கரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக மக்களின் கருத்துக்கள்... சென்ற இதழ் தொடர்ச்சி...
பரணி, டெக்ஸ்டைல்ஸ் மில், ஏமூர், புதூர் கரூர்: நடிகர் விஜய் தாமதமாக வந்தது மிகப்பெரிய தவறு. அதேபோல் அரசு தரப்பும் கொஞ்சம் பெரிய இடமாகக் கொடுத்திருக்கலாம். இது எதையும் செய்யாமல் ரோடு ஷோ என்கிற பெயரில் கூட்டத்தை நடத்தி இவ்வளவு பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் விஜய் மீது தான் தவறு என்று நான் சொல்வேன். இதுக்கு மேலயும் விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுக்கில்லை
பெருமாள், ஏமூர் புதூர்: எங்கள் குடும் பத்திலும் ஒரு உயிரை பலி கொடுத்துள்ளோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதில் அரசியல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. என்று இரண்டு தரப்பினருமே சம்பவ இடத்துக்கும் சரி, நேரிலும் சரி, எங்கள் வீட்டுக்கு வந்து பார்த் தாங்க. எங்கள் மருமகள் எல்லாம் விஜய்யை பார்க்கணும்னு என் மகன் சொன்னதால் போனாங்க, இடிபாடுகளில் சிக்கி இப்போ இறந்து போயிட்டாங்க. சினிமா நடிகர்களை இப்படி பார்க் கக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு பாடம்.
மகேஷ், கரூர் டவுண்: விஜய் வந்தார், போனார், 41 உயிர்கள் போய் விட்டது. அந்த நேரத்தில் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் நல்லா உதவி பண்ணினாங்க, ஆனால் கெட்ட பெயர் முழுவதும் ஆளுங்கட்சி மேலே தான் பரப்புனாங்க. இது தான் எனக்கு வருத்தமா இருக்கு.
அருமையம் மாள், ஏமூர்: விஜய் அரசிய லில் தொடர்ந்து நிற்பாரா என்பது தெரிய வில்லை. ஏன்னா, 41 பேர் இறந்ததுக்கே வெளியில் வந்து இன்னும் பதில் சொல்லவில்லை. உள்ளுக்குள் இருந்துகொண்டே போன் பேசுறார், அறிக்கை விடுகிறார். உயிரிழப்பு நடந்த அன்னைக்கு இவர் ஸ்பாட்டில் இருந்து ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயிருந் தாக்கூட எல்லார் மனசும் ஆறி யிருக்கும். அதை அவர் செய்யா தது எங்களுக்கு வருத்தமாயிருக்கு.
வழக்கறிஞர் பாவண்ணன், திருச்சி டவுண்: கரூர் துயர சம்ப வத்துக்கு, விஜய்யின் அலட்சியம் தான் காரணம். நடிகர் விஜய், தங்களுடைய பொறுப்பாளர் களுக்கு அரசியல் களப்பயிற்சியை வழங்கி, அதன்பின் மக்களை சந்திக்க சென்றிருக்க வேண்டும். விஜய் தாமதமாக வந்ததே இச்சம்பவத்துக்கு காரணமென்று காவல்துறை ஒரு குற்றச்ச
கரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக மக்களின் கருத்துக்கள்... சென்ற இதழ் தொடர்ச்சி...
பரணி, டெக்ஸ்டைல்ஸ் மில், ஏமூர், புதூர் கரூர்: நடிகர் விஜய் தாமதமாக வந்தது மிகப்பெரிய தவறு. அதேபோல் அரசு தரப்பும் கொஞ்சம் பெரிய இடமாகக் கொடுத்திருக்கலாம். இது எதையும் செய்யாமல் ரோடு ஷோ என்கிற பெயரில் கூட்டத்தை நடத்தி இவ்வளவு பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் விஜய் மீது தான் தவறு என்று நான் சொல்வேன். இதுக்கு மேலயும் விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுக்கில்லை
பெருமாள், ஏமூர் புதூர்: எங்கள் குடும் பத்திலும் ஒரு உயிரை பலி கொடுத்துள்ளோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதில் அரசியல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. என்று இரண்டு தரப்பினருமே சம்பவ இடத்துக்கும் சரி, நேரிலும் சரி, எங்கள் வீட்டுக்கு வந்து பார்த் தாங்க. எங்கள் மருமகள் எல்லாம் விஜய்யை பார்க்கணும்னு என் மகன் சொன்னதால் போனாங்க, இடிபாடுகளில் சிக்கி இப்போ இறந்து போயிட்டாங்க. சினிமா நடிகர்களை இப்படி பார்க் கக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு பாடம்.
மகேஷ், கரூர் டவுண்: விஜய் வந்தார், போனார், 41 உயிர்கள் போய் விட்டது. அந்த நேரத்தில் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் நல்லா உதவி பண்ணினாங்க, ஆனால் கெட்ட பெயர் முழுவதும் ஆளுங்கட்சி மேலே தான் பரப்புனாங்க. இது தான் எனக்கு வருத்தமா இருக்கு.
அருமையம் மாள், ஏமூர்: விஜய் அரசிய லில் தொடர்ந்து நிற்பாரா என்பது தெரிய வில்லை. ஏன்னா, 41 பேர் இறந்ததுக்கே வெளியில் வந்து இன்னும் பதில் சொல்லவில்லை. உள்ளுக்குள் இருந்துகொண்டே போன் பேசுறார், அறிக்கை விடுகிறார். உயிரிழப்பு நடந்த அன்னைக்கு இவர் ஸ்பாட்டில் இருந்து ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயிருந் தாக்கூட எல்லார் மனசும் ஆறி யிருக்கும். அதை அவர் செய்யா தது எங்களுக்கு வருத்தமாயிருக்கு.
வழக்கறிஞர் பாவண்ணன், திருச்சி டவுண்: கரூர் துயர சம்ப வத்துக்கு, விஜய்யின் அலட்சியம் தான் காரணம். நடிகர் விஜய், தங்களுடைய பொறுப்பாளர் களுக்கு அரசியல் களப்பயிற்சியை வழங்கி, அதன்பின் மக்களை சந்திக்க சென்றிருக்க வேண்டும். விஜய் தாமதமாக வந்ததே இச்சம்பவத்துக்கு காரணமென்று காவல்துறை ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள் ளது. அப்படியானால் விஜய்யை முதல் குற்றவாளி யாகச் சேர்க்காதது ஏன்? விபத்து நடந்தபோது அந்த இடத்திலிருந்து விஜய் வெளியேறியது பொறுப்பற்ற கோழைத்தனம் என்றால், தமிழக அரசு இதுவரை விஜய்மீது வழக்குப்பதிவு செய்யாததும் பொறுப்பற்ற கோழைத்தனமே!
டி.கார்த்திகா, வழக்கறிஞர், மணப்பாறை: இனிமே இது மாதிரி நடக்காம இருக்கணும்னா இதுமாதிரி கூட்டங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கிட்டு போகாம தவிர்க்கணும். அதே மாதிரி பெண்கள் ரொம்ப கவனமா கூட்டத்துக்குள்ள சிக்காமல் தள்ளியே இருந்துக்கணும். தனிமனிதர் பாதுகாப்புல கவனமா இருந்துக்கிட்டா இதுமாதிரி சம்பவம் நடக்காது.
தாமஸ், பொன்மலை: கரூரில் 41 பேர் பலியான சம் பவத்தில் நீதிமன்ற வழிகாட்டு தலில் விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். இனி இதுபோன்ற துயரம் நடக்காமலிருக்க, எதிர்காலத்தில் பொதுவெளியில் பொதுமக்களை சந்திக்க வரும் அரசியல் கட்சி பிரபலங்கள், அவர்களை காண வரும் பொதுமக்களின் அடிப்படைத்தேவைகள், பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை கொண்டுவர வேண்டும்.
மெர்ஸி, கருமண்டபம். திருச்சி: பெரிய அளவு மக்கள் கூட்டங்களை சரியான முறையில் அனுபவத்துடன் வழிநடத்தத் தவறியதே இதற்கு முழுக்காரணம். இது நமக்கு தினசரி செய்தித் தாளின் செய்தி, ஆனால் உயிரிழந் தோரின் குடும்பத்திற்கு பேரிழப்பு. இதற்கு அரசையோ, கட்சிகளையோ காரணமாக்காமல், கூட்ட மேலாண்மை (ஸ்ரீழ்ர்ஜ்க் ம்ஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) சரிவர செய்ய வேண்டும். ஏற்கனவே பிரயாக்ராஜ் கும்பமேளாவிலும் இதேபோல் கூட்ட நெரிசலில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டது. எனவே சரியான கூட்ட மேலாண்மைக்கு வழிசெய்ய வேண்டும்.
ஜெயபால் -த.வெ.க. நிர்வாகி, சென்னை -முடிச்சூர் : கரூர் சம்பவம் கண்டிக்கத்தக்கது. நான் 25 வருடங்களாக ரசிகராக வும், தொண்டனாகவும் பயணம் செய்தும் தற்போது வந்தவர் களுக்கு பணத்தால் பதவிகள் வழங்கப்பட்டுவிட்டது, எங்கள் உழைப்பை மதிக்காததால் விலகிவிட்டேன். என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்கள் 41 பேரின் உயிரை குடித்துள் ளது பற்றி கவலைப்படாமல் கட்சி அலுவலகத்தில் அதே பிரச்சார வாகனத்துக்கு ஆயுத பூஜை நடத்தி குதூகலமாக இருக்கிறார் விஜய்!
ராஜேஷ், மேடவாக்கம்: நடிகர்களை நம்பி காலம்காலமாக மக்கள் ஏமாந்து உயிரை விடுவது தொடர்கதையாகவே உள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு முதல் காரணம் விஜயை நம்பி வந்த ரசிகர் கள்தான். சினிமாவுக்கு சென்றால் பணம் கொடுத்துத்தான் படம் பார்க்கிறோம். இது ஒரு பொழுது போக்கு. நடிகன் என்பவன் கடவுள் கிடையாது, கணவனும் கிடையாது. சில பெண்களின் தரமற்ற பேட்டி களை பார்த்தேன். அதற்கான விடை களையும் அதே சமூக வலைத் தளத்தில் பரவிய வீடி யோவில் பார்த்தேன். ஆபத்து என்றபோது நடிகன் வந்து நின் றானா? கணவன் வந்து நின்றானா? மக்கள் உணர வேண்டும்!
கேசவன் -தே.மு.தி.க. நிர் வாகி, பம்மல் -சென்னை: விஜய்க்கு சினிமா வாழ்க்கையை கொடுத்தது விஜயகாந்த் தான். அதே விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அல்லது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது நடிகர் விஜய்க்கு அவரை தெரியவில்லை. தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்தபின், என் அண்ணன், என் அண்ணன் என்று அரசியல் பிழைப்பிற்காக அவர் பெயரை பயன்படுத்துகிறார். கேப்டன் குறைந்த சம்பளம் வாங்கிய காலத்திலும் ராஜா பகதூர் தெருவில் தினமும் கறிச்சோறு அளித்து பலரின் பசி தீர்த்துள்ளார். படப்பிடிப்பின்போது நாயகனுக்கு என்ன உணவோ அதைத்தான் கடைமட்டத் தொழிலாளிக்கும் அளிக்க வேண்டும் என்ற சமபந்தியை சினிமாத்துறையில் கொண்டு வந்தவர் விஜயகாந்த். ஒரு படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் சுமார் 200 கோடிகள் என்று கூறப்படுகிறது, ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ பசி என்று வருபவர்களுக்கோ, ரசிகர்களுக்கோ என்ன செய்து விட்டார்? அவரைப் பார்க்க வந்தவர்கள் உயிரிழந்த போதும் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இதிலிருந்தே அவர் ஒரு சுயநலவாதி என்பதை அறிய வேண்டும்!
விஸ்வநாதன், ஆலந்தூர்: நான் விஜய் ரசிகன்தான். அவர் கட்சி தொடங்கியதிலிருந்து அவ ரின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நடிகனை நடிகனாகப் பார்க்க வேண்டும். தலைவனாகப் பார்த்தால் இதுபோன்ற துயர சம்பவம் தான் அரங்கேறும்.
குப்பம்மாள், மதுராந்தகம்: விஜய் கூட்டத்துக்கு அடிக்கடி கூப்பிடுவாங்க, நாங்களும் போவோம். ஆனா திரும்பி வரப் போ நாங்க பஸ்ல ஏறிட்டோ மான்னு கூட பார்க்கமாட்டாங்க. சோறு தண்ணி சரியா கிடைக் காது. இதேதான் கரூர்ல நடந்திருக்கு.
கெஜா, பல்லாவரம்: இப்போது இருக்கிற விஜய் ரசிகர் போல ஒரு காலத்துல, ரஜினி கட்சி ஆரம்பிப்பாரு, ஆரம்பிப் பாருன்னு பல லட்ச ரூபாய் செலவு பண்ணி போஸ்டர் ஒட்டியிருக்கோம், பேனர் வச்சிருக்கோம். கடைசி வரைக்கும் அவர் கட்சி ஆரம்பிக்கவே இல்ல, விஜய் ஆரம்பிச்சாரு, ஆரம்பமே 41 உயிர் போச்சு. நடிகர்கள நம்பிப்போனா நம்மதான் நாசமா போவோம்.
உமா, கேளம்பாக்கம்: விஜய் கூட்டத்தில் நடந்த கொடூரம் கண்டிக்கத்தக்கது இந்த பெண்களுக்கு புருஷனவிட குழந்தைகளைவிட விஜய்தான் முக்கியமா? இப்படி கூட்டத்தில் போய் பிஞ்சுக் குழந்தைகளோட உயிர் பிரிய தாயே காரணமா இருக்கக்கூடாது. விஜய்ய சொல்லி குற்றமில்லை.
கோவிந்தராஜன், குரோம்பேட்டை: இந்த விஷயத்துல நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் காலதாமதம் செய்யாமல் மக்களோட பாது காப்பில் அக்கறை காட்டி யிருக்கணும், குடிநீர், கழிவறை வசதிகூட ஏற்படுத்தித்தரல. பிறகேன் அவ்ளோ நேரம் மக்களை காத்திருக்கவைக்கணும்? அதேபோல், மக்களும் காலதாமதமாவதை புரிஞ்சு செயல்பட்டிருக்கணும்.
ராகுல், மயிலாடுதுறை: கரூரில் நடந்த உயிர்ப்பலி, திருவாரூரில் நடக்க வேண்டியது. காலையிலிருந்து, விஜய் வந்த மாலை ஆறு மணிவரை அங்கு நடந்த அட்டூழியங்களை நேரடியாகவே பார்த்தோம். ஒரு நடிகரை நடிகராகப் பார்க்காத சமூகமாக தமிழ்ச் சமுகம் மாறிப்போனதைக் கண்டு வேதனையாக இருக்கிறது. எத்தனையோ வளர்ச்சிகளை தமிழ்நாடு கண்டுவிட்டது. மருத்துவத்துறையில், கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதலிடம் நாம்தான். இதே தமிழ்நாட்டில்தான் விஜய் மாதிரியான சுயநலவாதிகளையும் வளர்த்துவிட்டு பெருமை பேசுகிறோம். உச்ச நடிகர் என பீத்திக்கொள்ளும் விஜய், தனது ரசிகர்களை எப்படி கட்டுப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டுமென்று தெரிந்து வைத்திருக்கவில்லை. நெறிப்படுத்தி னால், தன் பின்னால் வரமாட்டார்கள் என்ற அச்சமாகவும் இருக்கலாம். இதுதான் கரூர் துயரத்துக்கு காரணம். வன்முறையை கிளப்பிவிட்டு அதில் அரசியல் செய்யத் துடிக்கும் பி.ஜே.பி.யின் இரண்டாம்கட்ட அடையாளம் தான் நடிகர் விஜய். அவரெல்லாம் வளர்ந்துவிட்டால் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.
பாக்யராஜ், கொல்லு மாங்குடி: நான் விஜய் ரசிகர் தான். அரசியல் வேறு சினிமா வேறு என்பதை அறியாமல் கூடியதால்தான் இவ்வளவு உயிரிழப்பு. சினிமாவில் ஒரு கிராமத்தையே காப்பாற்றும் சுறா நடிகர், தனது ரசிகர்கள் தன் கண் முன்னாடியே கொத்துக்கொத்தாக மடிந்து போனதை கண்டும் காணாததுபோல அங்கிருந்து அவசரஅவசரமாகத் தப்பிக்கிறாரென்றால் எவ்வளவு அரக்ககுணம் கொண்டவராக இருப்பார். இவரெல்லாம் அரசியலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் மன்னராட்சிதான் நடக்கும். இவரது கூட்டத்திற்கு அவரது பெற்றோர்களோ, மகனோ, மனைவியோ வந்திருந்து இப்படி நடந்திருந்தால், இப்படி அவர் அவசர அவசரமா சென்னைக்கு திருட்டுத்தனமாக ஓடியிருப் பாரா? நிம்மதியா வீட்டில் தூங்கி யிருப்பாரா? இவர் ரொம்ப ஆபத்தானவர். இனி இவருக்கு எதிராக நிற்போம்.
விஜியேந்திரன், கும்ப கோணம்: விஜயகாந்த்தின் திரைத்துறை தம்பியாகக் காட்டிக்கொண்ட விஜய் அரசிய லுக்கு வந்ததும், அரசியலில் விஜயகாந்தின் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக வருவார் என ஆர்வமாக இருந்தோம். ஆனால் லட்சக் கணக்கானவர்களின் கனவுகளை அடித்து நொறுக்கி, அரசியலுக்கே தற்போது லாயக்கற்றவன் எனக் காட்டிவிட்டார். ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்து பல வருடங்கள் கழித்து செய்யக்கூடிய மறைமுக அரசியலை, அரசியலுக்கு வரும்போதே செய்கிறார். தன்னை காத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புக்களோடு நிழல் உறவு வைத்துக் கொண்டிருந்ததை கரூர் சம்பவத்துக்கு பிறகான அவரது அரசியல் காட்டிவிட்டது. நாமக் கல்லிலிருந்து பல மணிநேரமாக கரூருக்கு நீந்திவந்தவர், எப்படி கரூர் துயரத்துக்குப்பின் அரைமணி நேரத்தில் திருச்சிக்கு போனார்? வளர்த்த தந்தையையே வெறுத்தவருக்கு அவரது ரசிகர்கள் எம்மாத்திரம்?
கன்னையன், நாகப்பட்டி னம்: விஜய்யை வைத்து பி.ஜே.பி. அரசியல் செய்கிறது என்பதுதான் உண்மை. நாங்க எம்.ஜி.ஆர். காலத்து ஆளுங்க. ஜெயலலிதா மறைந்த பிறகு பி.ஜே.பி. தமிழ் நாட்டுல முளைக்கத் தொடங் கியது. எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் ஊற்றி வளர்த்தார், அதற்கு விஜய்யை உரமாக மாத்து றாங்க. ஏற்கெனவே காலூன்றிய பா.ஜ.க., அ.தி.மு.க. பிளவை வைத்து ஓரளவு வாக்குவங்கியை உயர்த்திடுச்சி. இப்ப விஜய்யை களத்தில் இறக்கிவிட்டுட்டாங்க. அவருக்கு வர்ற கூட்டம் எந்த கொள்கையும், நோக்கமும் இல்லாத கூட்டம். விஜய்யிடம் இருக்குற அந்த கூட்டத்தை அப்படியே பா.ஜ.க. விழுங்கத் திட்டமிட்டு களமாடுது. விஜய் சொன்னா பா.ஜ.க.வையும் ஆதரிக்கும் கூட்டம்தான் இவரோட ரசிகக்கூட்டம். எங்க அனுபவத்தில் சொல்லுறேன், விரைவில் விஜய் பா.ஜ.க.வில் தன் கட்சியை இணைத்து அந்த கட்சியின் தலைவராக வருவார் பாருங்க!
தமிழகம் முழுவதும் நாம் சந்தித்த மக்கள் அனைவரும் கரூர் சம்பவத்தால் விஜய் மீதும், த.வெ.க. கட்சி நிர்வாகிகள் மீதும் கடுங்கோபத்தில் உள்ளனர் என்பதை நம்மால் நேரில் காண முடிந்தது.