தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த மாதத்தில் டெல்டா மாவட்டங்களை வலம்வந்த எடப்பாடியைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் செப் 13-ஆம் தேதி தன்னுடைய பிரச் சாரத்தை திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார்.
சென்னையிலிருந்து பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்ட பிரச்சாரப் பேருந்து சாலைமார்க்க மாக வந்த நிலையில், ஒவ்வொரு சுங்கச்சாவடி யிலும் விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு அவருடைய தொண்டர்கள் வரவேற்பளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து விஜய் வி.ஐ.பி. அறையைவிட்டு வெளியே வந்து கையசைத்தநிலையில், அவரைப் பார்க்கக்கூடி யிருந்த 5000-க்கும் அதிகமான தொண்டர்கள் அந்த பேருந்து இருந்த இடத்திற்கு விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளையும் தகர்த்துவிட்டு வர, அந்த பகுதியே அலங்கோலமானது. திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு காலை 10.30 முதல் 11 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதியளித்திருந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிவரை 13 கி.மீ. தூரம் போக்கு வரத்து நெரிசலால் பாதிப்படையச் செய்தனர்.
இந்த 13 கிலோமீட்டரைக் கடந்துவர சுமார் 3 மணி நேரம் ஆன நிலையில், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரச்சாரப் பேருந்து டி.வி.எஸ். டோல்கேட் வழியாக மாநகர பகுதிக்குள் தலைமை தபால் நிலையம் வந்து, மேலப்புதூர் வழியாக பாலக்கரை, மரக்கடையை வந்துசேர்ந்தது.
திருச்சிவாசிகள் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்களை த.வெ.க.வினர் வேனில் அழைத்துவந்தனர். அதே போல் திருச்சி மா
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த மாதத்தில் டெல்டா மாவட்டங்களை வலம்வந்த எடப்பாடியைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் செப் 13-ஆம் தேதி தன்னுடைய பிரச் சாரத்தை திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார்.
சென்னையிலிருந்து பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்ட பிரச்சாரப் பேருந்து சாலைமார்க்க மாக வந்த நிலையில், ஒவ்வொரு சுங்கச்சாவடி யிலும் விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு அவருடைய தொண்டர்கள் வரவேற்பளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து விஜய் வி.ஐ.பி. அறையைவிட்டு வெளியே வந்து கையசைத்தநிலையில், அவரைப் பார்க்கக்கூடி யிருந்த 5000-க்கும் அதிகமான தொண்டர்கள் அந்த பேருந்து இருந்த இடத்திற்கு விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளையும் தகர்த்துவிட்டு வர, அந்த பகுதியே அலங்கோலமானது. திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு காலை 10.30 முதல் 11 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதியளித்திருந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிவரை 13 கி.மீ. தூரம் போக்கு வரத்து நெரிசலால் பாதிப்படையச் செய்தனர்.
இந்த 13 கிலோமீட்டரைக் கடந்துவர சுமார் 3 மணி நேரம் ஆன நிலையில், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரச்சாரப் பேருந்து டி.வி.எஸ். டோல்கேட் வழியாக மாநகர பகுதிக்குள் தலைமை தபால் நிலையம் வந்து, மேலப்புதூர் வழியாக பாலக்கரை, மரக்கடையை வந்துசேர்ந்தது.
திருச்சிவாசிகள் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்களை த.வெ.க.வினர் வேனில் அழைத்துவந்தனர். அதே போல் திருச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் விஜய்யைப் பார்ப்பதற்காக பல மணிநேரம் காத்திருந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். அவர் கிளம்பியபின்பு சாலைகளில் நூற்றுக்கணக் கான காலணிகள் அறுந்துகிடந்ததையும் காண முடிந்தது. இதேநேரம், திருச்சி பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததோடு, பல மணி நேரம் சாலையில் காத்திருக்கவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர். வழிநெடுகிலும் வைக்கப்பட்ட பேனர்கள்மீது ஆபத்தை உணராமல் ஏறிநின்று அவரது தொண்டர்கள் வரவேற்பளித் தனர். குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாததால், அனுமதிக்கப்பட்ட நேரத் தைக் கடந்து பரப்புரை செய்ததாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி விமான நிலையப் பகுதியில் பொது மக்களோடு, முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம் பரத்தின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. திருச்சி விமான நிலையத்தி லிருந்து திருச்சி மாவட்ட எல்லையான கள்ளக்குடி வரை நடந்த விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரங்களில் விஜய்யின் பிரச்சாரம் சூடு பிடிக்குமானால் திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 6 முதல் 7 சதவீத வாக்குகள் கிடைக்கலாம்!
திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜய், "அறிஞர் அண்ணா, முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும்போது, தனது பிரச்சாரத்தை திருச்சியிலிருந்துதான் தொடங்கினார். அது 1956 காலகட்டம். அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பிரச்சாரத்தை திருச்சியிலிருந்து தொடங்கினார்.
அந்தக் காலத்தில் போருக்குப் போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அது போல 2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களைச் சந்திக்கவந்துள்ளேன்.
மேலேயும் கீழேயும் மிக மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் ஃபாசிச பா.ஜ.க.வையும் பாய்சன் தி.மு.க.வையும் கேள்விகேட்க வந்துள்ளேன்.
பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது. இதை தமிழக வெற்றிக்கழகம் ஏற்காது. எப்போதும் எதிர்க்கும். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் சதி செய்கிறது. நமது இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காக மிரட்டிப் பார்க்கிறது.
அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கீழடி ஆய்வு முடிவுகளை மாற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்து, தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அழிக்கப் பார்க்கிறது. இதை தமிழகம் பார்த் துக்கொண்டு சும்மா இருக்காது. மற்ற மாநிலங் களுக்கு கொடுப்பதுபோல தமிழ்நாட்டுக்குப் பேரிடர் காலங்களில்கூட ஒழுங்காக நிதி ஒதுக் காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கின்றது
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர்கள் அழிக்கப்படுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு நேரும் துன்பங்களை கல்நெஞ்சத் துடன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு செய்யும் ஓரவஞ்சனைகளில் சில சாம்பிள்கள்தான். இப்படி ஒன்றிய பா.ஜ.க.வின் மோடி அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால் இங்கிருக்கும் தி.மு.க. அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறது.
கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த 505 தேர்தல் வாக் குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற் றாமலே நிறைவேற்றிவிட்ட தாக மனசாட்சி இல்லாமல் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்வோம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... கல்விக்கடன ரத்து செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?... மின்சாரக் கட்டணத்த மாசாமாசம் கட்டுற மாதிரி மாத்துவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?...
தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்ல 75% தமிழர்களுக்கேன்னு சொன்னீங்களே செஞ் சீங்களா?...''’என அடுக்கிக்கொண்டே போனார்.
"தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய் வது துரோகம் என்றால் ஸ்டாலின் கவர்மெண்ட் நம் மக்களுக்கு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே தப்புதான். இரண்டுமே ஏமாற்று வேலைதான்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்ச நல்லூர், திருவெறும்பூர், துறையூர், முசிறி, லால்குடி என மொத்தம் ஒன்பது தொகுதிகள் இருக்கின்றன. இங்கு தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்னவெல் லாம் இருக்கின்றன எனத் தெரிந்துகொண்டுதான் வந்திருக்கிறேன். மணப்பாறை, வையம்பட்டி, தொட்டியம் பகுதியில எல்லாம் குடிநீரே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கு இந்த தி.மு.க கவர்மெண்ட் செய்தது என்னவென் றால் ஜீரோதான். சிறுகனூர் மற்றும் இண்டஸ்ட் ரீஸ் இருக்கும் பகுதிகளில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது. மக்கள் எவ்வள வோ புகார் கொடுத்தும் ஒரு பயனுமில்லை.
மணல் மாஃபியா கூட்டம் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இதில் பெரும்பங்கு தி.மு.க ஆட்களுக்கு இருக்கிறது. துறையூரைச் சேர்ந்த தி.மு.க. நிர் வாகி செம்மண் விவகாரத்தில் கைதானதே மோசடி நடப்பதற்கான ஆதாரம்தானே?. இந்த மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தது எல்லோருக்கும் தெரியும். நடப் பதே தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந் தமான மருத்துவமனையில்தான். இந்த மாவட்டத் தில் இரண்டு மந்திரிகள் இருந்தும் இந்த மாவட்டத் துக்கு எதாவது பிரயோஜனம் இருக்கிறதா?. இவங் களுக்கு வருகிற தேர்தலில் ஓட்டுப் போடுவீர்களா?'' என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
திருச்சியிலிருந்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அரியலூர் சென்றார்.
"அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இங்கு செய்யப்படவில்லையே, ஏன்?'' என்று கேள்வியெழுப்பினார் விஜய்.
தனது உரையை நிறைவுசெய்யும் முன்... “"சரி நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்? என்ப தைச் சொல்கிறேன் இப்போது. ‘தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதுமே நம் த.வெ.க.வின் லட்சியம்! நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை ரொம்ப தெளிவாகச் சொல்லுவோம். அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ, அதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்போம். அதிலும், பெண்களின் பாதுகாப்பு, சட்டம் -ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் சமரசம் செய்யவே மாட்டோம். ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம்! குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்! ஊழல் இல்லாத தமிழகம்! உண்மையான மக்க ளாட்சி; மனசாட்சியுள்ள மக்களாட்சி' என்றார்.
அரியலூரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி சாலைவழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சென்றார். அங்கு நள்ளிரவு 2 மணியைக் கடந்ததால் பிரச்சாரம் செய்யாமல் கையசைத்துவிட்டு கடந்து சென்றார்.