முன்னாள் மா.த. ஒரு மிகப்பெரிய ஆபரேஷனை செய்கிறார். அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு  நான்தான் காரணம் என நினைக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தோல்வி அடைந்தால்தான் தனக்கு மதிப்பு மரியாதை என கணக்குப் போடுகிறார். அவரும் ஆன்மிக குருவான ஜக்கி வாசுதேவும் இணைந்து அ.தி.மு.க.வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். என் மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. தலைவர்களை அவர் ஒருங்கிணைக்கிறார். கிட்டத்தட்ட அ.தி. மு.க.வின் அதிருப்தியாளர்களின்  தலைவராகவே அவர் அவதாரம் எடுத்துவிட்டார். 

Advertisment

முன்னாள் பா.ஜ.க. தலைவர் என்கிற முறையில் அவர் நீதிபதிகள், தேர்தல் கமிஷன் என அனைவரிடமும் பேசுகிறார். இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்.சுக்கு வாங்கித் தருவதற்கு நீதித்துறையில் அவர் லாபி செய்கிறார். சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் உட்பட அனைத்து இரயில் பெட்டிகளையும் இழுத்துச்  செல்லும் இரயில் என்ஜினாக கடந்த பாராளு மன்றத் தேர்தல் முதல் இன்று வரை செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க.விலும் தனக்கென ஒரு பெரிய கோஷ்டியை டெல்லிமுதல் கன்னியாகுமரி வரை உருவாக்கி இருக்கிறார்.

இந்த கோஷ்டிதான் கடந்த தேர்தலில் 18 சதவிகித வாக்குகளை பா.ஜ.க. கூட்டணிக்கு பெற்றுத் தந்தது. அதை அப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை மாறியதே தவிர முன்னாள் பா.ஜ.க. மா.த.வின் செயல்பாடுகள் மாறவில்லை. அனைவரும் அடுத்து அவர் என்ன செய்வார் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஒரு ‘த்ரில்லர்’ திரைப்படத்தைப் போல அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை அவர் உருவாக்கி வருகிறார். அவருக்கு தேசிய அளவில் எந்தப் பொறுப்பையும் பா.ஜ.க. வழங்கவில்லை.

கட்டுச்சோற்றில் பெருச்சாளியாக அவரது செயல்பாடுகள் எல்லை மீறிப் போய்க்கொண்டி ருக்கிறது. அவர் நீங்கள் சொன்ன கூட்டணி ஆட்சி என்கிற கோட்பாட்டைப் பிடித்துக்கொண்டு எனக்கு ‘செக்’ வைக்கிறார். நிலைமை இப்படியே போனால் அது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக அமையும். தி.மு.க. எளிதில் வெற்றி பெறும். அதற்காக தி.மு.க.வினர் நிறையப் பணம் கொடுத்து முன்னாள் பா.ஜ.க. மா.த.வை பேச வைக்கிறார்கள்''’என மிகப்பெரிய புகார்ப் பட்டியலை அமித்ஷாவிடம் எடப்பாடி கொட்டித்தீர்த்தார். 

Advertisment

தமிழகம் வந்த அமித்ஷா வாக்குச் சாவடி மாநாட்டுக்குப் போவதற்கு முன்பு முன்னாள் பா.ஜ.க. மா.த.வை அழைத்து எடப்பாடி சொன்ன விவரங்களை கேள்விகள் கேட்டார். ‘"தி.மு.க.விடம் நீ காசு வாங்குவது பற்றி என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது'’ என அமித்ஷா சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவர், வாக்குச்சாவடி மாநாட்டில் ‘எடப்பாடிதான் முதல்வர்’ என அந்தர் பல்டி அடித்ததோடு  இதுவரை இழுத்து வந்த அ.தி.மு.க. இரயில் பெட்டிகளிடம் ‘இனிமேல் நான் உங்களை இழுக்க மாட்டேன்’ எனச் சொல்லி கழட்டி விட்டார். இந்த ‘கழட்டி விடல்’ ஓ.பி.எஸ். தரப்பை கடும் அதிருப்திக்கு உள் ளாக்கியது. ஒருபக்கம் அ.தி.மு.க.வில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வந்த ஓ.பி.எஸ்., மறுபக் கம் தனது மகன் இரவீந்திரநாத் மூலம் தி.மு.க., விஜய் என இரு தரப்பிடமும் பேசி வந்தார். ஓ.பி.எஸ். கையில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்னாள் பா.ஜ.க. மா.த. ஏற்படுத்தியிருந்தார். அந்தக் கனவில் மிதந்த ஓ.பி.எஸ்., முன்னாள் பா.ஜ.க. மா.த. கழட்டிவிட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். மதுரை மாநாட்டில் விஜய், "எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள் யார் என்பது சஸ்பென்ஸ்'” என அறிவித்தது, பா.ம.க.வின் அன்புமணி -ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான சண்டை மற்றும் டி.டி.வி. ஆகியோரை எதிர்பார்த்துதான். இதில் ஒன்றுசேரவே முடியாத நிலைக்கு சென்ற ராமதாஸின் அப்பா-மகன் சண்டை மற்றும் ஓ.பி.எஸ்.ஸின் தனிக்கட்சி அறிவிப்பு ஆகியவை முன்னாள் பா.ஜ.க. மா.த.வின் திடீர் பின்வாங்க லால் தமிழக அரசியல் அரங்கில் சிலரது எதிர்பார்ப்புகளை அடிபட வைத்தது.  

இப்படி அமித் ஷாவின் கூட்டமும் விஜய்யின் மாநாடும் தமிழகத்தின்  கூட்டணி கணக்குகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பை புஸ்வாணம் ஆகியது. இது தவிர காங்கிரஸ் கட்சி நம்மோடு வரும் என்கிற விஜய்யின் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியத்தின் கணக்கிற்கு, அதெல் லாம் ‘போகாத ஊருக்கு வழி’ என காங்கிரஸ் தரப்பிலிருந்தே தெளிவாக அறிவித்துவிட்டார்கள். இது தொடர்பாக தி.மு.க. தரப்பிலிருந்து காங்கிரசை தொடர்புகொண்டு கேட்க, அய்யோ... அய்யய்யோ’ என விஜய் தரப்பு எதிர்பார்ப்பதை இல்லை என மறுத்திருக்கிறார்கள்.

______________
கனிமொழிக்கு பெரியார் விருது!

kanimozhi

Advertisment

தி.மு.க. துணை பொதுச்செய லாளரும், தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழிக்கு கரூரில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்படவுள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.  பெரியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாகவும், அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளை வாழ்வில் கடைபிடிப்பவராகவும், பொதுவாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் எம்.பி. கனிமொழி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே என கட்சியிலும், வெளியிலும் குரல்கள் எழுந்துள்ளன.