வேலுமணி தப்பிக்கவே முடியாது! -அடித்துச் சொல்லும் கார்த்திகேய சிவசேனாதிபதி!

sss

ரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடந்ததாக அ.தி. மு.க.வினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளரும், தொண்டா முத்தூரில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட வருமான கார்த்திகேய சிவசேனாதிபதி.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்களே அதிமுகவினர்...

பழிவாங்க வேண்டிய அவசியமெல்லாம் தி.மு.க.வுக்கு கிடையாது. அவரே அவருக்கு எதிரான அனைத்து சதிகளையும் செய்து வைத்திருக்கிறார். ஜெ. மறைவுக்குப் பிறகு ஊழல் செய்வதை மட்டுமே முழு நேரத் தொழிலாக கொண்டிருந்தவர் வேலுமணி. அவர் மீது ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் இருக்கிறது. இரண்டிலும் எப்படியெல்லாம் தவறு செய்தார்கள் என தெளிவான ஆவணங்கள் இருக்கிறது. சட்டம் தனது கடமையை செய்யும். எஸ்.பி.வேலுமணியின் அரசியல் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டது.

velumani

91-96 ஜெ. ஆட்சியில் ஒரு ஊழல் பாக்கியில்லை. ஆனால் ஒரு வழக்கில்தான் ஜெ. சிக்கினார். அந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக இருந்தார். அந்த வழக்கையும் எப்படியெல்லாம் இழுக்க வேண்டுமோ அப்படியெல்லாம் இழுத் தார்கள். எப்ஐஆர் பதிவு செய்து டி.வி.ஏ.சி. ரெய்டு நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் பெயில் ரிஜெக்ட் ஆகி அடுத்த நா

ரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடந்ததாக அ.தி. மு.க.வினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளரும், தொண்டா முத்தூரில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட வருமான கார்த்திகேய சிவசேனாதிபதி.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்களே அதிமுகவினர்...

பழிவாங்க வேண்டிய அவசியமெல்லாம் தி.மு.க.வுக்கு கிடையாது. அவரே அவருக்கு எதிரான அனைத்து சதிகளையும் செய்து வைத்திருக்கிறார். ஜெ. மறைவுக்குப் பிறகு ஊழல் செய்வதை மட்டுமே முழு நேரத் தொழிலாக கொண்டிருந்தவர் வேலுமணி. அவர் மீது ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் இருக்கிறது. இரண்டிலும் எப்படியெல்லாம் தவறு செய்தார்கள் என தெளிவான ஆவணங்கள் இருக்கிறது. சட்டம் தனது கடமையை செய்யும். எஸ்.பி.வேலுமணியின் அரசியல் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டது.

velumani

91-96 ஜெ. ஆட்சியில் ஒரு ஊழல் பாக்கியில்லை. ஆனால் ஒரு வழக்கில்தான் ஜெ. சிக்கினார். அந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக இருந்தார். அந்த வழக்கையும் எப்படியெல்லாம் இழுக்க வேண்டுமோ அப்படியெல்லாம் இழுத் தார்கள். எப்ஐஆர் பதிவு செய்து டி.வி.ஏ.சி. ரெய்டு நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் பெயில் ரிஜெக்ட் ஆகி அடுத்த நாள் காலையில் போலீசார் வீட்டுக்கு சென்றார்கள், அம்மா குளித்துவிட்டு பூஜை செய்துவிட்டுத்தான் வருவாங்க என்று சொல்கிறார்கள். 10 மணிவரை காத்திருந்து மரியாதையாக கைது செய்யப்பட்டார். ஆனால் பழிவாங்கியது அவர்கள்தான். இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது 2 மணிக்கு உள்ளே நுழைந்து கலைஞரை கைது செய்தார் கள். அந்த வழக்கு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது. அது பொய் வழக்கு. பழிவாங்குவது அவர்கள் செய்தது. எங்கள் தலைவர் ஸ்டா லின் என்றைக்கும் பழிவாங்கும் செயலுக்கு போகவேமாட்டார். சட்டத்திற்கு புறம்பாக ஸ்டாலின் தலைமையிலான அரசு எதையும் செய்யாது.

சோதனை வருவது முன் கூட்டியே அவர்களுக்கு தெரியும் என்கிறார்களே... "ஒன்றும் கைப்பற்றப்படவில்லை' என்கிறார்களே அ.தி.மு.க.வினர்...

தேர்தல் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே என்னென்ன மறைக்கணுமோ அத்தனையையுமே வேலுமணியே மறைத்திருப்பார். ஆனால் சில விசயங்களை மறைக்கவே முடியாது என்று இருக்கும். அதை மட்டும் எடுத்தாலே அடுத்த பத்து வருடங்களுக்கு கோர்ட்டுக்கு போவது மட்டுமே அவருக்கு வேலையாக இருக்கும். ஒரு கோடி ருபாய், ஒன்றரை கோடி ருபாய் கொடுத்து டெல்லியில் இருந்து வழக்கறிஞர்களை அழைத்து வந்து வழக்கு நடத்தி னாலும் டிலே மட்டுமே பண்ணலாமேயொழிய அந்த வழக்குகளில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், வழக்கை எப்படி இழுத்தடிக்கலாம் என அவரது தலைவர் ஜெ.வின் வழக்கறிஞர்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே, "வேலுமணிதான் மிகப்பெரிய ஆளுமை' என அந்தப் பகுதி அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே...

நல்ல தலைவர்களும் அ.தி.மு.க.வில் இருந்தார்கள், இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் வேலுமணி கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். அவர் ஒரு ஆளுமை கிடையாது. இவருடைய பின்புலம் பணம் மட்டும்தான். ஒரு பிம்பத்தை அவரே உருவாக்கி வைத்திருந்தார். பணம், அதிகாரத்தை வைத்துக்கொண்டு சுற்றிவந்தார். பணம் என்ற ஒரு பார்முலாவைத் தவிர வேறு ஒரு பார்முலாவும் அவருக்குத் தெரியாது.

2021 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக போட்டியிட்டீர்கள். அப்பொழுது அந்த தொகுதி மக்கள் பல பிரச்சினைகளை உங்களிடம் கூறியிருப்பார்கள். அதில் என்னென்ன மாதிரி புகார் எல்லாம் உங்களிடம் கூறினார்கள்?

ss

அந்த நேரத்தில்reportvelumani@gmail.com என்ற புது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அனைத்து இடங்களிலும் மக்களுக்கு தெரியும் வகையில் பரப்பினோம். அந்த மின்னஞ்சலில் நாங்கள் கடைசியாக பார்த்த பொழுது 600 புகார்கள் வந்திருந்தது. அதில் சாட்சிகளுடன் இருக்கும் புகார்களை நேரடியாக முதல்வர் பார்வைக்கு அனுப்பி யுள்ளோம். என்னிடமே 17 புகார்கள் வந்திருக்கிறது. அவர்களுடைய பெயரை கூற வேண்டாம் என நினைக்கிறேன். காரணம், அவர்கள் பயப்படுகிறார்கள். நாங்கள் அந்த புகார்களை எல்லாம் இனிதான் டி.ஜி.பி.யிடம் புகாராக கொடுக்க உள்ளோம்.

"தொண்டாமுத்தூர் தொகுதியில் ரூபாய் 5 கோடிக்கு மேலாக கிரையம் செய்ய யார் வந்தாலும் என்னை வந்து பார்க்கவேண்டும்' என வாய்வழி உத்தரவை, பதிவுத்துறை அலுவலகத்திற்கு பிறப்பிக்கிறார். இதனை மீறி அங்குள்ள அலுவலர்களும் எதுவும் செய்ய முடியாது. காரணம், அதை மீறி செய்தால் அவர்களின் வேலையிடத்தை மாற்றம் செய்வார்கள் அல்லது அவர்களை துன்புறுத்துவார்கள்.

கோவையில் சரவணக்குமார் ஏ.இ. என்ற குரூப் 2 அலுவலரை குரூப் 1 அலுவலராக மாற்றுகிறார்கள். அதிலும் டிவிஷனல் இன்சார்ஜிற்கு மேலாக இன்சார்ஜ் டி.இ. என்ற இல்லாத ஒரு பதவியை உருவாக்கி அமரவைக்கிறார்கள். இவரை அந்தப் பதவியில் அமரவைத்து பின்னர் ஸ்மார்ட் சிட்டி இன்சார்ஜ் ஆகவும் பதவி கொடுத்தனர். ஒன்றுமே தெரியாத ஒருவரை அந்த அளவிற்கு பதவி உயர்த்தி எங்கு கையெழுத்து போடச்சொன்னாலும் போடுவார் என்பதற்காக 4 ஆயிரம் கோடிவரை அவர் ஒருத்தரின் பொறுப்பில் விடுகிறார் வேலுமணி. அடுத்து ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணையும் வரும். அந்த ஊழல் விசாரணையின்போது காண்ட்ராக்டர்கள் அனைவரை யும் விசாரிக்கணும். அப்போதுதான் எத்தனை சதவீத ஊழல்கள் செய்தார்கள் என்பது தெரியவரும்.

குளங்களில் கான்கிரீட் போடவேண்டும் என்ற பொய்யான கணக்கு என கோவை மாநகரை அசிங்கப்படுத்தியதுதான் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம். அதிலும் நேரு மைதானம் அருகே மிக பெரிய அரசமரம் ஒன்று உள்ளது. ஆனால் அதை தகர்த்துவிட்டு காப்பரில் மரம் வைத்துள்ளார். இதெல்லாம் எதற்கு? என்ன நோக்கம்? இது மாதிரி செலவுசெய்து அதிலிருந்து ஊழல் செய்வதில் வேலுமணி கில்லாடி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதற்கு மற்றவர்களுக்கு லாபம் கொடுக்கவேண்டும் அதையும் நமக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தனது கம்பெனிக்கே கான்ட்ராக்டுகளை கொடுக்கும் எண்ணத்திற்கு வந்துவிட்டார். பேராசை, மமதை இதனுடைய உச்சத்தில் இருந்தவர் எஸ்.பி வேலுமணி.

இப்படி ஒரு மனிதரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. ரெய்டு எனத் தெரிந்ததும், பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அந்த வீடியோக்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. ஆதரவாக என்று யாரும் அங்கு இல்லை. காரணம் காலையில் இட்லி, உப்புமா, பொங்கல், காபி, டீ மற்றும் 11 மணிக்கு ரோஸ்மில்க் என கொடுக்கிறார்கள். அதேபோல் மதியம் பிரைடு ரைஸ், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி மற்றும் பலவற்றை கொடுத்து மக்களை அழைத்து வந்து உட்கார்ந்திருந்தார்களே தவிர, யாரும் கவலையெல்லாம் அடையவில்லை. அவருக்கு பணம் என்கிற சூத்திரம் தெரியுமே தவிர வேறெதுவுமே தெரியாது. தேர்தல் சமயத்தில் நான் ஒரு கோயிலுக்குச் சென்று தட்டில் ஐம்பது ரூபாய் போடுகிறேன். அவருடைய அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கிறார். அதிலேயே தெரிகிறது, இவர்களுக்கு பணம் என்கிற ஒன்று மட்டுமே தெரிகிறதே தவிர வேறொன்றும் தெரிவது இல்லை.

படம் : விவேக்

nkn210821
இதையும் படியுங்கள்
Subscribe