வீரப்பன் குறித்த சிவசுப்பிரமணியம் எழுதிய ஆங்கில நூலை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது பெங்களூரு நீதிமன்றம். நக்கீரன் ஆசிரியர் அவர்களின் மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிவசுப்பிரமணியம் என்பவர் சமீபமாக வீரப்பன் பற்றி புத்தகங்களை பதிப்பித்தார். மேலும் தனது யூடியூப் சேனலில் பேசி வந்தார். அவர் ஏற்கனவே எழுதி வெளி யிட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு முற்றிலும் மாறாக வீரப்பனை சந்தித்த நிகழ்விலும், நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு, அவரை மீட்பதற்காக அரசாங்கம் தூதுவராக நக்கீரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்தும் வீண் பழிகளை சுமத்தி தவறான தகவல்களை எழுதியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappanbook1.jpg)
இந்த அவதூறு மற்றும் ஆவணம், + புகைப்படங்கள் திருட்டு நடவடிக்கை சம்பந்தமாக கடந்த 29.07.2021 வியாழக் கிழமை அன்று சென்னை இரண்டாவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில், இதுபோன்ற அவதூறு செய்திகளை வீடியோ மற்றும் யூடியூப் பக்கங்களில் பரப்பக்கூடாது என சிவசுப்பிரமணியம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் என்.மனோகரனுடைய வாதத்தையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம், சிவசுப்பிரமணியம் இனி இந்த விஷயத்தைப் பற்றி எழுதவோ, அதனைப் பேசி வீடியோக்கள் எதையும் பதிவேற்றவோ கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அந்த உத்தரவில் நீதிமன்றம், நக்கீரன் குழுவில் ஒரு நபராக இருந்து வீரப்பனை சந்தித்து வந்த சிவசுப்பிரமணியம், தற்போது தான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு எதிராகவும், தானே முன்பு பதிவு செய்த தகவல்களுக்கு முரணாகவும், எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்பி வருகிறார் என்று அறியப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappanbook_0.jpg)
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப யாரும் எழுதுவதை நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. வழக்கு தொடுத்துள்ள நக்கீரன் ஆசிரியர் குறித்து சிவசுப்பிரமணியம் பேசுவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் இழப்பை பணம் கொண்டு ஈடு செய்ய முடியாது எனத் தெரிவித்து இடைக் கால தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும், நக்கீரன் ஆசிரியருக்கு சொந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள், தரவுகளை திருடியதற்காகவும், நம்பிக்கை மோசடி செய்ததற்காகவும் கிரிமினல் வழக்கும் காப்புரிமை மீறல் வழக்கும் இவர் மீது உள்ளது.
தற்போதுவரை மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், அதனை திருட்டுத்தனமாக மறைத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட வீரப்பன் குறித்து எழுதிய ஆங்கில நூலை வெளி யிடுவதற்கு சிவசுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார். இது தொடர்பாக பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில், நக்கீரன் ஆசிரியர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் புத்தகத்தில் நக்கீரன் ஆசிரியர் குறித்து ஏதேனும் அவதூறு கருத்துகள் இருக்கும் என்று ஐயப்படுவதால் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veerappanbook2.jpg)
இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் சார்பில் பெங்களூரு வழக்கறிஞர்கள் நடேசன் மற்றும் கார்த்திக் நடேசன் இருவரும் ஆஜரானார்கள். "தமிழக நீதிமன்றத்தில், வெளியிடவும் விற்பனை செய்யவும் தடையுள்ள நூல்களைத் திருட்டுத்தனமாக வேறு மாநிலத்தில் வேறு மொழியில் பதிப்பித்து வெளியிட நினைப்பது பெரிய குற்றம். நீதிமன்ற அவமதிப்பு'' என்று வாதிட்டனர்.
அதனை ஏற்ற நீதியரசர், "பிரதிவாதியோ (சிவசுப்பிரமணியம்) அல்லது அவரது ஏஜண்ட்களோ, அல்லது வேறு யாரேனும் வீரப்பன் புத்தகத்தை வெளியிடத் தடை செய்கிறோம். மேலும், நக்கீரன் ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்'' என்று ஆணை பிறப்பித்தார்.
என்றும் உண்மையின் பக்கம் நீதி..!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/veerappanbook-t.jpg)