நூற்றுக்கணக்கான பார்கள், பப்கள், சின்ன, சின்ன ரெஸ்டாரண்டுகள், அந்த ரெஸ்டாரண்ட்களில், பார்களில் டி.ஜே.க்களின் அதிரும் இசை... அந்த இசைக்கு ஏற்றாற்போல் மேடை அதிர, அதிர உடலை லாவகமாக அசைத்து ஆடும் இளம்பெண்களின் நடனங்கள், சாலைகளில் அரைகுறை ஆடையுடன் ஆண்களை அழைக்கும் பெண்கள் நிறைந்திருந்தது அந்த சாலை. இது உலகத்தில் 'வாக்கிங் ஸ்ட்ரீட்' எனப் புகழ்பெற்ற தாய்லாந்து பட்டாயாவின் கடற்கரை சாலையிலிருந்து பாலி ஹை பையர் வரை நீண்டுள்ள சாலை அல்ல. புரட்சியால் விடுதலை பெற்ற வியட்நாம் தேசத்தில் தான் இந்த காட்சி!
தாய்லாந்தை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்திருந்த 1960களில் அமெரிக்க ராணுவத்தினர் ஓய்வெடுக்க பட்டாயா கடற்கரைக்கு வருவர். அப்படி வந்தவர்களுக்காக பட்டாயா கடற்கரையில் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் தொடங்கப்பட்டன. 1980 முதல் காபெரே நடனங்கள், டிஸ்கோதேக்கள் நடக்கத் துவங்கியதால் இந்த கடற்கரை சாலைகள் பிஸியாகின. பொழுதுபோக்கு, உல்லாசத்துக்கான சாலையாக இந்த சாலைகள் அடையாளப்படுத்தப்பட்டன. 1990களில் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்ததால் இரவு 7 மணி முதல் விடியற்காலை 4 மணிவரை போக்குவரத்துக்கு தடை செய்யப் பட்டது. அதனால் இந்த சாலை 'வாக்கிங் ஸ்ட்ரீட்' எனப் பெயர் பெற்றது. இந்த சாலையில் இலைமறை காயாக இருந்த பாலியல் தொழில், 90களுக்கு பின்னர் வெளிப்படையாக மாறியது. உலகம் முழுவதுமிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்து வரத்துவங்கி
நூற்றுக்கணக்கான பார்கள், பப்கள், சின்ன, சின்ன ரெஸ்டாரண்டுகள், அந்த ரெஸ்டாரண்ட்களில், பார்களில் டி.ஜே.க்களின் அதிரும் இசை... அந்த இசைக்கு ஏற்றாற்போல் மேடை அதிர, அதிர உடலை லாவகமாக அசைத்து ஆடும் இளம்பெண்களின் நடனங்கள், சாலைகளில் அரைகுறை ஆடையுடன் ஆண்களை அழைக்கும் பெண்கள் நிறைந்திருந்தது அந்த சாலை. இது உலகத்தில் 'வாக்கிங் ஸ்ட்ரீட்' எனப் புகழ்பெற்ற தாய்லாந்து பட்டாயாவின் கடற்கரை சாலையிலிருந்து பாலி ஹை பையர் வரை நீண்டுள்ள சாலை அல்ல. புரட்சியால் விடுதலை பெற்ற வியட்நாம் தேசத்தில் தான் இந்த காட்சி!
தாய்லாந்தை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்திருந்த 1960களில் அமெரிக்க ராணுவத்தினர் ஓய்வெடுக்க பட்டாயா கடற்கரைக்கு வருவர். அப்படி வந்தவர்களுக்காக பட்டாயா கடற்கரையில் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் தொடங்கப்பட்டன. 1980 முதல் காபெரே நடனங்கள், டிஸ்கோதேக்கள் நடக்கத் துவங்கியதால் இந்த கடற்கரை சாலைகள் பிஸியாகின. பொழுதுபோக்கு, உல்லாசத்துக்கான சாலையாக இந்த சாலைகள் அடையாளப்படுத்தப்பட்டன. 1990களில் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்ததால் இரவு 7 மணி முதல் விடியற்காலை 4 மணிவரை போக்குவரத்துக்கு தடை செய்யப் பட்டது. அதனால் இந்த சாலை 'வாக்கிங் ஸ்ட்ரீட்' எனப் பெயர் பெற்றது. இந்த சாலையில் இலைமறை காயாக இருந்த பாலியல் தொழில், 90களுக்கு பின்னர் வெளிப்படையாக மாறியது. உலகம் முழுவதுமிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்து வரத்துவங்கினர். தாய்லாந்து 'வாக்கிங் ஸ்ட்ரீட்' புகழ் உலகம் முழுவதும் பரவியது. தாய்லாந்தை பார்த்து இப்போது வேறு சில நாடுகளும் இப்படிப்பட்ட வாக்கிங் ஸ்ட்ரீட்களை உருவாக்கு கின்றன. அதில் பொதுவுடமை தேசமான வியட்நாமும் அடக்கம்.
1980 வரை வியட்நாமுக்குள் அமர்ந்துகொண்டு பல்லாயிரக்கணக் கான வியட்நாம் மக்களைக் கொன்றது அமெரிக்க ராணுவம். உலக வல்லரசான அமெரிக்கப் படைகளை 10 ஆண்டுகள் எதிர்த்துப் போர் புரிந்தவர்கள், சின்னஞ்சிறிய நாடான வியட்நாம் மக்கள். வியட்நாம் மக்களின் மூர்க்கமான போர் அமெரிக்காவை பின்வாங்கச் செய்தது. பொதுவுடமை தேசமாக மலர்ந்த வியட்நாம், உலக நாடுகளின் வியாபாரத் துக்கு தன் தேசத்தைத் திறந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சியைக் குறிவைத்து வியட்நாம் அரசு இயங்கியது, அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணமுடிந்தது.
ஆண்டுக்கு 2.2 கோடி சுற்றுலா பயணிகள் வியட்நாமுக்கு வருகின்றனர். இயற்கைக் காட்சிகளை ரசிக்கவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பெண்களின் சேவையை உருவாக்கித் தந்துள்ளது அரசாங்கம். 2017, ஆகஸ்ட் மாதம், ஹேர்சிமின் சிட்டியில் வாக்கிங் ஸ்ட்ரீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வியட்நாம். அதன்பின் புரட்சி தேசம் மெல்ல மெல்ல பாலியல் தேசமாகிக் கொண்டிருக்கிறது.
வியட்நாம் தலைநகரம் ஹனாய், நாட்டின் மிகப்பெரிய நகரமான ஹேர்சிமின் சிட்டி, ஹியூ போன்ற நகரங்களில் அரசே வாக்கிங் ஸ்ட்ரீட்களை உருவாக்கியுள்ளது. தலைநகரம் ஹனாயில், டா ஹெய்ன் சாலை, ஹேர்சிமின் சிட்டியில் புய் வியன் சாலைகள் வியட்நாம் தேசம் கடந்து மிகப்பிரபலமாகி வருகின்றன. வியட்நாம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த சாலைகளில் குவியச் செய்கிறது. புய் வியன், டி தாம் மற்றும் பாம் நு லாவொ ஆகிய மூன்று தெருக்களில் மாலை 6 மணிக்கு தொடங்கும் கொண்டாட்டம், விடியற்காலை 2, 3 மணிவரை நீள்கிறது. வெளிநாட்டி னருக்கு போட்டியாக உள்நாட்டு இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம் கூட்டமாக இங்குள்ள உணவு விடுதிகளில் கூடியிருந்தனர். சின்னச்சின்ன உணவு விடுதிகளில் ஆர்கெஸ்ட்ரா வைத்து இளம் பெண்களைப் பாட வைத்து, ஆடவைத்து, கூட்டத்தை இழுத்துக்கொண்டு இருந்தார்கள். பெரிய உணவு விடுதிகளில் கிளாமர், நிர்வாண நடனங்கள் சர்வசாதாரண மாக நடந்தன. உள்ளே நுழையக் கட்டணம் எதுவும் கிடையாது. சாப் பிட்டதற்கு, குடித்ததற்கு பில் தந்தால் போதுமானது. பல ஆயிரம் பேர் இந்த சாலைகளில் குவிந்திருந்தனர். கிளாமரான உடை, கிறக்கத்துடன் ஆண்களை அழைக்கும் அழகிகள் என சாலைகளில் நிறைந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இரவுக்கு பெண்கள் வேண்டுமா எனக்கேட்டு சாலைகளில் எக்கச்சக்க புரோக்கர்கள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தார்கள். பட்டாயா அளவுக்கு இல்லை என்றாலும் அதில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது இந்த வியட்நாம் வாக்கிங் ஸ்ட்ரீட் சாலைகள் என்கிறார்கள், இரண்டு தேசத்திற்கும் பயணம் செய்த வர்கள். அதேபோல், தடுக்கி விழுந்தால் மசாஜ் சென்டர்கள் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவுக்கு வியட்நாம் முழுவதும் மசாஜ் சென்டர்கள் நிறைந்துள்ளன.
உலகத்தில் தாய்லாந்து மசாஜ்க்கு எனத் தனி இடம் உண்டு. தாய் மசாஜ் என்கிற பெயரில் ஆசிய நாடுகள் முழுவதும் மசாஜ் சென்டர்கள் பரவியுள் ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் தாய் மசாஜ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் போன்ற சிறு நகரங்களிலேயே தாய்லாந்து மசாஜ் செய் யப்படும் என விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அப்படி புகழ்பெற்ற தாய்லாந்து மசாஜ்க்கு போட்டி யாக களமிறங்கியுள்ளது வியட்நாம் மசாஜ்.
வியட்நாம் தேசம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களே அதிகம். சுற்றுலா வருபவர்கள் இயற்கையை ரசிக்க மட்டுமா வருவார்கள்? உல்லாசமாக, மகிழ்ச்சியாக, கொண்டாட்டமாக இருக்கவும் விரும்புவார்கள். அப்படி விரும்பி வரும் சுற்றுலா பயணிகளுக் காகவே வியட்நாமில் பல சேவைகள் உருவாக்கப்படுகிறது. அதில் முக்கியமானது மசாஜ் சென்டர்கள். வியட்நாமில் சுற்றுலா பயணிகள் குவியும் பெரிய நகரங்களான ஹோசிமின் சிட்டி, ஹனாய், சா பா, ஹோய் அன், ஹேவே, நேத்ரங், டனங், நின் பின் போன்ற அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கில் மசாஜ் சென்டர்கள் உள்ளன. புட் மசாஜ், ஹெட் மசாஜ், பாடி மசாஜ் என விதவிதமான மசாஜ்களுக்கு மணிக்கணக்கில் ரேட் கார்டு போட்டு அழைக்கிறார்கள். பர்மா பஜாருக்கு செல்லும் வாடிக்கையாளரை கையைப் பிடித்து இழுக்கும் வியாபாரிகள் போல், வியட்நாம் நகர வீதிகளில் நடக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மொய்க்கிறார்கள் மசாஜ் பார்லர்களை நடத்தும் வியட்நாம் மங்கைகள். இது பகல் - இரவு என வெளிப்படையாகவே நடக்கிறது. அதிகாரிகள் உட்பட யாரும் இதுபற்றி கேள்வி கேட்பதில்லை. இந்த கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள், இந்த மசாஜ் சென்டர்களில் குவிகின்றனர்.
வியட்நாமில் தாய் மசாஜ் போல் இந்திய மசாஜும் உள்ளன. இந்தியாவிலிருந்து இளம்பெண்கள், மங்கோலிய பெண்களை இதற்காக சுற்றுலா விசாவில் வரச்செய்து மசாஜ் சென்டர்களில் வேலைக்கு வைத்து பாலியல் தொழில் செய்கின்றனர் வியட்நாமிஸ். வியட்நாமில் பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் எனச் சட்டம் இருந்தாலும் அதனை ஒரு சதவீதம் கூட கடைப்பிடிக்கவில்லை. சுற்றுலா பயணிகள் அதற்காகத்தான் வருகிறார்கள் என அதனை சாதாரணமாக்கி வைத்துள்ளார்கள்.
இதுபற்றி நாம் தங்கியிருந்த ஒரு ஹோட்டல் ஊழியரிடம் கேட்டபோது, "வெளிநாட்டுக்காரர்கள் வியட்நாம் பெண்களை கேட்பதுபோல் இந்திய பெண்கள் கிடைப்பார்களா எனக் கேட்கிறார்கள். அதனால் இந்திய பெண்கள், மங்கோலிய பெண்களை வரவைத்து ஹோட்டல்களில் தங்கவைத்து மசாஜ் சென்டர்களில் வேலை தருகிறார்கள்'' என அதிர்ச்சியைத் தந்தார். நாம் தங்கியிருந்த ஹோட்டலில் தமிழ்நாடு, ஆந்திரா இளம்பெண்கள் 7 பேர் இப்படி தங்கியிருப்பதை ஹோட்டல் ஊழியர் உறுதி செய்தார்.
மக்கள் புரட்சியால் உலக வல்லரசான அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடவிட்ட மக்கள் வாழும் தேசம் வியட்நாம். தங்கள் கலாச்சாரத்தை மறந்து சிவப்பு தேசம் மெல்ல இருள் வாழ்க்கை வாழும் தேசமாக நிறம் மாறுகிறது.