ராங்கால் : விஜய் குடும்ப அரசியல்! ஸ்டார் ஓட்டல் ரகசியம்! காங்கிரஸ் கசமுசா!

vijay

லோ தலைவரே... விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும் நடப்பது சண்டையா, கண்ணாமூச்சி ஆட்டமா?''

""நம்ம நக்கீரன் ஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கேப்பா... உனக்கு லேட்டஸ்ட்டா கிடைச்ச தகவல் என்ன?''

""தலைவரே... விதைச்சதை அறுவடை பண்ணணும்னு நினைக் கிறாரு விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் அண்ணா காலத்திலிருந்து அரசியலில் தொடர்புடையவர். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர் களிடம் பழக்கம் கொண்டவர். தன்னை அண்ணாவாகவும் தன் மகனை எம்.ஜி.ஆராகவும் மனதளவில் நிறுத்தி ஒரு அரசியல் பாதை அமைக்க ணும்ங்கிற அவர் ப்ளானை சில வருடங் களுக்கு முன்பே நக்கீரன் அம்பலப்படுத்தி யிருக்கு. விஜய்க்கு இப்போதைக்கு நேரடி அரசியலில் இறங்க ஆர்வமில்லை. அவரோட அப்பாவுக்கு இந்த நேரத்தை மிஸ் பண்ண விருப்பமில்லை. ஆனா, அவரோட கனவை கலைச்சிட்டாரு விஜய். அதனாலதான் சண்டை போல ஒரு கண்ணாமூச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு.''

vijay

""மனைவி, மகன் இருவருமே எஸ்.ஏ.சி.க்கு எதிரா இருக்காங்களே?''

""அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்னு பெயர் ரிஜிஸ்டர் செய்ததை விஜய் விரும்பலை. அதனால தன் அதிருப்தியை எஸ்.ஏ.சி.யிடம் வெளிப்படுத்தியதோடு, தன் பெயரிலான அமைப்புக்கும் தனக்கும் தொடர்பில்லைன்னு அறிவிச்சாரு. இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் ஷோபா பெயரும் பதிவாகி யிருந்ததால், அவரும் தனக்குத் தொடர்பில் லைன்னு அறிவிக்க, அதிர்ச்சியடைந்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயை சில விஷசக்திகள் இயக்குவதா சொன்னாரு. அவர் குறி வைத்தது, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தரப்பைத்தான்.''

""ரொம்ப நாளா அந்த பஞ்சாயத்து ஓடுதே?''

""மன்றத்தில் சூப்பர் பவரா இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இது விஜய்யின் அப்பாவுக்குப் பிடிக்கலை. அது இப்ப குடும்பச் சண்டை வரை வந்துவிட்டது. இந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை பண்ணை வீட்டுக்கு வரவைத்து ரகசிய ஆலோசனை நடத்த நினைத்தார் விஜய். அந்த ஏரியாவுக்கு மீடியா வந்து விட்டதால், விஜய் வரலை. மன்ற நிர்வாகிகளை காத்திருந்து பார்த் துட்டு நொந்து போய் திரும்பிட்டாங்க. அப்பாவின் மாஸ்டர் ப்ளானை எப்படி எதிர்கொள்வதுன்னு தீவீரமான யோசிக் கிறாராம் மாஸ்டர் பட வேலைகளின் கடைசிக் கட்டப் பணிகளில் இருக்கும் விஜய்.''

""வேல் யாத்திரை விவகாகரத்தில் பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் பலமாக் குட்டு வச்சிருக்கே.''’’

bjp

""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரையை அரசு தடுக்கக் கூடாதுன்னு அக்கட்சியின் மாநில செயலாளர் நாகராஜ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது விசாரணையில் இருக்கும் போதே, பா.ஜ.க. தரப்பு, தடை பத்தி யெல்லாம் கவலைப்படாமல், முருகன் கோயிலா, மாரியம

லோ தலைவரே... விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும் நடப்பது சண்டையா, கண்ணாமூச்சி ஆட்டமா?''

""நம்ம நக்கீரன் ஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கேப்பா... உனக்கு லேட்டஸ்ட்டா கிடைச்ச தகவல் என்ன?''

""தலைவரே... விதைச்சதை அறுவடை பண்ணணும்னு நினைக் கிறாரு விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் அண்ணா காலத்திலிருந்து அரசியலில் தொடர்புடையவர். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர் களிடம் பழக்கம் கொண்டவர். தன்னை அண்ணாவாகவும் தன் மகனை எம்.ஜி.ஆராகவும் மனதளவில் நிறுத்தி ஒரு அரசியல் பாதை அமைக்க ணும்ங்கிற அவர் ப்ளானை சில வருடங் களுக்கு முன்பே நக்கீரன் அம்பலப்படுத்தி யிருக்கு. விஜய்க்கு இப்போதைக்கு நேரடி அரசியலில் இறங்க ஆர்வமில்லை. அவரோட அப்பாவுக்கு இந்த நேரத்தை மிஸ் பண்ண விருப்பமில்லை. ஆனா, அவரோட கனவை கலைச்சிட்டாரு விஜய். அதனாலதான் சண்டை போல ஒரு கண்ணாமூச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு.''

vijay

""மனைவி, மகன் இருவருமே எஸ்.ஏ.சி.க்கு எதிரா இருக்காங்களே?''

""அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்னு பெயர் ரிஜிஸ்டர் செய்ததை விஜய் விரும்பலை. அதனால தன் அதிருப்தியை எஸ்.ஏ.சி.யிடம் வெளிப்படுத்தியதோடு, தன் பெயரிலான அமைப்புக்கும் தனக்கும் தொடர்பில்லைன்னு அறிவிச்சாரு. இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் ஷோபா பெயரும் பதிவாகி யிருந்ததால், அவரும் தனக்குத் தொடர்பில் லைன்னு அறிவிக்க, அதிர்ச்சியடைந்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயை சில விஷசக்திகள் இயக்குவதா சொன்னாரு. அவர் குறி வைத்தது, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தரப்பைத்தான்.''

""ரொம்ப நாளா அந்த பஞ்சாயத்து ஓடுதே?''

""மன்றத்தில் சூப்பர் பவரா இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இது விஜய்யின் அப்பாவுக்குப் பிடிக்கலை. அது இப்ப குடும்பச் சண்டை வரை வந்துவிட்டது. இந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை பண்ணை வீட்டுக்கு வரவைத்து ரகசிய ஆலோசனை நடத்த நினைத்தார் விஜய். அந்த ஏரியாவுக்கு மீடியா வந்து விட்டதால், விஜய் வரலை. மன்ற நிர்வாகிகளை காத்திருந்து பார்த் துட்டு நொந்து போய் திரும்பிட்டாங்க. அப்பாவின் மாஸ்டர் ப்ளானை எப்படி எதிர்கொள்வதுன்னு தீவீரமான யோசிக் கிறாராம் மாஸ்டர் பட வேலைகளின் கடைசிக் கட்டப் பணிகளில் இருக்கும் விஜய்.''

""வேல் யாத்திரை விவகாகரத்தில் பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் பலமாக் குட்டு வச்சிருக்கே.''’’

bjp

""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரையை அரசு தடுக்கக் கூடாதுன்னு அக்கட்சியின் மாநில செயலாளர் நாகராஜ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது விசாரணையில் இருக்கும் போதே, பா.ஜ.க. தரப்பு, தடை பத்தி யெல்லாம் கவலைப்படாமல், முருகன் கோயிலா, மாரியம்மன் கோயிலான்னுகூட கவனிக்காம, பல கோயில்களில் இருந்தும் வேல் யாத்திரையைத் தொடங்கி, போலீ ஸோடும் தள்ளுமுள்ளுவில் இறங்குச்சு. இந்த நிலையில் 10-ந் தேதி உயர்நீதி மன்ற நீதியரசர்கள் சத்யநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ப பா.ஜ.க. தரப்பு, கோயில் வழிபாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரொம்பவும் ஆதங்கப்பட்டுச்சு.''

""அதுக்கு நீதிமன்ற பெஞ்ச், அரசியல் தலைவர்களே, வேல்களை எடுத்துக்கிட்டு ஊர்வலத்தில் வர்றது சரியா? என்றும், அது ஆயுதத் தடைச் சட்டத்தை மீறுவதாகும் என்றும் எச்சரிக்கை செய்ததே?''

""ஆமாங்க தலைவரே, வெளியே நடப்பதையும் நீதிமன்ற அமர்வு கண்காணிப் பதைத் தெரிஞ்சிக்கிட்ட பா.ஜ.க. தரப்பு, அதெல்லாம் ஆயுத வேல் அல்ல. மரத்தாலும் அட்டைகளாலும் செய்யப்பட்ட வேல்கள்னு சொன்னது. நீதிமன்ற அமர்வோ, ஊரடங்குத் தடை அமலில் இருக்கும் போது எப்படி நீங்கள் வேல் யாத்திரையை நடத்த முடியும்னு கேட்டது. வழிபாடு தொடர் பான நிகழ்ச்சிகளில் கொரோனாக் கால விதி முறைகள் பின் பற்றப்படுதான்னு கவனிங்கன்னு அரசுக் கும் அறிவுறுத்துச்சு. வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 16 வரை தொடரும்னு சொல்லி பா.ஜ.க. தரப்புக்கும் நீதிமன்றம் செக் வச்சிருக்கு.''

""தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனைப் பற்றி, அக்கட்சியின் மேலிடத்தில் எடப்பாடி புகார் பண்ணியிருக்காராமே?''

""உண்மைதாங்க தலைவரே, வேல் யாத்திரைக்கு எதிரா கைது நடவடிக்கைகளை எடுத்தும் கூட, அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதால் சங்கடத்துக்கு ஆளாயிட்டார் எடப்பாடி. இதனால் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைத் தொடர்புகொண்ட அவர், "தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரையை நடத்துவது சரியானதல்ல. இதனால் மற்ற கட்சிகளும் இதேபோல் தடையை மீறினால் நாங்கள் என்ன செய்வது? பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் முருகன் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறார்'ன்னு புகார் செய்திருக்கிறார்.''

""’நட்டாவின் ரியாக்ஷன் என்னவாம்?''

""வேல் யாத்திரையை நீங்களும் தமிழகத்தின் மற்ற கட்சிகளும் அரசியலாகப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது. தீபாவளி கழித்து தமிழக நிலவரம் குறித்து பா.ஜ.க.வின் மேலிடக்குழு, பிரதமர் தலைமையில் கூடி ஆலோசிக்க இருக்குது. அதில் இதுபற்றியெல்லாம் விவாதிப்போம்ன்னு சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை, கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய நேரத்தில் அ.தி.மு.க.வோடு மோதல் போக்கை உண்டாக்குவதான்னு முருகன் மீதும் எரிச்ச லடைஞ்சிருக்குதாம்.''

""தி.மு.க.வில் கட்சி நிர்வாகத்துக்காக புது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கே?''

""திருவள்ளூர் மாவட்டத்தை மூன்றா பிரிச்சிருக்காங்க. இதில் ஒரு தலித் மா.செ. நியமிக்கப்படுவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா நடக்கலை. அதேநேரத்தில், தென்காசி மாவட்ட தி.மு.க. மாசெ.வாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த துரையை மா.செ.வாக்கி இருக்கிறது அறிவாலயம். மாவட்ட அளவில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லைன்னு சொல்லிவந்த தி.மு.கவில் உள்ள அந்த சமுதாயத்தினர் இதனை முக்கியமானதா பார்க்குறாங்க.''

""தி.மு.க. தரப்பு, தூத்துக்குடி சென்ற எடப்பாடிக்கு எதிரா, அவர்கள் பாணியிலேயே போஸ்டர் யுத்தத்தை நடத்தியிருக்குதே?’’

""ஆமாங்க தலைவரே, தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த எடப்பாடி, 11-ந் தேதி தூத்துக்குடி சென்றார். உடனே, அங்குள்ள தெற்கு மாவட்ட தி.மு.க.வினர், துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதையும், சாத்தான்குளக் காக்கிகளால் சித்திரவதைப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டி அப்போதெல்லாம் ஆறுதல்கூற வராத எடப்பாடியே, எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்?’- என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி பரபரப்பாக்கிட்டாங்க. இது எடப்பாடியின் கவனத்துக்குப் போக, போலீஸ் பாதுகாப்போடு இரவோடு இரவாக அ.தி.மு.க.வினர் அந்தப் போஸ்டர்களைக் கிழித்தனர். இருந்தும் புதுசு புதுசாய் முளைத்த போஸ்டர்கள் ஆளும் தரப்பைத் திகைக்க வச்சிருக்கு.''

""பாம.க-தி.மு.க பேச்சுவார்த்தைகள் இப்பவும் தொடர்வதா பேச்சு ஓடுதே?''

""பா.ம.க.வுடன் கைகோர்த்தால் வட மாவட்டங்களில் உறுதியான வெற்றியைப் பெறலாம்னு தி.மு.க.விலேயே இருக்கும் ஒரு தரப்பு நினைக்குது. அதனால் பா.ம.க.வைத் தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர அது ஆசைப்படுது. இதற்கு பா.ம.க. தரப்பிலும் க்ரீன் சிக்னல் தரப்பட்டிருக்குதாம். இந்த நிலையில்தான் பா.ம.க. ஆளும் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து வைக்கிது. வன்னிய சமூகத்தின் உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் மூலம் எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பெரும் போராட்டத்தை நடத்த பா.ம.க. திட்டமிடுது. இந்த நேரத்தில் சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குண்டுராவ், தி.மு.க. தலைமையிடம், போன தேர்தலில் ஒதுக்கிய சீட்டையாவது காங்கிரஸுக்குக் கொடுங்கள்ன்னு சொல்ல, 20-ல் இருந்து 25 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லைன்னு அறிவாலயம் தரப்பில் சொல்லிட்டாங்களாம். காங்கிரஸுக்கான சீட்டுக்கள் பா.மக.வுக்குப் போகலாம்ங்கிற டாக்கும் பரவலா அடிபடுது.''

""காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குண்டுராவின் விசிட் பற்றி தமிழக காங்கிரசிலேயே சூடா விவாதிக்கப்படுதே?''

rrr

""ஆமாங்க தலைவரே, சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பெங்களூரில் குண்டுராவை சந்திச்சது பற்றியும், அவரிடம் தனது ஆதரவாளர்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிகளில் அமர வைப்பது பற்றி அவர் வலியுறுத்தியது பற்றியும் போன முறையே நாம் பேசிக்கிட்டோம். அப்ப, அதுபத்தியெல்லாம் சென்னையில் பேசிக்கலாம்ன்னு அழகிரியிடம் சொல்லியனுப்பிய குண்டுராவ், சொன்ன மாதிரியே 10-ந் தேதி சென்னைக்கு வந்து, சத்தியமூர்த்தி பவனில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய செயலாளர்களான சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் மற்றும் தமிழக தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கிட்டாங்க. ப.சி.யை, அவர் வீட்டுக்கே போய், பவனுக்கு அழைத்து வந்திருக்கிறார் குண்டுராவ்.''

""கூட்டத்தில் என்ன விசேஷம்?''

ksalagari""மாவட்ட தலைவர்கள் மாற்றம், மாநில நிர்வாகிகள் நியமனம்னு பல விவகாரங்களும் விவாதிக்கப்பட்டிருக்கு. அப்ப, அழகிரி, கட்சி ரீதியா மாவட்டங்களைப் பிரிக்கணும்னும், இப்ப இருக்கும் மாவட்ட தலைவர் களை மாற்றணும்னும் வலியுறுத்தி விட்டு, தன் ஆதரவாளர்கள் பட்டி யலை குண்டுராவிடம் கொடுத்து, இவர்களை மாவட்டத் தலைவர்களா நியமிக்கனும்னு வலியுறுத்தி இருக்கார். சஞ்சய்தத்தோ, இப்ப இருக்கும் மாவட் டத் தலைவர்களை மாற்றத் தேவையில்லை. மாவட்டங்களையும் பிரிக்கத் தேவையில் லைன்னு சொன்ன தோட, மற்ற மூத்த தலைவர்களிட மும் பட்டியல் வாங்கி, கலந்து பேசித்தான் நியமனங்களைச் செய்ய னும்ன்னு சொல்ல, இதனால் அழகிரிக்கும் சஞ்சய்தத்துக்கும் இடையில் அங்கே பகிரங்கமாவே மோதல் வெடிச்சிருக்கு. இந்த விவ காரமும் இதைவிட முக்கியமா இன்னொரு விவகாரமும் டெல்லித் தலைமைக்குப் போயிருக்கு.''

""என்ன அது?''’

""சென்னைக்கு வந்த தினேஷ் குண்டுராவுக்கு தாஜ் ஓட்டலில் ஒரு சூட் புக் பண்ணப்பட்டிருக்கு. கூடவே மேலும் 4 அறைகளும் புக் செய்யப்பட்டிருக்கு. இதுக்கே ஏறத்தாழ 10 லட்ச ரூபாய் செலவாம். ராகுல்காந்தி சென்னைக்கு வந்தபோதுகூட அவருக்கு லீ மெரிடீயனில் ஒரே ஒரு சூட்தான் புக் பண்ணப்பட்டதுன்னு சுட்டிக் காட்டும் கதர்ச் சட்டையினர், குண்டுராவுக்கு மட்டும் எதற்காக 5 அறைகள்னு கேள்வி எழுப்பறாங்க. அந்த ஓட்டலில் அரங்கேறிய ரகசியங் கள் குறித்தும் ராகுல்காந்தி வரை புகார்கள் போயிருக்கு.''’

""ரஜினி மீதான டெல்லியின் பார்வை தொடருது போலிருக்கே?''

rajini

""ஆமாங்க தலைவரே, அண்மையில் ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியது குறித்தும் நாம் பேசிக்கிட்டோம். இந்த சந்திப்புக்குப் பிறகு, அமித்ஷாவிடம் பேசிய குரு மூர்த்தி, அரசியல் வருகைக்கு ரஜினி கமாதான் போட்டி ருக்காரே தவிர முற்றுப்புள்ளி வைக்கலைன்னு சொன்னதோடு, அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவாருன்னும் நம்பிக்கையோடு சொல்லியிருக்கார். இதைக்கேட்ட அமித்ஷா, அரசியலைக் கண்டு ரஜினி பயப்படுகிறார். அதனால் அவர் அரசியலுக்கு வருவாரான்னு ஆர்வமாகத் தன் சந்தேகத்தைக் கேட்க, குருமூர்த்தியோ, கொஞ்ச நாள் பொறுங்க. அவர் பா.ஜ.க.வுக்கு சாதகமான முடிவை எடுப்பார்ன்னு அழுத்தமாகச் சொல்லி, பா.ஜ.க. தலைமையின் கவனத்தை மேலும் கூர்மையாக்கி யிருக்கிறாராம்.''

""இடதுசாரிகள் தரப்பில் புது உற்சாகம் தெரியுதே?''

""பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், அந்தக் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் பெரும்பாலனவற்றை ஜெயிச்சிருக்காங்க. மாணவர்கள் உள்ளிட்ட புது ரத்தம் பாய்ந்ததுதான் சி.பி.ஐ., சி.பி.எம், சி.பி.ஐ(எம்.எல்) கட்சிகளின் ஒருங்கிணைந்த வெற்றிக்கு காரணம். இதே ஃபார்முலா மகாராஷ்ட்ரா, ஒடிசா மாநிலங்களிலும் தொடருமாம்.''

""மன்னார்குடித் தரப்பிலும் பரபரப்பு தெரியுதே?''

""சசிகலா விடுதலைக்கான எதிர்பார்ப்பும் அதற்கான சில பூர்வாங்க வேலைகளும் அங்கே நடக்குது. எடப்பாடியைsasi எதிர்ப்பதில்லைங்கிற முடிவுக்கு வந்துட்டாராம் சசிகலா. அதனால் எடப்பாடியும் சசிகலா ரிலீஸ் விவகாரத்துக்கு போட்டு வந்த முட்டுக்கட்டைகளை, நீக்கிவிட்டாராம். இரு தரப்புக்குமான இந்த சமாதான நடவடிக்கை காரணமாகத்தான், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரண விவகாரத்தின் பின்னால் இருக்கும் பேரங்கள் பத்தி, டி.டி.வி. தினகரன் எந்த அறிக்கையும் விடலையாம். அதே சமயம் துரைக்கண்ணு தரப்பிடம் சிக்கியிருக்கும் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையை, போலீஸ் மற்றும் தனியார் டீம்கள் மூலம் எடப்பாடித் தரப்பு நடத்திக்கிட்டுதான் இருக்கு தாம். துரைக்கண்ணு மகன் ஐயப்பனும் மருமகன் கனகாதரனும் தீவிர கண்காணிப்பில் இருக்காங்க.''

""நானும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துக்கறேன். பிற மாநிலங்களில் பா.ஜ.க. சந்திக்கும் தேர்தல்களுக்கு அ.தி.மு.க. தலைமை, கணிசமாக நிதி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறதாம். அந்த வகையில் அண்மையில் நடந்த பீகார் தேர்தலுக்கும் பா.ஜ.க. மிகக் கனமாக எதிர்பார்க்க, அதில் 300 சி வரை யிலும் ஒரு முக்கியமான அமைச்சர் மூலம் கொடுக்கப்பட்டிருக்குதாம். இந்தத் தொடர்பை சாதமாக்கிக் கொண்ட அந்த அமைச்சர் டெல்லி லாபியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டாராம். ரெய்டுகளுக்கு கலங்காத அந்த அமைச்சர், தனக்குப் பிடிக்காத அல்லது தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய அமைச்சர்களின் சொத்து விபரங் களை, டெல்லிக்குப் போட்டுக் கொடுக்கத் தொடங்கிவிட்டாராம்.''

nkn141020
இதையும் படியுங்கள்
Subscribe