நடிகர் விஜய்யை கையாள்வது மிகக் கடினம். அதை அவரது குடும்ப உறுப்பினர் களும் நண்பர்களுமே சொல்வார்கள். சின்னக்குழந்தை முதல் வளர்த்த அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூட அவரை கையாள்வதில் மிகவும் திணறிப் போவார். நண்பர்கள் உட்பட அனைவரும் அவரிடம் நெருங்கிப் பழகுவதில் சிரமம் இருப்பதாகவே சொல்வார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் ரொம்பவே மாறிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இயல்பிலேயே அதிகம் பேசாத விஜய், ஜெகதீஸிடம்கூட அதிகமாக பேசவில்லையாம். விஜய் யிடம், ஆறுதல் கூற கரூருக்கு செல்ல வேண்டும் எனச் சொன்னவர்கள் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி எவ்வளவோ விளக்கமாக சொன்னபோதும் அதை ஏற்க மறுத்த விஜய், "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அவர்களை சென்னைக்கு அழைத்து வாருங்கள்' என கட்டளையிட்டார். கரூர் என்றாலே அலறும் அளவிற்கு இருந்த விஜய்யின் நிலை த.வெ.க.வினரை குழப்பம் அடைய வைத்துள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் உள்ள "ஃபோர் பாய்ண்ட்' ஐந்து நட்சத்திர’ ஹோட்டலில் பாதிக்கப் பட்ட மக்கள் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தபோது, அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் விஜய்க்கு அனுமதி கொடுக்க முதலில் மறுத்துவிட்டனர். ஏனென்றால் அடுத்த நாள் முதல்வர் ஸ்டா லின் தி.மு.க. நிர்வாகி களை சந்திக்கும் நிகழ்ச்சி அந்த ஹோட் டலில் ஏற்பாடாகி யிருந்தது. தி.மு.க. அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் த.வெ.க. நிர்வாகிகள் பேசித்தான் இந்த விழா நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். விழா விற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை, லைவ் கவரேஜ் இல்லை. விஜய்யின் தனிப்பட்ட சந்திப்பாகவே இந்த நிகழ்வு நடைபெற்றது. வந்த குடும்பத் தினரிடம் அவர்களது கோரிக்கை களை எழுத்துப்பூர்வமாக த.வெ.க. நிர்வாகிகள் எழுதி வாங்கிக் கொண்டார்கள். அவர்களுடன் பேசுவது, உணவருந்துவது என நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன.
.விஜய் கிரீன் சிக்னல் கொடுத்து அ.தி.மு.க கூட் டணிக்கு விஜய் வந்துவிட்டால், பவன் கல்யாண் ஆந்திராவில் துணை முதலமைச்சர் ஆனதுபோல விஜய் தமிழகத்தில் துணை முதலமைச்சர் ஆக வேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என எடப்பாடி தொடங்கி ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்கள் நீட்டி முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசுவதற்கெல்லாம் த.வெ.க. சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. விஜய், ராகுல்காந்தியிடம் பேசுகிறார். தமிழகத்திலும், கேரளாவிலும் விஜய்யுடன் ஒரு கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகிவருகிறது என்ற செய்திகளும் வெளிவந்தன. அதற்கும் த.வெ.க. தரப்பிலிருந்து எந்த பதிலும் சொல்லப்படவில்லை. பேசினால் விஜய்தான் பேச வேண்டும், அவர் பேசவே மாட்டார் என்கிற நிலையில் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடியின் மகன் மிதுன், விஜய்யுடன் நேரடியாகப் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. மிதுனிடம் விஜய் பேசியபிறகு எடப்பாடியிடம் ஆதவ் அர்ஜுனா பேசியதாக செய்திகள் வெளிவந்தன. “நாங்கள் தமிழகத்தில் 27 சதவிகித வாக்குகளை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து பெறும் வாக்குகளை விட எங்கள் வாக்கு பலம் அதிகம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு பாதி சட்டமன்றத் தொகுதிகள் தரவேண்டும்’என எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார் ஆதவ். “இவனுக்கு பாதி சீட்ட கொடுத்துட்டு அ.தி.மு.க. என்ன அந்தமான்லயா போட்டி போடும்” என ஆதவ் பேசியது பற்றி கட்சிக்காரர்களிடம் ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
அ.தி.மு.க. கூட்டணியை உறுதிசெய்ய ஆந்திர நடிகர் பவன்கல்யாணை தமிழகத்திற்கு அழைத்து வந்து விஜய்யிடம் பேசவைக்கலாம் என்கிற முயற்சி ஒன்று பா.ஜ.க. தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு மிக மிக அரியவரான விஜய்யை ராகுல்காந்தியிடம் சிங்கிள் காலில் பேசுமளவுக்கு தொடர்பு வைத்துள்ள திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மூலமாக, ‘தமிழகத்தில் விஜய் தனித்துப் போட்டி, கேரளாவில் கூட்டணி’ என ஒரு பார்முலா மூலமாக கேரளாவில் காங்கிரஸை வெற்றிபெற வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. கேரளாவில் சி.பி.எம்.மை தி.மு.க. ஆதரிக்கிறது. காங்கிரசுடன் விஜய் கட்சி கேரளாவில் கூட்டணி சேர வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
“இவை எதற்குமே விஜய் நேரடியாக பதில் சொல்லவில்லை. தமிழகம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், கமல் என பல சினிமா பிரபலங்களை அரசியல் அரங்கில் கண்டிருக்கிறது. அவர்களையெல்லாம் விட மிகப்பெரிய மர்மதேச பூச்சாண்டியாக இருக்கிறார் விஜய். இவரை சி.பி.ஐ. மூலமாக ஒன்றிய அரசு வழிக்கு கொண்டுவரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அ.தி.மு.க.”என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/vijay-eps-2025-10-27-16-19-59.jpg)