பலிவாங்கப்படும் பாலஸ்தீனர்கள்! கருணை காட்டாத இஸ்ரேல்! தீர்வு என்ன?

ss

ஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ஆம் தேதி மரணத் தாக்குதலையடுத்து ஹமாஸ், பாலஸ்தீன ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகம் கிளம்பியது. அதற்கேற்றவகையில் இஸ்ரேலின் உளவுப்பிரிவை ஏமாற்றி, இஸ்ரேல் வரலாறே காணாதவகையில் ஹமாஸ் அமைப்பு பெருந் தாக்குதலை நடத்தியிருந்தது.

அபிஷேகம் செய்வதுபோல, இஸ்ரேல் நகரங்கள்மீது கிட்டத்தட்ட 7000 ராக்கெட்டுகளை வீசியிருந்தது ஹமாஸ். போதாததற்கு பாரா கிளைடர், மோட்டார் வாகனத் தாக்குதல்கள். கையில் அகப்பட்டவர்களையெல்லாம் பணயக் கைதிகளாகப் பிடித்துச்சென்றிருந்தது ஹமாஸ்.

dd

அனைத்தும் முதல் இரண்டு நாட்களுக் குத்தான். அடிபட்ட இஸ்ரேல் மீண்டெழுந்து காஸா நகரங்கள் மீது நடத்திய தாக்குதல், முன்னுதாரணம் இல்லாதது. ராக்கெட்டுகளைத் தவிர கொத்துக் குண்டுகளையும் வீசியதாகப் புகாரெழுந்தது. அடுத்த இரண்டு தினங்களில் 1500-க் கும் அதிகமான ஹமாஸ் போராளிகள் கொன்றுகுவிக்கப்பட்டனர். ஹமாஸ் கமாண்டர்கள் 6 பேர் இதுவரை அழிக்கப்பட்டுள்ள னர். தவிரவும், அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலின் மூளை எனவும் பாலஸ் தீனத்தின் பின்லேடன் என வர்ணிக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் சல்லடை போட்டு சலித்துவருகிறது. அவரை விடப்போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதைத்தவிர பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இரு தரப்பு தாக் குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் பாலஸ்தீனத்தின் இலக்கு, ஹமாஸ் வசமுள்ள காஸா, மேற்குக் கரை பகுதிகளுக்கு இஸ்ரேலின் மூன்ற

ஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ஆம் தேதி மரணத் தாக்குதலையடுத்து ஹமாஸ், பாலஸ்தீன ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகம் கிளம்பியது. அதற்கேற்றவகையில் இஸ்ரேலின் உளவுப்பிரிவை ஏமாற்றி, இஸ்ரேல் வரலாறே காணாதவகையில் ஹமாஸ் அமைப்பு பெருந் தாக்குதலை நடத்தியிருந்தது.

அபிஷேகம் செய்வதுபோல, இஸ்ரேல் நகரங்கள்மீது கிட்டத்தட்ட 7000 ராக்கெட்டுகளை வீசியிருந்தது ஹமாஸ். போதாததற்கு பாரா கிளைடர், மோட்டார் வாகனத் தாக்குதல்கள். கையில் அகப்பட்டவர்களையெல்லாம் பணயக் கைதிகளாகப் பிடித்துச்சென்றிருந்தது ஹமாஸ்.

dd

அனைத்தும் முதல் இரண்டு நாட்களுக் குத்தான். அடிபட்ட இஸ்ரேல் மீண்டெழுந்து காஸா நகரங்கள் மீது நடத்திய தாக்குதல், முன்னுதாரணம் இல்லாதது. ராக்கெட்டுகளைத் தவிர கொத்துக் குண்டுகளையும் வீசியதாகப் புகாரெழுந்தது. அடுத்த இரண்டு தினங்களில் 1500-க் கும் அதிகமான ஹமாஸ் போராளிகள் கொன்றுகுவிக்கப்பட்டனர். ஹமாஸ் கமாண்டர்கள் 6 பேர் இதுவரை அழிக்கப்பட்டுள்ள னர். தவிரவும், அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலின் மூளை எனவும் பாலஸ் தீனத்தின் பின்லேடன் என வர்ணிக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் சல்லடை போட்டு சலித்துவருகிறது. அவரை விடப்போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதைத்தவிர பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இரு தரப்பு தாக் குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் பாலஸ்தீனத்தின் இலக்கு, ஹமாஸ் வசமுள்ள காஸா, மேற்குக் கரை பகுதிகளுக்கு இஸ்ரேலின் மூன்று லட்சம் ராணுவ வீரர்களை நேரடியாக அனுப்பி ஹமாஸ் அமைப் பினரை முற்றிலுமாகத் துடைத்தழிப்பதுதான்.

ஆனால், இது பாலஸ்தீனியர்களுக்கு பெருஞ்சேதமாக அமையுமென பாலஸ்தீன ஆதரவு நாடுகள் எதிர்க்கின்றன. ஏற்கெனவே ஹமாஸ் தாக்குதலால் சேதாரத்துக்கு ஆளாகியுள்ள இஸ்ரேல் ராணுவம், மக்கள் நெரிசல் அதிகமுள்ள காஸா பகுதிக்குள் நுழையும்போது, பழிதீர்க்கும் வெறியில் மக்களை கொன்றுகுவிக்கும் என ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக் கின்றன.

மாறாக, இஸ்ரேல் ராணுவமோ அக்டோபர் 17-ஆம் தேதி நிலவரப்படி, காஸா மக்களை மூன்று மணி நேர அவகாசத்துக்குள் அப்பகுதியை விட்டு கிளம்பும்படி கெடுவிதித்துள்ளது. அதன்பின் நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 10 தினங்களாக முற்றுகையிலிருக்கும் காஸாவில் குடிநீர், மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. முற்றிலும் மின்சாரம் தீரும்பட்சத்தில் பாலஸ்தீன பகுதி மருத்துவ மனையில் சிகிச்சையிலிருக்கும் 10,000-க்கும் அதிகமான நோயாளிகளில் பலரும் உயிரிழக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது. காஸா, மேற்குக் கரை பகுதிகளுக்கு நீர், மின்சாரம் வழங்க ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

dd

இஸ்ரேல் தாக்கும் என யூகிக்கப்படும் இடங்களிலிருந்து மக்கள் லட்சக்கணக்கில் இடங்களை காலிசெய்து புறப்பட்டுவருகின்றனர். பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள், லட்சக் கணக்கில் குவியும் அகதிகளுக்குப் பயந்து தங்கள் எல்லைகளைப் பூட்டியே வைத்திருக்கின்றன. தவிரவும், முற்றிலுமாக மக்கள் வெளியேறினால் எளிதாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரைத் தீர்த்துக்கட்டிவிடுமென்பதால், ரபா எல்லையை எகிப்து உள்ளிட்ட நாடுகள் திறக்கவில்லை. திறந்த சில நிமிடங்களில் பூட்டப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இதனால் பாலஸ்தீனர்கள் தங்கள் எல்லை தாண்டிச்சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலாத நிலை நிலவுகிறது.

யார், யார் பக்கம்?

இந்தப் போரில் அமெரிக்கா, பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் பக்கம். அமெ ரிக்காவின் தரப்பை விரும்பாத சீனா, ஈராக், ஈரான், எகிப்து, லெபனான், ஜோர்டான் என விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உள்ளன. சௌதி அரேபியா, துருக்கி இன்னும்பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற பயத்திலும், பொருளாதாரத் தடைபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயந்தும், ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கை பிடிக்காமலும், திடமாக பாலஸ்தீன ஆதரவு நிலை எடுக்காமல், அதேசமயம் போரை எதிர்த்தும் நடுநிலை வகிக்கின்றன. முதலில் இஸ்ரேல் ஆதரவுத் தரப்பை எடுத்த இந்தியா, பின் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவளித்து நடுநிலை மோடுக்கு வந்திருக்கிறது.

இஸ்ரேல் போர் என்ன ஆபத்து?

காஸாவுக்கு விநியோகித்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் இன்றித் தவித்துவருகின்றனர். வேறுவழியின்றி அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறு வனம் தெரிவித்துள் ளது. இந்த முற்றுகை நீடித்தால், குண்டுகளை விடுங்கள்... அசுத்த நீரைக் குடிப்பதனாலே ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.

எலியைக் கொல்ல மலையை அகழ்ந்தெடுப் பது என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, ஹமாஸ் போராளிகளைத் தீர்த்துக்கட்ட கடந்த பதினொரு தினங்களாக பாலஸ்தீனத்தைக் கட்டடக் குவியல்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் ஆயுதத் தளவாடங்கள் போதாதென அமெரிக்கா வேறு ஆயுத உதவிகளை அளித்துவருகிறது.

dd

ஏற்கெனவே காஸா, மேற்குக் கரைப் பகுதி என இரு சிறு பகுதிகளாக பாலஸ்தீனர்களின் வசிப்பிடம் சுருங்கியுள்ள நிலையில் ஹமாஸ் ஒழிப்பு என்ற பெயரில் பாலஸ்தீனத்தை முற்றிலும் தன் ஆளுகையில் கொண்டுவர இஸ்ரேல் நினைக்கலாம். இதனால் பாலஸ்தீனர்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அண்டை நாடுகள் பாலஸ்தீனர்களுக்குப் புகலிடம் தரத் தயங்கி தங்கள் எல்லைகளை மூடி வைத்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்துக்குள்ளே இயங்கும் ஐ.நா.வின் அகதிகள் முகாம்கள், மருத்துமனைகளில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

இந்தப் போர் முடிவுக்கு வந்தாலும், பாலஸ்தீனர்களின் குடியிருப்புகள் பெருமளவு நொறுக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கில் வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படும். போர் முடிந்தாலும்கூட குண்டுகள், ராக்கெட்டுகளின் தாக்குதல் இடிபாடுகளுக்கு இடையே வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சனை முதற்கொண்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படலாம்.

ஹமாஸ், இஸ்ரேலைவிட வலுக்குறைந்தது தான். அதற்காக அதனிடம் ஆயுதமே இல்லை யென அர்த்தமல்ல.… இஸ்ரேல் லிஹமாஸ் போர் பெரும் பொருட்செலவையும், அழிவையும் இரு தரப்பிலும் ஏற்படுத்தும். ஏற்கெனவே சிரியா, லெபனானின் சில அமைப்புகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்கிவரும் நிலையில் ஈராக், ஈரான் போன்ற நாடுகள் போரில் இறங்கினால் நிலைமை மேலும் தீவிரமடையும்.

இதுவரையான போரில் காஸா பகுதியில் 11,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3000 பேர் பலியானதாகவும் தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பகுதி பெண்களும், குழந்தைகளும்தான். டாக்டர், நர்ஸ்கள் மட்டுமே 37 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடைசியாக வந்த தகவலின்படி காஸா மருத்துவமனையையும் விட்டுவைக்காமல் இஸ்ரேல் தாக்கியுள்ளது. குழந்தைகள் உட்பட 500 பேர் மரணமடைந்துள்ளனர்.

தீர்வு என்ன?

இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காஸா முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாலஸ்தீனத்துக்கு 832 கோடி நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும், பாலஸ்தீனத்தை ஆக்கிர மிக்கக்கூடாது என இஸ்ரேலிடம் வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. ஹமாஸை பழிவாங்குவதற்காக பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அழிப்பதை உலக நாடுகள் அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அழுத்தமாக "போரை நிறுத்துங்கள்' என வலுவாகச் சொன்னாலே போர் முடிவுக்கு வந்துவிடும்.

அதைச் சொல்வதற்கு அவற்றுக்கு என்ன தயக்கம் என்பதுதான் இப்போதைய கேள்வி!

nkn211023
இதையும் படியுங்கள்
Subscribe