"ஹலோ தலைவரே, பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ’ஆபரேசன் சிந்தூர்’ பற்றிய பல்வேறு ரகசியங்கள் கசிந்து, பொதுமக்களை அதிரவைத்து வருகிறதே.''”
"ஆமாம்பா, இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆளாளுக்குப் பட்டியல் இடுகிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, பாகிஸ்தான் மீது தொடுத்த போர் மூலம், மகத்தான சாதனைகள் செய்திருப்பதாக இதற்கு முன்பு மோடி தரப்பு முழக்க மிட்டு வந்தது. ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ, இந்தியாவின் 6 போர் விமானங் களை வீழ்த்தியதாக மார்தட்டினார். இதை இந்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏர் மார்ஷல் பாரதி, ‘இழப்புகள் என் பது போரில் ஒரு பகுதி’ என்று மழுப்பலாகத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது சிங்கப்பூரில் ஊடகத்தில் பேசிய, இந்திய படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ’போரின்போது விமானங்களை இழந்திருப்ப தாகத் தெரிவித்திருக்கிறார். இதையொட்டி, 3 ரபேல் விமானங்கள் உட்பட 4 இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக செய்திகள் கசிகின்றன. பாகிஸ்தான் எல்லையை நமது போர் விமானங்கள் தொட்டவுடன், அங்கே காத்திருந்த சீன விமானங்கள் மூலம் பாகிஸ்தான் அவற்றை வீழ்த்தியதாம். இந்தப் போரின் மூலம் நாம் இழந்திருக்கும் விமானங்களின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார் கள். 100 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்த நாம் இவ்வளவு விலையா கொடுக்க நேர்ந்தது என்கிற திகைப்பும், அதிர்ச்சியும் எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கேள்விகளை எழுப்பி வருகிறது.''’
"தி.மு.க.வின் பொதுக்குழுவில் ஸ்டாலின் எழுப்பிய குரல் டெல்லிவரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே?''
"மதுரையில் தி.மு.க. பொதுக்குழு பிரமாண்டமாக நடந்திருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், செலவுகள், திரண்ட கூட்டம், பொதுவெளியில் ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ உள்பட அனைத்து விபரங்களையும் திரட்டிய மத்திய உளவுத்துறை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், ’ "2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதுபோல் ஒரு நாடகத்தை நடத்தினார் எடப்பாடி. தி.மு.க. கூட்டணி உடையும் என்று அவர் எதிர்பார்த்தார். அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. அதனால் அவர் இப்போது மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார். அவர் அமித்ஷாவின் காலில் மட்டும் விழவில்லை. விழுந்திருந்தால் ஊர்ந்து போயிருப்பார். ஒருவேளை அவர் அப்படித் தனியாக செய்தாரா? என்று தெரியவில்லை'’என்றெல்லாம் சகட்டுமேனிக்கு எடப்பாடியை விமர்சித்தவர், ’"ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் இப்போது பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்குப் போய்விட்டது. அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்'’என்று பா.ஜ.க.வுக்கும் பஞ்ச் விட்டார். இந்தப் பேச்சும் அப்படியே மொழிபெயர்த்து அனுப்பப்பட்டிருக்கிறதாம்.''”
"இந்தப் பொதுக்குழு நேரத்தில் சில செய்திகளும் தி.மு.க. வட்டாரத் தில் விறு விறுப்பாகப் பரவியதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வில் அமைச்சர் துரைமுருகன் வகித்துவரும் பொதுச்செயலாளர் பதவியைப் பறித்து, டி.ஆர்.பாலுவிடம் விரைவில் தரவிருக்கிறார்கள் என்கிற டாக், உடன்பிறப்புகள் மத்தியில் சிறகடித்து வருகிறது. இந்த நிலையில் பொதுக்குழுக் கூட்டத்தின் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தபோதும், துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் பேசிக்கொள்ளவே இல்லையாம். அதேபோல், தி.மு.க. துணைப் பொதுசெயலாளர் களில் ஒருவராக முன்னாள் அமைச்சர் பொன் முடியைக் கொண்டுவர இருப்பதாகவும் ஒரு தகவல் பொதுக்குழுவுக்கு முன்புவரை நிலவியது. ஏனோ அந்த முடிவையும் தி.மு.க. சற்று நிறுத்தி வைத்திருக்கிறதாம். உதயநிதிக்கும் கட்சியில் பெரிய பொறுப்பு தர இருக்கிறார்கள் என்கிற செய்தியும் வேகமாகப் பரவிவருகிறது.''”
"த.வெ.க. பிரமுகர் ஆதவ் அர்ஜுன், எடப்பாடியை விமர்சித்துப் பேசிய வீடியோ வைரலாகி இருக்கே?''”
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang_495.jpg)
"எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை என்று, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம். த.வெ.க. தேர்தல் மேலாண்மைப் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய ஒரு வீடியோ பொதுவெளியில் ரிலீஸாகி, அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது ஆதவ்வின் அந்த உரை யாடலுக்கு அ.தி.மு.க. தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவ காரம், த.வெ.க. தலைவ ரான நடிகர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, எடப் பாடியைத் தொடர்பு கொண்ட விஜய், "ஆதவ்வின் பேச்சை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம், நான் அவரைக் கண்டிக்கிறேன்'’என்று கூறிய தோடு, வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆதவ்விடம் பேசிய விஜய், அவரது பேச்சு குறித்துக் கடிந்துகொள்ள... இதன் பிறகே ஆதவ், "அந்தக் காணொலியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது. அதற்காக உண்மையாகவும் நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள் கிறேன்'’என்று தெரிவித்துள்ளார். இதற் கிடையே, ஆதவ்வின் மைத்துனர் ஜோஸ் மார்ட்டின், "ஆதவ் மாதிரி முட்டாள்களை கட்சியிலிருந்து விஜய் நீக்க வேண்டும்' என்று ஆதவ்வுக்கு எதிராக வெடித்திருக்கிறார்.''”
"கட்சினர் எதிர்பார்க்காத ராஜ்யசபா வேட் பாளர்களை, அ.தி.மு.க. அறிவித்திருக்கிறதே?''”
"ராஜ்யசபாவுக்கான தி.மு.க. தரப்பின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுக்கான 2 இடங் களுக்கு, வழக்கறிஞர் இன்பதுரை, செய்யூர் தனபால் ஆகியோர் பெயரை அறிவித்திருக் கிறார் எடப்பாடி. முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நடிகை விந்தியா ஆகிய இருவரையும் கட்சி நிர்வாகி கள் பலரும் இதற்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அப்போது ஜெயக்குமாரோ, எனக்கு பதில் என் மகனுக்கு ராஜ்யசபா சீட்டைக் கொடுங்கள் என்றாராம். இதை ஏற்காத எடப்பாடி, கடைசியில், ’தி.மு.க. மீண்டும் வழக்கறிஞர் வில்சனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது, அதனால் நாமும் நமக்கான லாபியை உச்சநீதிமன்றத்தில் கிரியேட் செய்ய வசதியாக, வழக்கறிஞரான இன்பதுரையை டெல்லிக்கு அனுப்புவோம் என்று சொல்லிவிட்டாராம். அதேபோல், பட்டியலின சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செய்யூர் தனபாலையும் எடப்பாடி டிக் அடிக்க, அதையும் கட்சியின் சீனியர்கள் ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள். இதைத் தொடர்ந்து, நடிகை விந்தியாவைத் தொடர்புகொண்ட எடப்பாடி, ராஜ்யசபா உங்களுக்கு செட் ஆகாது. 10 மாதத்தில் தேர்தல் வருகிறது. நாம்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம். அப்போது நீங்களும் ஒரு அமைச்சர் என்று கூறி, அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார்.''”
"அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்யசபா சீட்டை வாங்க தே.மு.தி.க. தரப்பு கடைசிவரை போராடியதே?''”
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang1_453.jpg)
"எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருவது அ.தி. மு.க.வின் கடமை என்று ஓயாது சொல்லிக்கொண் டிருந்த தே.மு.தி.க. பிரேமலதாவுக்கு, கதவை மூடி அதிர்ச்சி கொடுத்துவிட்டார் எடப்பாடி. அறிவிப்பு வருமுன்பாக, தன் சகோதரர் சுதீஷ்க்கு ஒரு சீட் கேட்டு, அவரையே எடப்பாடியிடம் அவர் அனுப்பி வைத்தார். சுதீசும் எடப்பாடி யிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக சீட் கேட்டு, வாதிட்டுக்கொண்டே இருந்தார். 2021 தேர் தலின் போது, எங்களுக்கு ராஜ்யசபா தருவதாக வாக்களித்தீர்களே என்று சுதீஷ் கேட்க, அதற்கு எடப்பாடி, "அதற்கான வாய்ப்பு வரும்போது தே.மு.தி.க.வுக்கு சீட் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன் என்று சொன்னது நிஜம்தான். ஆனால், உங்களுடன் இது சம்மந்தமாக எந்த ஒரு ஒப்பந்தமும் போட்டுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க... எந்த உரிமையில், சீட் கொடுப்பது அ.தி.மு.க.வின் கடமை என்று சொல்கிறீர்கள்?' என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அவ ரது இந்தக் கறார் முடிவால், பிரேமலதா ஏகக்கடுப் பில் இருக்கிறார் என்கிறது தே.மு.தி.க. தரப்பு.''”
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். அமலாக்கத்துறை ரெய்டுகளை நடத்த ஆரம்பித்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் குறிவைக்கப்பட்ட, பவர் புள்ளிகளுக்கு நெருக்கமான ரத்தேஷ், துபாய் ற்ர் அமெரிக்கா என பறந்துவிட்டார். பறப்பதற்கு முன், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் பட்டியலைத் தயாரித்து, காவல்துறை தலைமைக்கு அவர் அனுப்பி இருந்தாராம். இந்த டிரான்ஸ்பர் லிஸ்ட்டில் சில மாற்றங்களைச் செய்யும் முடிவிற்கு வந்துள்ள காவல்துறை, இது குறித்து யாரிடம் ஆலோசனை பெறுவது என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம்.''
கொடூரனுக்கு ஆயுள் தண்டனை! - மக்கள் மகிழ்ச்சி!
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனவும், அவன் மீதான 11 குற்றச் சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அதற்கான தண்டனை விவரங்களை ஜூன் 2, திங்களன்று அறிவித்தார். அதன்படி, குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்குக் குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை நிர்வாணப்படுத்துதல், சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்தல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளுக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கு சிறையில் எவ்விதச் சலுகையும் வழங்கக்கூடாது என்றும், நன்னடத்தை காரணமாக வெளியே வரஇயலாது என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளார். மேலும், ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். தண்டனைக் குறைப்புக் காக ஞானசேகரன் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கை களையும் நீதிபதி நிராகரித்தார். இவ்வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், "இனிமேல் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப் படும்' என்று அரசு வழக்கறிஞர் மேரிஜெயந்தி தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் விரைவாக விசா ரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
(வழக்கின் பாதை பற்றி வழக்கறிஞர் துரைஅருணின் விரிவான பேட்டி 38-ஆம் பக்கம் பார்க்க)
-ஆதவன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/rang-t.jpg)