Advertisment

துணைவேந்தர் நியமனம்! அரசோடு மோதும் ஆளுநர்! பதிலடி தந்த அமைச்சர்

ss

மிழக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச் சரை நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும் சட்ட மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க... பாரதியார், அண்ணா, அண்ணாமலை, காமராஜர், சென்னை, ஆசிரியர் கல்வியியல் ஆகிய 6 பல்கலைக்கழகங்களிலும் துணை வேந்தர் பதவிகள் காலியாக இருக்கின்றன.

Advertisment

ss

இந்த பதவிகளை நிரப்புவதற்கு தமிழக அரசு முயற்சிக்கும்போதெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவருகிறார் ஆளுநர் ரவி.

இந்த சூழலில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து அரசாணை பிறப்பித்தது உயர்கல்வித் துறை.

Advertisment

ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ப

மிழக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச் சரை நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும் சட்ட மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க... பாரதியார், அண்ணா, அண்ணாமலை, காமராஜர், சென்னை, ஆசிரியர் கல்வியியல் ஆகிய 6 பல்கலைக்கழகங்களிலும் துணை வேந்தர் பதவிகள் காலியாக இருக்கின்றன.

Advertisment

ss

இந்த பதவிகளை நிரப்புவதற்கு தமிழக அரசு முயற்சிக்கும்போதெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவருகிறார் ஆளுநர் ரவி.

இந்த சூழலில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து அரசாணை பிறப்பித்தது உயர்கல்வித் துறை.

Advertisment

ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேடுதல் குழு, "யூ.ஜி.சி.யின் நெறிமுறைகளையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் மீறுவதாக உள்ளது. அதனால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தேடுதல் குழுவில் நான்காவது உறுப்பினராக யூ.ஜி.சி.யால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினரை சேர்க்க வேண்டும்' என’வலியுறுத்தியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த வலியுறுத்தல் தொடர்பான கடிதம் உயர்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைக் கண்டதும் டென்ஷனாகியிருக்கிறது தி.மு.க. அரசு. இதனால் ஆளுநருக்கு எதிரான சாட்டையை சுழற்றி யிருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் கோவி.செழி யன், "பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுக்குழுவில் 3 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அரசு மற்றும் பல்கலைக்கழக விதிகளின்படிதான் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய எல்லையின் அளவு என்ன? எதில் தலையிட வேண்டும்? எதில் தலையிடக்கூடாது? என்ற நிலையில் இருக்கிற ஆளுநர், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், யூ.சி.ஜி.யின் உறுப்பினரை நாங்கள் ஏற்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துவது அவருக்கு அழகல்ல. உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதனை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் உயர்கல்வித் துறையின் செயல்பாடுகளில் குறுக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்குகிறார் ஆளுநர். அவர் ஆளுநர் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்'' என்று கடுமையாக கண்டிக்கிறார் கோவி.செழியன்.

அமைச்சருக்கும் ஆளுநருக்கும் நடக்கும் மோதல் குறித்தும், நெறிமுறைகளை தி.மு.க. அரசு மீறுகிறதா? என்பது பற்றியும் கல்வியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி.செழியன் பொறுப்பேற்ற போது, உயர்கல்வியில் ஆக்கபூர்வான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருடன் மோதல் போக்கினை கடைப்பிடிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாகச் சொன்னார்.

அப்படிப்பட்ட அமைச்சரே இன்றைக்கு ஆளுநருடன் மோதுகிறார் என்றால், தி.மு.க. அரசிடம் தவறில்லை என்பதும், சட்டவிதிகளை ராஜ்பவன்தான் மீறுகிறது என்பதும்தான். அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் எந்த கோணத்திலும் சட்டவிதிகள் மீறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தி, ராஜ்பவனுக்கு அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், மோதலை துவக்குகிறார் ஆளுநர். அரசியல் காரணங்களுக்காக இதை அவர் செய்வதாகத் தோன்றுகிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேடுதல் குழுவில் விதிகள் மீறப் பட்டுள்ளதா? என உயர்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘’"துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவில் தமிழக அரசு, ஆளுநர், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஆகிய மூன்று தரப்பினரால் தலா ஒருவர் பரிந்துரைக்கப்படுவர். அந்த 3 நபர்கள்தான் தேடுதல் குழுவின் உறுப்பினர்கள். இதனைத் தாண்டி வேறு நபர் நியமிக்கத்தேவையில்லை.

ஆனால், தேடுதல் குழுவில் யூ.சி.ஜி. உறுப்பினர் ஒருவர் இருக்கவேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. யூ.ஜி.சி. விதிகளில் தங்களது உறுப்பினர் ஒருவர் தேடுதல் குழுவில் இருக்கவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை. யூ.ஜி.சி.யின் விதிகள் என்பது பரிந்துரைதானே தவிர சட்டவிதிகள் கிடையாது.

இதே பிரச்சனையில் பீகார் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கல்வி என்பது அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியல் 3-வது பிரிவில் வருவதால் கல்வியில் தனது சட்டங்களைச் சொந்தமாக வகுக்கும் சுதந்திரமும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருக்கிறது. அதனால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. நிதிநல்கைக் குழு சட்டம் 1956, பிரிவு 26-ன்படி எந்தெந்த நெறி முறைகளை மாநில அரசு ஏற்க விரும்புகிறதோ, அதை மட்டும் பின்பற்றலாம்”என்று தீர்ப்பினை கொடுத்திருக்கிறது.

அதனால், யூ.ஜி.சி.யின் நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்கிற அவசியம் தி.மு.க. அரசுக்கு கிடையாது. உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தர் நியமனத் தில் தேடுதல் குழுவை அமைக்க அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. அதன்படிதான் செயலாற்று கிறது தி.மு.க. அரசு. இதனை ஆளுநர் உணர்ந்து கொள்ளாமல் தேவையற்ற சர்ச்சைகளையும் மோதலையும் உருவாக்குகிறார்''’என்கிறார்கள்.

தி.மு.க. அரசோடு தேவையற்ற மோதலை ஆளுநர் தொடங்கியிருப்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் முடங்கும் அபாயம் உருவாகியிருக்கிறது.

nkn281224
இதையும் படியுங்கள்
Subscribe