த.வெ.க., அ.தி.மு.க.விலிருந்து கணிசமான தலைவர்களை தன் பக்கம் இழுக்க வேலை செய்துகொண்டிருக்கிறது. வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியம், ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆட்களை இழுப்பதற்காக தனிப்படையே அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட பலரிடம் பேசி அமவுண்ட் கொடுத்து த.வெ.க. விற்கு இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisment

ஒரு காலத்தில் ஓ.பி.எஸ். ஸிடம் இருந்த தலைவர்கள் பலர் இன்று போக்கிடம் தெரியாமல் நிற்கிறார்கள். அவர்களை த.வெ. க.வுக்கு அழைத்துவர பெரும் முயற்சி நடக்கிறது. அதில் முன்னாள் அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பெரும் கூட்டமே இருக்கிறது என்பதால் அவர்களை த.வெ.க.விற்கு அழைத்துவர ஜான் ஆரோக்கியம் தலைமையில் ஒரு அமைப்பு வேலை செய்கிறது. இந்த வேலைகளுக்கு உதவு வதற்காக ஒரு ஊடகவியலாளரை கட்சியில் சேர்த்திருக்கிறார் ஜான். அவருடன் ஜே.சி.டி.பிரபாகரனின் மகனும் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்ததாக போட்டோ வெளியிட்டிருக்கிறார்கள்.   

Advertisment

ஜே.சி.டி.பிரபாகரனின் மகன், த.வெ.க.வில் பத்து மாதங்களுக்கு முன்பே சேர்ந்துவிட்டார். அவர் விஜய்யை சந்திக்க வேண்டும்   என, கடந்த பத்து மாதங்களாக முயற்சி செய்துவந்தார். அவருக்கு விஜய்யின் தரிசனம் தற்பொழுது தான் கிடைத்தது. அவரது விஜய் சந்திப்பு போட்டோவை த.வெ. க.வில் இணைந்த படத்துடன் வெளியிட்டு விஜய்யை சந்திப்பது எவ்வளவு அரிது என்பதுடன், கட்சி எந்த நிலையில் இயங்குகிறது  என்பதையும் ஊடகவியலாளர் மூலம் காண்பித்திருக்கிறார்கள் த.வெ.க. வட்டாரத்தினர். அத்துடன், நாமக்கல் மா.செ. செந்தில் நாதன் என்பவர் ராசிபுரத்தில் மகளிர் அணியின் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவருடன் தகாதஉறவு வைத்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப் பட்டது. அந்த பெண்ணின் உறவினர்களே வெளியிட்ட வீடியோக்களில் "இதுதான் த.வெ.க.வில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பா? தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் முழங்குவதன் லட்சணம் இதுதானா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். அதனால் நாமக்கல் மா.செ. செந்தில் நாதனை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். 

இப்படி நீக்கம், சேர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கும் த.வெ.க.வின் ஆள் பிடிப்பு நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, அ.தி.மு.க. தடுப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளது. அதி.மு.க.வைச் சேர்ந்த ஊசலாட்டப் பேர் வழிகளை தொடர்பு கொண்ட எடப்பாடி, "நீங்கள் போகவேண்டாம், நான் பார்த் துக் கொள்கிறேன்'' எனப் பேசிவருகிறார். 

Advertisment

த.வெ.க.வின் ஆள்பிடிக்கும் உத்திகளை தடுப்பதற்கு அமித்ஷா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்புடன் காத்திருக் கிறது அதி.மு.க. டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரை அமித்ஷா மூலமே எடப்பாடி கையாண்டு வருகிறார். 

இந்நிலையில் "என்னை எப்படியாவது அதி.மு.க.வில் சேருங்கள்' என ஒற்றை கோரிக்கையுடன் சசிகலா நர்த்தனமாடி வருகிறார். சசிகலா அ.தி.மு.க.வில் சேருவார், அவரை சேர்க்கவில்லை என்றால் எடப்பாடி பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கமாட்டார். அதற்கான அனைத்து வேலைகளையும் சசிகலா செய்துவருகிறார். ஜனவரி மாதத்தில் நிறைய மாற்றங்கள் அதி.மு.க.வில் நடக்கும் எனச் சொல்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். “எந்த தாக்குதல் வந்தாலும் சரி அதை சமாளிப்பேன் என எதிர்த்தாக்குதல் நடத்திவரும் எடப்பாடி, தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. எடுக்கும் நடவடிக்கைகளைப் போல த.வெ.க. மீதும் ஒன்றிய அரசு நட வடிக்கைள் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். 

"த.வெ.க. 2029 பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயம் கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது பா.ஜ.க.'’என்கிறது கமலாலய வட்டாரங்கள். 

த.வெ.க. வீசும் வலையில் பல தலைகள் சிக்காமல் தப்பி ஓடுகின்றனர்.


_____________________
இறுதிச் சுற்று!

கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்!

vijaybox

த.வெ.க சார்பில் மாமல்லபுரத்திலுள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில், டிசம்பர் 22, திங்களன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "நாங்கள் அரசியலுக்கு வந்ததும், கடவுள் நம்பிக்கை உண்டென்று அறிவித்தது ஏனென்றால், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை இருந்தாலே எப்பேற்பட்ட பிரச்சனையையும் ஜெயிக்கும். பைபிளில் நிறைய கதைகள் இருக்கும். அதில் ஒன்று, ஒரு இளைஞனுக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, பிறகு அவன் அதிலிருந்து மீண்டுவந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த தனது சகோதரர்களை மட்டுமல்லாது நாட்டையே எப்படி காப்பாற்றினார்னு ஒரு கதை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றிய கதைன்னு நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன். கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். இங்கு வந்துள்ள அருளாளர்கள், அன்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்'' என்றார். 

 -கீரன்