தமிழக அரசியலில் தற்போது அனைவரா லும் உற்றுப்பார்க்கப் படும் கட்சியாக த.வெ.க. இருந்து வருகிறது. இதனால் காரணத்தால், தேர்தலுக்கு முன்பாகவே விஜய், ஊட கங்களிலும், மக்களின் மத்தியிலும் நேரடியாகப் பேசத் தொடங்கினால்... யார், யாருடன் கூட்டணி என்பதில் தொடங்கி, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விஜய் தரக் கூடிய பதில்களைவைத்து விஜய்யின் அரசியலுக்கே பாதகமாக மாறக் கூடிய வாய்ப்புள்ளதால், தேர்தல் வரும்வரை அறிக்கை அரசியலை மட்டுமே முன்னெடுப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
அறிக்கை அரசியல் மட்டுமே நடத்துவது ஏன் என்று மக்களும் மற்ற கட்சியினரும் கேள்வி யெழுப்பினால், விஜய் மாதிரியான பவர்ஃபுல் ஸ்டார், மக்கள் மத்தியில் வந்தால் அதிகப்படியான கூட்டம் கூடி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் படக்கூடும். அப்படி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசும் எந்த முன்னேற்பாடும் செய்ய வில்லை. அதனால்தான் மக்கள் மத்தியில் வரவில்லையென்று சொல்லிவருகின்றனர்.
இன்னொருபுறம், கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் புஸ்ஸி ஆனந்த் கையிலிருப்பதால், கட்சிப்பணியில் ஈடுபடுவதில் முக் கிய பொறுப்பாளர்களுக்கிடையே சிக்கல்கள் ஏற்படுகிறதாம். அது குறித்தெல்லாம் புகாரளித்தால் புஸ்ஸி ஆனந்த் காது கொடுத்துக் கேட்பதில்லையாம். சரி, தலைவரையே நேரில் சந்தித்துச் சொல்லலாமென்றால் அதற்கும் வழியில்லையாம். அதனால் மற்ற கட்சியிலிருந்து வந்த பலரும், மரியாதை இல்லாத இடத்தில் நமக்கென்ன வேலையென்று வெளியேறிவருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தலும் நெருங்கிவருவதால், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி அவ்வப்போது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்துவந்தாலும், அது அவ்வளவாக எடுபடவில்லையாம்.
தமிழக அரசியலில் தற்போது அனைவரா லும் உற்றுப்பார்க்கப் படும் கட்சியாக த.வெ.க. இருந்து வருகிறது. இதனால் காரணத்தால், தேர்தலுக்கு முன்பாகவே விஜய், ஊட கங்களிலும், மக்களின் மத்தியிலும் நேரடியாகப் பேசத் தொடங்கினால்... யார், யாருடன் கூட்டணி என்பதில் தொடங்கி, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விஜய் தரக் கூடிய பதில்களைவைத்து விஜய்யின் அரசியலுக்கே பாதகமாக மாறக் கூடிய வாய்ப்புள்ளதால், தேர்தல் வரும்வரை அறிக்கை அரசியலை மட்டுமே முன்னெடுப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
அறிக்கை அரசியல் மட்டுமே நடத்துவது ஏன் என்று மக்களும் மற்ற கட்சியினரும் கேள்வி யெழுப்பினால், விஜய் மாதிரியான பவர்ஃபுல் ஸ்டார், மக்கள் மத்தியில் வந்தால் அதிகப்படியான கூட்டம் கூடி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் படக்கூடும். அப்படி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசும் எந்த முன்னேற்பாடும் செய்ய வில்லை. அதனால்தான் மக்கள் மத்தியில் வரவில்லையென்று சொல்லிவருகின்றனர்.
இன்னொருபுறம், கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் புஸ்ஸி ஆனந்த் கையிலிருப்பதால், கட்சிப்பணியில் ஈடுபடுவதில் முக் கிய பொறுப்பாளர்களுக்கிடையே சிக்கல்கள் ஏற்படுகிறதாம். அது குறித்தெல்லாம் புகாரளித்தால் புஸ்ஸி ஆனந்த் காது கொடுத்துக் கேட்பதில்லையாம். சரி, தலைவரையே நேரில் சந்தித்துச் சொல்லலாமென்றால் அதற்கும் வழியில்லையாம். அதனால் மற்ற கட்சியிலிருந்து வந்த பலரும், மரியாதை இல்லாத இடத்தில் நமக்கென்ன வேலையென்று வெளியேறிவருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தலும் நெருங்கிவருவதால், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி அவ்வப்போது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்துவந்தாலும், அது அவ்வளவாக எடுபடவில்லையாம். அதனால் விஜய் மக்களைச் சந்திக்கலாமென்று முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தியிருக்கிறார். மக்களைச் சந்திப்பதென்றால், பா.ஜ.க. மா.த.வுக்கு கொடுப்பதுபோல் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு விஜய்க்கும் தரப்பட வேண்டு மென்பதை உறுதிசெய்ய ஆளுநரைச் சந்தித்து முறை யிடலாமா என்று ஜான் ஆரோக்கியசாமி விஜய்யுடன் ஆலோசித்து, அதற்கான செயலில் இறங்கியுள்ளார். அப்படி ஆளுநரை சந்திப்பதற்கு ஆளுநரின் கௌரவ ஊடக ஆலோசகரான திருஞானசம்பந்தம் மூலமாகப் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
இந்த திருஞானசம்பந்தம் பா.ஜ.க. மா.த.வின் விசுவாசி என்பது ஊரறிந்த ரகசியமாக இருப்பதால், விஜய் தரப்பு ஆளுநரை சந்திக்கத் தேதி கேட்டுள்ள செய்தியை பா.ஜ.க. மா.த.வுக்கு தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதுமே, விஜய் - ஆளுநர் சந்திப்பு, தமிழக அரசைப் பயமுறுத்தும் வகையில் இருக்கும். எனவே அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுங்கள். ஆனால் அவர்கள் கேட்பது போல் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பை வழங்க ஆளுநர் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆகையால் மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் விவகாரம் தொடர்பாகவும் மனு கொடுப்பதற்காக ஆளுநரை சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டு, அதன்பிறகு அவருக்குரிய பாதுகாப்பு குறித்து ஆளுநரிடம் பேசிக்கொள் ளட்டும் என்று பா.ஜ.க. மா.த. தான் திருஞானசம்பந்தத்துக்கு ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி திருஞானசம்பந்தமும் சொல்ல, அதே பாணியில் ஜான் ஆரோக்கியமும், விஜய்யும் ஆளுநருடன் சந்திப்பு நிகழ்த்தினர். ஆனால் விஜய் நினைத்து வந்தது எதுவும் நடக்கவில்லையாம். 10 நிமிடங்கள்கூட அவரோடு பேச அனுமதிக்கப்படாமல், போன வேகத்தில் திரும்பிவிட்டார்களாம். காரணம் என்னவென்று பார்த்தால், ஆளுநரை சந்தித்த விஜய், மனுவை அவரிடம் வழங்கிய வுடனே சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் பாதுகாப்பை தனக்கு வழங்குவது குறித்து பேசத் தொடங்கியிருக்கிறார். உடனே ஆளுநர், இது குறித்தெல்லாம் பேச வாய்ப்பில்லை எனக்கூறி உடனே திருப்பி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் விஜய் நினைத்தது நடக்காத விரக்தியில் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். விஜய் சென்றபிறகு அன்றிரவு ஏழு மணிக்கு பா.ஜ.க. மா.த. ரகசியமாக ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்பிறகு தான் ஜனவரி 11ஆம் தேதி முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக ஆளுநர் சென் றுள்ளார். அதை முடித்துவிட்டு மற்றொரு என்.ஜி.ஓ. நிகழ்ச் சிக்கும் சென்றுள்ளார். இந்த முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் உரிமையாளர், எடப்பாடி யின் நெருங்கிய நண்பரான அ.தி.மு.க. இளங்கோவன். இவர் ஏற்கெனவே கூட்டுறவு சங்க சேர்மனாகவும் இருந்துள்ளார். அப்போதுதான் மோடி ஆட்சியில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென அறிவிக்கப்பட்டன. அந்த நேரத் தில், செல்லாத ரூபாய் நோட்டுக்களை சேலம் கூட்டுறவு சங்கத்தில் மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை யில் சிக்கினார். அதேபோல 2012-22 வரை எடப்பாடி வகித்து வந்த கட்சிப் பதவி இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு எடப்பாடிக்கு விசுவாசியாகவும், பினாமியாக வும் செயல்படுபவர்தான் இந்த இளங்கோ. சென்ற வாரம்கூட இளங்கோவின் சம்பந்தி மற்றும் அவர் தொடர்பான இடங்களில் ஈ.டி. சோதனை நடந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு தான் முசிறிக்கு ஆளுநர் சென்றுள் ளார். ஒரு மாநிலத்தின் ஆளுனர், ஈ.டி. விசாரணைக்குள்ளான ஒருவரின் கல்லூரிக்கு அடுத்த நாளே சிறப்பு அழைப் பாளராகப் போகிறார் என்றால் எந்தளவிற்கு அ.தி.மு.க. வுக்கும் ஆளுநருக்கும் மறைமுகக் கூட்டணி இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது.
மேலும் இந்த விவகாரத்தால் ஆளுநர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, அவருடைய நேர்மை யிலும் சந்தேகம் எழுகின்றது. இந்த கல்லூரி விழாவில் ஆளுநர் கலந்துகொண்ட விஷயம் கேள்விப் பட்டதுமே மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அதுகுறித்து விசாரணை செய்துள்ளார் களாம். அதேவேளை நிர்மலா சீதாராமனும் இதுகுறித்து விசாரித்துள்ளாராம்.
எடப்பாடியின் பினாமியாக இருந்துவரும் இளங்கோவனின் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றது வெறுமனே பொங்கல் விழாவாக இல்லாமல், அவர்கள்மீது நடத்தப்படும் ஈ.டி. விசாரணை யை நிறுத்துவதற்கு ஆளுநர் மூலம் பேச்சுவார்த் தை நடத்துவதற்காகவும் தான் என்ற தகவல் கசிந்துள்ளது. இப்படி பா.ஜ.க. மா.த. சொல்லும் அனைத்தையும் கச்சிதமாக முடித்துக்கொடுத் துள்ளாராம் திருஞானசம்பந்தம். இவரை ஆளுநரின் கௌரவ ஊடக ஆலோசகர் பணிக்கு கொண்டுவந்தவரே பா.ஜ.க. மா.த. தான்.
ஆளுநருக்கு மாநில அரசால் நியமிக்கப் பட்ட மக்கள் தொடர்பு அதிகாரியான செல்வ ராஜ் மீது பொய்யான புகார்களைக் கட் டமைத்து அவரை அங்கி ருந்து நீக்கி, அவருடைய இடத்தை திருஞான சம்பந்தம் பிடித்துக் கொண்டு தன்னுடைய ஆட்டத்தை ஆட ஆரம் பித்தார். ஆளுநரின் எக்ஸ் தளத்தை பயன் படுத்தும் அதிகாரம் இல்லையென்றாலும், திருஞானசம்பந்தமே அனைத்தையும் செய்துவருகிறார். ஆளுநர் மாளிகை வாசலில் குண்டு போட்ட தகவலிலிருந்து இப்போதுவரை அனைத்தையும் பகிர்ந்துவருகிறார். இது சட்டத்திற்கு புறம்பானது. அதேபோல இவருக்கு சம்பளமே கிடையாது. ஆனால் ஆளுநரின் விருப்ப நிதியிலிருந்து இவருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது ஆளுநர் நேர் முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற விதி இருக்கும்நிலையில், எப்படி திருஞான சம்பந்தத்துக்கு மாதச்சம்பளம் கொடுக்கப் பட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பட்டயப் படிப் பிற்காகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட் டது. ஆனால் எந்த கல்லூரியில் படித்தார்? எந்தாண்டு படித்தார்? எவ்வளவு கல்லூரிக் கட்டணம் என்பதுகுறித்த கேள்விக்கெல்லாம் பதில்கள் தரப்படவில்லை. இந்த 10 லட்சம் முழுக்க மக்களின் வரிப்பணம். முறைகேடாக அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி பா.ஜ.க. ஆளுநரின் மூலமாக விஜய், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தித் தங்கள் கூட்டணிக் குள் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள். அதற் காகவே இத்தனையும் என்பது உறுதியாகிறது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், “"இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர். இவரே சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படுவது வேதனையாக உள்ளது. சமீபத்தில்கூட உச்சநீதிமன்றம் ஆளுநரை எச்சரித்துள்ளது. உடனடியாக ஆளுநரைத் திரும்பப்பெறக்கோரி தமிழக அரசு சட்டமன் றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும். இது, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநிலங்களில் ஆளுநரை வைத்து பா.ஜ.க. நடத்தும் நாடகத்திற்கு சம்மட்டியடியாக இருக்கும்''” என்றார்.
-சே