டந்த 3-ம் தேதி நெய்வேலி இந்திரா நகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது. அவரிடம் கட்சி முன்னோடிகள், ""எம்.பி. தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டால் சுமார் 2 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அப்படி ஓட்டுகள் சிதறினால் அ.தி.மு.க., பி.ஜே.பி. கூட்டணிக்கு வாய்ப்பாக போனாலும் போகலாம். தமிழ் மக்களை வஞ்சிக்கும் இரண்டு அரசுகளையும் அப்புறப்படுத்த வேண்டும்'' என்றனர்.

Advertisment

velmurugan-stalin

தினகரன் தரப்பு கூட்டணிக்காக வேல்முருகனிடம் பேசியிருந்தது. அதுபற்றி கட்சி நிர்வாகியோடு பேசியபோது, தினகரனின் பலம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் ஆர்.கே.நகர் தேர்தலை மட்டும் வைத்து தினகரன் அணி பலமானது என்று முடிவு எடுக்க முடியாது என்று த.வா.க. நிர்வாகிகள் சொல்லியிருந்தனர். இந்நிலையில் பா.ம.க.வை தி.மு.க. பக்கம் இழுக்க முடியாமல் போன விரக்தியில் இருந்த தி.மு.க. சீனியர்கள், வேல்முருகனை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் மும்முரம் காட்ட, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எடுத்த முயற்சி பலித்தது. அடுத்து வரும் எம்.எல்.ஏ. தேர்தலில் 5 தொகுதிகள், தி.மு.க. ஆட்சி அமைத்தால் த.வா.க.வுக்கு ஒரு வாரிய தலைவர் பதவி என பேசப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்து சால்வை போட்டு ஆதரவு என்று அறிவித்தார்.

வடமாவட்டங்களில் இளைஞர்களை தன் வசம் வைத்துள்ள வேல்முருகனின் ஆதரவு, பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில் உதயசூரியனுக்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

-எஸ்.பி.சேகர்