"ஹலோ தலைவரே, அரசியல் பரபரப்புகளுக்கு நடுவிலும் கவர்னர் ரவி பெரும் கண்டனத்தைச் சந்தித்து வருகிறார்.''”
"ஆமாம்பா, போலித் திருக்குறள் ஒன்றை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தை ரவி அவமதித்திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, எந்த மதத்திற்குள்ளும் சிறைப்படாத சிந்தனாவாதியான திருவள்ளுவர், உலகப் பொதுமறையாகத்தான் திருக்குறளைப் படைத்தளித்திருக்கிறார். ஏற்கனவே அவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து அவமதித்த கவர்னர், இப்போது மீண்டும் வள்ளுவ ரோடு விளையாடியிருக்கிறார். கடந்த 13ஆம் தேதி, மருத்துவர் தினத்தை யொட்டி, 50 மருத்துவர்களை சிறப்பிக் கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார் ரவி. அப்போது அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதில், "செருக் கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு' என்கிற குறள் ஒன்றை அவர் அச்சிட்டிருந்தார். அந்த. திருக்குறளின் வரிசை எண் என 944 என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தது. இதையறிந்த தமிழறிஞர்கள், இப்படி ஒரு குறள் இல்லையே என, அந்த 944ஆம் எண் திருக்குறளை பரிசீலித்தனர். திருவள்ளுவர் படைத்த திருக் குறளாக அங்கே இருந்தது, "அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து'’என்பதுதான். திருக்குற ளின் பெயரில் போலி திருக் குறளை கவர்னர் பரப்பியிருக்கிறார் என்பதை உணர்ந்த அவர்கள், இப்போது கொந்தளித்து வரு கிறார்கள். டாக்டர்கள் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கப் பட்டாலும், கவர்னரின் இந்த செயல் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.''”
"ராஜ்பவனுக்கு மூளை கெட்டுப் போயிடுச்சா?''”
"இதைத்தான் மக்களும் கேட்கறாங்க. காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், கவர்ன ரின் போலி திருக்குறள் விவ காரத்தைக் கண்டித்திருக்கிறார். அவர், ’"குறள் 944' என்று பொறிக் கப்பட்ட "குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக் குறளை எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தாலும், அப்படி ஒரு குறள் இல்லை. திருக்குறளை திருடி, அதை விருப்பம் போல் திருத்தி, இல்லாத ஒரு குறளைப் பரப்புவது தரங்கெட்ட செயல்’ என்று கடுமையாகச் சொல்லியிருக்கிறார். யாரோ இலக்கணம் தெரிந்த ஒரு புலவரை வைத்து, தளை தட்டாதபடி ஒரிஜினல் போலவே போர்ஜரி யாக அந்தக் குறளைத் தயாரித் திருக்கிறார்கள்.''
"இந்த நிலையில், இந்த விவகாரம் மத்திய அரசுக்கு தெரி

"இந்த நிலையில், இந்த விவகாரம் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்டுள்ளதாம் டெல்லி. வழக்கம் போல, என் கவனத்துக்கு வராமலே நேர்ந்த பிழை என்று விளக்கம் தந்துள்ள கவர்னர், 50 மருத்துவர் களுக்கும் கொடுக்கப்பட்ட நினைவு பரிசுகளைத் திரும்பப் பெற்று, அதில் உண்மையான குறளை அச்சிட்டுத் தர முடிவு செய்திருக்கிறாராம்.''”
"விடுதலைச் சிறுத்தைகள் திருமாவின் கடலூர் பேச்சு, தி.மு.க. வினருக்கு நெருடலை உண்டாக்கி இருக்கிறதே?''”
"உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற் காக கடலூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், திட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சி களிலும் கலந்து கொண்டார். அதில், காங்கிரசின் முன்னாள் தலைவர் இளையபெருமாளின் சிலையை சிதம்பரத்தில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தி.மு.க. தோழமைக் கட்சிகள் அனைத்தும் அழைக்கப் பட்டிருந்தன. ம.தி.மு.க. மட்டும் அழைக்கப்படவில்லை. விழாவில் பேசிய திருமாவளவன், "தி.மு.க.வுக்கு விழும் 4 ஓட்டுகளில் 1 ஓட்டு வி.சி.க.வுடையது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வி.சி.க. கடுமையாக உழைக்கும்'' என்றார்.’நாலில் ஒரு பங்கு ஓட்டு’ என்று திருமா சொன்னதை, ஸ்டாலின் உட்பட தி.மு.க.வினர் யாரும் ரசிக்கவில்லை யாம். இதன்மூலம் தி.மு.க.வின் வெற்றியிலும் வலிமையிலும் 25 சதவீதம் வி.சி.க.வுடையது என அவர் உணர்த்த நினைப்பதாக தி.மு.க. தரப்பு கருதுகிறது. இதன்மூலம் இந்தமுறை எங்களுக்கு 25 சீட் வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்கிறாரோ? என்றும் விவாதங்கள் நடக்கிறது.''”
"காமராஜரைப் பற்றி திருச்சி சிவா எம்.பி. பேசியது பெருத்த சர்ச்சையாகிடுச்சே?''
"ஆமாங்க தலைவரே, சென்னை பெரம்பூரில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. திருச்சி சிவா, "தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு என காமராஜர் கண்டனக் கூட்டங்களை நடந்திவந்தபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர், காமராஜருக்கு ஏ.சி. இல்லை யென்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடு மென்பதால், காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கலைஞரின் கைகளைப் பிடித் துக்கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத் தையும் காப்பாற்ற வேண்டுமென்று கூறி னார்' எனப் பேசியிருந்தார். காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசியதற்கு காங்கிரஸ் தரப்பில் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி எம்.பி., உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து விளக்கமளித்த திருச்சி சிவா எம்.பி., "பெருந்தலைவர் காம ராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருதிக்கொண்டு விவாதங்கள் வலுக்கின்றன. கல்விக் கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழைவீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடங்கள் வருவ தற்கு இந்தியாவிற்கே வழி காட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகர மாகவும் பேசியிருக்கிறேன். நான் கூறியவற்றை விவாதப்பொரு ளாக்கிட வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.''
"காங்கிரஸை வளைக்கும் முயற்சியில் நடிகர் விஜய் இறங்கியிருக்கிறாரே?''”
"மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி, த.வெ.க.வின் 2ஆவது மாநில மாநாடு நடக்கும் என்று நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்த மாநாட்டில் எப்படியாவது, காங்கிரஸையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்கிற முயற்சி, விஜய் தரப்பிலிருந்து தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. விஜய்யுடன் இருக்கும் வியூகவகுப்பாளரான ஜான்ஆரோக்கியசாமி ஏற்கனவே, அன்புமணியையும், சீமானையும் தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் இருக்கிறார். இப்போது காங்கிரஸை அழைக்கும் அசைன்மெண்ட்டும் அவரிடம் கொடுக்கப்பட்டிருப்பதால், காங்கிரஸ் பிரமுகர்கள் ஒரு சிலரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம்.''”
"நடிகர் விஜய்யை தி.மு.க. கட்டுப்படுத்த முயல்வதாகவும் சொல்கிறார்களே?''”
"லாக்அப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய். 2 லட்சம் பேர் குவிவார்கள் என்று விஜய்யிடம் சொல்லப்பட்டதாம். ஆனால், சொல்லப்பட்டதற்கும், எதிர்பார்க்கப் பட்டதற்கும் மாறாக, குறைந்த அளவே கூட்டம் வந்திருந்ததால் விஜய் அப்செட்டாம். அதனால்தான், தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் வாசித்தபோது, அதனை விஜய் எதிரொலிக்காமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தாராம். அந்த வகையில், முதல் ஆர்ப்பாட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதில் விஜய் வருத்தப்பட்டதாக சொல்கின்றனர். இதற்கிடையே, த.வெ.க.வில் இருக்கும் முக்கிய தலைகளிடம் பிளவு ஏற்பட்டிருப்ப தாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வியூக வகுப்பாளர் ஜான்ஆரோக்கிய சாமி, கொ.ப.செ. அருண்ராஜ் ஆகியோர் ஒரு அணியாகவும், தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஒரு அணியாகவும் இயங்கிவருகின்றனர். இந்த நிலையில் விஜய், தனது நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியைத்தான் அதிகம் நம்புகிறாராம். இந்த விஷ்ணு ரெட்டிக்கும் தி.மு.க. அரசின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த நட்பின் அடிப்படையில், அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் சேரக்கூடாது என்றும், அவர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அவரிடம் கருத்து திணிக்கப்படுகிறதாம்.''”
"இவ்வளவு நாள் எகிறிக்கொண்டிருந்த அன்புமணி, இப்போது ராமதாஸிடம் இறங்கிப் போக முன் வந்திருக்கிறாரே?''”
"அதற்குக் காரணம் இருக்குங்க தலைவரே, தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்த அன்புமணி மீது கடுப்பான டாக்டர் ராமதாஸ், இதுகுறித்து கிள்ளியூர் காவல் நிலையத்திலும் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், "ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்தவர் எனக்குத் தெரிந்த நபர்தான்'’என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மகன் அன்புமணியை யாரோ ஒருவரைக் குறிப்பிடுவது போல் ’எனக்குத் தெரிந்த நபர்தான் ‘ என்று அவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து அவர் குடும்பத்தினரும், பா.ம.க.வினரும் திகைத்துப் போயிருக்கிறார்கள். இந்தப் புகாரால் போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அன்புமணி, விசாரணையில் இருந்து எப்படி தப்புவது என்று பரிதவித்தாராம். கடைசியில் ராமதாஸிடமே சரண் அடைந்துவிடுவது என்ற முடிவோடு, சில முக்கியமான நபர்கள் மூலம் சமாதான முயற்சியை அன்புமணியே மேற் கொண்டிருக்கிறார். ஆனாலும் பிடி கொடுக்க மறுத்துவருகிறாராம் ராமதாஸ்.''”
"அ.தி.மு.க. நடத்தும் தெருமுனைக் கூட்டங் களைத் தடுக்கக்கூடாது என்று தமிழக காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகம் முழுக்க அ.தி.மு.க. நடத்தும் தெருமுனைக் கூட்டங்களைத் தடுக்காமல் அனுமதிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ’இது எப்படி முடியும்? போக்குவரத்துக்கு இடையூறான இடங்களில் அவர்கள் கூட்டம் நடத்த முயன்றால், எப்படி அனு மதிப்பது?’ என காவல்துறையிலேயே கேள்வி எழுந்திருக்கிறது. இந்த அறிவிப்பால், அ.தி.மு.க.விடம் காவல்துறை அடிபணிகிறதா? என்கிற வினாவும் பல இடங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதையெல் லாம் அறிந்த முதல்வர் அலுவலகம், ‘தங்கள் கூட்டங்களை அனுமதிப்பதில்லை என்று அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட சில கட்சிகள், பிரச்சினை செய்கின்றன. எனவே, அனுமதித்துவிடுங்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறதாம்.''”
"அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் விருப்பஓய்வு பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று ஒரு தகவல் வருகிறதே?''”
"தமிழக அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில் இருந்து, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை, விருப்ப ஓய்வு பெறும் மன நிலையில் இருக்கும் பலரும், இதுதான் அதற்குச் சரியான நேரம் என்று, அதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம். காரணம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்கான செட்டில்மென்ட் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என்கிற அச்சம் அவர்களிடம் இருக்கிறதாம். அதிலும் இந்த மாதத்திற்குள் அவர் கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத் தைக் கொடுத்தால்தான், அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் ஓய்வுதியப் பலன்கள் கிடைக்கு மாம். தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால், தங்க ளால் பணத்தை அரசிடமிருந்து உடனடியாகப் பெறமுடியாது என்று அவர்கள் கருதுகிறார் களாம்.''
"நக்கீரன் செய்தியையடுத்து சுரங்கத்துறை அதிகாரியை அதிரடியா மாற்றியிருக்காங் களாமே?''
"ஆமாங்க தலைவரே, தஞ்சை சுரங்கத் துறை ஏ.டி.யாக பணியாற்றிவந்த பிரியா, குறிப்பிட்ட சில நபர்களுக்கு குவாரி அனுமதி கொடுத்தது தொடர்பாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய மைன்ஸ் ஏ.டி., தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தஞ்சையில் பொறுப் பேற்ற மைன்ஸ் ஏ.டி. பிரியா, யாரையும் மதிக் காமல் நடந்துகொண்டார். எஸ்.ஆர். குரூப்பிலுள்ள சிலரைத் தவிர, யாரையும் குவாரி நடத்த விடவில்லை என்று குற்றச் சாட்டும் தொடர்ந்து இருந்துவந்தது. இந் நிலையில் அவர் அதிரடியாக திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.''
"நானும் என் காதுக்கு வந்த தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை, கொளத்தூர் டி.சி.யாக பணியாற்றிவந்த பாண்டிய ராஜன், திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் சிக்கி யிருப்பதை கடந்த இதழ் ராங்-கால் பகுதியில் விரிவாக செய்தி வெளியிட்டி ருந்தோம். நம் செய்தியின் எதிரொலியாக பழனி பட்டாலியன் கமாண்டராக பாண்டியராஜன் அதிரடியாக மாற்றப்பட்டுள் ளார்.''