டெல்லியிலிருந்து சோகமாக திரும்பிய எடப்பாடி நேராக சேலத்துக்குச் சென்றார். டெல்லியில் முகத்தை மூடியபடி எடப்பாடி காரில் பயணித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் அ.தி.மு.க. ஐ.டி.விங்கை கடுமையாகக் கடிந்துகொண்டார் எடப்பாடி.

Advertisment

முக்காடு போட்டு முகத்தை மூடியபடி, தான் காரில் பயணித்ததை வீடியோ எடுத்த நிரஞ்சன் குமா ரின் வீடியோ  இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. நான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ‘பாரத் ரத்னா’ வழங்கும் கோரிகைக்காகத்தான் அமித்ஷாவை சந்தித்தேன் என அ.தி.மு.கவின் ஐ.டி.விங் பிரபலப் படுத்தவில்லை. அந்தப் பிரச்சாரம் பிரபலமாகி இருந்தால் தான் காருக்குள் முகத்தை மூடிய விவகாரம் பெரிதாக வந்திருக்காது என்பது எடப்பாடியின் நிலை. ஆனால், டெல்லி ஏர்போர்ட்டிலும் சென்னை ஏர் போர்ட்டிலும் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வில்லை. சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வராமல் அங்கிருந்தே சேலத்துக்கு விமானத்தில் பயணம் ஆனார். ஒரு நாள் முழு ஓய்வுக்குப்பிறகு அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

எடப்பாடி திணறும் அளவிற்கு டெல்லியில் அப்படி என்ன நடந்தது என டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம். அமித்ஷாவை சந்திக்க வெள்ளை  இன்னோவா காரில் சென்ற எடப்பாடி திரும்பி வெளியே வரும்போது இஊசபகஊ என்கிற நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் வந்தார். முன் சீட்டில் கே.பி.முனுசாமி அமர்ந்திருக்க, பின்சீட்டில் ‘பாஷ்யம்’ கட்டுமான நிறுவன உரிமையாளர் அபினேஷ் எடப்பாடியுடன் அமர்ந்திருந்தார். அமித்ஷாவுடன் ஒரு புரோக்கர் மூலம் அறிமுகம் தேடிக்கொண்ட அபினேஷ், இன்று தமிழகத்தில் அமித்ஷாவின் ஆளாகவே மாறிவிட்டார். சென்னை நகரில் விதிகளை மீறி கட்டடங்களை கட்டிவருகிறார் என மாநில அரசால் குற்றம்சாட்டப்படும் இந்த அபினேஷ் தான் எடப்பாடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தவர் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். 

eps1

எடப்பாடியுடன் வந்தவர்களை "வெளியே செல்லுங்கள்' என உத்தரவிட்டுவிட்டு தனியறையில் எடப்பாடியுடன் பேசினார் அமித்ஷா. "நீ என்ன அ.தி.மு.கவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என நினைக்கிறாயா? உன்னை மாற்றிவிட்டு ஒரு புதிய பொதுச்செயலாளரை என்னால் கொண்டுவர முடியும். உனது உறவினர்கள் செய்த குற்றங்கள் எல்லாம் அவர்களை திகார் சிறையில் வைக்கும் அளவிற்கு வலுவானவை. வெளிநாடுகளில் இந்தியாவின் அந்நியச் செலாவணி சட்டத்தை மீறி அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளும் அளவிற்கு அவர்கள் குற்றம் செய்துள்ளார்கள்'' என அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை எடுத்துக் காண்பித்தார் அமித்ஷா. தனக்கு எதிராக ஒரு பெரிய வலை அமித்ஷாவால் பின்னப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த எடப்பாடி, அவர் கொண்டு சென்ற அ...மலை பற்றிய பைல்கள், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்கும் கோரிக்கை, தி.மு.க. அரசின் மேல் ஒன்றிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ஆகிய பைல்களை அமித்ஷாவின் டேபிள் மேல் வைத்தார். அதை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அமித்ஷா. 

Advertisment

“"அ..மலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஓ.பி.எஸ்., டி.டி.வி. விவகாரத்தில் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வார்கள். அவர்களுக்கு உரிய சீட்டை கொடுக்கவேண்டும். அவர்களை எப்படிக் கையாளவேண்டும் என நாங்கள் சொல்கிறோம். அதன்படி நடந்துகொள்ள வேண்டும். வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கேற்றவாறு அதிக சீட்டுகளை பா.ஜ.கவிற்கு கொடுக்கவேண்டும். இதில் ஏதாவது கோளாறு நேர்ந்தால், உனது உறவினர்களை திகார் சிறையில் போய் பார்த்துக் கொள்''’எனக் கடுமையாகவே எச்சரித்தார் அமித்ஷா. சப்தநாடியும் ஒடுங்கிப்போய் கூனிக்குறுகி வெளியே வந்த எடப்பாடி, தனக்கு எதிராக எதையும் செய்யத் தயாராக பா.ஜ.க. இருப்பதை புரிந்துகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் அபினேஷ் காரில் ஏறிய எடப்பாடி, அங்கிருந்து முகத்தை மூடியபடி புறப்பட்டார். முகத்தை கர்ச்சீப்பால் மூடிய எடப்பாடியின் படம் வெளியாக... அதை பா.ஜ.க. மூலம் தெரிந்துகொண்ட டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. சொன்னபடி எடப்பாடியை ‘"முகமூடி பழனிச்சாமி'’என கிண்டலடித்தார். எடப்பாடி யோ, தனது நெருங்கிய சகாக்களிடம்        "இனி மேல், அமித்ஷா செங்கோட்டையனை சந்திக்க மாட்டார். அ...மலையை அடக்கி வைப்பார், அ...மலை பா.ஜ.க. கட்சியிலேயே இருக்கமாட் டார்' என்றெல்லாம் உற்சாகமாகப் பேசி தன் னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்' என்கிறது அ.தி.மு.க வட்டாரங்கள்.  

___________
இறுதிச் சுற்று!

சேலத்தில் 18-ந்தேதி செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, "அமித்சாவுடனான எனது சந்திப்பு வெளிப்படையானது. நான் இருமினாலும் தும்மினாலும் செய்தியாக்குகிறார்கள். கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது தப்பா? நான் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசிடம் பேசி நிறைய திட்டங் கள் கொண்டு வந்தேன்.  தி.மு.க.வின் நீட் விலக்கு வாக்குறுதி மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசை அகற்ற மக்கள் ஆர்வமாக உள்ளனர். பா.ஜ.க.வை எதிர்த்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் கொடி ஏந்தி வரவேற்கிறது. விசுவாசத்தைப் பற்றிப்பேச அமைச்சர் ரகுபதிக்கு எந்த தகுதியும் இல்லை. அ.தி.மு.க.வில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமானதுதான். எனது சுற்றுப்பயணத்துக்கு மக்கள் கொடுக்கும் எழுச்சியும் ஆரவாரமும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும். என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடுவது சரியில்லை! நான் முகமூடி அணியவில்லை; தினகரன்தான் முகமூடி அணிந்து அ.தி.மு.க.வுக்குள் நுழைந்தார்.  ஸ்டாலின் என் னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்'' என்று செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்வி களுக்கு பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. 

-இளையர்