மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு தமிழகம் முழுவதுமுள்ள 113 காலிப் பணியிடங்களுக்கு 14.02.2018-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வுக்கு 1,238 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடைபெற்று, 33 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக் கப்பட்டு 13.11.2019-ல் பணி நியமன ஆணையும் வழங் கப்பட்டது.
இந்நிலையில் சென்ற ஆண்டு தகுதியற்றவர்கள் என்று அரசு தெரிவித்தவர்களுக்கு மீண்டும் ஜூலை 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு என சொல்லி டி.என்.பி.எஸ்.சி அழைத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக இப்பணிக்குத் தகுதிபெற, கனரக வாகன லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும், ஒரு வருடத்திற்கு பணி அனுபவச் சான்று மற்றும் வருகைப் பதிவு இருக்க வேண்டும், குறைந்தது 6 மாதகாலமாவது கனரக வாகனம் ஓட்டியதற்கான ஓட்டுனர் சான்று கொடுக்கவேண்டும்.
இவையனைத்தும் இருந்தால் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுவர். 2018-ல் தேர்வு நடைபெற்றபோது, இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இந்த மூன்று சான்றிதழ்களை ஆர்.டி.ஓ மற்றும் மண்டல இணை ஆணையர்கள் சரிபார்த்து போக்குவரத்து துறை ஆணைய ரிடம் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து இறுதியாக தகுதியான மனுதாரர்கள் 33 பேரை தேர்வுசெய்த போக்கு வரத்துத் துறை ஆணையர், டி.என்.பி.எஸ்.சி.யிடம் கொடுத்துள்ளார். அதன்படி டி.என். பி.எஸ்.சி இறுதிப் பணி நியமனத்தை வெளியிட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு கொங்கு மண்டல பகுதியிலிருந்தே அதிகளவில் ஆட்கள் தேர்வாவது வழக்கம். போக்குவரத்து வாகன ஆய்வாளர் பணியிலிருந்து வருபவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலியாகச் சான்றிதழ் பெற்றுக்கொடுத்து எளிதாக லைசன்ஸ், ஒரு வருட பணிச் சான்றிதழை வாங்கிவிடமுடியும். ஆனால் பி.எப்., வருகைச் சான்றிதழை இப்படி வாங்கிவிட முடியாது. இதையறிந்து போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி, 100 பேரில் 33 பேரை வடிகட்டி தேர்வுசெய்து கொடுத்தார்.
அவரது தேர்வில் ஓரிரு நபர்கள் மட்டுமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இத்துறையில் இணை ஆணையராக இருந்த பொன்.செந்தில்நாதன் உடனடியாக அ.தி.மு.க. முன் னாள் போக்குவரத் துத் துறை அமைச் சர் விஜயபாஸ் கரைச் சந்தித்து கொங்கு மண்டலத் தில் நாம் தேர்வு செய்ய நினைத்த நபர்களுக்கு நேரெதிராக ஆணையர் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் போக்குவரத்துத் துறை ஆணையர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, தென்காசியில் ஐ.ஏ.எஸ்.ஸாக இருந்த ஜவகரை ஆணையராக நியமித்து தகுதியற்றவர்கள் என நிராகரித்த நபர்களை நீதிமன்றத்தை நாடச்சொல்லி யோசனை சொல்லப்பட்டது. இணை ஆணையர் பொன்.செந்தில் நாதன் பி.எப்., வருகைப் பதிவு தேவையில்லை. 10 ரூபாய் பாண்டு பத்திரத்தில் எழுதிக் கொடுத்தால் போதும் என்ற போக்கை முன்வைத்து வழக்கில் வாதாடி உத்தரவு வாங்க வைத்தார்.
ஒரு சீட்டுக்கு 25 லட்சம் வரையிலும் பணம் வாங்கப்பட்ட காரணத்தால் பணம் கொடுத்தவர்கள் நச்சரிப்பைத் தாளமுடியாமல் செந்தில்நாதன், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி அவசர அவசரமாக அவர்களுக்கு ஆதரவான 226 பேர் பட்டிய லிடப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். கொரோனா காலகட்டம் என்பதால் தள்ளிவைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு ஜூலை 19 முதல் 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஏற்கெனவே தகுதியானவர்கள் என்று பணிநியமன உத்தரவு பெற்றுக் காத்திருந்த 33 பேரும் எங்களை இன்னும் பணி யமர்த்தாத நிலை யில், தகுதியற்ற வர்களுக்கு பணி வழங்குவதா என்று வழக்கு தொடுத்தனர். ஜூலை 7-ஆம் தேதி 226 பேரின் நியமனத்தில் நிறைய குளறுபடி இருக்கும் காரணத்தால் நேர்முகத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, மீண்டும் இது தொடர்பாக விசாரணை செய்து நியமனம் நடைபெறும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
"நீதிமன்றமே எங்களுக்கு பணி ஆணை வழங்கச்சொல்லி யுள்ளது. அதையும் மீறி இணை ஆணையர் பொன் செந்தில் நாதன் சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சருடன் கைகோர்த்து லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதியே இல்லாதவர்களுக்கு பணிவழங்க துடிக்கிறார். தற்போதுள்ள அரசுதான் எங்களுக்கு உதவேண்டும்'' என்கிறார்கள் முதற்கட்டமாகத் தேர்வான 33 பேர்.
இந்த மோசடி குறித்து முதல்வர் ஸ்டா-னிடம் நேரில் மனு அளித்துள்ளனர் பாதிக்கப் பட்டவர்கள் இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் சந்தோஷ் கே. மிஸ்ராவைக் கேட்டபோது, "எனக்கு முன்னால் இருந்த ஜவகரின் காலகட்டத்தில் நடந்த விவகாரம். இதுதொடர்பாக விசாரணை செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், "யார் தவறு செய்திருந்தாலும் ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
2018-ல் 110 காலிப் பணியிடங்களாக இருந்தது தற்போது 180 காலிப் பணியிடங்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப் பாத காரணத்தால் ஆர்.டி.ஓ. தொடர்பான அத்தனை பணிகளிலும் தேக்கநிலை ஏற்பட்டு அரசுக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது. என்ன செய்யப் போகிறது அரசு?