2026சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின் றன. அந்த வகையில் எதிர்க்கட்சி யான அ.தி.மு.க.வுக்கு, வருகின்ற தேர்தல், கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவும், இ.பி.எஸ்ஸின் தடத்தை வலுவாகப் பதிக்கக்கூடிய தேர்தலாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, வலுவான கூட்டணியை கட்டமைத்து, தரமான வெற்றியைக் கொடுப்பதற்காக சுழன்றுகொண்டி ருக்கிறார் இ.பி.எஸ். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., 234 தொகுதி யில் 55 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஒரு வேட்பாளருக்கு 11 கோடி வீதம் 2 ஆயிரம் கோடிக்குமேல் கட்சி நிதியாகவே செலவு செய்தனர். தேர்தல் செலவை மூத்த நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தற்போது வரவுள்ள தேர்தலுக்கும் தலை மையிலிருந்து அனைத்து மூத்த நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாம். சென்ற முறை நாம் ஆளும் கட்சியாக இருந்தோம், ஆகையி னால் சிரமம் குறைந்திருக்கும். தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதைத்தாண்டி செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆகையால் முக்கிய நிர்வாகிகளிடம் தொகுதிவாரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி பிரித்துவிடப்பட்டுள்ளதாம். அதிலும் கட்சியில் இ.பி.எஸ்.க்கு அடுத்த இடத்திலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேலுமணி, கோவை உள்ளடக்கிய 10 தொகுதிகளோடு நிறுத்திக்கொள் ளாமல், கட்சிக்கு கூடுதலாக நிதி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அதற்கான பணியை மும்முரமாக செய்துவருகிறாராம்.
முதற்கட்டமாக கோவையில் தனது பினாமி பெயரிலுள்ள இடங்களை கையிலெடுத்து விற்பனை செய்யத் திட்ட மிட்டுள்ளாராம். வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியின்கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, அரசு பணிக்காக சென்னை வந்து செல்வற்கான ரயில் டிக்கெட் போட்டுக் கொடுக் கும் பணியை அப்போது மணிகண்டன் என்பவர் செய்து கொடுத்துவந்துள் ளார். அதேபோல அரசு பணிகளுக்காக அமைச்சர் வேலுமணி வெளிநாடு களுக்கு செல்வதற்கான விமான டிக்கெட்களையும் அதே மணிகண்டன் செய்து கொடுத்துள்ளார். மேலும், அவ்வப்போது அமைச்சர் மற்றும் அப்போதைய கோவை மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவன்குமார் உள்ளிட்டோர் வெளிநாட்டிற்கு செல்லும்போது அவர்களுடன் இந்த மணிகண்டனும் செல்வதை வழக்கமாக வைத்துள் ளார். அப்படி சென்றுவரும் சூழ்நிலையில் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவன்குமாருக்கும், மணிகண்டனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் அமைச்சருக்கே தெரியாமல் மாநகராட்சியில் பில்டிங் அப்ரூவல் பெறுவதற்கு வருபவர்களிடம் கமிஷனாக பல லட்சங்களில் பணத்தை பெற்று, கமிஷனருக்கு தரும் பணியை மணிகண்டன் சிறப்பாக செய்துவந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இன்னும் பல்வேறு பணிகளை செய்துகொடுத்துள்ளார். இந்த விவகாரம் அமைச்சர் வேலுமணியின் காதுக்கு செல்ல, அவர் விசாரித்துப் பார்த்ததில் உண்மை யைக் கண்டறிந்த வேலுமணி, கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த ஸ்ரவன்குமாரை பணியிடை மாற்றம் செய்து டம்மி போஸ்ட்டிங்கில் அமர்த்தியதோடு, மணிகண்டனையும் இனிமேல் இந்த பக்கமே வரக்கூடாது என விரட்டியடித்துள்ளார்.
அதன் பிறகு ஆட்சி மாற்றத்தின் காரணமாக பல சிக்கல்களை சந்தித்த வேலுமணி, தனக்கு மிகவும் நெருக்கமான பினாமியான ஒருவர் தன்னையும் சிக்கவைத்த காரணத்தால், யாரையும் நம்பாமல், தன்னுடைய பினாமிகளிடம் கொடுத்து வைத்ததையெல்லாம் தனது கைகளுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் செலவுக்கும் நிதி தேவைப்படுவதால், அதற்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால், உடனடியாக பினாமி பெயரிலுள்ள இடத்தை விற்று கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டுமென்று வேலுமணி திட்டமிட்டார். யாரையுமே நம்புவதற்கு தயங்கிய வேலுமணி, என்ன செய்யலாமெனக் குழப்பத்தில் இருந்தபோது, தனது விசுவாசியாக இருந்து, பின்னர் விரட்டியடிக்கப்பட்ட மணிகண்டனே இதற்கு சரியானவராக இருப்பாரென சிலர் ஆலோசனை கூற, அதை ஏற்றுக்கொண்டவர், சில நிபந்தனைகளை விதித்து, மணிகண்டனை ஏற்றுக்கொண்டார்.
மணிகண்டனின் ரீ-என்ட்ரிக்கு பிறகு திட்டமிட்டப்படி வேலை நடக்கத் தொடங்கியது. 12 ஆண்டுகளாக பதிவு செய்து செயல்படாம லேயே இருந்த அடிசியா நிறுவனத்தை தூசிதட்டி, அதனை மணிகண்ட னின் பெயரில் மீண்டும் பதிவுசெய்து, அதனுடைய சேர்மனாக மணி கண்டனையும், இயக்குனராக மணிகண்டனின் மனைவியையும் நியமித்து, '5 மாத்திற்குள் 1000 கோடி மதிப்பிலான சொத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அதற்கு துணையாக என்னுடைய சகோதரர் அன்பு உங்களுக்கு தேவையானதை செய்வார்' எனச் சொல்லவும், கோவையில் வெறுமனே டூவிலரில் சென்றுகொண்டிருந்த மணிகண்டன், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த 4 கார்கள், வெளியே செல்லும்போது பாதுகாப்புக்கு பவுன்சர்கள் எனப் பெரிய ரியல் எஸ்டேட் அதிபராகவே மாறிவிட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் படி, இடங்களை விற்பனை செய்வதை விரைவு படுத்த பிரபல நடிகை திரிஷாவுக்கு பல கோடிகளைக் கொடுத்து நடிக்கவைத்து, விளம்பரம் செய்து வருகிறார்கள். அதன் முதல்கட்டமாக, கடந்த 24ஆம் தேதி, கோவையிலுள்ள ஒரு வில்லாவை வேலுமணியின் சகோதரர் அன்பு திறந்துவைத்துள்ளார். இனி தேர்தலுக்கான பணிகள் இன்னும் வேகமெடுக்குமென்று கூறுகிறார்கள்.