Advertisment

கரூரால் தப்பியது வேலூர்!  குறுகிய இடங்கள் தேர்வு ஏன்?  -விஜய் மா.செ. மீது குற்றச்சாட்டுகள்!

tvk-vellore

டிகர் விஜய்யின் அலட்சி யத்தால் கரூரில் விஜய்யைப் பார்க்கவந்து நெரிசலில் 41 பேர் இறந்தனர். காவல்துறை       தந்தது குறுகிய இடம். அதனால்தான் இந்த நெருக்கடி என த.வெ.க.வினரும், விஜய்யைக் காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க.வினரும் கூறிவருகின்றனர்.. 

Advertisment

கரூர் பிரச்சாரம் முடித்துக்கொண்டு      அதாவது அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்து அறிவித்திருந்தார் நடிகர் விஜய். இதற்காக த.வெ.க. கட்சியின் மேற்கு மா.செ. வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள், கடந்த மாதம் 16-ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தந்த மனுவில், 18.10.2025 அன்று மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (அந்த கடிதம் தந்தபின் தேதி மாற்றப்பட்டது) பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்காக வேலூர் அண்ணா கலையரங்கம், அணைக் கட்டு பேருந்து நிலையம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம்,

டிகர் விஜய்யின் அலட்சி யத்தால் கரூரில் விஜய்யைப் பார்க்கவந்து நெரிசலில் 41 பேர் இறந்தனர். காவல்துறை       தந்தது குறுகிய இடம். அதனால்தான் இந்த நெருக்கடி என த.வெ.க.வினரும், விஜய்யைக் காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க.வினரும் கூறிவருகின்றனர்.. 

Advertisment

கரூர் பிரச்சாரம் முடித்துக்கொண்டு      அதாவது அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்து அறிவித்திருந்தார் நடிகர் விஜய். இதற்காக த.வெ.க. கட்சியின் மேற்கு மா.செ. வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள், கடந்த மாதம் 16-ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தந்த மனுவில், 18.10.2025 அன்று மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (அந்த கடிதம் தந்தபின் தேதி மாற்றப்பட்டது) பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்காக வேலூர் அண்ணா கலையரங்கம், அணைக் கட்டு பேருந்து நிலையம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் என 5 தொகுதிகளில் 5 இடங்களைக் குறிப்பிட்டு தந்திருந்தனர். இந்த இடங்கள் இதற்கு முன்பு இ.பி.எஸ். பிரச்சாரம் செய்தவை என்பதால் அந்த இடங்களே தேவை என கேட்டு மனு தந்தனர் விஜய் கட்சி நிர்வாகிகள். 

Advertisment

tvk-vellore1

இந்த இடங்கள் பிரச்சாரத்துக்குத் தகுதியான இடங்களா என போலீஸ் மற்றும் அரசியல் கட்சியினரிடம் விசாரித்தபோது, “"வேலூர் அண்ணா கலையரங்கம் பகுதி 50,000 பேர் வரை தாங்கும். கே.வி.குப்பம் பேருந்து நிலையமும் பெரியளவில் சிக்கல் இல்லை. ஆனால், அணைக்கட்டு பேருந்து நிலையம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் இடங்கள். இங்கெல்லாம் விஜய் பேசவந்திருந்தால் கூட்டம் கூடி கரூரைவிட மிகமோசமான அளவில் உயிரிழப்பு ஏற் பட்டிருக்கும். அதிலும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலைய நிறுத்தம் என்பது திருப்பதி - வேலூர் பிரதான சாலை. சிறிய சாலை. அந்த இடத்தில் 2000 பேர் நின்றாலே கூட்டம் பிதுங்கும். அந்த இடத்தை எப்படி தேர்வுசெய்திருந்தார்கள் எனத் தெரியவில்லை. அதேபோல் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பஜார் பகுதி. ஒரு பேருந்து போனால் எதிரே இன்னொரு பேருந்து வரமுடியாத அளவுக்கு சிறிய சாலை. அப்படிப்பட்ட இடத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம் செய்தார் என அங்கேயே இவர்களும் அனுமதி கேட்டு கடிதம் தந்திருந்தார்கள். தி.மு.க., அ.தி.மு.க. என்பது கட்சியினர், விஜய் என்பது யாருக்கும் அடங்காத ரசிகர் கூட்டம். அதைப் புரிந்துகொண்டு த.வெ.க.வினர் இந்த இடங்களுக்கு பதில் வேறு இடங்களை கேட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிட்டுக் கேட்டுள்ளார்கள்'' என அதிருப்தி தெரிவித்தனர். 

tvk-vellore2

இதுகுறித்து த.வெ.க.வை சேர்ந்த ஒருசிலரிடம் கேட்டபோது, "தலைமை, மக்கள் அதிகம் கூடும் இடங்களாகப் பார்த்து தேர்வுசெய்து அந்த இடங்களை கேளுங்கள் எனச் சொன்னார்கள். ரசிகர்கள் குறைவாக வந்தாலும் அதிகமாக இருப்பது போன்று காட்டும் அளவுக்கான குறுகிய இடத்தை தேர்வு செய்யச் சொல்லி மேலிருந்து சொன்னார்கள். அதன்படியே இந்த இடங்களை தேர்வுசெய்தார் மேற்கு மா.செ. வேல்முருகன். இவருக்கு ரசிகன் குறித்தோ, நிர்வாகிகள் குறித்தோ எந்த கவலையும் கிடையாது. கட்சியை வைத்து, விஜய்யை காட்டி சம்பாதிக்கவேண்டும் என்பதே குறிக்கோள். தளபதி மக்கள் இயக்கம் தொடங்கியபோதுதான் ரசிகர் மன்ற பொறுப்புக்கு வந்து, மற்றவர்களை ஓரம்கட்டி இந்த பதவியை வாங்கினார். இப்போது வேலூர் மாவட்டத்தில் கட்சியே நான்தான் எனச் சொல்லிக்கொண்டிருக்கார். பதவிகள் போடும்போது 2 லட்சம், 3 லட்சம் என பணம் வாங்கிக்கொண்டே அவர் களுக்கு பதவி வாங்கித்தந்தார். வாழைக் காய் மண்டி, பிரிண்டிங் பிரஸ் வைத்தி ருக்கிறார். கட்சி நிர்வாகிகள் யாராக இருந்தாலும் தன்னிடம்தான் பேனர் போடவேண்டும், போஸ்டர் போடவேண்டும் என உத்தரவாகவே போட்டிருக்கிறார். கட்சிக்காரனுக்காக பத்து ரூபாய் விலையைக் குறைப்பதேயில்லை. அதேபோல் விஜய் பிறந்தநாளுக்கு பத்திரிகை களுக்கு விளம்பரம் தரணும் என நிர்வாகிகளிடம் இருபதாயிரம் விளம்பரத் தொகைக்கு முப்ப தாயிரம் வரை வாங்கிக்கொண்டு மொத்தமாக இவரே விளம்பரம் தருவார். சில பத்திரிகை களுக்கு லட்சங்களில் விளம்பர பேலன்ஸ் வைத்துள்ளார். பணமா தரமுடியாது, உங்களால என்ன செய்யமுடியுமோ செய்துக்குங்க என தெனாவெட்டாக நடந்துகொள்ள... பாவம் அவர்கள் நடையாய் நடந்துகொண்டிருக்கிறார் கள். தினமும் காலையில் தளபதி பெயரில் அன்னதானம் செய்கிறார். அதற்கு கட்சி நிர்வாகிகள் தினமும் ஒருவர் பணம் தரவேண்டும். அந்த அன்னதானத்தை ஏதோ தனது சொந்தக் காசில் செய்வதுபோல புஸ்ஸிஆனந்துக்கு ரிப்போர்ட் செய்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். இதுபற்றியெல்லாம் தலைமைக்கு புகார் அனுப்பினால் பொதுச்செயலாளர் ஆனந்த் கண்டுகொள்வதேயில்லை''’என விவரித்தார்கள். 

கரூரில் விஜய் தரப்பின் அலட்சியத்தால் 41 பேர் பலியானதால் வேலூர் மாவட்டம் தப்பியது. விஜய் வேலூர் வந்திருந்தால் அதைவிட பெரிய விபத்து நடந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள்.

-கிங்

nkn151025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe