அ.தி.மு.க. மகளிரணி தென்சென்னை மாவட்டச் செயலாளரான ஸ்ரீவித்யா, தொழில் தொடங்குவதற்காக வாடகைக்கு நிலம் வேண்டும் என தன் பெற்றோரையே ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் கொடுத்து வருகிறார் என புகார் ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளது.
சென்னையில் பெரிய பின்புலமில்லாத இடங்களைத் தேர்வுசெய்து அந்த இடத்தை வாடகைக்கு கேட்பது, சில காலங்களில் அந்த இடத்தையே தனக்கு விற்றதைப் போன்று ஒரு போலி டாக்குமெண்ட் உருவாக்குவது என பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்ரீவித்யா மீது கூறுகின்றனர்.
ஆரம்ப கட்டத்தில் கலை ராஜன் மூலமாக கட்சிக்குள் நுழைந்த ஸ்ரீவித்யா, தீர்த்த பாலீஸ்வரர் கோயிலிலுள்ள பால்காரர் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்து அந்த வீட்டை எழுதிவாங்கியுள்ளார். அதன் பிறகு பெரிய மலையப்பன் தெரு விலுள்ள அ.தி.மு.க. கிளைப் பொறுப்பாளருடன் கைகோர்த்து கோயில் இடத்தை லீஸுக்கு எடுத்து, அதனையும் தனது பெயரில் மாற்றிக்கொண்டார்.
போயஸ்கார்டன் செல்வதும் வருவது மாக இருந்த ஸ்ரீவித்யா, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த ஏ.சி. பாலகுருவுடன் அறிமுக மாகி நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஸ்ரீவித்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் வழக்குத் தொடுத்தால் அதை பாலகுருவை வைத்து சரிசெய்துள்ளார். காலப்போக்கில் பாலகுருவின் ஒரு கோடி ரூபாய் இடத்தையும், பணி ஓய்வுபெற்ற பணத்தையுமே பிடுங்கி, வரம்கொடுத்தவர் தலையிலேயே கை வைத்துள்ளார். இதனை தலைமைக்குக் ஏ.சி. கொண்டுசென்றபோது, இந்த விவகாரத்தைப் பற்றி பேசவேண்டாம் என திருப்பியனுப்பியுள்ளனர். அந்த வகையில் இடத்தையும், பணத்தையும் இழந்து மீண்டும் தன் குடும்பத்திடம் செல்ல, அவர்களும் விரட்டியதால் மனமுடைந்து இறந்துபோனார்.
இந்த விவகாரத்தால் அ.தி.மு.க.வில் ஜெ., இருக்கும் வரை எந்த பதவியுமே கிடைக்காமல் அ.தி.மு.க. அடிமட்ட உறுப்பினராகவே இருந்த ஸ்ரீவித்யா, ஜெ., மறைவுக்குப்பின் கலைராஜன் மூலமாக மகளிரணி மா.செ. பொறுப்பைப் பெற்றார். அதன்பிறகு கலைராஜன் இருந்த இடத்திற்கு எம்.எல்.ஏ. சத்யா வந்தார்.
செந்தில்குமார் என்பவருடன் தொடர்பி லிருந்துவந்த ஸ்ரீவித்யா, தனது அ.தி.மு.க. சினேகிதியை செந்திலுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு காலப்போக்கில் வித்யாவை ஓரங்கட்டி சினேகிதி செந்திலுடன் நெருங்கத் தொடங்கியதும், வித்யாவுக்கும் சினேகிதிக்கும் பிரச்சனை வெடிக்க, இந்த விவ காரத்தை தி.நகர் சத்யாவிடம் எடுத்துச்சென் றுள்ளனர். பிராது கொடுக்கப்போன ஸ்ரீவித்யா, சத்யாவின் நட்பைச் சாதித்துக்கொண்டார். அப்போது தொடங்கிய நட்பு... அமைச்சர் பா.வளர்மதி, தி.நகர் சத்யா, ஸ்ரீவித்யா என ஒரு குழுவாகி, இன்றுவரையிலும் கெட்டிப்பட்டு வருகிறதாம்.
இது ஒருபுறமிருக்க... தன்னுடைய தந்தையிடம் "நான் எஸ்.எஸ்.கே. இஞ்சினீ யரிங் என தனியார் நிறு வனம் ஒன்றைத் தொடங் கப்போகிறேன். அதற்கு நிலத்தை லீசுக்கு கொடுத் தால் நல்லாருக்கும்''’என கேட்டுள்ளார். மகள்தானே என 2018-ஆம் ஆண்டில் மாதத்திற்கு 25,000 ரூபாய் என 7 வருடத்திற்கு 2 ஏக்கர் நிலத்தை லீசுக்கு கொடுத் துள்ளார். உரிமையாளருக்குத் தேவைப்பட்டால் மூன்று மாதத்தில் காலிசெய்து கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிலம் கொடுக்கப்பட்டது. 16 மாதம் மட்டுமே வாடகை கொடுத் துள்ளார் ஸ்ரீவித்யா. அதன் பிறகு 2019-லிருந்து இதுநாள் வரையிலும் வாடகை தரவில்லை. "முழு வாடகை கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நாங்கள் சாப்பிடவாவது பணம் கொடு'' என கேட்டதற்கு செந்தில் குமாரை வைத்து தாய்- தந்தைக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
மப்பேடு காவல்நிலையத்தில் ஸ்ரீவித்யா வின் பெற்றோர் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், அவர்கள் சென்னை கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி அலுவலகம் சென்று புகார் செய்துள்ளார்கள். ஆனால் எவ்வித நடவடிக் கையும் இல்லை. பல இன்னல்களுக்கு ஆளாகிவரும் ஸ்ரீவித்யாவின் தந்தை பக்தவச்சலம் நம்மிடம் பேசினார்.
"நாங்க அனுபவிக்காத கொடுமையே இல்லைங்க. நான் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். என் மகனைவிட மகளுக்குத்தான் அதிகமா செய்துள்ளேன். அவளுக்கு 23 சென்ட் நிலம் தானப்பத்திரம், என்னுடைய பணி ஓய்வூதியத்தில் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளேன். அவளுடைய இரண்டு மகன்களையும் நான்தான் படிக்கவைத்தேன். நிறுவனம் தொடங்க இடம் வேண்டுமெனக் கேட்டவுடன், நம் மகள்தானே என நிலத்தைக் கொடுத்தேன். வாடகை கொடுக்காமல் இழுத்தடித்தாள். கேட்டதற்கு, எல்லா இடமும் என்னுடையது என என்னையும் என் மனைவியையும் அடியாட்களை வைத்து அடித்து கொடுமைப்படுத்தினாள்.
இதைத் தட்டிக்கேட்ட என் மகனையும் அடித்ததால், பயத்தில் நிலமே வேண்டாம் என்று ஓடிவிட்டான். எனக்கு 73 வயது. நானும் மனைவியும் நிர்க்கதியாக நிற்கிறோம். காவல்துறையில் 10 முறை புகார் கொடுத்தேன். ஒரு சி.எஸ்.ஆர்.கூட கொடுக்கவில்லை. வழக்கு கொடுக்க முயற்சித்ததால், என் வீட்டிற்கு வரும் குடிநீரை ஒரு வருடம் நிறுத்திவைத்து இருந்தனர். அப்போதிருந்த டி.எஸ்.பி. துரைப்பாண்டியன் நடவடிக்கையால் எங்களுக்குத் தண்ணீர் கிடைத்தது.
என் மகள் என்பதால் சொல்லாமல் இருந்தேன். அரசியல் ஆலோசகர் என்ற போர்டு வைத்துக்கொண்டு அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்துவந்து அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்துவருகிறாள். யார் யாரோ வாராங்க… போறாங்க, இப்படிப்பட்ட ஒருத்திக்குதான் அ.தி.மு.க. கவுன்சிலர் சீட் கொடுத்துள்ளது. இன்னும் என்னென்ன செய்யப்போகிறாளோ தெரியல''’என்கிறார்.