ரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்துகொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார், "உனக்கு எப்படிடா தூக்கம் வருது... இன்னும் எதையும் சாதிக்காம?''’என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றி பெறும்வரை சரியாகத் தூங்கியது கிடையாது''”-இது சூர்யா பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேட்டியில் கூறியது. இப்போது சூர்யா நிம்மதியாக உறங்குவார் என்று நம்பலாம், ஆனால் ஓடுவதை நிறுத்தவில்லை. தனது முயற்சியாலும் திறமையாலும் "சிறந்த நடிகரு'க்கான தேசிய விருது பெறும் உயரத்தையும் வெற்றியையும் அடைந்திருக்கிறார் சூர்யா.

cinema

புகழ்பெற்ற நடிகரின் மகனாக இருந்தாலும், சூர்யாவின் ஆரம்ப கட்டம் மிகக் கடினமானதாகவே இருந்தது. முதல் படமான ‘"நேருக்கு நேர்'’ வெற்றிபெற்றாலும் அதற்குப் பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வியடைந் தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘"நந்தா', "காக்க காக்க'’என மெல்ல தன்னை நிரூபித்து "கஜினி'யின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியால் முதல் வரிசைக்கு வந்தார். அதற்கு முன்புவரை நடிக்கத் தெரியவில்லை, நடனமாட தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாகக் கிண்டல் செய்யப்பட் டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்தவரின் இன்றைய உயரம் வேறு.

"சூரரைப் போற்று' திரைப்படம் அவருக்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கும் உற்சாகம் தரும்படி ஐந்து தேசிய விருதுகளை அள்ளி வந்திருக் கிறது. சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சிறந்த நடிகைக்கான விருது "பொம்மி'யாக அனைவர் மனதிலும் இடம்பிடித்த அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ், திரைக்கதைக்காக படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோரும் தேசிய விருது களை பெறுகின்றனர். "வெயில்', "ஆயிரத்தில் ஒருவன்', "ஆடுகளம்', "அசுரன்' உள்ளிட்ட பல படங்களில் சிறந்த இசையை கொடுத்துள்ள ஜி.வி.பிரகாஷுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் பெண் இயக்குனர்களின் எல்லையை உடைத்துள்ளார் சுதா கொங்கரா. "பெண்கள் இயக்கிய படங்கள் குறுகிய வட்டத்தில் இருக்கும், பெரிய வணிக வெற்றிகளை பெறாது' என்ற பேச்சை "இறுதிச்சுற்று', "சூரரைப் போற்று' என தனது படங்களால் தகர்த்து எறிந்துள்ளார் சுதா. பெறும் முயற்சியாலும் போராட்டத்தாலும் "ஏர் டெக்கான்' நிறுவனத்தை தொடங்கி நடத்திய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட "சூரரைப் போற்று' எளிமையான பின்னணியில் இருந்து வந்து உயரமான கனவுகளை நோக்கி செல்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் படம். "நீ ஜெயிச்சுட்ட மாறா' என்று ஒலிக்கும் வசனம் ஒவ்ù வாரு இளைஞனும் தனது வாழ்வில் உண்மையாகக் கேட்க விரும்புவதாக இருக்கிறது. தேசிய விருதுப் பட்டியலில் மேலும் இரு தமிழ்ப் படங்களும் இடம் பெற்றுள்ளன. "கேளடி கண்மணி'யின் மூலம் வந்து பல தரமான படங்களை தந்துள்ள இயக்குனர் வசந்த்தின் (இப்போது வசந்த் சாய்) "சிவ ரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மாநில மொழிகளின் வரிசையில் சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் படத்தில் நடித்த லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி (சிறந்த துணை நடிகை) ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தின் கதை அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

Advertisment

cinema

விருதுப் பட்டியலின் இன்னொரு ஹைலைட் 'மண்டேலா'. யோகிபாபு நடித்த இந்தத் திரைப்படத்திற்கு சிறந்த வசனத்திற் கான தேசிய விருது மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. தன் முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார் இயக்குனர் மடோன் அஷ்வின். ஒரு சின்ன கிராமத்தை தேர்தல் என்ன பாடுபடுத்துகிறது என்பதையும் வாக்குரிமை ஒரு சாமானியனுக்குப் பெற்றுத்தரும் திடீர் மரியாதையையும் மிக இயல்பான நகைச் சுவை தொனியில் கூறிய இந்தப் படம், நம் ஜனநாயகத்தில் சாத்தியமான கூத்தொன்றை காட்டியது. நாஞ்சில் நாடனின் சிறுகதை இப்படத்திற்குத் தூண்டுகோளாக இருந்திருக் கிறது. மலையாள படமான "அய்யப்பனும் கோஷியும்' மூன்று விருதுகளை வென்றுள் ளது. இசையமைப்பாளர் தமனுக்கு வைரல் ஹிட் பாடலான "புட்ட பொம்மா' இடம் பெற்றுள்ள "அல வைகுந்தபுரமலோ' படத்தின் பாடல்களுக்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இவை தெற்குக்கு கிடைத்துள்ள தேசிய விருது கள். இந்திப் படமான ’"தானாஜி'க்காக சிறந்த நடிகர் விருதை சூர்யா வுடன் பகிர்கிறார் அஜய் தேவ்கன். அப்படம் மேலும் சில விருதுகளையும் பெற்றுள்ளது.

தேசிய விருதுகளைப் பெற்றுள்ள மூன்று தமிழ்ப் படங்களுமே திரையரங்கு களில் வெளியானவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஞபப வெளியீடுகளாக வந்து சாதித்துள்ளன. காலம் மாறுகிறது... வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!

-வசந்த்