Advertisment

துணை ஜனாதிபதி சி.பி.ஆர். தேர்வு! அரசியல் கணக்கு!

cpr

 

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற தி.மு.க., ஜெயலலிதா வாஜ்பாயை கவிழ்த்ததை எதிர்த்து பா.ஜ.க.வுடன் உறவு கொண் டது.  அந்த சூழலில் மறைந்த இல.கணேசனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் தி.மு.க.வினருடன் நெருங் கிப் பழகினார்கள். இல.கணேசன் கலைஞருடன் நெருங்கிப் பழகிய நேரத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுடன் நெருக்கமான நட்பு பாராட்டினார். ஆண்டுக்கணக்கில் தொடரும் அந்த நட்பின் அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன், தான் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்த-ல் நிற்பது குறித்து, தமிழக முதல்வரிடம் பேசினார். ‘எனது பெயர், ஆரீப் முகமதுகானை விட முன்னிலையில் இருக்கின்றது. என்னை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் தி.மு.க. எனக்கு ஆதரவு தர வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்ன முடிவெடுககிறது என பார்ப்போம். இண்டியா கூட்டணியின் முடிவை

 

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற தி.மு.க., ஜெயலலிதா வாஜ்பாயை கவிழ்த்ததை எதிர்த்து பா.ஜ.க.வுடன் உறவு கொண் டது.  அந்த சூழலில் மறைந்த இல.கணேசனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் தி.மு.க.வினருடன் நெருங் கிப் பழகினார்கள். இல.கணேசன் கலைஞருடன் நெருங்கிப் பழகிய நேரத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுடன் நெருக்கமான நட்பு பாராட்டினார். ஆண்டுக்கணக்கில் தொடரும் அந்த நட்பின் அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன், தான் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்த-ல் நிற்பது குறித்து, தமிழக முதல்வரிடம் பேசினார். ‘எனது பெயர், ஆரீப் முகமதுகானை விட முன்னிலையில் இருக்கின்றது. என்னை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் தி.மு.க. எனக்கு ஆதரவு தர வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்ன முடிவெடுககிறது என பார்ப்போம். இண்டியா கூட்டணியின் முடிவைப் பொறுத்து உங்கள் கோரிக்கையை நான் பரிசீலிக்கிறேன்'’என ராதாகிருஷ்ணனுக்கு பாசிட்டிவும் நெகட்டிவும் இல்லாத பதிலை சொன்னார். தி.மு.க. தலைவரிடம் நேரடியாகப் பேசும் அளவிற்கு உறவு வைத்துள்ள ஒரே பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 

Advertisment

அதேபோல், சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அதை வரவேற்றார். அவருக்கு நேரடியாகவே தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் சி.பி.ஆர். அவரின் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் வரவேற்றாலும் அவருக்கு தனது நன்றியை சி.பி.ஆர். தெரிவிக்க வில்லை. அதற்கு ஒரு வில்லங்கமான பின்னணி இருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், "பா.ஜ.க. தமிழகத்தில் பத்து தொகுதிகளில் வெற்றி பெறும், கூட்டணிக் கட்சிகள் பத்து தொகுதிகளில் வெற்றி பெறும்' என பிரதமர் நரேந்திர மோடியிடம் சொன்னார். மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் சொன்னதை அப்பொழுது தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவ ராக இருந்த செந்திலும் மத்திய உளவுப் பிரிவின் தமிழக டைரக்டராக இருந்த ரவிச்சந்திரனும், சரி என ரிப்போர்ட் கொடுத்திருந்தார்கள்.  அதை நரேந் திர மோடியும் உண்மை என நம்பினார். பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு சி.பி.ஆரை சந்தித்து ‘தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ.க. வெற்றிபெறப் போகிறது’ எனக் குறிப்பிட்டார். 

அதை சிரித்துக்கொண்டே கேட்ட சி.பி.ஆர். ‘தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றார். ‘பா.ஜக. முன் னாள் தலைவர் மற்றும் உளவுத்துறை, ஆர்.எஸ்.எஸ். இவையெல்லாம் சொல்வது தவறா’ என பிரதமர் மோடி ஆச்சரியத்துடன் கேட்க, “ஆமாம் தவறே” என ஆணித்தரமாகப் பதில் சொன்னார் சி.பி.ஆர். தேர்தல் முடிவுகளும் ‘சி.பி.ஆர். சொன்னதே மெய்’ என்று நிரூபித்தது. அதனால், பிரதமர் மோடியின் மனதில் திடமாக இடம்பிடித்தார் சி.பி.ஆர். 

இப்பொழுதும் பா.ஜ.க. மு.த., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு எடப்பாடியாலும் நயினார் நாகேந்திரனாலும் முன்வைக்கப்பட, ‘அது உண்மை’ என்று கூறிய ராதாகிருஷ்ணன், கொங்கு பகுதியில் எஸ்.பி.வேலுமணி, பாஜ.க. மு.த. ஆகியோர் செய்யும் கூட்டணி எதிர்ப்பு உள்ளடி வேலைகளை பா.ஜ.க. தலைமைக்கு புரிய வைத்திருக்கிறார். மகராஷ்டிரா ஆளுநராக, தொழிலதிபர்கள் நிறைந்த அந்த மாநிலத்தில் நேர்மையின் உருவமாக செயல்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக மாற்றியது. அவரது தேர்வு கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பிரகாசமாக ஆக்குவதோடு முன்னாள் பா.ஜ.க. மா.த.வின் கவிழ்ப்பு வேலைகளை முறியடிக்கும் என்கிறார்கள். 

Advertisment

“பா.ஜ.க.வின் தமிழகத் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அறிமுகம் உண்டு. துணை ஜனாதிபதி பதவி என்பது அவருக்கு அளிக்கப்பட்ட வேலை என்றாலும் பா.ஜ.க.வின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகவே அவர் செயல்படுவார். ஏனென்றால், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் அவரது நேரடி சிஷ்யன். கொங்கு மண்டல அரசியல்வாதியாக எடப்பாடியுடனும் அவருக்கு நேரடி அறிமுகம் இருக்கிறது. தமிழக நலன்களை பாதிக்கும் பிரச்னைகளை ஒன்றிய அரசுக்கு புரியவைக்கும் அளவிற்கு திறன்மிக்கவர். "நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றை அலங்கரிக்கப்போகும் ராதாகிருஷ்ணன் நல்லதே செய்வார். இப்படி தமிழகத்தின் அனைத்து தரப்புக்கும் உதவக் கூடிய வேலைகளை திறம்படச் செய்யக்கூடிய நேரிய ஒழுக்கத்துக்கு சொந்தக்காரரான சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக ஆவது நிறைய மாறுபட்ட அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்'’என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.  

____________
இறுதிச்சுற்று!

முதல்வரின் 7 கேள்விகள்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஊடகச் சந்திப்பில் பேசிய விஷயங்கள் தொடர்பாக, தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18-8-2025 திங்கள் கிழமையன்று  7 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். 

வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர், 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதற் கான தரவுகள் இருக்கிறதா?, தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஊப்ங்ஸ்ரீற்ர்ழ்ள் தன்ப்ங்ள், 1960-ன்கீழ் கொடுக்கப்பட் டுள்ள விசாரணை மற்றும் முறையீட்டுக்கான கால வரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது, இதனை தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப்போகிறது?, பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (நஒத) மேற்கொள்ளும் போது, இந்த சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?, மறைந்த வாக்காளர் களின் பெயர்களை நீக்குவது எப்போது நிறைவேற்றப்படும்?, ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?, ஏன் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்ற கேள்விகளை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                  

-கீரன்

nkn200825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe