விஜய் கலந்துகொண்ட த.வெ.க. ரோடுஷோ வின்போது கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 நபர்கள் படுகொலையான சம்பவம் தொடர்பாக, டிசம்பர் 29 அன்று டெல்லியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற விருக்கின்றது. ஆகவே, அதற்குத் தகுந்தாற்போல் நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்'' என த.வெ.க. தரப்பில் ஐந்து நபர்களுக்கும், காவல்துறை தரப்பில் நான்கு நபர்களுக்கும் அழைப்பாணையை வழங்கி யிருக்கின்றது சி.பி.ஐ..
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க.வின் சுற்றுப்பயணத்தின்போது உங்களிடையே விஜய் உரையாற்ற வுள்ளார் என த.வெ.க. சார்பில் அறிவிக்கை வெளியானது. திரையி லேயே பார்த்த நடிகர் விஜய்யை நேரில் பார்ப்பது நமக்குக் கிடைத்த வரம் என திரண்டுவந்த ரசிகர்கள், ஜனத்திரளை ஊடுருவிக்கொண்டு, விஜய்யின் பிரச்சார வாகனத்தாலும் காலையி லிருந்து வெயிலில் காத்திருந்தது, போதுமான குடிநீர் வசதியில்லாத தாலும், விஜய்யைப் பார்க்க முண்டியடித்ததில் 41 பேர் பலியாகினர். 110 நபர்களுக்கு மேலானவர்கள் பலத்த காயமடைந்தனர்.
"41 நபர்களை கொடூரமாக கொலைசெய்த நடிகர் விஜய்யின் ரோடு ஷோ குறித்து கண்டனங்கள் எழுந்த நிலையில், 41 உயிர்கள் பலி குறித்து விசாரணை செய்ய எங்களுக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதனடிப்படையில், கரூருக்கு வந்த நாங்கள் ரோடு ஷோ நடந்த இடம், மருத்துவமனை, கொலையுண்டவர் களின் குடும்பங்கள் உறவுகளின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கள ஆய்வு செய்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்த கடைக்காரர்கள், கட்சிக்காரர்கள், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சர்கள், செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்த சிலர் என அனைவரையும் கரூரிலுள்ள எங்களுடைய விசாரணை முகாமிற்கு வரவழைத்து விசாரணையை நடத்தினோம். காவல்துறை அதிகாரிகள், த.வெ.க. கட்சியின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்ட ஏறக்குறைய 306-க்கும் அதிகமானவர்களை வரவழைத்து அவர்களி டம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றோம்.
எங்களின் விசாரணையின் அடுத்தகட்டமாக காவல்துறையிலுள்ள அதிகாரிகளான கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்தன், டி.எஸ்.பி. செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோருக்கு சம்மனும், த.வெ.க. சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோருக்கு அக்யூஸ்ட் சம்மனும், சம்பவத்தின் போது நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை இயக்கிய டிரைவர் அஜித்குமாருக்கு விட்னஸ் சம்மனும் கொடுத்து டெல்லிக்கு வரவழைத் துள்ளோம்'' என்றார் கரூர் சம்பவ விசாரணை அதிகாரி ஒருவர்.
கரூரைத் தாண்டி சென்னையில் சி.பி.ஐ.க்கு என தனியாக அலுவலகம் இருக்கையில் அதனைவிடுத்து டெல்லிக்கு எதற்காக அழைக்க வேண்டும்? என்ற கேள்வியெழுந்த நிலையில், "கரூர் விசாரணையைப் பொறுத்தவரை விஜய்யின் கரூர் ரோடு ஷோ திட்டத்தினை வகுத்தது யார்? கரூர் மாவட்டம் தாண்டி மற்றைய மாவட்டத்தி லிருந்து அங்கு ஆட்களை திரட்டிக் கொண்டு வந்தது யார்..? அன்றைய தினத்தின் ரோடு ஷோ முன்ன தாக 3 மணி என திட்ட மிட்டிருந்தும், அதனை 12 மணிக்கே விஜய் பேசவுள்ளார் என அறிவிப்பு கொடுத்தது யார்? திட்ட மிட்டே, விஜய்யின் வருகை தாமதம் செய்யப்பட்டதா? விஜய் பேசிக்கொண்டிருந்தபொழுது மயக்கமடைந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோதும் விஜய் தொடர்ந்து பேசக்காரணம் என்ன..? மயங்கி விழுந்தவர்கள் குறித்து விஜய்க்கு தகவல் தெரிவிக்கவில்லையா? பல உயிர்களை பலிகொண்ட அந்த ரோடு ஷோவினை ஒருங்கிணைப்பு செய்த நிர்வாகிகள் யார்.? யார்..? என்பன உள்ளிட்ட கேள்வி களை த.வெ.க. நிர்வாகி களிடம் கேட்டது சி.பி.ஐ..
அதுபோல், காவல் துறை தரப்பிற்கு, "விஜய் ரோடு ஷோவுக்காக த.வெ.க. தரப்பு கேட்ட இடங்கள் எவை..? பாதுகாப்பு பணியி லிருந்தவர்கள் யார் .? யார்.? சம்பவம் நடைபெற்ற பொழுது எஸ்.பி. எங்கிருந் தார்? சம்பவ இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் ஐ.ஜி. ஆஜரானார்..? ஆம்புலன்ஸ் கள் எத்தனை நிறுத்தப் பட்டிருந்தன.? கூட்டம் அதிகமாகும்போது ஏன் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த வில்லை.? விஜய்யின் வாகனம் வரும் இடத்திலிருந்த போலீஸார்கள் யார்.? யார்.?" என்பவை உள்ளிட்ட கேள்வி களையும் கரூரிலேயே கேட்டது சி.பி.ஐ. தரப்பு.
எனினும், கரூரில் நடந்த விசாரணையின்போது புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் ஒரே அறையில் நான்கு மேஜைகள் போடப்பட்டு, மேற்கண்ட நால்வரையும் ஒரே நேரத்தில் உட்காரவைத்து கேள்விகளைக் கேட்டது சி.பி.ஐ. ஆனால் டெல்லியில் நிலை வேறு. டெல்லி விசாரணையின்போது தனித்தனி அறையில், தனித்தனி அதிகாரிகளால் வெவ்வெறு கேள்விகளை த.வெ.க. கேட்கத் திட்டமிட்டுள்ளது சி.பி.ஐ.'' என்கின்றது டெல்லி சோர்ஸ்.
"த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் வேலுச்சாமிபுர ரோடு ஷோவில் இவ்வளவு உயிர்ப்பலிகள் நடைபெறுவதற்கு ஆளுகின்ற தி.மு.க.வே காரணம். இதற்கு சான்றாவணமாக கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா நிர்மல்குமாரிடம் பேசிய ஆடியோக்கள் இருக்கின்றன. அதில், "இன்னும் 15 நிமிடங்கள் கழித்து விஜய் வந்தால் போதுமானது'' என்று இருக்கின்றதாம்.
அதுபோல், விஜய்யை இங்கிருந்து அனுப்பியதே கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு என்பதற்கும் ஆடியோ வைத்திருக்கிறோம். இதில் தி.மு.க. சிக்கும். இதனை டெல்லி விசாரணையில் சி.பி.ஐ.யிடம் சமர்ப்பிப்போம்'' என்கிறது த.வெ.க. தரப்பு.
இரண்டுநாள் விசாரணை என்றவுடனேயே கலங்கிநிற்கும் த.வெ.க. நிர்வாகிகள், "நாம் ஏன் அனைவருமாக சேர்ந்து டெல்லிக்குப் போகக்கூடாது?'' என தங்களுக்குள்ளேயே பேசி திட்டமிட்டுள்ளனர்.
" "நான் ஸ்பாட்டிலேயே இல்லை. இந்த திட்டத்தினை வகுத்தது ஆதவ் அர்ஜுனா'தான் என புஸ்ஸி ஆனந்தும், "இங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து கரூர் போலீஸ் எனக்கு நேரடியாகப் பேசி அதனை ஆதவ் அர்ஜுனாவிற்கு கூற முயன்றேன். அவர் போனை எடுக்கவில்லை' என நிர்மல்குமாரும் விசாரணையின்பொழுது சி.பி.ஐ.யிடம் கூறவுள்ளார்கள்'' என த.வெ.க. தரப்பு கூறிய நிலையில், "இந்த வழக்கில் விட்னஸ் சம்மன் கொடுத்து அழைக்கப்பட்டிருக்கும் அஜித்குமாரின் தரவுகள்தான் யார் குற்றவாளி என கூறவிருக்கின்றது.
அதாவது, "அன்றைய நாளின் உங்களின் திட்டம் என்ன? எத்தனை மணிக்கு கரூருக்குச் செல்லவேண்டும் என உங்களுக்கு அறிவுறுத் தப்பட்டது? கரூருக்கு எத்தனை மணிக்குச் சென்றீர்கள்.? காவல்துறை உங்களுக்கு ஆலோசனை கொடுத்ததா? வாகனத்தை எதிர்ப்புறம் நிறுத்தக் கூறியது யார்?, மக்களிடையே வாகனத்தை இயக்கக்கூறியது யார்?, வாகனத்திற்கு முன்பாக எவ்விதமான நிகழ்வை நீங்கள் பார்த்தீர்கள்?, ஆம்புலன்ஸ் வந்ததா?, ஆம்புலன்ஸ் வந்தபொழுது விஜய் என்ன செய்துகொண்டிருந்தார்?, அவரது பேச்சு தொடரக் காரணமென்ன?, உங்கள்முன் நடந்த நிகழ்வு குறித்து
விஜய்க்கு எடுத்துக்கூறியது யார்?, அன்று சம்பவத்தின் உங்களது வாகனத்தில் உங்களையும், விஜய்யையும்
தவிர வேறு யார் யார் இருந்தார்கள்.? ஆதவ் அர்ஜுனா என்ன செய்துகொண்டிருந்தார்?' என்பன உள்ளிட்ட 90 கேள்விகளுக்கும் மேல் அஜித்குமாருக்காக தயாரித்து வைத்துள்ளது சி.பி.ஐ. டீம். இதனை வைத்தே விஜய்யும்,
ஆதவ் அர்ஜுனாவும் கைதுசெய்யப்படலாம்'' என்கின்றனர் விசாரணையின் போக்கு அறிந்த அதிகாரிகள்.
இது ஒருபக்கமிருக்க, த.வெ.க. நிர்வாகிகளுக்காக ராகுல் தரப்பிலிருந்து சில நண்பர்கள் ஆலோசனை வழங்கிவருவதாக தகவல் வெளிவர, "இவர்களின் விசாரணை முடிந்து, நடிகர் விஜய் விசாரணைக்காக டெல்லி வரவேண்டும். நடிகர் விஜய்யை என்றும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கவே இந்த டெல்லி விசாரணை' என்கின்ற தகவலும் வெளியாகி யுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/tvkvijay-2025-12-29-16-04-34.jpg)