சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒதுக்குப்புறமான மயானம் அது. டக் இன் செய் யப்பட்டு, மணிக்கட்டுவரை நீண்டு பொத்தான் போடப்பட்ட சட்டை, பேண்ட், காலில் ஷூ இவற்றுடன் மயானத்தினுள் பிரவேசிக்கும் இளைஞர், அடுத்த நொடியே கைலி அணிந்து, தொளதொள டீ-சர்ட் அணிந்து பிணத்தை எரியூட்டும் பணிக்கான வேலையை துவங்குகிறார். பகலில் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகவும், இரவில் பிணம் எரிக்கும் வெட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒதுக்குப்புறமான மயானம் அது. டக் இன் செய் யப்பட்டு, மணிக்கட்டுவரை நீண்டு பொத்தான் போடப்பட்ட சட்டை, பேண்ட், காலில் ஷூ இவற்றுடன் மயானத்தினுள் பிரவேசிக்கும் இளைஞர், அடுத்த நொடியே கைலி அணிந்து, தொளதொள டீ-சர்ட் அணிந்து பிணத்தை எரியூட்டும் பணிக்கான வேலையை துவங்குகிறார். பகலில் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகவும், இரவில் பிணம் எரிக்கும் வெட்டியானாகவும் பணியாற்றும் இளைஞரான சங்கர்.
"புருஷனும் பொண்டாட்டியுமாக சேர்ந்து ஏறக்குறைய 30 வருஷமாக இங்க பிணத்தை எரிச்சுட்டு வர்றோம். எங்களுக்கு மூன்று மகன், இரண்டு பெண் பிள்ளைகள். இவன்தான் கடைசி. தொடக்கத்திலிருந்து எங்களுக்கு உதவியாக இருந்துட்டு வர்ற இவனுக்கு எதுக்கு இந்த வேலை..? எங்களோட போகட்டுமென இவனை படிக்க வைச்சோம். அவனும் எங்க பேச்சை மதிச்சு சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் வாங்கினான். இருந்தாலும் அவ்வப்போது உதவி செய்வான். அதுபோக ஓவியத்திலும் தனித்திறமை இவன்கிட்ட இருக்கு. அதனால் இவன் பக்கத்துல இருக்கின்ற தனியார் பள்ளிகளில் ஓவிய வாத்தியாராக பணியாற்றி வந்தான். பாழாய்ப்போன கொரோனா வந்ததால் அந்த வேலையும் போய்விட்டது. பொழைப் புக்கு வேற வழி தெரியாததால் இங்க மறுபடியும் வெட்டியானாக ஆகிட்டான். எந்த வேலை மகனுக்கு வேண்டாம் என்றோமோ, அந்த வேலைதான் இப்ப அவனுக்கு சோறு போடுது'' என்கிறார் சங்கரின் தாயான பஞ்சவர்ணம்.
குடும்பத்தில் முதல் பட்டதாரியாகவும், தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக முனைவர் பட்டத்தினையும் வென்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்த சங்கரோ, "கொரோனாவுக்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் எனக்காக ஓவிய ஆசிரியர் பணி இருந்தது... இப்பொழுது அது இல்லை. இருப் பினும் தனியார் பள்ளி ஒன்றின்வாயிலாக குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக் கின்றேன். எனினும் என்னுடைய குடும்பத் தேவைக்கு அந்த சொற்ப வருமானம் போதுமானதாய் இல்லை. ஆதலால் மீண்டும் எரியூட்டும் வெட்டியானாக இங்கு பணியாற்றிவருகின்றேன்'' என்கிறார். குடும்ப வறுமையைப் போக்கவும், கற்ற கல்விக்கு கருணை அடிப்படையிலாவது தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா..? என்பதே சங்கரின் எதிர்பார்ப்பாக உள்ளது.