.ஜே.பி.யுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணிக்குள் த.வெ.க. செல்லுமென்று மக்கள் மத்தியில் வலுவாக பேச்சு எழுந்துள்ளது. இதைத் தான் மற்ற கட்சியினரும் கூறிவருகின்றனர். இச்சூழலில், பி.ஜே.பி.யை சேர்ந்த மூத்த நிர்வாகி களான தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி ஸ்ரீனிவாசன், அ.....மலை போன்றவர்கள் விஜய்யை, "எங்களுடைய விஜய்' என்று உரிமையோடு விளிப்பது, கூட்டணி குறித்த சந்தேகத்தை உறுதிசெய்வதாகவே உள்ளது. கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவத்தில் மாநில அரசு நியமித்த விசாரணைக்குழுவை மறுத்துவிட்டு, மடப்புரம் லாக்கப் டெத் வழக்கில் எந்த சி.பி.ஐ. விசாரணையை வைத்து தி.மு.க. வை விஜய் குற்றம்சாட்டினாரோ, அதே சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று விஜய் யின் கட்சி உச்சநீதிமன்றத்துக்கு சென்ற தும், அதற்கு ஓ.கே. ஆனதும் மகிழ்ச்சி யடைந்ததும், மக்கள் மத்தியில் விஜய் மீதான பார்வையை மாற்றியுள்ளது. அதேபோல், பி.ஜே.பி. தலைவர்கள் விஜய்யை உரிமையோடு அரவணைத்துப் பேசுவதும் விஜய் மீதான நம்பகத்தன்மை யை சிதைத்துள்ளதாக மக்கள் மத்தியில் முணுமுணுப்பாக எழுந்துள்ளது. எனவே, காவி நிறமாக மாறிவரும் த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியலை தமிழக மக்கள் எப்படி பார்ப்பார்கள், மக்கள் மத்தியில் விஜய் எப் படி அரசியல் செய் வார் என்பதையெல் லாம் சற்று பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
படங்கள்: ஸ்டாலின்